இடுகைகள்

எழுத்தும் வாழ்வும் ஒன்றிணைந்து வாழ்ந்த ஒற்றைப்புள்ளி

எழுத்தும் வாழ்வும் ஒன்றிணைந்து வாழ்ந்த ஒற்றைப்புள்ளி (ஆகஸ்ட் 22, 2014 அன்று மறைந்த எழுத்தாளர் யூ. ஆர் அனந்தமூர்த்தி பற்றிய இரங்கல் குறிப்பு) ·         அன்பரசு சண்முகம்      எழுத்தும், அதை எழுதுகிறவரின் வாழ்வும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் கவிஞர் கண்ணதாசன் எழுதியவனைவிட எழுத்தை பின்பற்று என்று தன் வாழ்வை மற்ற மனிதர்களுக்கு மிக விசாலமாக திறந்து தன் தவறுகளை மிக வெளிப்படையாக சுட்டிக் காட்டியவர் என்று கூறலாம். மோகன்தாஸ் காந்தியையும் இதில் நிச்சயமாக சேர்த்துக்கொள்ளலாம். உடுப்பி ராஜகோபாலாச்சாரிய அனந்த மூர்த்தி எனும் யூ.ஆர்அனந்தமூர்த்தி தன் வாழ்வினையும் எழுத்தினையும் வேறு வேறாக பாகுபாடு செய்துகொண்டவரில்லை.      எழுத்தாளன் என்பவன் தன் நாட்டின் அரசியலையோ, சமூகத்தைக்குறித்தோ கருத்துக்களை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது. அனந்தமூர்த்தி தன் மனம் ஏற்றுக்கொண்ட கருத்துக்களை எந்த இடத்திலும் முன்வைக்க தயங்கியதில்லை.      யூ. ஆர் அனந்தமூர்த்தி தன் அனைத்து படைப்புகளையும் கன்னடமொழியில்தான் எழுதினார். அவரது குறிப்பிடத்தக்க அனைத்து படைப்புகளுமே மொழிபெயர்ப்பு பேறு பெற்ற

சிறகசைத்து ஓய்ந்த நீலகண்டப் பறவை

சிறகசைத்து ஓய்ந்த நீலகண்டப் பறவை (செப். 7, 2014 அன்று மறைந்த மொழிபெயர்ப்பாளர் மற்றும் எழுத்தாளர் சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவுக்கான இரங்கல் குறிப்பு)                                      அன்பரசு சண்முகம் கிளை நூலகத்தில் வேகமாக செய்தித்தாளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது ஒரே ஒரு நாளிதழில் சு.கிருஷ்ணமூர்த்தி காலமான செய்தி கண்டு சிறிது நேரம் எனக்கு தலையில் எந்த சிந்தனைகளும் ஓடாமல் சூனியமானது போல் இருந்தது. அவரைப் பற்றிய எந்த செய்திகளும் என்னால் படிக்க முடியவில்லை. அவரது புகைப்படத்தைப் பார்த்தவாறே இருந்தேன். அவரின் முகவரி நான் படித்த அவரது பெரும்பான்மை புத்தகங்களில் இருந்தது இல்லை. அவருக்கு நான் கடிதம் ஒன்றினை எழுதியிருப்பதாக ஒரு நினைவு மிச்சமிருந்தது. சென்னையில் மயிலாப்பூரில் சகோதரருடன் அறையில் தங்கி வேலை தேடி பத்திரிகைகளுக்கு அலைந்து கொண்டிருந்த போது, எழுத்தாளர் ஸ்ரீராம் அவர்களிடம் படிக்க புத்தகங்கள் கோருவேன். அவரிடமிருந்துதான் சு.கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்ப்பில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட கமலாதாஸ் எனும் (புத்தகத்தின் பெயர் தவறாக இருக்கக்கூடும்) பெண்ணின் வா

கலைதான் என் தாய்

‘’ கலைதான் என் தாய், என் உதிரம் முழுக்க நாடகத்திற்குத்தான் ‘’ ·         அன்பரசு சண்முகம் நாடகம், கூத்து போன்ற கலைகள் போன்றவை தொடர்ந்து அழிந்துவருகின்ற நிலையில் அதைக் காப்பாற்ற நினைக்கும் தனிப்பட்ட மனிதர்களின் முயற்சிகளினால்தான் இன்றிருக்கும் சில விஷயங்களாவது காப்பாற்றப்பட்டு இருக்கின்றன. தன் வாழ்வின் பெரும்பாலான ஆண்டுகளை நாடகத்திற்காக செலவழித்துவிட்டு  இன்றும் நாடகத்தில் பங்கேற்று நடிக்க விரும்பும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பரப்பு கிராமத்திலுள்ள நாடக கலைஞர் சண்முகம் அவர்களின் நேர்முகம் இது. நாடகத்தில் எந்த வயதில் நடிக்க ஆரம்பித்தீர்கள்? என்னோட பதிமூணாவது வயசுலன்னு நெனைக்கிறேன். அது எந்த வருஷம்னா 1967 ன்னு  ஞாபகம் இருக்குது. அல்லி அர்ஜூனா நாடகத்துல புலேந்திரன்னு ஒரு வேஷம்.  அல்லிக்கும், அர்ஜூனனுக்கும் பொறக்குற புள்ளதான் புலேந்திரன். உங்களின் நாடக ஆசிரியராக இருந்தவர் யார்? எனக்கு நாடகத்துல பல விஷயங்கள சொல்லிக்குடுத்தவருன்னா கொடுமுடி அரசுங்கறவரைத்தான் சொல்லுவன். இவர் சமூக நாடகங்களை இயக்குனவரு. சரித்திர நாடகங்களை இயக்குனவரு கணபதிங்கறவரு. அப்பறம் மின்னப்பாளையம் அ

காட்சியில் உயிர்த்தெழும் மகா ஆன்மா

காட்சியில் உயிர்த்தெழும் மகா ஆன்மா                   ச. குழந்தைசாமி                       தமிழில்: சின்னோடன் தம்பி     ‘காந்தி’ திரைப்படத்தை இயக்கிய ரிச்சர்ட் அட்டன்பரோ மறைந்த செய்தி, இந்திய அரசும், மக்களும் அவரை முறையாக பாராட்ட, அங்கீகரிக்க தவறிவிட்டோமா என்ற எண்ணத்தை மனதில் மீண்டும் ஏற்படுத்துகிறது.      இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த ஆங்கிலேயர்கள் இந்தியர்களை தமது ஆட்சியில் எப்படி கொடுமைப்படுத்தினார்கள் என்பதை திரைப்படம் வழியே பதிவு செய்த அந்நாட்டைச் சேர்ந்த ஆங்கில இயக்குநருக்கு  அரசு அளித்த விருது போதுமானதல்ல.      முக்கியமாக இங்கே நாம் கவனம் கொள்ளவேண்டியது அமைதி மற்றும் அகிம்சையை பலநாடுகளின் எல்லைகளைத் தாண்டி பேசுகிற ஒரு திரைப்படமாக ‘காந்தி’ உள்ளது என்பதுதான். அகிம்சை என்பதை வசனமாக இல்லாமல் காட்சிரீதியாக திரைமொழியைப் புரிந்து கொண்டு வலுவான தாக்கத்தினை உண்டாக்கும் படி பயன்படுத்தியிருப்பார்.      ‘காந்தி’ திரைப்படம் பலரது வாழ்க்கை முறையினை மாற்றியிருக்கிறது என்று உலகின் பல பகுதிகளிலிருந்து வரும் செய்திகளிலிருந்து உணர்கிறேன். என்னையும் இப்படம் பெரிதும் பாதித்தது. 1982 ஆ

உரிமைக்காக வண்ண உடையில் புரட்சி

உரிமைக்காக  வண்ண உடையில் புரட்சி                 - மொகித்ராவ்                  தமிழில்: வின்சென்ட் காபோ ‘குலாபி கேங்’ எனும் மகளிரின் உரிமைக்காக சமரசமின்றி போராடும் அமைப்பின் தலைவியான சம்பத் பால் தேவி பெங்களூர் வந்திருந்தபோது கண்ட ஒரு நேர்காணல். ‘’ குலாபி கேங் எனும் அமைப்பைத் தொடங்கும்போது நான் என்னை ஒருவரின் மனைவியாக நினைக்கவில்லை. சமூகத்தில் வாழும் சாதாரண ஒரு மனித இயல்பாகத்தான் உணர்ந்தேன் ‘’ என்று உறுதியாகப் பேசும் சம்பத் பால் தேவியின் சிந்தனை மற்றும் செயல்திறன் கொண்ட முயற்சிகளால் குலாபி கேங் எனும் அமைப்பின் பெருமை இன்று உலகமெங்கும் பரவி வருகிறது. பிங்க் நிறத்திலான சேலை அணிந்து வலம் வரும் இவரது தலைமையிலான பெண்கள் குழுவானது, தொடர்ந்து சமூகத்தின் ஆதிக்க மனநிலை விதிகளுக்கு எதிராக இடையறாது போராடி வருகிறார்கள். அவரிடம் கேட்ட கேள்விகளின் தொகுப்பு இதோ. தங்கள் குழுவின் செயல்பாடுகளின் இன்றைய நிலை எப்படியிருக்கிறது? தங்கள் அமைப்பின் நோக்கத்தை அடைந்துவிட்டீர்களா?      உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களிலிருந்து நான்கு லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் குலாபி கேங்கில் இ

நாட்டிற்குத் நிச்சயம் தேவை திட்டக்குழுவின் அமைப்பு

நாட்டிற்குத் நிச்சயம் தேவை திட்டக்குழுவின் அமைப்பு                       சி.பி ஜான்              தமிழில்: வின்சென்ட் காபோ ஆகஸ்ட் 15 ஆம்தேதி சுதந்திர தின உரையில் நரேந்திரமோடி குறிப்பிட்ட பொருள் என்று அனுமானிக்க முடியாதபடி, அறுபத்துநான்கு வயதான திட்டக்குழுவின் வாழ்வை இறுதி செய்யும் அறிவிப்பை வெளியிட்டார். திட்டக்குழு தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அதனைப் பார்க்கும், புரிந்துகொள்ளும்போக்கு ஆட்சிக்கு ஆட்சி மாறிவந்திருக்கிறது. பா.ஜ.க அரசு திட்டக்குழுவின் செயல்பாடுகளை உள்ளடக்கிய அனைத்தையும் கலைக்கும்போது, அரசிடம் அதற்கு மாற்றான திட்டங்கள் உண்டு என்ற அனுமானம் அனைவரிடம் இருந்தது. ஆனால் ஒரு மாதத்திற்குப்பின்னும் பா.ஜ.க அரசு திட்டக்குழுவிற்கு மாற்றான ஒரு அமைப்பு பற்றிய எவ்வித சிந்தனைகளையும், கருத்துக்களையும் கூறவில்லை.  நாட்டின் தேசிய திட்டக்குழு என்பது உச்சநிலையான மற்றும் பல்வேறு சிக்கல்கள் நிறைந்த திட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்த உதவுகிறது. சுழன்று விரிந்து செல்லும் நிர்வாகத்துறைகளை மூன்று வரிசையாக திட்டக்குழு பிரிக்கிறது. 1.மத்திய அரசு, 2. மாநில அரசு, 3. உள்ளூர் நிர்வாக அ

வனங்களில் சுடர்ந்து ஒளிரும் அறிவுக்கொடி

வனங்களில் சுடர்ந்து ஒளிரும் அறிவுக்கொடி                           மானசி மத்கர்                   தமிழில்: அர்க்காதியோ பெர்ஸீ சவுர் மர்லினா மனுரங் எனும் ப்யூடெட் மனுரங் எனும் பெண்மணி, தன் லட்சியத்தை தளராத மனோதிடம், அர்ப்பணிப்பு உணர்வோடான உழைப்புடன் அடைந்து சாதனை புரிந்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டு ராமன் மகசேசே விருதினை இந்தோனேஷியாவில் வாழும் பழங்குடி மக்களுக்கிடையே சிறப்பாக பணியாற்றியதன் காரணமாக பெற்றிருக்கிறார் மனுரங். இவரது அமைப்பான சொகோலா வனத்தில் வாழும் பழங்குடி மக்களுக்கான கல்விப்பயிற்சி, தொழிற்பயிற்சி ஆகியவற்றை வழங்கி அவர்களுடைய வாழ்வினை மேம்படுத்த முயற்சித்து உழைத்துவருகிறது. இந்த நேர்காணலில் தனது காட்டுப்பள்ளி குறித்தும், அப்பெரிய நிலப்பரப்பில் வெற்றி பெற்ற அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார் மனுரங். அதன் தொகுப்பு உங்களுக்காக இதோ. பழங்குடி மக்களுக்கு உதவ உங்களைத் தூண்டியது  சக மனிதர்களின் மீதான பரிவா? (அ)  லட்சியவாதத்தின் காரணத்தினாலா? எனது பணியை நான் அம்மக்களிடம் தொடங்கும்போது என் மனதினுள்ளே பல்வேறு  கேள்விகள் எழுந்தன; அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்களா இல்ல