இடுகைகள்

வானகம் இதழில் வெளிவரும் திரு. முருகானந்தம் ராமசாமியின் விவசாயக்கட்டுரை இங்கு முன்னதாகவே அவரிடம் அனுமதி பெற்று வெளியிடப்படுகிறது. யார் இந்த முருகானந்தம் முருகானந்தம் தாராபுரம் பகுதியில் அமராவதி ஆற்று நீரின் மாசுபடுதலுக்காக சபர்மதி அறக்கட்டளை நிறுவி பாடுபட்டு வருகிறார். தேசிய கட்சி ஒன்றின் தாராபுரப் பகுதி செயலாளராக இருக்கும் அவர் தன் கட்சியின் அடையாளம் தாண்டி மானுடத்தை நேசிக்கிறவர். பல்வேறு சூழல் சார்ந்த முயற்சிகளையும், செயல்பாடுகளையும் தன்னால் முடிகின்ற அனைத்து தளத்திலும் செயல்படுத்தி வருபவர். பல்வேறு இலக்கியச் செயல்பாடுகளிலும், இசை குறித்தும் நுணுக்கமான ரசனை கொண்டவர்.        ஜூலை ஐந்தாம் தேதி உழவர் தினமாக கடைபிடிக்கப்படுவதை ஒட்டி உழவர் தினம் தோன்றியது எப்படி, அதற்கு தன்னை அர்ப்பணித்த நாராயணசாமி நாயுடு என்னும் மனிதரைப் பற்றியும் கூறுகிற இந்தக் கட்டுரை, இன்றைய பல்வேறு விவசாய சங்க நிலைமைகளின் மீதான விமர்சனங்களையும் முன்வைக்கிற அதே வேளையில் அதற்கான தீர்வுகளைப் பற்றிப் பேசவேண்டிய நெருக்கடிகளையும், அர்ப்பணிப்பும், சமரசமற்ற நேர்மையும் கொண்ட தலைமைத்துவம் இன்றுவரையும் இல்லாது போன அவலத்த
      சுந்தர் லால் பகுணா சூழல் போராளி இமயத்தின் தூய வெண்பனி படர்ந்தது போல் வெண்தாடியும் , நரை மயிரும் கொண்ட இந்த 84 வயது முதியவர் , நடுக்கும் குளிரில் ஒற்றை மண் குடிலில் பாகிரதி நதியின் தீரத்திலே அவருடைய மனைவியோடு பல வருடங்கள் வாழ்ந்தவர் .சுந்தர்லால் பஹுகுணா , இன்று நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் காந்தியர்களில் மிக முக்கியமானவர் .எழுபதுகளில் தொழில்மயமாக்கல் அதன் உச்சத்தில் இருந்த காலம் சூழலியல் பாதிப்புகளை பற்றி மக்கள் கவலைப்படாத காலம் .அப்பொழுது மலர்ந்த இயக்கம் தான் சிப்கோ இயக்கம் .அந்த இயக்கமே இந்திய அளவில் சூழலியளுக்கான முதல் மற்றும் முக்கிய இயக்கம் என்று உறுதியாக சொல்லலாம் .அந்த இயக்கத்தில் பல பிராந்திய தலைவர்களின் பங்களிப்பு இருந்தாலும் , அதில் மிக முக்கியமான ஒருவர் பஹுகுணா .   இமாலயத்தில் தெஹ்ரி அணைக்கு எதிராக இரு தசாப்தங்களாக அணையை ஒட்டி ஒரு சிறு குடிலை அமைத்து கணவனும் மனைவியுமாக வாழ்ந்து தொடர்ந்து போராடி வந்தனர் . 2004 ஆம் ஆண்டு அவரை அங்கிருந்து அப்புறபடுத்தியது அரசு , அங்கிருந்து கோட்டியில் பாகிரதி நதியை ஒட்டி ஒரு இரண்டுமாடி வீட்டில் அவருடைய மனைவியோடு வாழ்ந்து வருகிற
படம்
இயல்வாகை பதிப்பகத்தில் மொழிபெயர்ப்பு பணிகளைச் செய்து வருகிறேன். பால் ஒரு உயிர்க்கொல்லி எனும் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். நான் என்பதை விட நாம் என்றுதான் சொல்ல வேண்டும். சங்கர், வினோத் பாலுச்சாமி, பாஸ்கர், கார்த்திக் , பீட்டர் ,சிவராஜ ஆகியோர் இல்லையென்றால் இது சாத்தியமாகியிருக்காது. தற்போது பள்ளிக்கு வெளியே வானம் எனும் தலைப்பில் ராகுல் ஆல்வாரிஸின் அனுபவப் பகிர்வு ஒன்றினை தமிழில் இருமாதங்கள் பெரும் பாடுபட்டு மொழிபெயர்த்தேன். எப்படி அமைகிறதோ தெரியவில்லை. தட்டச்சுப் பணிகளை முடித்து சிவராஜ் அண்ணாவிடம் ஒப்படைத்துவிட்டேன். இனி என்னாகிறதோ , ஏதாகிறதோ!!
படம்
நான் சென்னையில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் பெரிதாக புளகாங்கிதம் அடையும் வித த்தில் எழுதுவது என்பதை செய்யவில்லை என்றாலும் சில போஸ்டர் டிசைன்களை உருவாக்க முனைந்தேன் அன்று அளப்பரி மகிழ்ச்சி. இன்று மொழிபெயர்ப்பு துறையில் வேலை செய்துகொண்டிருக்கிறேன் என்றாலும் பெரிய மன உந்துதல் போட்டோஷாப்பில் ஏற்படவில்லை. அதனால்தான் டைம்ஸ் ஆப் இந்தியா படித்துக்கொண்டிருந்த பழக்கம் இன்று மொழிபெயர்ப்புக்கு உதவுகிறது. சில புகைப்படங்களைப் பார்த்துவிடுங்களேன்.