இடுகைகள்

மூடுபனிநிலம் நிறைவுப்பகுதி: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
அந்தக்காட்சி குறிப்பிட்ட பொருளின் மீது பேராசை கொண்டு இருக்கும் தன்மையை (பெட்டிஷம்) வெளிப்படுத்துவதாகப்படுகிறது?       ஒரு மனிதனுக்கும் மோட்டார் சைக்கிளுக்குமான உணர்வெழுச்சியான உறவை ஈர்ப்பை நாம் அனைவரும் அறிவோம். நான் அந்த நடிகருக்கு படத்தில் நடித்ததற்காக சம்பளம் கொடுக்காமல், அதற்கு பதிலாக ஒரு மோட்டார்சைக்கிளை வாங்கித்தந்தேன். அவரது முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை நீங்கள் பார்க்கவேண்டுமே! அது முற்றிலும் கலவரமான நிலை என்று கூறலாம்.       உங்களது படங்களில் ஒவ்வொரு தனிக்காட்சிக்கும் கூட சீரான தொடர்ச்சியான இயக்கம் உள்ளது. அது இயல்பான ஆழமான தன்மையிலேயே அமைந்துவிடுகிறதா? நேரத்தின் பரிமாணங்களை விவரிக்கும் எனது தனிப்பட்ட திரைப்பட மொழியினால் அமைந்திருப்பது காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு காட்சியின் கருத்தில் நீங்கள் நுழையும் முன் நடிகர்களுக்கும் நிலப்பரப்பிற்குமான உறவு விளக்கப்படுவதற்கான நேரம் கொடுக்கப்படுகிறது. எனக்கு தார்க்கோவ்ஸ்கியின் ‘ஸ்டாக்கர் ’ படம் மிகவும் பிடித்திருந்தது. ‘நாஸ்டாலஜியா‘ எனக்கு சிறிதே பிடித்திருந்தது. சேக்ரிஃபைஸ் எனக்கு பிடிக்கவில்லை. இந்த மூ

மூடுபனிநிலம்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
இவற்றைப்படத்தில் கூறுவதோடு அல்லாமல் இயக்குநர் மற்றும் பார்வையாளர்கள் ஆகியோருக்கிடையேயான உறவுவின் வழி குறித்தும் கூறலாமல்லவா?       ஆம். அது சரியானதுதான். மாஸ்ட்ரோயன்னி, நடிகர் தாம் குறிப்பிட்ட கதாபாத்திரத்தை படத்தில் ஏற்று நடிக்கும் முன்னமே அந்த கதாபாத்திரத்திற்கான கருத்துகள், நியாயங்கள் குறித்து அவர்கள் முன்னமே பேசுவது என்பதை அவர் சரியானதாக எண்ணவில்லை. கதையினை மெல்ல தன் மனதில் நிறைத்து கதையோட்டத்தில் நகர்ந்து செல்லும் கதை மாந்தர்களையே அவர் விரும்புகிறார்.       படத்திற்கான எழுத்துப்பணி என்பது மிகவும் நீண்டதா? அது முழுமையடைவதற்கான காலம் எவ்வளவு? படப்பிடிப்பிற்கான திரைக்கதையை கையில் கொண்டிருக்கிறீர்களா?       இல்லை. எனது படத்திற்கான காட்சிகள் என்பவை உண்மையான திரைக்கதையைச் சார்ந்ததல்ல. ஒரு நாவல் போல தோற்றமளித்தாலும், பொதுவான இலக்கிய நாவல் போல அதன் கருவை ஒரே தன்மையில் புரிந்துகொள்ள முடியாது. உதாரணத்திற்கு, ஒரு கவர்ச்சியும் வசீகரமும் கொண்ட இளைஞன் ஒருவன் கதையில் வருகிறான் என்றால், நான் அந்த கதாபாத்திரம் பெற்றிருக்கும் வசீகரம் அல்லது  அழகு என்பதை அழித்து அக்

மூடுபனிநிலம்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
9 மூடுபனிநிலம் செர்ஜ் போபியானா மற்றும் ப்ரெட்ரிக் ஸ்ட்ராஸ் – 1988 நிலம் குறித்து தங்களது திரைப்படத்தலைப்பு குறிப்பிடத்தக்க ஒரு அடையாளத்தைத் தாங்கியுள்ளது. இரு குழந்தைகளை மைய கதாபாத்திரங்களாக குறிப்பிட்ட நிலப்பரப்பில் வைத்து நீங்கள் உள்வாங்கிய தன்மையான ஒரு நிலப்பரப்பை தொலைவில் இருந்து பார்த்தால் நமக்கு பழகியது போல் தெரியாது என்று கூறிய நீங்கள் அதன் மூலம் தெரியாது என்று கூறிய நீங்கள் அதன் மூலம் ஏதோவொரு  செய்தியை கூற விரும்புகிறீர்கள்.       ஆம் மனிதர்களின் பரப்பு குறித்துதான் பேச விரும்பினேன். இந்தப்படத்தில் நீங்கள் காணும் மனிதர்களைத் தவிர (உடல்ரீதியாக புலப்படுபவை) தாண்டி வேறெதையும் நீங்கள் காணமுடியாது. மூடுபனிநிலம் என்பது குறிப்பிடத்தக்க கதையைப் போல, அதனை அதன் தனித்த தன்மை கெடாமல் கண்டுபிடிப்பு போல பார்வையாளர்கள் காண வைத்திருக்கிறேன். கேமராவுக்கும் உங்களது கதாபாத்திரங்களுக்குமான இடைவெளியை தொடர்ந்து வைத்திருப்பது பார்வையாளர்கள் உடனடியாக கதைமாந்தர்களான குழந்தைகளுடன் அடையாளம் கண்டு கொள்வதை தடுக்கும் என நம்புகிறீர்கள். வணிகரீதியாக சில முறைகளை குழந்தைகளுக்கு

தேனீக்காவலர் நிறைவுப்பகுதி: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
ஒளிப்பதிவாளர் அர்வானிட் உடன் பவுலோஸ் ‘பேரிக்காய் மரத்தில் ஏறப்போகிறேன் ’ என்ற பாடல் குறித்து... என் குழந்தைப் பருவத்தில் கேட்ட இசைப்பாடல்களில் அதுவும் ஒன்று. என்னுடைய மகள்களுக்காக இதனைத் திரும்ப கூறுகிறேன். இது சர்ரியலிச பாடல் என்று கூறலாம். பேரிக்காய் மரம் ஏறமுடியாத அளவு சிறியதேயாகும். ‘பிறகு என் கையை வெட்டிக்கொள்வேன் ’ என்று வரும் வரிகளுக்கு உண்மையிலேயே என்ன அர்த்தம் என்று நான் அறியவில்லை. இப்போதும் படத்தின் இறுதியில் இப்பாடலை நீங்கள் பயன்படுத்தி வருகிறீர்களே? ஆமாம். ஆனால் என்னுடைய தனித்தன்மை என எதையும் குறிப்பிட அதைப் பயன்படுத்தவில்லை. மாஸ்ட்ரோய்யன்னி தன் மகளுக்கான செய்யுளாக பாடுகிறார். அவள் சிறு குழந்தையாக இருக்கும் போது இதே போன்ற பாடலைப் பாடி இருக்கிறார். செர்ஜ் ரெஜியனி காட்சி கடந்த காலத்தை நினைவூட்டும் ஒரே ஒரு காட்சியாக உள்ளது. ஸ்பைரோஸ் பள்ளி ஆசிரியர் பணியிலிருந்து விலகுகிறான் என்பது படத்தின் தொடக்கத்திலேயே காட்டப்பட்டு விடுகிறது. அவன் அனைவரிடமிருந்தும் அனைத்திடமிருந்தும் விடைபெறுகிறான் என்பதே இக்காட்சி கூறுவது. தன் பழைய நண்பர்களிடம் விடைபெற்றுக்

தேனீக்காவலர்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
மிகவும் சிக்கலான தொடர்ச்சியான காட்சிகளை எடுத்துக்கொண்டால், உதாரணத்திற்கு மதுபானக் கூடத்தில் இளம்பெண் நடனமாடும் காட்சியைக் கூறலாம். இதனை ஒரு பட அரங்கில் மிக எளிதாக எடுத்துவிடலாமே? அது சரியாகவும் இருக்கலாம். ஆனால் அக்காட்சியில் வெளிப்புறம் உட்புறம் என்று மாறிச் சென்று வரும் காட்சிகளை எடுப்பது என்பது அதில் சிரமமானதாக மாறிவிடும். அவற்றினை தொகுப்பதும் சிரமம். ஒரே காட்சியில் உள்ளே மற்றும் வெளியே காட்சிகளை அமைக்க தேவையிருந்தது. மேலும் கிரீக் சினிமாதுறையில் அரங்குகளில் படமாக்குதல் இன்னும் பிரபலம் ஆகவில்லை என்பதுதான் யதார்த்தமாக உள்ளது. அது சிறிது ஆபத்தானதும் கூட. யதார்த்தமான இயல்பில் இருக்கும் எனது அரங்கை நான் தேவைக்கேற்ப மாற்றிக் கூட பயன்படுத்திக்கொள்வேன். நீங்கள் ஒளிப்பதிவாளர் ஜிபோர்ஸ்கோஸ் அர்வானிட், அரங்க வடிவமைப்பாளர் மைக்ஸ் கரபைபெரிஸ் ஆகியோருடன் நெருக்கமான நட்புறவுடன் உங்கள் முதல் படத்திலிருந்து பணியாற்றி வருகிறீர்கள்? படப்பிடிப்பிற்கான இடங்களைத் தேடி கண்டறிய நாங்கள் மூவருமே இணைந்துதான் செல்வோம். எங்களுடைய திட்டப்படி அந்த இடத்தில் என்னென்ன விஷயங்களைச் செய

நூல்வெளி2: கங்கையாக மாறும் கங்கவ்வாவின் கதை

படம்
கங்கவ்வா கங்கா மாதா கன்னட மூலம்: சங்கர் மோகாசி புணேகர் இந்தி வழி தமிழ்: எம்.வி. வெங்கட்ராம் வெளியீடு : நேஷ்னல் புக் ட்ரஸ்ட் சங்கர் மோகாசி புணேகர்               இந்த நாவலின் தொடக்கத்தில் கங்கவ்வா காசி விஸ்வநாதரை சென்று பார்த்துவிட்டு திரும்புகையில் ஏறத்தாழ அவளது வாழ்க்கையில் அவளது கடமைகளை பெருமளவு திருப்தியாக முடித்து விட்டிருக்கிறாள். அப்போதே அவளுக்கு கங்கையில் குதித்து உயிரை விடத் தோன்றுகிறது. ஆனால் வாழ்க்கையிலிருந்து அவ்வளவு எளிதில் யார் வெளியேறிவிட முடியும்?  தன் மகனது திருமணம், வளமான வாழ்க்கையை கண்டுவிட்டு பின்தான் இறப்பு  என்று நினைத்து வீட்டிற்கு கொண்டுவ ரும் கங்கை நீரைக் கூட வாழவேண்டும் வாழ்வேன் என்று தைரியமாக நடு இரவில் ரயிலிலிருந்து கீழே கவிழ்த்துவிடுகிறாள். இதை வாசிக்கும் போது  கதை முடிந்து விட்டது போல் தோன்றும். ஆனால் கதை தொடங்குவது இதிலிருந்துதான்.             கங்கவ்வா, பகதூர் தேசாய், கங்கவ்வாவின் தம்பி ராகப்பா ஆகிய மூன்று குடும்பங்களைச் சுற்றித்தான் கதை நிகழ்கிறது. கங்கவ்வாவின் கணவர் ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் உணர்ச்சிவசப்பட்டு ஒரு செய

நூல்வெளி2: வாழ்க்கைக்கான மருந்து இது

படம்
மருந்தென வேண்டாவாம் மருத்துவர் கு. சிவராமன் வெளியீடு: பூவுலகின் நண்பர்கள்        மருத்துவர் கு. சிவராமன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதிய  இந்நூல் ஈரோடு புத்தகச்சந்தையில் கூட 'டாக்டரு புதுசா சீசனுக்கு எழுதியிருக்காரு போல' என்று மக்களால் பரபரப்பாக வாங்கப்படும் உணவு குறித்த முக்கியமான நூல்தான். ஐந்தாம் பதிப்பு விரைவில் காணும் என்று நினைக்கிறேன். குமுதம் சிநேகிதியில் தொடராக வெளிவந்து பின் லோகத்தின்ட தோஸ்த் நிறுவனத்தினால் புத்தகமாக போடப்பட்டுள்ளது.          இந்நூலில் மரு. சிவராமன் தமிழ்நாட்டு பருவநிலைக்கு ஏற்றபடியான உணவுவகைகளை ஆராய்ச்சிக் கட்டுரை போல எழுதாமல் நமது நண்பர் ஒருவர் மருத்துவமும் தெரிந்திருந்தால் எப்படி நமக்கு அந்த மருந்துகள் குறித்து கூறுவாரோ அதுபோல மிக எளிமையான எழுத்துக்களால் பகிர்கிறார். இந்நூலை வெறும் உணவு குறித்த நூல் என்று எண்ணிப் படிக்கத்தொடங்கும் ஒருவரை கட்டிப்போட்டு வசீகரிப்பதும் அதுதான்.          கொள்ளு, வாழை, வெங்காயம், மிளகு குறித்து கூறும் தகவல்களோடு அதை எப்படி பயன்படுத்துவது என்றும் சில உணவு முறைகளை எழுதியுள்ளார். அவை நிச்சயம் ந