தடைபடாத காலம்- முடிவில்லாத தன்மை மற்றும் நாளும் - தியோ ஏஞ்சலோ பவுலோஸ்
14 தடைபடாத காலம்: முடிவில்லாத தன்மை மற்றும் நாளும் ஜிடியன் பாச்மன் – 1997 ஆங்கில மூலம்: டான் ஃபைனாரு ஆண்டிற்கு ஒருமுறை நாம் சந்திக்கிறோம். ஆனால் ஒவ்வொரு பத்தாண்டிற்கும் நாம் உரையாடலை பதிவு செய்து வருகிறோம். நவீன காலத்தில் தீர்க்க முடியாத பிரச்சனைகளாக எதனை கூறுவீர்கள்? தக்காளிச்செடி வளர்ப்பு, தேனீக்கள் வளர்ப்பு, தேனை அறுவடை செய்வது உள்ளிட்டவற்றை செய்யத்தெரியாத ஒருவரினால் படங்களை உருவாக்க முடியாது என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தீர்கள். இன்று உங்களைப் பார்ப்பதை பத்து ஆண்டுகளுக்கு முன் மிகவும் நம்பிக்கை கொண்டவராக படப்பிடிப்பு அரங்கில் வேலை செய்து கொண்டு இருந்தீர்கள். தனிப்பட்ட மனிதராக, இந்த 20 ஆண்டுகளில் என்ன மாதிரியான வளர்ச்சியை பெற்றிருக்கிறோம் என்று கூற முடியுமா? மிகவும் உறுதியான கருத்துக்களைப் பற்றிப் பேசுவதற்கு சரியான நேரம் நீங்கள் படத்தினை முழுமையாக நிறைவு செய்து முடித்திருக்கிற காலம்தான். நீங்கள் உங்களது கருத்துகளை சரியான வடிவத்தில் உருப்பெறச்செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கும்போது படப்பிடிப்பின் ஒரு பகுதியில் அதைப்பற்ற