இடுகைகள்

அறிவியல் புத்தகங்கள் அறிமுகம் - தொகுப்பு: விக்டர் காமெஸி

படம்
நூல் அறிமுகம் ! The Enigma of the Owl: An Illustrated Natural History by Mike Unwin and David Tipling. Yale University Press, Rs. 2,035 இரவு வாழ் விலங்குகளான ஆந்தைகள் புதிரான தன்மைகளைக் கொண்டுள்ள விலங்குகளாகும் . ஆந்தைகளின் 200 க்கும் மேற்பட்ட படங்களோடு , பல்வேறு கட்டுரைகளும் அடங்கியுள்ள இந்நூலில் அப்பறவை குறித்த மர்மங்களை மைக் அன்வின் விளக்கியுள்ளதோடு இதுவரை நாம் அறியாத பல்வேறு ஆந்தைகள் குறித்தும் விளக்கியுள்ளார் . The Death and Life of the Great Lakes by Dan Egan. W. W. Norton: 2017 Rs. 1,860 நாட்டிலுள்ள பெரிய ஏரிகள் அனைத்தும் சுற்றுச்சூழலின் விளைவால் அழிவை சந்திக்கவிருக்கின்றன என்பதை இந்நூலில் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் டான் ஈகன் . செயிண்ட் லாரன்ஸ் சீவேயில் மனிதர்களின் தலையீட்டில் அதன் இயல்பான உயிரினங்கள் அழிவைச் சந்தித்ததை விளக்கும் ஆசிரியர் , நீர்நிலையை சுத்தப்படுத்த இறக்குமதி செய்யப்பட்ட கெண்டை மீன்கள் சூழலுக்கு எப்படி கேடாக மாறின என்பதை விளக்கும் இந்நூல் இயற்கை காதலர்களுக்கு பிடித்தமானது . Curators: Behind the Scenes of Natur

எதிர்கால உணவு செயற்கை இறைச்சியா? - விக்டர் காமெஸி

படம்
எதிர்கால உணவு செயற்கை இறைச்சியா ? - விக்டர் காமெஸி செயற்கை இறைச்சி என்றதும் பிளாஸ்டிக் ( அ ) ரப்பரா என பீதி வேண்டாம் . விலங்குகளில் செல்களைக் கொண்டு லேபில் செய்வதுதான் செயற்கை இறைச்சி . 2013 ஆம் ஆண்டு ஊடகத்தின் முன்பு செயற்கையாக லேபில் வளர்த்தெடுக்கப்பட்ட இறைச்சி பர்கரில் வைத்து சமைக்கப்பட்டு வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது . பிளஸ் எந்த விலங்குகளையும் கொல்ல வேண்டியதில்லை என்பதுதான் . மைனஸ் லேபில் தயாரிக்கப்பட்ட இறைச்சிக்கான செலவு 3 லட்சம் டாலர்கள் . இதிலும் ஸ்டார்ட் அப்புகள் தொழில்முயற்சிகள் இல்லாமலில்லை . 2016 ஆம் ஆண்டு மெம்பிஸ் மீட்ஸ் என்ற உணவு தயாரிப்பு நிறுவனம் 1000 டாலர்கள் செலவில் இறைச்சியை தயாரித்து ஆச்சரியப்படுத்தியது . பன்றி , மீன் , பால் , முட்டை , தோல் ஏன் வெடிமருந்து கூட தயாரிக்க முடியும் . " தொழில்முறையில் தயாரிக்கும்போது இறைச்சியை 10 டாலர்கள் விலையில் கூட ஈஸியாக உருவாக்கலாம் " என்கிறார் 3 லட்ச ரூபாயில் இறைச்சி பர்கரை உருவாக்கிய டாக்டர் மார்க் போஸ்ட் . லேபில் இறைச்சி !