தேசிய கலாச்சாரம் மற்றும் தனிப்பட்ட பார்வை 2- தியோ ஏஞ்சலோ பவுலோஸ்
அமெரிக்க சினிமாவுலகின் இசைப்பாடல்களில் தங்களுக்கு இருக்கும் ஆர்வம் குறித்து விரிவாக கூறுங்கள். பயணிக்கும் வீரர்கள் படத்தில் அமைந்த பாடும் முறையிலான சண்டை என்பது இசைப்பாடல் சார்ந்தது. அமெரிக்க சினிமாவுலகின் பாடல்கள் நவீன நாகரிகம் கொண்டவையாகவும் தினசரி வாழ்விலிருந்து நம்மை வேறொன்றுக்கு மீட்டு செல்பவையாகவும் இருக்கின்றன. அமெரிக்க இசைப்பாடல்கள் எதார்த்த நிலையிலிருந்து திரையரங்கிற்கானதாக மாறியிருக்கிறது. உ.தா: ஜெனே கெல்லியின் சிங்கிங் இன் தி ரெய்ன் பாடல். அயர்லாந்தில் உருவாக்கப்பட்ட என் படங்களை குறித்து பின்னோக்கி பார்த்தால் மக்கள் கூடும் மகிழ் மன்றங்கள் நாடு முழுவதும் இசைப்பாடல்களாலேயே நிறைந்துள்ளன. தினசரி வாழ்விலிருந்து வேறொன்றிற்கு இவை நம்மை அழைத்து செல்கின்றன என்று எண்ணுகிறேன். தி சஸ்பெண்டட் ஆப் தி ஸ்டோர்க் படத்தில் பீட்டில்ஸ் குழுவின் பாடலான லெட் இட் பீ என்னும் பாடலை கதாபாத்திரங்களில் ஒருவர் ஆங்கிலத்தில் பாடுவதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 1991 இல் ஏன் அந்தப் பாடல் வருகிறது? அக்காலகட்டத்தில் பீட்டில்ஸ் குழுவின் பாடல்கள் கிரீசின் இளைஞர்கள் மற்றும் ஐர