இடுகைகள்

பகலில் ஒரு குதிரை,

படம்
                                                                           6                                   பகலில் ஒரு குதிரை இன்று ஒரு இளைஞர் பேருந்தில் ஏறினார். நல்ல ரேஸ் குர்ரம் போல உடம்பு. குதிரை போலவே தலை, அட குதிரை போலவே பின்கழுத்து முடி. ஒவ்வொரு தலை திருப்பலுக்கும் குதிரை என் கண்முன்னே அசைந்தது போலவே இருந்தது. தலைக்கு ஜெல் போட்டிருப்பார் போல. கடும் நெடி. சமயத்தில் நின்றுபோன 501 சோப்பின் வாடையின் சேர்மானங்கள் கூட அவரது நீண்ட முடிகொண்ட கேசத்தில் இருந்தது. வாளிப்பான முடியாக பின்னாளில் நீளும் என்ற நம்பிக்கையுடன் முடியை தடவிக்கொண்டே இருந்தார். பாடல்கேட்டுக்கொண்டு தலையை ஆட்ட ஆட்ட என் கண்முன்னே குதிரை தலை திருப்பல்கள் பலிதமாகிக்கொண்டு இருந்தன். எனக்கென்னமோ எனது பின்னாலிருந்த ஒரு பெண் அவரைப் பார்த்துக்கொண்டு இருப்பது போல என் பிடரியில் ஒரு உறுத்தல் நான் இறங்கும் நிறுத்தம் வரையில் இருந்தது. நிச்சயம் இது என்னுடைய கற்பனை இல்லை என் மூலாதாரத்திலிருந்து எங்கேனும் சக்தி பாய்ந்து யுபிஎஸ் வேலை செய்ய தொடங்கியிருக்குமா? மன்னிக்கவும் யுஎஸ்பி இந்த வித்தைகளே நான் நிகோலஸ் க

மாநகரத்தில் வாழ்கிறேன்

படம்
                                ஐஸ்ஹவுஸ் குறிப்புகள்           ஐஸ்ஹவுஸ் குறித்த முக்கியமான பதிவு என்று ஜெயமோகன் எழுதிய வெள்ளையானை நாவலைக் குறிப்பிட முடியும் என்று நினைக்கிறேன். அதில் இப்பகுதியில் வாழ்ந்த தலித் மக்களின் வாழ்வு குறித்து பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உதவ முற்படும் ஆங்கிலேயர் கூட சாதிப்பிரிவினையினால் ஒன்றும் செய்யமுடியாமல் குடிக்கு மெல்ல அடிமையாவார். அதிலும் வண்டி பஞ்சத்தினால் அடிபட்ட மக்களின் உடல் மீது ஏறிச்செல்லும் இடங்களெல்லாம் நான் புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். மனமே பதறிவிட்டது. வாழ்க்கை அத்தனையையும் மீறி ஒரு கவர்ச்சியைக் கொண்டுள்ளதுதான் இல்லையா?                                                                              5                                     டீஷர்ட் போடுங்கள்                  ஓபன் வார இதழில் சமுதாயத்தில் வெளிப்படையான பல்வேறு செயல்பாடுகளைச் செய்து வரும் பலரைப்பற்றி மொத்தம் 50 பேர் பற்றி எழுதியிருந்தார்கள். அதைப்படித்த செயின்ட்  எல்எஃப் மேமிடம் இதுதான் உடையா இப்படித்தான் உடை அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பாங்களா

ஐஸ் ஹவுஸ் குறிப்புகள்

                                                      ஐஸ்ஹவுஸ் குறிப்புகள்                                                                                             வின்சென்ட் காபோ                                                                                         இதோ நானும் மாநகரத்திற்கு வந்துவிட்டேன்.    இங்கு போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் அலுவலகம், அல்லது தங்கியிருக்கும் மேன்ஷன் வருவதற்கு டோனிஜா வைவிடவும் பல தாண்டுதல்கள், சில குயுக்தியான வேகநடை, பாய்ச்சல்கள், சாக்கடைத் தாண்டல்கள், மயிர்க்கூச்செறியும் விலகல்கள் ஆகியவை இங்கு வாழ அவசியம் தேவைப்படுகின்றன.                                                           2   தினந்தோறும் இஸ்லாமியர்கள் பிரியாணியை வறுத்துக்கொண்டே இருக்கிறார்கள். கறியின் வாடை குறையவே குறையாத ஏரியா ஐஸ்ஹவுஸ் என்று கூறலாம். பார்த்தசாரதியை தினமும் பார்க்கிறேனோ இல்லையோ, பிரியாணியை தினமும் காலையில், மாலையில் தரிசிக்காமல் வீடு திரும்புவதும் இல்லை. அலுவலகம் செல்வதும் இல்லை.                                                             3 சிற

இடது

படம்
                        இடது சமூக அரசியல் பண்பாட்டு காலாண்டிதழ் ஆசிரியர் ஓடை.பொ.துரையரசன் மார்க்ஸ் புதிய உலகின் திறவுகோல் பேராசிரியர் ஹிரென் முகர்ஜி தமிழில் : நா. தர்மராஜன் உலகத்தில் கடைசி மனிதன் இருக்கின்றவரை, அவனுடலில் கடைசி மூச்சு இருக்கின்ற வரை அவர்களுடைய பெயர் நிலைத்திருக்கும் என்று சொல்லப்படுகிற தகுதியுடைய பெரியோர்கள் சிலரே. அந்த சிலரில் கார்ல் மார்க்ஸ் தலைசிறந்தவர். அவர் பிறந்தநாள் (1818 மே 5) உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. ‘’உலகத்தில் முதலாளிகளும் தொழிலாளிகளும் இருக்கின்றவரை நமக்கு முன்னாலிருக்கின்ற புத்தகத்தைப் போல தொழிலாளர்களுக்கு அதே அளவு முக்கியத்துவத்தைக் கொண்ட வேறு புத்தகம் இதுவரை வெளிவரவில்லை’’  வாழ்நாள் முழுவதும் மார்க்சினுடைய நண்பராக சகாவாக இருந்த ஏங்கெல்ஸ் ‘மூலதனத்தின்’ முதல் தொகுதியின்(1867) விமர்சனத்தை இப்படித்தொடங்கினார். இந்த வார்த்தைகள் முதன்முறையாக எழுதப்பட்டபோது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு இன்றும்கூட உண்மையாக இருக்கின்றன. கார்ல் மார்க்சும் அவருடைய சகாவான ஏங்கெல்சும் ஒன்றிணைந்தும் தனியா