இடுகைகள்

நூல் வெளி

37 சரித்திரத்தில் படிந்த நிழல்கள் தமிழவன் அடையாளம் பிரஸ்                                                                                      சகலன் இது பின்காலனிய நாவல். தமிழகத்தில்   பல நிகழ்வுகளை கடும் பகடியாக நிகழ்ச்சியாக மாற்றுகிறது. பாக்கியத்தாய் ராணி, பச்சைராஜன் ராஜா, ஆளும் நாடு தொகிமொலா என புனைவாக பலதும் நல்ல திட்டமாக உருவாக்கப்பட்டு, பல அரசியல் நிகழ்வுகள், இத்தளத்தில் கேள்விக்குட்படுத்தப்படுகின்றன.   இவர்களுக்கு இருமகன்கள் சொல்லின் பொருள், மலைமீது ஒளி என இருவரின் செயல்பாடுகள், பச்சைராஜனின் இரண்டாம் ராணி சங்கல்ப ராணி என பலரின் செயல்பாடுகளை புனைவுலகின் மற்றொரு புனைவுச்செயல்பாடாக வர்ணிக்கப்பட்டு சுவாரசியமாக பயணிக்கிறது கதை. அடுத்தது என்று எதிர்பார்க்க வைக்கும் எதிர்பார்ப்பை தன்னகத்தே கொண்டுள்ளது. கதையினை உண்மை என்று நம்ப வைக்க பல அறிஞர்களின் பெயர்கள், நூல்களின் பெயர்கள் அடிக்குறிப்பாக காட்டப்படுவதால் நம்பி பயணிப்பதைத்தவிர வேறு வழியேதுமில்லை.   இதனிடையே பழைய வடுவூராரின் நூல்களைப்போல இடையே வரும் ஆசிரியரின் குரல் வாசகரை திசை திருப்பும் பல பதில்களைக்கொண்டுள்ளது

நூல் வெளி

35 இந்தியப்பிரிவினை சினிமா யமுனா ராஜேந்திரன் உயிர்மை பதிப்பகம்                                                      பக்சி இந்நூலில் பிரிவினையைப்பற்றிய பிரச்சனைகளைப்பேசும் 7 படங்கள் அவற்றின் கதை, அது ஏற்படுத்திய தாக்கம் பற்றிய முழுமையான விளக்கம் என நம்முன் வைக்கிறது. இதில் நான் முழுமையாக பார்த்திருப்பது தீபா மேத்தா இயக்கிய எர்த் படம் ஒன்றைத்தான். 1999 ல் வந்த இப்படம் பாப்ஸி லபித்வா எனும் பாகிஸ்தான் எழுத்தாளர் எழுதிய Cracking India   எனும் நாவலை மூலமாக கொண்டது. இதில் வரும் காட்சிகள், பிரிவினை கலவரங்களை சூழல்களை ஓரளவு உணர்த்தும்படியான காட்சிகளைக்கொண்டுள்ளன என்று கூறலாம். கதையைக்கூறும் லெனி தன் உறவினரான சிறுவனோடு எதிரில் உள்ள சிறுவனோடு நிகழ்த்தும்   காட்சி எனக்கு பிடித்தமானது என்பேன்.   லெனியாக நடித்திருக்கும் சிறுமியின் நடிப்பில் துக்கம், மகிழ்ச்சி, வலி என   அத்தனையையும் அந்த முகம் வெளிப்படுத்துகிறது. அமீர்கான் முஸ்லீம் மக்கள் இந்துமக்களை கொன்று குவிப்பதை சிரிப்புடன் ரசிக்கும் காட்சியில் பதறும் நந்திதாதாஸின் முகபாவம் ஒன்றேபோதும்; அவரது நடிப்பிற்கு சான்றுகூற. இது

பகிர்தலின் பகல்வேளைகளும், இரவுப்பொழுதுகளும்

பகிர்தலின் பகல்வேளைகளும், இரவுப்பொழுதுகளும்                                                       கஸரக்கட்டன் பகிர்தல் பல்வேறு அபாயங்கள் குறித்தும் பேசலாம். ஆனால் அதில் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. பாதுகாப்பின்மை இருக்கிறது. நம் மனம் எப்போதும் ஒரு பாதுகாப்பு தேடுகிற ஒன்றாக இருக்கிறது. சாய்ந்து கொள்ள மொட்டைமாடி சுவர் தேவைப்படுகிறது. சென்னையில் லோகேஷ் என்னும் திரைப்பட போஸ்டர்களை வடிவமைக்கும் ஒருவரை சந்தித்தேன். ஆள் மிக இறுக்கமானவர் போல. நிறைய பேர் வாழ்க்கையில் கபடி விளையாடியிருக்கிறார்கள் இதைச் சொல்லக் காரணம் அவரின் சினிமா தளம்தான். முகத்தில் எந்தவித உணர்ச்சியும் தெரியவில்லை என்று பயமாக இருந்தது. எப்போதும் போல நான் பேசி என்னை நானே கிண்டல் பகடியாக பேசினாலும் நகரத்திற்குரிய போக்கில் எந்த பதிலும் பேசாமல் அதிகபட்சமாக ‘ம்’ என்றார். ஒவ்வொரு  மனிதனும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டியவன்தான். பகலை சமாளித்துவிடலாம். ஆனால் இரவு அப்படி அல்ல. மனதை கலங்கடிக்கக் கூடியது. அப்படியே மனதினுள்ளிருக்கும் அனைத்தையும் ஓட விடும் கண்முன்னே. அதனால் இரவு நேரத்தில் ஒரு மனிதனை அணுக முயற்சி செய்தால் பலன் கிடை

உணர்ச்சிவசப்படும் முரட்டு இயக்குநன்

உணர்ச்சிவசப்படும் முரட்டு இயக்குநன்                                                       ஹனிரியாஸ்       அனுகந்தனுடன் இயல்பாகவே வி.காபோவிற்கு நல்ல நெருக்கம் ஏற்பட்டுவிட்டதோ என்று நினைக்கும்படி நிகழ்ச்சிகள் இருக்கிறது. ஆய்வு செய்யவெல்லாம் எனக்கு விருப்பமில்லை. சமூகத்தின் மீது மாறாத கோபம் கனலும் ஒவ்வொரு உயிரும் எனக்கு நண்பர்களே என வி.காபோ காற்றில் சபதமெடுப்பார். அவருக்கு அ.கவை மிகப்பிடிக்கும். ஆனால் இவருடன் இருப்பது தொடர்ந்து நம்மை நாமே துன்பத்தில் சிக்கவைத்துக்கொள்ள விரும்புகிறோம் என்றே அர்த்தமாகும். வேசிகள், பிச்சைக்காரர்களிடம், எவரிடமும் எளிதாகப்  பேசி பிரியம் கொள்ளும் துணிச்சல்காரர். மூச்சுவிடுவதற்கு அடுத்து புகைபிடிப்பது தான் முக்கியம் என்று நம்பி கடைபிடித்து கழிவறையில் புகையாய் நிற்க வைத்திருக்கும் மனித நேயம் கொண்ட நெஞ்சு அ.கவுடையது என்பார் வி. காபோ.       புகையிலிருந்து தப்பிக்க வி.காபோ வேகமாக வெளியே வந்தார். வேகமாக மூச்சை விட்டார். மனச்சமநிலை பத்துக்கு பத்து என்ற அறையில்தான் சமநிலைக்கு வந்துவிட்டது என்பதை உணர்ந்தார் வி.காபோ.       அறையின் வெம்மை கடுமையாக வி.காப

சென்னை பயணித்தார் எழுத்தாளர் வின்சென்ட் காபோ!

சென்னை பயணித்தார் எழுத்தாளர் வின்சென்ட் காபோ!                                           மெட்ரோ கார்னர் ‘முனி’ வின்சென்ட் காபோ (வி.காபோ), புத்தக மொழிபெயர்ப்பு ஒன்றிற்காக மடிக்கணினி ஒன்றினைப் பெற அனுகந்தன் என்னும் கடும் முரட்டுத்தனமும், துணிச்சலான அன்பும் கொண்ட துணை இயக்குநர் ஒருவரை சந்தித்தார். அவரின் அறையில் தங்க இடம் கிடைத்துவிட்டது. அறை பற்றிக்கேட்டால் வாய்திறக்க மறுக்கிறார் அனுகந்தன். பின் பேசியது இதுதான். ‘’ சோறு தின்னியான்னா கூட கேட்க மாட்டீங்கறான் என்ன ஊருடா இது? மிஷினு மாரி ஓடறானுவ, ஒடியாரானுவ ’’ பேபி ஏலப்பன் எனும் இயக்குநர் ஒருவரிடம்தான் அனுகந்தன் வேலை செய்கிறாராம். அவரிடம் கூட்டிச்சென்றார். பேபியின்அறை முழுக்க பல்வேறு சினிமா போஸ்டர் கட்டிங்குகளாலேயே தன் அறையின் சுண்ணாம்புச்செலவை தவிர்த்திருந்தார். சுண்ணாம்பிற்கு இடம் விட்டால்தானே! அறையின் ஒவ்வொரு கதவுகளிலும் ஒரு வாசகம் குறும்பாக எழுதப்பட்டிருந்தது. உ.தா கழிவறையில் தினசரி நான்கு காட்சிகள் என்ற வாசகம். நந்தம்பாக்கம் வர்த்தசபை சென்றிருந்த அனுபவம் வேறுமாதிரி. தினகரன் நாளிதழ் நடத்திய கல்வி குறித்த கண்காட்சி நடைபெற

நிற்காத கரைச்சலப்பா !

நிற்காத கரைச்சலப்பா !                                           செட் புரோட்டாக்காரன் நாள் முழுவதும் இப்படியே கழிந்துவிடும் என்று நான்கு கண்ணன் நினைத்திருக்கவில்லை. நெல்லை தீபம் என்ற இனக்குழு உணவகத்தில் உணவு சாப்பிட்டபோதும், அவனின் கடாபுடா சத்தம் பிறருக்கு கேட்குமளவு அதிகரித்துவிட்டது. காலையில் இட்லி சாப்பிடத்தொடங்கியபோதே பெவிக்கால் கம்பெனியுடன் இனக்குழு ஓட்டல்காரர் ஏதோ டைஅப் வைத்திருப்பாரோ என்று நினைக்கும்படி இட்லி வாழை இலையில் கையில் பிய்க்க பிய்க்க வழுக்கி ஓடியது. நான்கு கண்ணன் ஓட்டல்காரரைப் பார்த்தபோது, நாளைக்கு உலகம் உறுதியாக அழிந்துவிடும் என்பது போல் தனுஷ் படத்தை அவ்வளவு ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தார். கையில் பிட்டு சாப்பிட முடியாத பரிமாண முதிர்ச்சியைப் பெற்ற இட்லியை உள்ளே போட பெரும் முயற்சி தேவைப்பட்டது. சட்னி, சாம்பார் என்று பெயரிடப்பட்ட எதனோடும் இட்லி சேராது தனித்தியங்கும் முடிவைக் கொண்டிருந்தது. வழுக்கிச் செல்லும் இட்லியைப் பிடிக்க இடது கையையும் பயன்படுத்தலாமா என்ற சிந்தித்துக்கொண்டே நான்கு கண்ணன் உணவு உண்டார். தாராபுர எழுத்தாளரின் அணுக்கத்தொண்டர் துணை இய

கிரிவலம் செல்வோமாப்பா?

கிரிவலம் செல்வோமாப்பா?                                                 குண்ட் முனீஸ்ராஜ் ஸமீரா திடீரென திருவண்ணாமலை போய்விட்டார். கனவு மாதிரியில்ல இருக்குது. மெட்ராசுல சும்மா பன்ன தின்னுட்டு அலஞ்சுட்டு இருந்தாரு. அப்பத்தான  கதயில ஒரு திருப்பம். அவரோட அண்ண சம்சாரம் ஏதோ கெட்டவார்த்தயில் மெசேஜ் அனுப்ப கோவணம் கட்டாம வண்டி ஏறிட்டாப்புல ஸமீரான்னு வெள்ளோடு இன்டலிஜென்ஸ் ரிப்போர்ட் சொல்லுது. ஆமா மல புல்லா பிச்சக்காரனுவ திரியறானுவ. இதுல ஸமீரா மட்டும் என்ன? இந்தாளோட அண்ணமாரு நல்ல வெவரம். யார எப்படி யூஸ் பண்றதுன்னு தெரிஞ்சவரு. இந்த ஸமீரா பேசறது, எழுதறதுன்னு புத்திசாலி மாறி தெரியும். ஆனா ஒண்ணும் புரியாத பைத்தியக்கார வெகுளிப்பய. அதனாலதே அந்த வாழ வந்த புள்ளயெல்லாம் இந்தாள அந்த அசிங்கம் பண்ணுது. அண்ணமாரு வூட்டுல பொருளெல்லாம் எடுத்துவைக்க கூப்பிட, இந்தாளு சட்டுனு பரதேசி,பண்டாரத்துக்கு வூட்டுல எடமுண்டானு கேட்டுவைக்க அண்ணமாரு தலய தூக்கிக்கூட பாக்குல. விஷயம் தெரிஞ்சிருச்சேன்னு ச்சீனு போயிருச்சு. ஏய்யா வக்கரோ உன்ற ஹீரோயின எல்லோரும் ஏத்துக்கோணுமா என்ன? அவளும் அவ எலி மூஞ்சியும். ஒடுங்கின டால்டா டப்பி