இடுகைகள்

படம்
நாம் தேர்ந்தெடுத்த பிரதமரிடம் நான் ஏன் பயப்படவேண்டும்?                                                                                             -பாபா ராம்தேவ்                                                             ஆங்கிலத்தில்: பிரக்யா சிங்                                                                         தமிழில்: அன்பரசு சண்முகம் பாபா ராம்தேவ் இந்தியாவிற்கான தனித்துவ யோகி என்பதில் சந்தேகமே இல்லை. பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் தலைமையகத்தில்  மேரே அச்சே தின் சல் ரஹே ஹைன் என உரக்க கூறுகிறார். இதர வணிக சந்நியாசிகளை விட யோகாவினை பெருமளவு புகழ்பெறச்செய்த ராம்தேவ், எப்எம்சிஜி நிறுவனத்தின் வளர்ச்சி, அரசியல் திட்டங்கள், மற்றும் சகிப்புத்தன்மை குறித்து நம்மிடையே உரையாடியதன் சுருக்கம். உடனடி நூடுல்ஸ் வகை ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். ஆனால் அது உடனடியாக சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறதே?                 நூடுல்ஸ் விற்க எங்களிடம் முறையான உரிமம் உள்ளது. அதனை எங்களுக்கு உருவாக்கித் தருபவர்களும் தயாரிப்பதற்கான உரிமம் பெற்றுள்ளனர் எனும்போது ச
அரசுக்கு காங்கிரசின் உதவி தேவை; அது எங்களை புறக்கணித்துவிட முடியாது!                                            கே.வி. தாமஸ்                                 ஆங்கிலத்தில்: மனீஷ் ஆனந்த்                                 தமிழில்: அன்பரசு சண்முகம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பொதுக்கணக்குகள் கமிட்டி தலைவராகவும், மத்திய விவசாயம், நுகர்வோர் உரிமைகள், உணவு மற்றும் பொது வழங்குதல் துறை அமைச்சராக இருந்த கே.வி. தாமஸ் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மற்றும் ஜி.எஸ்.டி. மசோதா குறித்து நம்மிடையே  உரையாடுகிறார். நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் என்ன முறையில் எந்த விஷயங்களை விவாதிக்கும் என்று கருதுகிறீர்கள்?      பெரும்பான்மை பலத்துடன் மோடி அரசு ஆட்சிக்கு 16 மாதங்கள் ஆகிவிட்டன. பாரதீய ஜனதா கட்சி உருவாக்கிய கவர்ச்சியில் அது ஐந்து ஆண்டுகளையும் தாண்டி ஆட்சிசெய்யும் என்று பலரையும் நம்ப வைத்தது. ஆனால் இன்றோ மிக குறைவான காலத்திலேயே கட்சியின் முழு முதல் சர்வாதிகாரியாக பிரதமர் மோடி உருவாகிவிட்டார்.      நமது பாராளுமன்ற ஜனநாயக அரசில் பிரதமரும் ஒரு பகுதியும், சமமும் ஆனவர்தான்.
மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான கவுகாத்தி காருண்ய தேவதை                  பிரசாந்தா மசூம்தார்                  தமிழில்: அன்பரசு சண்முகம்      கணவனை இழந்த பெண் ஒருவர் தனது ஆட்டிச பாதிப்பு கொண்ட மகனுடன் அரசு நிதியுதவி பெறும் மனநிலை குறைபாடுடைய குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்றை நடத்திவருகிறார்.      ரூபா ஹசாரிக்காவுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களே அவரை ஒரே ஒருவரை மட்டும் கொண்டு 2005 ஆம் ஆண்டு மனநிலை குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகளுக்கான காப்பகமான ‘டெஸ்டினேஷன்’ அமைப்பை தொடங்க தூண்டுகோலாக இருந்தது. இன்று இங்கு சமூகத்தின் ஒரு பிரிவான இம்மக்களில் 75 பேர் இங்கு பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.      பத்து ஆண்டுகளுக்கு முன்பு செரிப்ரல் பால்சி மற்றும் ஆட்டிச குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட தனது மகனை(ரிஷி) பள்ளியில் சேர்க்க கடுமையான முயற்சிகளை செய்திருக்கிறார் ஹசாரிக்கா. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்த பின்னரே இத்தகைய குறைபாடு கொண்ட சிறுவர்களுக்கான மையம் ஒன்றினை தொடங்கும் எண்ணம் ஹசாரிக்காவிற்கு வந்திருக்கிறது. ‘’12 வயதான ரிஷியை பள்ளியில் சேர்க்க எண்ணற்ற பள்ளிகளுக்கு அலைந்து திரிந
மாறுதலின் கதை இது !                                            புனிதா மகேஸ்வரி                                 தமிழில்: அன்பரசு சண்முகம் கர்நாடகாவின் முதல் திருநங்கையாக உயர்கல்வி கற்க அனுமதி பெற்றிருக்கும் சுமா தனது கொடூரமான கடந்த கால உடல் வியாபாரத்திலிருந்து மீண்டு கல்லூரி செல்ல முடிந்தது குறித்த பயணத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.      சுமா திருநங்கை என்பதால் அவரது குடும்பத்தினரே அவருக்கு இழைத்த சித்திரவதைகள், கொடூரமான சதை வணிகத்தில் மூன்று ஆண்டுகளாக பெற்ற உடல்ரீதியான தாக்குதல்கள், வன்புணர்வுகள் ஆகியவற்றை எதிர்த்துப் போராட அவர் முடிவெடுத்தபோது அவர் வாழ்க்கை புதியதாக மீண்டும் தொடங்கியது. தனது கடந்த காலத்தை நினைவு கூறும்போது சுமாவின் உடலில் திகிலும் பயமும் விலக்க முடியாமல் படர்ந்துவிடுகிறது.      ‘‘எனக்கு இன்றும் எது போராட தைரியமளித்தது என்று தெரியவில்லை. என்னால் தாங்கமுடியாது என்று தோன்றியபோது உருவானது அது. ஆனால் தொடர்ந்து என்னை சரி செய்துகொண்டு அந்த அவலத்திலிருந்து என் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களிலிருந்து பாலியல் தொழிலிலிருந்து வெளியே வந்தேன்’’ என்று கூறிய