இடுகைகள்

தேசிய கலாச்சாரம் மற்றும் தனிப்பட்ட பார்வை 2- தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
அமெரிக்க சினிமாவுலகின் இசைப்பாடல்களில் தங்களுக்கு இருக்கும் ஆர்வம் குறித்து விரிவாக கூறுங்கள்.       பயணிக்கும் வீரர்கள் படத்தில் அமைந்த பாடும் முறையிலான சண்டை என்பது இசைப்பாடல் சார்ந்தது. அமெரிக்க சினிமாவுலகின் பாடல்கள் நவீன நாகரிகம் கொண்டவையாகவும் தினசரி வாழ்விலிருந்து நம்மை வேறொன்றுக்கு மீட்டு செல்பவையாகவும் இருக்கின்றன. அமெரிக்க இசைப்பாடல்கள் எதார்த்த நிலையிலிருந்து திரையரங்கிற்கானதாக மாறியிருக்கிறது. உ.தா: ஜெனே கெல்லியின் சிங்கிங் இன் தி ரெய்ன் பாடல். அயர்லாந்தில் உருவாக்கப்பட்ட என் படங்களை குறித்து பின்னோக்கி பார்த்தால் மக்கள் கூடும் மகிழ் மன்றங்கள் நாடு முழுவதும் இசைப்பாடல்களாலேயே நிறைந்துள்ளன. தினசரி வாழ்விலிருந்து வேறொன்றிற்கு இவை நம்மை அழைத்து செல்கின்றன என்று எண்ணுகிறேன். தி சஸ்பெண்டட் ஆப் தி ஸ்டோர்க் படத்தில் பீட்டில்ஸ் குழுவின் பாடலான லெட் இட் பீ என்னும் பாடலை கதாபாத்திரங்களில் ஒருவர் ஆங்கிலத்தில் பாடுவதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 1991 இல் ஏன் அந்தப் பாடல் வருகிறது? அக்காலகட்டத்தில் பீட்டில்ஸ் குழுவின் பாடல்கள் கிரீசின் இளைஞர்கள் மற்றும் ஐர

தேசிய கலாச்சாரம் மற்றும் தனிப்பட்ட பார்வை 12

படம்
12 தேசிய கலாச்சாரம் மற்றும் தனிப்பட்ட பார்வை ஆண்ட்ரூ ஹார்டன் – 1992  ஆங்கில மூலம் - டேன் ஃபைனாரு தமிழில் லாய்ட்டர் லூன் உங்களது அண்மைய படமான ’ தி சஸ்பெண்டட் ஸ்டெப் ஆப் தி ஸ்டோர்க் ’ படத்தில் எல்லைப்புறங்கள், அகதிகள், சோவியத் ரஷ்யாவில் கம்யூனிசம் வீழ்ந்ததால் கிழக்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த பார்வையைக் கொண்டிருக்கின்றன. அகதிகள் விவகாரத்தில் அப்படி என்ன ஆர்வம் உங்களுக்கு?       மார்செலோ மாஸ்ட்ரோயன்னி முக்கிய கதாபாத்திரமாக படத்தில் நடித்திருப்பார். அவர் கூறுவதாக, ‘அகதி என்பவனின் ஆழ்மனதில் நிகழும் விஷயங்கள் வெளிப்புறத்தில் நிகழ்வதைக்காட்டிலும் தீவிரமானது ’ , நாம் எல்லைகளைக் கடந்து விட்டோம். ஆனால் நாம் இங்கேயே இருக்கிறோம். எத்தனை எல்லைக்கோடுகளைக் கடந்து சென்றால் நாம் வீட்டினை அடைவோம்? என்று ஒரு வசனம் வரும். நீங்கள் தற்போதைய நிலைமையை கிரீசின் வடக்குப் பகுதியான முன்னாள் யூகாஸ்லேவியாவின் நாட்டினைக் குறித்துக் கூறுகிறீர்களா?       20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாம் ஏன் ஒருவரை ஒருவர் கொல்ல முயற்சிக்கிறோம் என்பது புரிந்து கொள்ள முடியாததா

உரையாடல் போல அமைதியும் பொருள் கொண்டதுதான் பகுதி நிறைவு

படம்
புரட்சி குறித்து பேசுவது சரி, ஆனால் அது குறித்த கனவு உடைந்துபோக, மாயைகள் அழிந்துபோன பின்பு வாழ்ந்து வரும் நிலையில் புரட்சி என்பது நீடிக்கின்ற தொடர்கின்ற ஒன்றுதானா?       அப்படி கூறமுடியாது. மெக் அலெக்ஸாண்ட்ரோஸ் படத்தில் 68 ஆம் ஆண்டிற்கான உற்சாகத்தைக் கொண்டு அது விரக்தி நிலைக்கு மாறுவதை சுட்டிக் காட்டியிருப்பேன். குறிப்பிட்ட யாரையும் நான் கூறவிரும்பவில்லை எனினும் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஊழலை சந்திக்கவேண்டிய அபாயம் எப்போதும் உள்ளது. எனது முதல் தொடர்ச்சியான வரிசைப் படங்களை எடுத்து முடிக்க (36 நாட்களில், பயணிக்கும் வீரர்கள், வேட்டைக்காரர்கள்) 5 ஆண்டுகள் தேவைப்பட்டன. பிறகு எடுக்கத் தொடங்கிய படம்தான் வரலாற்றின் அமைதி படமாகும். சிதெராவிற்குப் பயணம் படம் கம்யூனிசம், வரலாற்றின் இறுதி பெரும் கருத்தியல்கள் குறித்து பேசியது. ஒருமுறை அவை நிறைவுபெற்றால், அதனுள் பிறகு பார்க்க ஏதுமில்லை. அடையாளம் குறித்த சிதைவுகளுக்கு நாம் சாட்சியாக நிற்கிறோம். நம்மைச் சுற்றி இருப்பவர்களும் பேச புதிதாக ஏதும் இல்லாத நிலையில் வரலாற்றின் இறுதியில் நிற்கிறார்கள். என்னுடைய படங்கள் தனிப்பட்ட ஆழமா

பேருயிரின் அழுகை: நூல்வெளி2 - ப்ராட்லி ஜேம்ஸ்

படம்
யானைகள் ஆதியில் இருந்தன கோவை சதாசிவம் தடாகம் வெளியீடு விலை ரூ.40 தலைப்பு உணர்த்துவதுதான். பத்திரிகைச் செய்திகளில் அட்டகாசம்  அட்டூழியம் என்று திட்டமிட்டு எழுதி எழுதி எப்படி ஒரு பேருயிரை மனிதர்களுக்கு எதிராக நிறுத்தி பொதுக்கருத்து ஒன்றினை உருவாக்கி அதனை எப்படி மெல்ல அழித்தார்கள் என்பதை விளக்குகின்ற நூல் இது. காடு இதழில் வெளிவந்த கட்டுரையின் முழுவடிவம் இது. இதுவேறுபடுவது எங்கென்றால் சங்க காலப் பாடல்களிலிருந்து யானைகள் குறித்த தரவுகளை மேற்கோள் காட்டி விளக்கி இன்றைய காலத்தில் நிலைமை எப்படியுள்ளது என்று விளக்குகின்ற தன்மையில்தான்.  அதோடு யானை என்றால் பொதுவாக அதன் பழக்கவழக்கங்கள் எப்படி என்று அறியாது அறியாமையால் கூறிவரும் சில பொதுவான வழக்குகளான யானைக்கும் அடி சறுக்கும், தன் தலையில் தானே மண் வாரி போட்டுக்கொண்டது என்பது போலான வார்த்தைகளுக்கு அறிவியல் பூர்வமான முறையில் விளக்கமளித்துள்ளார் ஆசிரியர் சதாசிவம்.  சங்க காலத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனுக்கு பரணி பாடுவதிலிருந்து அலங்காரப் பொருட்களுக்காக அதனை சுட்டுக்கொல்வது வரையிலான பல குற்றங்களை பட்டிலிடும்போது உண்மையிலே மனம்

உரையாடல்போல அமைதியும் பொருள் கொண்டதுதான் -3

படம்
குறிப்பிட்ட மையக்கருத்துகளே உங்களது படத்தில் திரும்ப வருகின்றன. வாழும் நிலப்பரப்பின் மீதான காதல் கொண்ட மக்கள், வட கிரீஸ் பகுதியைச்சேர்ந்த மக்கள் திருமணம் சாரந்த கொண்டாட்டங்களைக் கூறலாம்.       இறுதிக் கேள்விக்கான பதிலாக நான் மூன்று மகள்களை பெற்றிருக்கிறேன் ஆனால் இன்னும் மணம் புரியவில்லை. ப்ராய்டின் தத்துவப்படி என் வாழ்வில் இழந்ததை படத்தில் ஈடு செய்ய நினைக்கிறேனோ என்னமோ? எப்படியாயினும் இவற்றை நான் படத்தில் திரும்ப திரும்ப பயன்படுத்தி வருகிறேன். சிறுவர்கள் (அ) இளமையான மனிதர்கள் போலவே செய்கிறேன். இது முக்கியமானதுதானா என்று தெரியவில்லை. சினிமா விமர்சகர்கள் என் படத்தில் 80 காட்சிகள் இருப்பதாக கூறுவார்கள். எத்தனைக் காட்சிகள் படத்தில் உள்ளன என்பதை நான் அறிவேன். ஆராய்ச்சியாளர்கள், சினிமா ஆய்வாளர்கள் தாண்டி இது யாருக்கேனும் அர்த்தமுடையதாக உள்ளதா? 80 காட்சிகள் என்பதற்குப் பதில் 85 இருந்தால் என்ன வேறுபாடு இருக்கப்போகிறது? எப்படியாயினும் ஆராய்ச்சியாளர்கள் உங்களுடைய இந்த கருமையான படத்தைக் குறிப்பிட எந்தத் தேவையும் இல்லைதான். அனைத்து காட்சிகளும் கடும் பழுப்பு நிறத்தில் அமைந்

தலித் எழுத்து என்று ஒன்று இல்லை - சோ. தர்மன் நேர்காணல்

படம்
தலித் எழுத்து என்று ஒன்று இல்லை                            அபர்ணா கார்த்திகேயன்   தமிழில்: அன்பரசு சண்முகம் புதிய, வழக்கமானது அல்லாமலுமான கதைகளைக் கூற தொடர்ந்து முயற்சிக்கிறேன் என்று கூறும் சோ. தர்மனின்  கூகை நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில் தன் கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.  சுதந்திரத்திற்கு பிறகான தலித் மக்களின் வாழ்க்கையினை திடமாகப் பேசும் சோ.தர்மனின் கூகை நாவல் ஆங்கிலத்தில்  The Owl (OUP)  வெளியாகியுள்ளது. கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளரான சோ.தர்மன் மொத்தம் 9 நூல்களை எழுதியுள்ளார். புனைவு கட்டுரை சிறுகதை என்று எழுதியுள்ள இவரது எழுத்துக்களின் மீது அதிகளவிலான விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டுள்ளன.  கூகை நாவல் புனைவுதான் என்றாலும் தலித் மக்களின் சமூக வரலாற்றினை தெளிவாகக் கூறும் ஆவணம் போல இருக்கிறது. இப்போது அம்மக்களின் நிலை என்னவாக இருக்கிறது? இன்று நடைபெறும் அந்த செயல்பாட்டினை நவீனத்தீண்டாமை என்றே கூறமுடியும். தீண்டாமை ஒழிப்புச்சட்டம் தலித் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது மேலும் தலித் சமுதாய மக்கள் அரசியல் இயக்கங்

வனங்களின் சிப்பாய்

படம்
எறும்புகள்: ஆறுகால் மனிதர்கள் நக்கீரன் தடாகம் வெளயீடு விலை : ரூ. 30 இந்த நூலில் எறும்புகள் எனும் சிற்றுயிர்கள் மனிதர்களுக்கு என்ன செய்கின்றன என்பதைக் குறித்து விளக்கமாகப் பேசுகிறார் நூலாசிரியர் நக்கீரன். குரங்களுக்கும் மனிதனுக்கும் இருக்கும் ஒற்றுமையைக்காட்டிலும் எறும்புகளுக்கும் மனிதனுக்கும் இருக்கும் ஒற்றுமையை பல்வேறு எடுத்துக்காட்டுக்கள் வழியே நிறுவுகின்ற இடம் சிந்திக்கவைப்பதாக உள்ளது.  இன்றைய நாளில் மனிதர்கள் தம்மைத்தாண்டி எந்த உயிர் குறித்தும் நினைப்பதேயில்லை. ஆனால் அப்படி அமெரிக்காவில் சிவப்பு எறும்புகளை அழிக்கச் செய்த விபரீத முயற்சி பின்னாளில் அந்த விளைநிலத்தை பாலைவனமாக்கி விவசாயிகளின் வாழ்வை அழித்த கதையோடு அதை நடத்தி பூச்சிக்கொல்லி வணிகர்கள் எப்படி பொய்யாக கட்டுக்கதையை உருவாக்கினார்கள் என்பதையும் விரிவாகப் பேசுகிறார் நக்கீரன்.  பிரம்ம புத்திரா ஆற்றின் மறுபுறமிருந்த மணல் திட்டுகளை உள்ளடக்கி மலட்டுத்தன்மை கொண்ட மண்ணை எறும்புகள் மூலம் தனிமனிதர் அதனை அடர்வான காடாக உருவாக்கிய செய்தி தனிமனிதராக ஒருவரின் ஆழமான எண்ணத்தின் ஆற்றலை கூறுகிறதாக இருந்தாலும் அரசு இது குறி