மூடுபனிநிலம் நிறைவுப்பகுதி: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்
அந்தக்காட்சி குறிப்பிட்ட பொருளின் மீது பேராசை கொண்டு இருக்கும் தன்மையை (பெட்டிஷம்) வெளிப்படுத்துவதாகப்படுகிறது? ஒரு மனிதனுக்கும் மோட்டார் சைக்கிளுக்குமான உணர்வெழுச்சியான உறவை ஈர்ப்பை நாம் அனைவரும் அறிவோம். நான் அந்த நடிகருக்கு படத்தில் நடித்ததற்காக சம்பளம் கொடுக்காமல், அதற்கு பதிலாக ஒரு மோட்டார்சைக்கிளை வாங்கித்தந்தேன். அவரது முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை நீங்கள் பார்க்கவேண்டுமே! அது முற்றிலும் கலவரமான நிலை என்று கூறலாம். உங்களது படங்களில் ஒவ்வொரு தனிக்காட்சிக்கும் கூட சீரான தொடர்ச்சியான இயக்கம் உள்ளது. அது இயல்பான ஆழமான தன்மையிலேயே அமைந்துவிடுகிறதா? நேரத்தின் பரிமாணங்களை விவரிக்கும் எனது தனிப்பட்ட திரைப்பட மொழியினால் அமைந்திருப்பது காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு காட்சியின் கருத்தில் நீங்கள் நுழையும் முன் நடிகர்களுக்கும் நிலப்பரப்பிற்குமான உறவு விளக்கப்படுவதற்கான நேரம் கொடுக்கப்படுகிறது. எனக்கு தார்க்கோவ்ஸ்கியின் ‘ஸ்டாக்கர் ’ படம் மிகவும் பிடித்திருந்தது. ‘நாஸ்டாலஜியா‘ எனக்கு சிறிதே பிடித்திருந்தது. சேக்ரிஃபைஸ் எனக்கு பிடிக்கவில்லை. இந்த மூ