இடுகைகள்

பெண்களின் கௌரவத்திற்காகத்தான் உழைக்கிறேன்

பெண்களின் கௌரவத்திற்காகத்தான் உழைக்கிறேன்                      ஆங்கிலத்தில்: எஸ்எஸ்                      தமிழில்: கார்த்தி      ஸ்வப்னில் சதுர்வேதி தலைமை ஏற்று நடத்தும் சமக்ரா கழிவறைப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் சூழல் அறிவியல் மற்றும் பகுப்பு வடிவமைப்பு முறையில் கழிவறைகளை நகரில் வாழும் ஏழை மக்களுக்காக, பயன்தரும் விதத்தில் கட்டணம் குறைவாக அமைத்துத் தருகிறார்.      இந்தப்பணியை முன் வந்து செய்வதற்கு ஒரே காரணம் பெண்களின் கௌரவத்தைக் காக்கவேண்டும் என்கிற விருப்பமும், கடமை உணர்வும்தான் காரணம். ஒரு பெண்குழந்தைக்கு தந்தையாக நான் அவளின் எதிர்காலத்திற்கு பொறுப்பாகிறேன். அதை செம்மையாக கட்டமைக்க முயற்சிக்கிறேன் என்று வார்த்தைகள் கோர்த்து நெஞ்சிற்கு நெருக்கமாக உரையாடுகிறார் ஸ்வப்னில் சதுர்வேதி.      சமக்ரா நிறுவனத்தைத் தொடங்கும் முன் சதுர்வேதி கான்டினென்டல் ஆட்டோமோட்டிவ்ஸ் நிறுவனத்தில் அடுத்த தலைமுறை வாகனங்களுக்கான டெலிமேட்டிக்ஸ் மற்றும் நேவிகேஷன் இயக்கம் போன்ற தொழில்நுட்பங்களை வடிவமைக்கும் பணியை செய்து வந்தார்.      2001 ஆம் ஆண்டு சதுர்வேதி அமெரிக்கா கிளம்பிச் சென்று

உரத்துப்பேசு

                                     உரத்துப்பேசு                                 தமிழில்: ஜோஸபின் பிராஸனன் இரு ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் விழா ஒன்றில் எல்கா அஞ்சலியை சந்தித்தார். அன்றே இருவரின் மனதிலும் இருவருமாக இணைந்து ஏதோ ஒன்றினைச் செய்ய பெரும் ஆவல் எழுந்திருக்கிறது. கனவு கனிந்திருக்கிறது. இன்று ஆந்திரப்பிரதேசத்தில் பாலின சமத்துவம், பாலின சுதந்திரம் ஆகியவற்றை ஆதரித்தும், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளை எதிர்த்தும் போராடுகின்ற அமைப்பினை தோழிகளான எல்காவும், அஞ்சலி ருத்ரராஜூவும் கட்டமைத்து நடத்திவருகிறார்கள். ‘’ பெண்களுக்கான அதிகாரமளித்தல், அங்கீகாரம் என்ற முறைகளில் அவர்களுக்கு வாய்ப்புகளை கிடைக்கச்செய்ய நினைத்தோம். எல்காவும் நானும் இருவருமாய் இணைந்து உருவாக்கிய ‘மை சாய்ஸ்’ நல்ல வாய்ப்பாய் அமைந்தது. எங்களுடைய இலக்குகள் ஒன்றே. அவை நீண்ட தொலைவில் உள்ளன. நிதானமாக அதனை நோக்கி பயணிக்கிறோம் ‘’ என்கிறார்கள் ‘மை சாய்ஸ்’ அமைப்பின் நிறுவனர்களான எல்கா குரோபிலும், அஞ்சலி ருத்ரராஜூவும். ‘மைசாய்ஸ்’ தொண்டு நிறுவனமானது ஹைதராபாத

கதைகள் நம் அனைவருக்குமானவை

கதைகள் நம் அனைவருக்குமானவை     ஆங்கிலத்தில்: காமேஸ்வரி பத்மநாபன்                                                                 தமிழில் : அன்பரசு சண்முகம்      நமது இந்தியாவில் கதை கூறுவது என்பது தொன்று தொட்டு நடந்துவரும் ஒரு நிகழ்வாக உள்ளது. மகாபாரதம், ராமாயணம், பஞ்சதந்திரக்கதைகள், திருக்குறள் மற்றும் நீதிநெறிநூல்கள் பலவற்றையும் எளிய, சுவாரசியமான கதைகளின் வழியே கேட்பவர்களின் இதயத்தில் இடம் பெறச் செய்துவிட முடியும். இவற்றை பின்னாளில் நாம் நூலாகப் படித்திருந்த போதும், இதனை சிறுவயதில் கதையாகக் கூறிய ஆசிரியரை, தாயை, நம் உறவினர்களை மறக்கவே முடியாது. நேர்மை, துணிச்சல், வீரம், பயணம், சாதுர்யம், ஒற்றுமை என வலியுறுத்தும் கதைகளின் நிழலில் பள்ளி நாட்களின் இளைப்பாறல் அவ்வளவு இனிமையான ஒன்றாக இருந்தது. இன்றைய தொழில் பயிற்சி போல் இயந்திரத்தின் ஒரு பாகம் போல் ஆக்கிவிடும் வேலைக்குச் செல்லும் கணவன், மனைவி ஆகியோர் தங்கள் குழந்தைகளிடம் பேச நேரம் கிடைப்பதே அரிதாக உள்ளது. கணவன், மனைவி என இருவருமே சேர்ந்திருந்தால் கூட்டுக்குடும்பம் என்ற சமகாலத்தில் மூதாதையரின் வழிகாட்டல் கிடைக்க அதிக வாய்ப்புகள

புலிகள் சூழ்ந்த வனம்

புலிகள் சூழ்ந்த வனம்                                 ஆங்கிலத்தில்: மீரா பரத்வாஜ்           தமிழில்: அன்பரசு சண்முகம் கர்நாடகாவில் உள்ள பத்ரா பாதுகாக்கப்பட்ட புலிகள் பகுதியை உருவாக்கியதில் வன சூழலியலாளரான டி.வி கிரிஷ் முக்கியமான பங்காற்றியுள்ளார். 2001 – 2002 ஆகிய ஆண்டுகளில் உருவான புலிகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதியினை உருவாக்க கிரிஷ் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடகா மாநிலத்தின் சிக்மகளூர் அருகிலுள்ள  பதிமூன்று கிராமங்களில் வாழும் நானூற்று அறுபத்து நான்கு குடும்பங்களின்  மக்களிடமும், உண்மையை விளக்கிப் புரிய வைத்து இதனை சாதித்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தொடங்கியது 1993 ஆம் ஆண்டில் புலிகள் பாதுகாப்பிற்கான இடமாக பத்ரா பகுதியை மாற்றும் விதமாக மூங்கில்மரங்களை அகற்ற முயலும்போது, கிராம மக்களுக்கும் பல முரண்பாடுகள் ஏற்பட்டன. மனிதநேயத்துடன் அந்த பிரச்சனையை அணுக முயன்றார் கிரிஷ். ‘’ கிராம மக்களுக்கான மறு வாழ்வு குடியமர்த்துதல் செயல்பாடுகளைச் செய்ய சில ஆண்டுகளை ஒதுக்கினேன். எண்பது விழுக்காடு கிராம மக்கள் வறுமையில் உழலும் மக்கள் என்பதால், நான் இங்கு செய்

தெருவில் நிகழும் களிப்பின் நடனங்கள்

                                 தெருவில் நிகழும் களிப்பின் நடனங்கள்                            ஆங்கிலத்தில்: செவ்லின் செபாஸ்டியன்                            தமிழில்: ஆரண்யன் 2012 ஆம் ஆண்டு மே மாதம் குளோபல் விஷன் இன்டர்நேஷனல் அமைப்பைச்சேர்ந்த தன் நண்பர்களோடு கொச்சிக்கு அருகேயுள்ள ஸ்ரீதர்ம பரிபாலனை யோகம் சென்ட்ரல் பள்ளியில் தன்னார்வ குழுவாக பணிபுரிய முடிவெடுக்கிறார் சிகாகோவைச் சேர்ந்த புகைப்படக்காரரான வில்லியம் ஜெரார்டு. ‘’ பெரிதும் பதட்டம் கொண்டிருந்த சூழல் அது. குழந்தைகள் எங்களை எப்படி புரிந்துகொள்வார்கள் என்பதும், அவர்களுக்கு கற்றுத்தரும் அளவு எனக்குள் விஷயங்கள் முழுமையாக இருந்ததா என்றே நான் சந்தேகம் கொண்டிருந்தேன் ‘’ என்கிறார் ஜெரார்டு. ஜெரார்டின் அறை நீண்ட நடைபாதையின் கடைசியில் உள்ளது. பல வகுப்பறைகள் ஒரு புறம் அமைந்துள்ளன. பள்ளிக்குச் சென்ற முதல் நாளை நினைவு கூர்கிறார் ஜெரார்டு. பள்ளி மாணவர்கள் ஜெரார்டை வரவேற்று, அவரது கைகளைத் தொட்டிருக்கின்றனர். ‘’அற்புதமான பரவசம் கிளர்ந்த கணம் அது’’ என்று நெகிழும் அந்த பள்ளியில் மூன்று மாதங்கள் தங்கி கணக்கில்லாத பல படங்களை எடுத்த

மலைகளின் பிள்ளைகள்

மலைகளின் பிள்ளைகள்                         -அன்பரசு சண்முகம்      லட்சக்கணக்கானோர் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று இறையருள் பெறுவதற்காக வந்து செல்லும் சூழலில் இந்நகரம் சில நாட்களிலேயே ஒரு ஆண்டில் சேரும் பல மடங்கு குப்பைகளை பெற்றுவிடுகிறது. சக மனிதர்கள் வீசி எறியும் குப்பைகளை சேகரித்து அகற்றுவதில்தான் எங்களது தன்னகங்காரம் அழிகிறது, வாழ்விற்கான ஞானம் அதில்தான் உள்ளது என்று உறுதியாக கூறும் இயற்கை மீது நேசம் கொண்ட தன்னார்வ நண்பர் குழுவினை பதிவு செய்வதோடு, அவர்களோடு வானகம் கைகோர்ப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது.      கார்த்திக், சரவணன், பாஸ்கர், மணிகண்டன், வெங்கடேசன், செந்தில், ஜெகந்நாதன், ரஞ்சித், கார்த்திகேயன் என்ற இந்த நண்பர்கள் குழுவில் அவர்களின் பணிகளைப் பற்றி கேட்டதும்,கார்த்திகேயன் உற்சாகமாக, மெல்லிய குரலில் பேசத்தொடங்குகிறார். ‘’ எனக்கு முதலில் இந்த மலையை அறிமுகம் செய்தது என் அம்மாதான். பின் சில மாதங்களிலேயே அவர் இறந்துவிட, அவரை மலையின் வடிவில் காணத்தொடங்கினேன். மலையிலுள்ள மான் ஒன்று பிளாஸ்டிக் கழிவைத் தின்று இறந்துகிடக்கவே, அதன் இறப்பினால் கடும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு,

வானகம் இதழ் ஜூலை – ஆகஸ்ட் 2014 தலையங்கம்

  வானகம் இதழ் ஜூலை – ஆகஸ்ட் 2014   தலையங்கம்                                                 தொகுப்பு: அரசமார்       கரங்களே ஒன்று சேர்த்துக்கொள்ளத்தானே நண்பர்களே! உழவர்களுக்கான நலன்களை முன்னிறுத்தி நம் மரபை மீட்டெடுக்க முயலும் எளிய ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியைச் செய்ய வானகம் இதழ் முனைந்ததற்கு விமர்சனங்கள், பாராட்டுக்கள், கருத்துக்கள் என்று மகிழ்வோடு பகிர்ந்து கொண்டு பெரும் ஊக்கத்தையும், ஆனந்தத்தையும் அளித்த இயற்கை நேசர்களுக்கு நன்றி என்ற சிறு சொல் போதாது.      குழந்தைகளுக்கான இலக்கியம் படைத்தலையே தன் இறுதி மூச்சுவரை அர்ப்பணிப்போடு வறுமையினூடேயும் செய்த வாண்டு மாமாவிற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.      சென்னை மௌலிவாக்கத்தில் நடந்த கட்டிட விபத்தில் பலியானவர்கள் அனைவரும் விவசாயப்பின்னணி கொண்ட விளிம்புநிலை மக்களே. உலகமய சூழலின் நிர்பந்தம் காரணமாக நிலத்தைக் கைவிட்டு பெருநகரங்களை நோக்கி பயணிக்கும் அப்பாவி மக்கள். தம் சக மனிதர்களின் பெரும் நுகர்வுக்காக மனித நேயம் இன்றி காவு கொடுக்கப்படுகின்றனர்.      கட்டிட உரிமையாளர்களுக்கோ அங்கு வீடு வாங்குபவர்களுக்கோ இத