இடுகைகள்

நம் புத்தியை என்ன செய்வது?

படம்
                                                     நம் புத்தியை என்ன செய்வது? உத்தரப்பிரதேசம் ஷாஜகான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜாகேந்திர சிங். அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராம் மூர்த்தி வர்மா குறித்து அதாவது சட்டவிரோத சுரங்கம்,  நிலம் அபகரிப்பு ஆகியவற்றில் அவருக்கு தொடர்பு இருப்பதாக முகநூலில் பதிவிட்டுள்ளார். இதன் பின்னர் எப்போதும் போல காவல்துறையை ஏவிவிட்டு அந்த பத்திரிகையாளரின் வீட்டில் சோதனை என்னும் முறையில் பயமுறுத்தல் தொடங்கியிருக்கிறது. அதிலும அவர் மசியாமல் இருக்க, அவரை உயிருடன் கொளுத்தவும் முயன்றிருக்கிறார்கள் அமைச்சரின் ரத்தத்தின் ரத்தங்கள். கடுமையாக தாக்குதலுக்குள்ளான ஜாகேந்திர சிங் கடந்த 8 ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்து தொடரப்பட்ட வழக்கையும் அமைச்சரின் ஆட்கள் திரும்பப் பெறுமாறு  பத்திரிகையாளரின் மகனை மிரட்டியிருக்கின்றனர். இது குறித்து தோட்டக்கலை அமைச்சர் பரஸ்நாத் யாதவ் ' விதியை யாரால் தடுக்க முடியும்?'' என்று எப்போதும் போல தன் அதிகார ஆணவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  இதுபோல மதச்சார்பற்ற மனிதர்களாக தங்களை வெளிப்படுத்தி சுதந்தி

ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்:நூல்வெளி2-ப்ராட்லி ஜேம்ஸ்

படம்
                                                        நூல்வெளி2                                             ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்                                                 கலைவாணன் இ.எம்.எஸ்                                                  கீற்று வெளியீட்டகம் இந்த கவிதைத்தொகுப்பின் கவிதைகள் என்பவை அழகு குறித்தவையல்ல. முடிதிருத்தம் செய்யும் ஒருவனது வாழ்வு, சமூகம் சார்ந்து எப்படி பார்க்கப்படுகிறது என்பதையும் அதனால் அவனது மனம் படும் பாட்டையும் வலியையும், வேதனையையும் பொளேரென அறைந்து சொல்கிறது ஒவ்வொரு கவிதைகளும்.           முதலில் இவற்றைப் படிக்கும் யாரும் இதை கவிதை என்றே கூறமுடியாது. ஒவ்வொரு கவிதையும் ஒரு சிறுகதை போல வாழ்வை ஒரு நிகழ்வை நம் முன் வைத்து நம் கவனத்தைக் கோருகிறது. நாம்தான் கையறு நிலையில் அதனை பார்க்காது திரும்பி நிற்க வேண்டியிருக்கிறது. அவ்வளவு வலிகள் இக்கவிதைகளில் காணமுடிகிறது.  ஒன்பதாம் பக்கத்தில் குறிப்போடு துவங்குகிற இந்த கவிதைப்புத்தகம் முகத்தின் மீசை திருத்தும் கவனத்தோடுதான் படிக்கவேண்டியிருக்கிறது என்பது உண்மைதான்.            

கண்டேன் நினதருள்

படம்
                                                         கண்டேன் நினதருள்     பலரும் இன்று இந்து மதத்திலிருந்து வேறு மதம் மாறுவது குறித்து சட்டச்சிக்கல்கள் உள்ளிட்ட பலவற்றையும் ஆராய்ந்து வருகிறார்கள். ஒரு மதத்திலிருந்து  இன்னொரு மதத்திற்கு மாறுவது என்பது அவரவர் விருப்பம். சுதந்திரம் என்று கூட கொள்ளலாம். ஆனால் இந்தியாவில் உங்களது விருப்பம் என்பது என்றுமே நமது விருப்பமாக, தேர்வாக இருந்ததில்லை. வலுக்கட்டாயமாக ஒன்றை நம்மீது திணிப்பார்கள். அதை நாம் விரும்பி ஏற்றுக்கொண்டதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவேண்டும். தலித்தாக இருக்கும் ஒருவர் கிறிஸ்தவ, அல்லது இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறும் போது அவரின் மீது இருந்த ஒடுக்குமுறைகள் கைவிடப்படுகின்றன. மரியாதையாக நடத்தப்படுகிறார் எனும்போது அப்படி மதம் மாறுவதில் என்ன பிரச்சனை இருக்க முடியும்? திருநெல்வேலி அருகிலுள்ள மீனாட்சிபுரத்தில் அப்படி தலித்துகள் பலரும் ஏறத்தாழ 200 பேர் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறினார்கள். அது ஒரு மனிதனை மனிதன் மதிக்கவேண்டும் என்கிற தன்மையில்தான் அணுகவேண்டும். அங்கு மரியாதை மனிதர்களுக்கு குறைவுபட்டது. அதனால் அவர்கள் அதை

இயந்திர இட்லியும், க்ரீஸ் சட்னியும்

படம்
                                               இயந்திர இட்லியும், க்ரீஸ் சட்னியும்         நான் ஐஸ்ஹவுஸில் இரு கடைகளில் முதலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். சுவைநயா மெஸ் என்பதில் முதலில் இட்லி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் அங்கும் ஒரு வாரத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சிறிது நாட்களிலேயே இட்லியை வாங்கிச் சாப்பிட முயன்றால் வாயில் உமிழ்நீர் கூட சுரப்பதில்லை. அதற்கு காரணம் இட்லி, சட்னி இவையெல்லாம் ஒரு வாரத்திற்குள் ஒரு உறைவு நிலை போலாகி தெலுங்கு படங்களின் என்.ஆர். ஐ கதாநாயகன் போல கடுப்படிக்கிறது. அதுவும் சில நாட்களிலேயே எனது மூக்கு இட்லியிலிருந்து வரும் இயந்திர வாசனையை கண்டறிந்தது. உணவுக்கு வாசனை எவ்வளவு முக்கியம். அந்த வாசனைதான் பெரும்பாலும் அந்த உணவை சாப்பிடுவதற்கான நம்பிக்கையையும் ஆர்வத்தையும் தருகிறது. ஆனால் மெஸ், ஹோட்டல்களில் சாப்பிடும் உணவு வகைகள் மிகக்குறுகிய காலத்திலேயே அவற்றில் கலக்கப்படும் ஈஸ்ட், மற்றும் சில சோடா உப்பு போன்றவற்றினால் வயிற்றில் அழற்சியை ஏற்படுத்துகிறதே தவிர பசியைப் போக்குவதில்லை.             சுவைநயா மெஸ்ஸில் நின்று கொண்டே கொதிக

சாவுக்கே சவால்:நூல்வெளி2(ப்ராட்லி ஜேம்ஸ்)

                                                        நூல்வெளி2                                             சாவுக்கே சவால்                                                                                       விளாதிஸ் லாவ் தித்தோவ்                                                                              தமிழில்: பூ. சோம சுந்தரம்                தலைப்பைப் பார்த்ததும் லயன் காமிக்ஸ் கௌபாய்களின் மிரட்டல் கதைகளைப் போல் என்று நினைத்துவிட வேண்டாம். தலைப்புதான் அப்படி வைத்துவிட்டார்கள்.  கதை உயிரோட்டமானதுதான். ரஷ்யாவின் கதைகளைப் பொறுத்தவரை போர் அவர்களது வாழ்க்கையில் முக்கியமான பகுதியாக இருந்திருக்கிறது. பல கோடி மக்களின் வாழ்வைக்கூட மாற்றியிருக்கிறது. அது அவர்களது இலக்கியத்தில் இடம்பெறக் காரணம் அந்தளவு ஆழமான வடுவாகி இருக்கிறது அந்நிகழ்வுகள் என்று கூறலாம்.   இக்கதையில்  ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தான்யா, ஸெர்கேய் பெத்ரோவ் என இருவரும் தங்களின் பெற்றோர் ஒருவரையோருவர் ஏற்றுக் கொள்ளவேண்டுமென்று நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். விடுமுறை கிடைத்தால் எங்கேனும் சுற்றிப்பார்க்க ப

இரவில் நான் உன் குதிரை

படம்
                                                  இரவில் நான் உன் குதிரை                    தினமும் முன்பு நேரமே கிளம்பும்போது சிலமுறை குதிரையை நான் காணத்தவறுவதுண்டு. அது குறித்து அப்போது எந்த கவலையுமில்லை. ஆனால் இப்போது எல்லாம் அது சிறந்த பொழுதுபோக்காக மாறியிருக்கிறது. அந்தக்குதிரை நல்ல வாளிப்பான பளபளக்கும் கொழுப்பு மினுமினுக்கு உடலைப் பெற்றிருந்தது. அதன் முடி பளபளவென இரு பின்களால் முன் தலை வரை இறுக்கமாக கட்டப்பட்டு பின் தலையில் அன்று என்ன உடையோ அதற்கேற்ப நிறம் கொண்ட ரப்பர்பேன்ட் இறுக்கமாக பிசிறின்றி சுற்றப்பட்டிருக்கும்.  உடை நேர்த்தியோ கூறவேவேண்டாம். கால்சட்டை இறுக்கமாக இருக்கும். நல்ல கடும் நிறத்துடன் அணியப்பட்டிருக்கும். குதிரையின் மேலுடல் வாளிப்பிற்கு ஏற்ப எதை அணிந்தாலும் அதன் எலும்புகள், உடல் சுழிவுகள் எதுவும் வெளியே அதிகமும் தெரியாது. கச்சிதமான உடல் அமைந்து உடை அணிந்து வந்தாலும் காலில்தான் சிக்கல். லாடம் அடிக்காது குதிரை சாலையில் நடக்க முடியாது அல்லவா? அதுபோல் இங்கு நான்கு வரி கொண்ட உயரமான குதிகால் குந்து காலணி அடிக்கடி காலை சுளுக்க விட்டு விடுகிறது. நான் பார்க்கும்ப

நூல்வெளி2- ப்ராட்லி ஜேம்ஸ் சுவரொட்டி

படம்
போஸ்டர் பையன் ஃபிடோ வழங்கும் இனி நூல்வெளி பகுதியை ப்ராட்லி ஜேம்ஸ் தொடர்ந்து எழுதுவார். இதில் எழுதப்படும் விமர்சனக் கருத்துகள் ஆரா பிரஸ் நிறுவனத்தின் கருத்துக்களை பிரதிபலிப்பதல்ல. உண்மையில் அப்படி இருக்கவேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லைதான்.

கவர்மென்ட் பிராமணன்- நூல்வெளி2(ப்ராட்லி ஜேம்ஸ்)

படம்
                                                          கவர்மென்ட் பிராமணன்                                                         அரவிந்த் மாளகத்தி                                                         தமிழில் : பாவண்ணன்   இந்த நூல் கன்னட எழுத்தாளர் அரவிந்த் மாளகத்தியின் சுயசரிதையாகும். கவர்மென்ட் பிராமணன் என்று கூறப்படுவது ஏன் என்றால் அவருக்கு அளிக்கப்படும் அரசு சலுகைகளின் மீதான கேலி எனலாம். முழுக்க அவரின் ஒவ்வொரு வாழ்வின் நிகழ்வுகளும் இதில் கூறப்படுவதில்லை என்றாலும் குறிப்பான பலவையும் அவர் தேர்ந்தெடுத்து இதில் தொகுத்திருக்கிறார். தொடர்ச்சியாக பல நூல்களும் இவர் எழுதி வருகிறார்.          ஏறத்தாழ தாழ்த்தப்பட்ட பலரும் அனுபவித்த கொடுமைதான் முதல் சில அத்தியாயங்களில் குறிப்பிடப்படுவது. பள்ளி ஆசிரியர் அரவிந்த் மாளகத்தியை கடுமையாக அடித்து நொறுக்குவது. தினசரி வகுப்பறையைக் கூட்டுவது என்று அதனை செய்யவில்லை என்றால் அவர்களை சாதிப்பெயர் கூறி கடுமையாக தண்டிப்பது. ஏறத்தாழ எனக்கும் எனது ஆசிரியர் பாலுச்சாமி நாயக்கர் நினைவுக்கு வருகிறார். அவர் ஒவ்வொருநாளும் பள்ளிக்கு வரக்கூடாது எ

குலாத்தி: தந்தையற்றவன் நூல்வெளி2

படம்
                                                      குலாத்தி                                                 கிஷோர் சாந்தாபாய் காலே                       ஆங்கிலம் வழி தமிழில் : வெ. கோவிந்தசாமி                                                     விடியல் பதிப்பகம்           இந்த நூல் தமாஷா எனும் நடனம் ஆடும் தாயின் மகனாகப் பிறந்து சமூகத்தின் பல தடைகளைத் தாண்டி , சாதிக்கொடுமைகளை அனுபவித்து தளராத மனவுறுதியினால் மருத்துவரான ஒருவரின் கதை இது. தன் வரலாற்று நூலில் இந்த நூல் வேறுபடுவது இதனுடைய இலக்கை குறிவைத்து தளராது முன்னேறினால் நிச்சயம் நினைத்ததை அடையமுடியும் என்று கூறும்   தன்மையினால்தான் என்பதை இங்கு குறிப்பிடலாம் . குலாத்தி என்பது தமாஷா எனும் நடனமாடும் ஒரு ஜாதிக்காரர்களைக் குறிப்பிட பயன்படுகிறது . இந்த ஜாதியில் பிறந்த ஆண்கள் யாரும் வேலைக்குச் செல்வதெல்லாம் கிடையவே கிடையாது . அவர்கள் தம் தங்களை , அல்லது அக்கா , அல்லது மகள் என்று யாரையேனும் நடனமாடச் சொல்லி அதன் மூலம் வரும் பணத்தில் வாழ்வதுதான் அவர்களது வழக்கமாக இருக்கிறது

வறட்சிவாதிகளிளோடான போராட்டம்

படம்
                                            வறட்சிவாதிகளிளோடான போராட்டம்                     திரைப்படம் இயக்குவது குறித்து பல கனவுகள் வைத்துக்கொண்டு இருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் அதற்காக மற்றவர்களை மட்டம் தட்டி கீழே மிதித்துவிட்டு தன்னை முன்னிலைப்படுத்துவது இருக்கிறதே அதை நான் இவர்களிடம் பெரிதும் கண்டிருக்கிறேன். இது எதுவரை சென்றது அந்த உறவு உடைந்து போகும் அளவு என்று சொல்லலாம்.                      கனவுகளை நான் மதிக்கிறேன். அதை நோக்கி பயணம் செய்வது உத்தமமானதுதான். ஆனால் அதை அடையும் வழியாக அவர்கள் தேடி அடைய முயலுவது எப்படியாகிலும் என்பதுதான் சிறிதும் அறமே இல்லாததாக இருக்கிறது.  முன்பு நான் பணிபுரிந்த பத்திரிக்கை அலுவலகம் அருகில் ஆவணப்படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றிருந்தது. அதனை நடத்திவந்த பி. எஸ். பெருமாள் நாதன் பேச்சில் மக்கள் நலம், போராட்டம், புரட்சி, மக்களுக்காக கலை என்று தொண்டைத்தண்ணீர் வற்றும் வரை பேசுவார். ஆனால் இறுதியில் சார் சாப்பட்றக்கு ஏதாவது பணம் இருக்குமா வின்சென்ட் என்பார். எனக்கு புரியாதது என்னவென்றால், கனவு பலிக்கும் வரை அதற்கான உழைப்பு எதிலும் ஈடுபடாமல் இவர்

இரானின் கதை:நூல்வெளி-2

                                           நூல்வெளி-2                                                               ப்ராட்லி ஜேம்ஸ்                                                                            இரானின் கதை                                                        மர்ஜானே சத்ரபி                                                    தமிழில்: எஸ். பாலச்சந்திரன்                                                    விடியல் பதிப்பகம், கோவை இந்த நூலை நான் இருவரிடம் கொடுத்து வாசிக்க கூறியும் இருவரும் கடுமையாக முதலிலேயே மறுத்துவிட்டார்கள். காரணம் நூல் கிராபிக் படங்களின் வடிவில் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கும் என்று உணர்கிறேன். போராடி கையில் திணித்தும் இறுதியில் ஒருவர் எனக்கு இந்தப் புத்தகம் வேண்டாம் என்று கூறி திருப்பித்தந்துவிட்டார். இன்னொருவர் டைம்பாஸ் இதழ் அளவுக்கு திருப்பிப் பார்த்துவிட்டு, உடனே சூப்பருங்க என்று என் கையில் நூலை ஒப்படைத்துவிட்டார். எனக்கு முதலில் இந்த நூலை புத்தகத்திருவிழாவில் பார்த்தும் எப்படி இருக்குமோ என்று வாங்கவில்லை. தாமதம்தான் என்றாலும் மிகத்தாமத