இடுகைகள்

இன்டர்வியூ டிப்ஸ் கேட்கவேண்டிய அவசிய கேள்விகள்! -ச.அன்பரசு

படம்
இன்டர்வியூ டிப்ஸ் கேட்கவேண்டிய அவசிய கேள்விகள் ! -ச.அன்பரசு மதிய லன்சுக்கு மணக்க மணக்க பாரதி மெஸ் வெஜ் பிரியாணி . தட்டில் ஆனியன் இல்லை அப்படியே விட்டுவிடுவீர்களா என்ன ? அடிச்சு பிடிச்சுனாலும் கேட்டு வாங்கி சாப்பிட்டு தமிழன் பாரம்பரியத்தை காப்பாற்றுவோமா இல்லையா ? இதே துடிப்பும் துறுதுறுப்பும் இன்டர்வியூவுக்கும் அதிஅவசியம் . பதிலைக் கடந்து சில கேள்விகளையும் கேட்பது வேலை மீது நமக்கிருக்கும் ஆர்வத்தைக் காட்ட சூப்பர் வழியும் கூட . இந்த வேலையின் தேவை என்ன ? இன்டர்வியூ என்பது ஹெச்ஆரை இம்ரஸ் செய்வது தாண்டி நீங்கள் வேலைக்கு பொருத்தமான டேலன்ட்டை கொண்டவர் என ப்ரூஃப் செய்யும் இடமும் கூட . " வேலையின் தேவை குறித்து கேட்பது மூலம் வேலையிலிருந்து முன்னவர் விலகியதற்கான காரணத்தையும் பிஸினஸின் நிலை குறித்தும் அறியலாம் " என்கிறார் வேலைவாய்ப்பு கவுன்சிலர் ஏஞ்சலா கோப்லாண்ட் . உங்கள் நிறுவனத்தில் ஒருவர் தொடர்ந்து பணிபுரிவதற்கான காரணம் என்ன ? இன்று பல நிறுவனங்களும் பத்து பொருத்தங்களும் நி

பசுமை பேச்சாளர்கள் 8 சோனியா நஸாரியோ ச.அன்பரசு

படம்
பசுமை பேச்சாளர்கள் 8 சோனியா நஸாரியோ ச . அன்பரசு அமெரிக்காவின் விஸ்கான்சிலுள்ள மேடிசன் நகரில் பிறந்த சோனியா நஸாரியோ உலகம் முழுவதும் புகழ்பெற்ற முக்கிய பத்திரிகையாளர் . கான்ஸாஸ் , அர்ஜென்டினா ஆகிய பகுதிகளில் வளர்ந்த இவர் , அர்ஜென்டினாவில் ஏற்பட்ட போரில் அமெரிக்காவுக்கு பெற்றோருடன் இடம் பெயர்ந்தார் . வில்லியம்ஸ் கல்லூரி பட்டதாரியான இவர் , பெர்க்கிலியிலுள்ள கலிஃபோர்னியா பல்கலையில் முதுகலை படிப்பை முடித்தார் . பல்வேறு தன்னார்வ அமைப்புகளில் பணியாற்றியுள்ள சோனியா , 1993 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸில் லத்தீன் அமெரிக்க மக்கள் குறித்து எழுதிய கட்டுரைகளால் பலராலும் வாசிக்கப்படும் எழுத்தாளரானார் . 1998 ஆம் ஆண்டு போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள் குறித்து இவரது கட்டுரை புலிட்ஸர் பரிசின் இறுதிப்பட்டியலில் இடம்பெற்று இவரது புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றது . மேலும் இவரது கட்டுரையின் புகைப்படக்காரரான கிளாரன்ஸ் வில்லியம்ஸூக்கு புலிட்ஸர் விருது கிடைத்தது . பசி , போதை , அகதிகள் குடியேற்றம் உள்ளிட்ட நாட்டின் முக்கியப் பிரச்னைகளை எழுதுவதில் ஆர்வம் கொண்ட சோனியா பல்வேறு மனித உ

இன்டர்வியூ டிப்ஸ்! புதைகுழி கேள்விகள்! -ச.அன்பரசு

படம்
இன்டர்வியூ டிப்ஸ் ! புதைகுழி கேள்விகள் ! -ச.அன்பரசு இன்டர்வியூவை இலவம் பஞ்சாய் ஊதித்தள்ளுமளவு கெப்பாசிட்டி  உங்களிடம் டன் கணக்கில் இருக்கலாம் . ஆனால் சிலசமயம் வாயில் வாந்தி வருவதுபோல துடுக்கான சொற்கள் வெளிவந்துவிட்டால் , வேலை போச்சு . சில வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தினாலே வேலை நிச்சயம் . உங்கள் கம்பெனி எனக்கு என்ன செய்யும் ? நாயர்கடையில் ஸ்ட்ராங் டீ கேட்பது எப்படி சாதாரணமோ அதைப்போலத்தான் பலருக்கு இந்த கேள்வியும் . " நம்புவீர்களோ இல்லையோ ஹெச்ஆர்களிடம் வேலைக்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் நம்பர் 1 கேள்வி இதுதான் " என்கிறார் மான்ஸ்டர் தளத்தின் வேலைவாய்ப்பு ஆலோசகர் சார்லஸ் புர்டி . இப்படி கேள்வி கேட்கும் மாஸ் ஜீனியஸ்களுக்கு வேலைதர நிறுவனங்கள் என்ன முட்டாள்களா ? எனவே அவசிய கேள்விகளை கேட்டால் போதும் .  எனக்கு இந்த வேலை வேண்டும் !   நீங்கள் வேலைகேட்டு சென்றிருக்கிறீர்கள் . இப்படியொரு கேள்வியை உங்களிடம் வேலைகேட்டு வருபவர் கேட்டால் அவரை தேர்ந்தெடுப்பீர்களா ? " கம்பெனியின் வளர்ச்சி என்ற கோட்வேர்டை பயன்படுத்தினாலே போதும் . நேர்காணல் செய்பவர் , தம்

இன்டர்வியூவில் பேசுவது எப்படி? - ஈஸி இம்ப்ரஷன் டிப்ஸ்!

படம்
இன்டர்வியூவில் பேசுவது எப்படி ? - ஈஸி இம்ப்ரஷன் டிப்ஸ் ! -ச.அன்பரசு கனவு வேலைக்கான அப்ளிகேஷனை அம்சமாக தயாரித்து , சுபமுகூர்த்தத்தில் தினத்தில் இன்டர்வியூ அழைப்பும் வந்துவிட்டது . அதில் ஃபார்மலான பேச்சு தாண்டி நேர்காணல் செய்பவரோடு செய்யும் ஜாலியாக மாட்லாடும் குட்டிப்பேச்சுகளும் சூப்பர் இம்ப்ரஷனை ஏற்படுத்தி உங்களுக்கான வேலைக்கு கான்க்ரீட் கேரண்டி தரக்கூடும் . தொடர்புகள் அவசியம் ! ஓட்டேரி நரி , கெடா குமார் போன்ற உங்கள் லோக்கல் நட்புகளைத் தாண்டி வேலைக்கு புரஃபஷலான நிறுவன ஆட்களின் தொடர்பு அவசியம் தேவை . ஹார்வர்ட் யுனிவர்சிட்டியில் ஆய்வு , நேர்காணல் செய்பவர்களோடு , பேசும் திறன் அவசியம் என்று கூறுகிறது . எனவே நேர்காணல் செய்பவர்களின் சமூக கணக்குகளை ஃபாலோ செய்தால் அவர்களிடம் பேசுவதற்கான ஐடியாவை பிடிக்கலாம் . அப்டேட் சாதனைகள் அவசியம் ! அந்த காலத்தில் ... என ஜவ்வாக இழுக்காமல் வேலையின் ட்ரெண்டை நூல்பிடித்து பேசுங்கள் . நேர்காணல் செய்பவர் , குறிப்பிட்ட தலைப்பில் கட்டுரைகளை லிங்க்டு இன் தளத்தில் ஷேர் செய்திருந்தால் , பேசுவதற்கு வேறென்ன பாஸ் வேண்டும் ? டாபிக்கை எடுங்கள்

பசுமை பேச்சாளர்கள் 7 (ஸ்பைக் லீ) -ச.அன்பரசு

படம்
பசுமை பேச்சாளர்கள் 7 ஸ்பைக் லீ ச . அன்பரசு அமெரிக்காவின் அட்லாண்டாவில் 1957 ஆம் ஆண்டு மார்ச் 20 அன்று ஆப்பிரிக்க அமெரிக்க குடும்பத்தில் பிறந்தவர் பின்னாளில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான ஸ்பைக்லீ . தன் வாழ்வின் பால்யத்திலேயே நியூயார்க்கிலுள்ள ப்ரூக்ளின் நகருக்கு இடம் பெயர்ந்த ஸ்பைக் லீ ,  தனது 20 வயதிலேயே அமெச்சூர் படங்களை இயக்கி ' எ பிலிம் பை லீ ' என கனவு காணத்தொடங்கிவிட்டார் .   தனது joe's bed-stuy barbershop we cut heads   என்ற பள்ளி ப்ராஜெக்ட் படத்திற்கு மாணவர் அகாதமி விருது வென்று சாதித்தவர் , நிறவெறி , அரசியல் , வன்முறை ஆகிய மூன்று விஷயங்களையும் மிக்ஸியில் அரைத்து குலுக்கி கல்லா கட்டுவதில் கில்லாடி . 1982 ஆம் ஆண்டு நியூயார்க் பல்கலைக்கழக திரைப்பட பள்ளியில் டிகிரி பெற்றவர் , 1991 ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலையில் திரைப்பட பயிற்சி ஆசிரியரானார் . கடந்த 15 ஆண்டுகளாக நியூயார்க் திரைப்பட பள்ளியில் திரைப்பட பேராசிரியராகவுள்ள ஸ்பைக் லீ , தனது திரைப்பட பங்களிப்புக்காக , பாஃப்டா , கிராமி விருது (2013) உட்பட பல்வேறு விருதுகளை அள்ளியுள்ளார் .   ஸ்பைக

"விவசாய வளர்ச்சி என அரசு காட்டும் புள்ளிவிவரங்கள் தவறானவை" முத்தாரம் நேர்காணல்

படம்
" விவசாய வளர்ச்சி என அரசு காட்டும் புள்ளிவிவரங்கள் தவறானவை " நேர்காணல் ஹிமான்சு பொருளாதார வல்லுநர் . தமிழில் : ச . அன்பரசு டெல்லியில் தமிழக விவசாயிகள் எலிதின்று , தலைமுடி சிரைத்து பெறமுடியாத கடன் தள்ளுபடி சலுகைகளை மகராஷ்டிரா விவசாயிகள் தங்களது இடையறாத போராட்டத்தின் வழியே பெற்றுவிட்டார்கள் . அடுத்து மத்திய பிரதேசத்திலும் விவசாயிகள் சாலைக்கு வந்திருக்கிறார்கள் . அங்கு போலீஸ் நடத்திய அடக்குமுறையில் 6 விவசாயிகளின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது . கடன்தொல்லையால் தற்கொலைகளும் நிகழ்ந்துவரும் நிலையில் இது குறித்து பொருளாதார வல்லுநர் ஹிமான்சுவிடம் உரையாடினோம் . பயிர்களுக்கு , பாலுக்கு சரியான விலை வேண்டும் என ஒவ்வொரு மாநிலங்களாக போராட்டத்தில் குதிப்பதை எப்படி பார்க்கிறீர்கள் ? பயிர்களுக்கான விலை உயராத நிலையில் விவசாயிகள் அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறார்கள் . அரசு அளிக்கும் குறைந்தபட்ச விலை , விவசாயிகளுக்கு பயிர் விளைவிக்கும் செலவையும் பெற்றுத்தராதபோது போராட்டம் தவிர்த்து வேறுவழியென்ன இருக்கிறது அவர்களுக்கு ? 2014-2015 ஆம் ஆண்டு வறட்சியான ஆண்டும் கூட . உ . பி அரசு வ

பசுமை தகனம் அறிமுகம்! - கா.தமிழ்மாறன்

படம்
பசுமை தகனம் அறிமுகம் ! - கா . தமிழ்மாறன் இறப்பவர்களை பொதுவாக என்ன செய்வோம் ? எரிப்போம் , புதைப்போம் அல்லது தற்போது மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட சோதனைகளுக்கு உடலை கொடுப்பது பிரபலமாகி வருகிறது . ஆனால் தற்போது பசுமை தகனம் எனும் முறை பிரபலமாகி வருகிறது . அமெரிக்கா மற்றும் கனடாவில் பிரபலமான பசுமை விரைவில் இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளிலும் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது . ஸ்லெண்டர் மரங்கள் சூழ இருந்த பிராட்ஷா லைஃப் சென்டர் கட்டுமானமே ப்ரெய்ரி ஸ்டைலில் புதுமையாக கட்டப்பட்டதாகும் . உடல்களை கரைக்க உதவும் அல்கலைன் நீர்மத்தைக் கொண்டுள்ள மெஷினின் விலை 7 லட்சத்து 50 ஆயிரம் டாலர்கள் . கார நீர்மம் கொண்ட பெட்டி 6 அடி நீளம் , 4 அடி அகலமும் , பத்து அடி ஆழமும் கொண்டது . அதிலுள்ள வட்டவடிவ மூடி நீர்மூழ்கி கப்பலின் கதவை நினைபடுத்துகிறது . நீர்மத்தில் உடல் கரைந்து போவதை உறவினர்கள் பார்க்கும் வசதியும் உண்டு . ஆனால் அந்த மனதைரியம் எத்தனை பேருக்குண்டோ ? எப்படி செயல்படுகிறது ? கருப்பு நிற கம்பளியால் உடலை மூடி , வட்டவடிவ கதவைத்திறந்து உடலை உள்ளே வைக்கிறார்கள் . சைக்கிள் என்ற ஆப்ஷ

பசுமை பேச்சாளர்கள் 6 (மைக் கிம்) ச.அன்பரசு

படம்
பசுமை பேச்சாளர்கள் 6 மைக் கிம் ச . அன்பரசு 1976  ஆம் ஆண்டு வடகொரியாவில் பிறந்த மைக் கிம் புகழ்பெற்ற வணிக ஆலோசகர் , பேச்சாளர் மற்றும் திறமையான எழுத்தாளரும் கூடத்தான் . தாய்நிலத்திலிருந்து 2003 ஆம் ஆண்டு சீனா - வடகொரியா எல்லைப்பகுதியில் கிராசிங் பார்டர்ஸ் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி வடகொரியா அகதிகளுக்கு உதவிகள் செய்யத்தொடங்கியது மைக் கிம்மின் சமூக பணிகளுக்கு தொடக்கப்புள்ளி . எல்லைப்பகுதியில் இவர் கண்ட மக்களின் அனுபவங்களை எழுத்தாக்கிய அனுபவம்தான் Escaping North Korea: Defiance and Hope in the World's Most Repressive Country  என்ற நூலாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை ஆதரவுடன் வெளி வந்தது . சீனா - வடகொரியா எல்லைப்பகுதி மக்களிடையே நடந்த ஆள்கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களை மையமாக கொண்ட நூல் இது . ரயில்பாதை வழியாக ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்றிய திடுக்கிடும் இந்நூல் பின்னர் துருக்கி , பொலிவிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதோடு , நடிகர் டேனியல் டே கிம் மூலம் திரைப்படமாகவும் உருவாகி வருகிறது . ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தின் வணிக மேலாண்மை பட்டதாரியான மைக் கிம் ஏறிச்சென்று பேச

விதிகளுக்கு டிமிக்கி! மரபணுமாற்ற விதைகள் அபாயம்! - கா.சி.வின்சென்ட்

படம்
விதிகளுக்கு டிமிக்கி ! மரபணுமாற்ற விதைகள் அபாயம் ! - கா . சி . வின்சென்ட் 20 ஆண்டுகளுக்கு முன்பு மரபணுமாற்ற விதைகள் அறிமுகமானபோது , விளைச்சல் அதிகம் , உரம் குறைவு , உலகின் யாரும் இனி பசியில் இறக்கமாட்டார்கள் என ஏராள வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டன . ஆனால் இன்று அந்த வாக்குறுதிகள் தோல்வியடைந்ததோடு அப்பயிர்கள் மனிதர்களுக்கு பெரும் உடல்நல சீர்கேட்டை தருகிறது எனவும் நிரூபணமாகிவிட்டன . தற்போது ஜீன் எடிட்டிங் 2.0 அறிமுகமாயுள்ளது . வாக்குறுதிகள் அதேதான் . உணவு தயாரிப்பு , மருந்துகள் , எரிபொருட்கள் , ஆடைகள் இதன் பரப்பு அதிகம் . ஆனால் தற்போது மரபணு மாற்ற விதைகளுக்கான விதிகளும் செயற்கை உயிரியல் வகையிலான 2.0 விதைகளுக்கும் , அதன் பொருட்களுக்கும் கிடையாது என்பதுதான் அதிர்ச்சி . " மரபணுமாற்ற விதைகளின் டிஎன்ஏவானது கம்ப்யூட்டரால் வடிவமைக்கப்படுவதுதான் 2.0 விதைகளின் ரகசியம் . முதல் தலைமுறை மரபணுமாற்ற தொழில்நுட்பங்களிலிருந்து மிகவும் வேறுபட்ட டெக்னிக்குகளை கொண்டது இது " என விரிவாக பேசுகிறார் இடிசி அமைப்பின் திட்ட இயக்குநரான ஜிம் தாமஸ் . இதில் பாசி , பாக்டீரியா , ஈஸ்ட் உள்ளிட்ட