இடுகைகள்

ஜாலி பிட்ஸ் 2 - விக்டர் காமெஸி

படம்
ஜாலி பிட்ஸ் -விக்டர் காமெஸி  லைசென்ஸ் இல்லாத பார்பி ஜீப் ! கலிஃபோர்னியாவின் ஹன்டிங்டன் பீச் . க்யூட் பார்பி ஜீப்பில் ரவுண்ட் அடித்த டேவி (3) என்ற சுட்டியிடம் லைசென்ஸ் , ஆர் . சி . புக் கேட்டு பீதி கிளப்பியிருக்கிறார் ஆபீசர் ஒருவர் . சுட்டியின் தாய் பலமுறை கேட்டும் பெயரைச் சொல்லாமல் எஸ்கேப்பாகிவிட்டார் ஆபீசர் . கமிஷன் கேட்கலியா ? சொதப்பிய ஏடிஎம் கொள்ளை ! அமெரிக்காவின் வாஷிங்டனின் எவரெட்டில்  நடந்த ஃபிளாப்பான கொள்ளை அது . கோஸ்டல் வங்கியின் ஏடிஎம் ஸ்டீல் தகடுகளை நெருப்பு மூலம் திருடர்கள் உடைத்தார்கள் . ஜஸ்ட் மிஸ்ஸாகி ஸ்டீலோடு சேர்ந்து கரன்சியும் சாம்பலாகி போனது திருடர்களுக்கே செம ஷாக் . தற்போது அந்த டுபாக்கூர் திருடர்களை போலீஸ் தேடிவருகிறது . சர்ச்சையில் பிரமாண்ட தவளை ! டெக்சாஸின் அசல் வேட்டைக்காரரான மார்க்கஸ் ராங்கெல்லிடம் சிக்கியுள்ளது பிரமாண்ட தவளை . சிங்கத்தை பிடித்துவிட்டது போல மார்கஸ் போஸ் கொடுக்கும் படத்திலுள்ள தவளையின் சைஸ் , படத்தில் பார்ப்பது போல் பெரியது அல்ல என சர்ச்சைகள் கிளம்பியுள்ளன . படேஸ்வில்லே பகுதியில் பிடிபட்ட மெகா புல்ஃபிராக் தவளைய

ஜாலி பிட்ஸ் 1 - விக்டர் காமெஸி

படம்
ஸ்ட்ராபெர்ரி சாதனை ! 105 அடியில் நீளத்தில் தயாரித்த கின்னஸ் சாதனை ஸ்ட்ராபெர்ரி கேக் பற்றித்தான் பிரான்ஸ் எங்கும் நாக்கில் எச்சிலூறும் பேச்சு . 25 ஆம் ஆண்டு ஸ்ட்ராபெர்ரி திருவிழாவுக்கென ஸ்பெஷலாக 720 முட்டைகள் , 440 பவுண்டுகள் ஸ்ட்ராபெர்ரி கொட்டித் தயாரிக்கப்பட்ட கேக்கை விற்று , அறக்கட்டளை நிதிக்கு காசு சேர்க்கப் போகிறார்களாம் . கிழி .. கிழி சுட்டி ! சீனாவின் ஷாங்டன் பகுதியிலுள்ள காவோ என்ற தொழிலதிபர் பேங்கில் கடன் வாங்கிய 5 லட்ச ரூபாயை சிம்பிளாக ட்ராயரில் வைத்ததுதான் அவர் செய்த தவறு . அடுத்த நாள் ட்ராயரை திறந்தால் , அத்தனை நோட்டுகளும் துண்டுகளாக கிடந்தன . அவரின் செல்ல வாண்டுவின் பகீர் வேலைதான் இது . அவன் குழந்தை அவனுக்கென்ன தெரியும் ? என இந்த அப்பாவின் பதில் .   மாரத்தான் காதல் ! அமெரிக்காவின் ஓஹியோவில் நடந்த க்ளீவ்லேண்ட் மாரத்தானில் ஸ்டெபானியாவுக்கு  சர்ப்ரைஸ் பரிசு அது . மாரத்தான் ஓடி முடித்தவரிடம் டக்கென முழங்கால் மடித்து காதல் சொல்லிவிட்டார் பல்லாண்டுத்தோழர் டேன் ஹார்வத் . மூச்சுவாங்க , மகிழ்ச்சியில் கண்கலங்க ஸ்டெபானியா ஓகே சொல்ல , பார்வையாளர்கள்  வாழ்த்து

அறியப்படாத கணித மேதைகள்! -ப.அனுஷா

படம்
அறியப்படாத கணித மேதைகள் ! - ப . அனுஷா மிகச்சிறந்த கணிதமேதைகளான ஆர்க்கிமிடிஸ் , ஐசாக் நியூட்டன் ஆகியோர்களின் பிரதாபங்களை நூல்கள் வழியாகவும் , படங்களின் மூலமும் உலகமே அறிந்துள்ளது . ஆனால் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காது . அப்படிப்பட்ட கணக்கு மாஸ்டர்களைப் பற்றித்தான் பார்க்கப்போகிறோம் . முகமது அல் க்வாரிஸ்மி கி . பி . 800 இல் காலிப் அல் ரஷீத் பல்வேறு கலாசாரங்களிலுள்ள முக்கிய நூல்களை அரபி மொழியில் மொழிபெயர்த்து விஸ்டம் என்ற பெயரில் நூலகத்தை நடத்தி வந்தார் . அதில் படித்து வளர்ந்த மாணவர் க்வாரிஸ்மியின் பூர்வீகம் பெர்ஷியாவின் க்வாராஷிம் . நம் அக்கவுண்டை காலி செய்து காசை எடுப்பதற்கும் , நாம் என்ன சர்ச் செய்கிறோம் என்பதை நாசூக்காக கூகுள் சுடுவதற்கும் உதவும் அல்காரிதத்தை முதலில் சூடம் காட்டி தேங்காய் உடைத்து தொடங்கி வைத்தவர் க்வாரிஸ்மிதான் . இன்றுவரையும் ஹிட்ஹாட்டாக விற்கும் இரண்டு கணிதநூல்களை எழுதியவர் க்வாரிஸ்மி . al-Kitab al-mukhtasar fi hisab al-jabr wal-muqabala என்ற தலைப்பிலான இவரது நூல் என்ன சொல்கிறது ? அல்ஜீப்ராவின் நுணுக்கங்களைத்தான் . சிம்பல்களை பற்றி முழ

பசுமை பேச்சாளர்கள் 14 வெண்டல் பெரி

படம்
பசுமை பேச்சாளர்கள் 14 வெண்டல் பெரி ச . அன்பரசு 1934 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கென்டக்கியில் பிறந்தவரான வெண்டல் பெரிக்கு கவிஞர் , எழுத்தாளர் , விவசாயி என தசாவதாரங்கள் உண்டு . நவீன தொழில் விவசாயமுறை , கரிம எரிபொருட்கள் பயன்பாடு ஆகியவற்றை எழுத்து , பேச்சு , போராட்டம் என அத்தனை வழியிலும் எதிர்த்துவரும் இயற்கைநேய போராளி . ஐந்தாம் தலைமுறை விவசாயி ! வழக்குரைஞரும் , விவசாயியுமான ஜான் மார்ஷல் பெரி குடும்பத்தில் வெண்டல் பெரி , 4 வது மெம்பர் . ஐந்து தலைமுறையாக ஏர்பிடித்து புகையிலை பயிரிடும் பாரம்பரிய குடும்பம் இவர்களுடையது . மில்லர்ஸ்பர்க் பள்ளியில் இளங்கலை படித்து முதுகலையை கென்டக்கி பல்கலையில் முடித்தவர் உடனே தன்யா அமிக்ஸை தன் துணைவியாக்கிக்கொண்டார் . விவசாயி எழுதுகிறார் ! 1965 ஆம் ஆண்டு தன் மனைவி இரு குழந்தைகளோடு 125 ஏக்கர் பண்ணையில் செட்டிலாகி விவசாயம் பிளஸ் எழுத்தும் தொடங்கிவிட்டார் . " இயற்கையின் பரிசை உதாசீனப்படுத்தக்கூடாது . சூழலுக்குகந்த பொருட்களைப் பற்றி அமெரிக்கர்கள் பேசினாலும் , இயற்கையைக் காக்க இதுவரை ஒரு துரும்பைக்கூட அவர்கள் கிள்ளிப்போட்டதில்ல

இன்ஸோம்னியா ஏற்படுத்தும் 7 ஜீன்கள்!

இன்ஸோம்னியா ஏற்படுத்தும் 7 ஜீன்கள் ! இன்ஸோம்னியா பிரச்னைக்கு மூளையில் உள்ள சிக்கல்தான் காரணம் என நினைத்துக்கொண்டிருப்போம் . ஆனால் அதற்கு மரபியல்ரீதியிலான 7 ஜீன்கள் காரணமுண்டு என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் . ஒரு லட்சத்து 13 ஆயிரம் மாதிரிகளை ஆய்வு செய்து ஐரோப்பாவைச் சேர்ந்த இன்டர்நேஷனல் ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டறிந்துள்ளனர் . இன்ஸோம்னியா பிரச்னைகளுக்கு மூளையில் ஏற்படும் சிக்கல்களைக் கடந்து அவற்றுக்கு மரபணுக்களும் காரணமாக இருக்கலாம் என்பதை இந்த ஆய்வு உணர்த்தியுள்ளது என்கிறார் பேராசிரியர் வான் சோமெரென் . குறிப்பிட்ட மரபணுக்களில் பதட்டம் , மன அழுத்தம் ஆகியவற்றை இந்த ஏழு ஜீன்கள் கொண்டிருந்தன . 50 வயதைக் கடந்தவர்களிடம் செய்த டெஸ்டில் ஆண்கள் 24%. பெண்கள் 53% தூக்கமின்மையால் அவதிப்படுவது கண்டறியப்பட்டுள்ளது .   நன்றி: முத்தாரம் வார இதழ்

ஏன்?எதற்கு?எப்படி? -Mr.ரோனி

படம்
ஏன் ? எதற்கு ? எப்படி ? -Mr. ரோனி சில இடங்களில் தூங்கும்போது ஏன் அதிகப்படியான கனவுகள் வருகிறது ? ரேபிட் ஐ மூவ்மெண்ட் எனும் நிலையில்தான் பெரும்பாலும் நமக்கு டோராவின் ஐந்து நண்பர்களில் ஒருவராகவும் , ஜாக்கிசானோடு மந்திரக்கற்களை தேடித்திரியும் ஜூலியாகவும்  பயணிக்கும் டுபாக்கூர் சூப்பர் ஹீரோ கனவுகள் வருகிறது . இந்தநேரத்தில் நம்மேல் தண்ணீர் ஊற்றி ' எழுந்திரு எருமை ' என அம்மா செல்லம் கொஞ்சி எழுப்பினாலும் இவை நமக்கு மறக்காமல் நினைவிலிருக்கும் . சூடான புழுக்கமாக , குளிர்ச்சியாக , இரைச்சல் உள்ள இடங்களில் நம் மனம் பாதுகாப்பு தேடும் அவசரத்தில் இருப்பதால்  கனவுகள் டன் கணக்கில் வரும் . எனவே இதுபோன்ற கச்சடா இடங்களில் தூங்கி எழுந்தால் 1000 வாட்ஸ் பல்பின் வெளிச்சமாய் கனவுகள் உங்கள் நினைவுக்கு வரும் . வயதானவர்களுக்கு காயங்கள் குணமாக அதிக நாட்களாகிறதே ஏன் ? உடலில் உள்ள நோய்தீர்க்கும் அமைப்பு காலப்போக்கில் மெல்ல சிதைவடையத் தொடங்குவதால் முதியவர்களுக்கு காயம் குணமாக அதிக காலம் பிடிக்கிறது . காயம் ஏற்படும்போது வெள்ளையணுக்கள் ரத்தப்பெருக்கை நிறுத்தி உடனடியாக ஸ்டெம்செல் மற்ற

நேர்காணல்: ஆப்கன் கிரிக்கெட் வீரர் ரஷீத்கான் தமிழில்: ச.அன்பரசு

படம்
நேர்காணல் : ஆப்கன் கிரிக்கெட் வீரர் ரஷீத்கான் தமிழில் : ச . அன்பரசு ஐபிஎல் கிரிக்கெட்டில் முதன்முதலாக ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் அணியிலிருந்து சுழற்பந்து வீச்சாளர் ரஷீத்கான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதே பெரிய ஆச்சர்யம் . ஐதராபாத் அணி பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ள சுழற்பந்து வீரரிடம் இனிய மாலை வேளையில் உரையாடினோம் . இன்று ஐபிஎல்லில் சுழற்பந்து வீச்சில் அசத்திவருகிறார்கள் . ஆனால் முதலில் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்று நம்பினீர்களா ? நிச்சயம் இல்லை . ஏனெனில் பாகிஸ்தானில் பிறந்து தென் ஆப்பிரிக்காவுக்காக விளையாடி வரும் இம்ரான் தாஹிர் தேர்ந்தெடுக்கப்படவில்லை . எனவே அவநம்பிக்கைதான் என்னிடமிருந்தது . டி 20 கிரிக்கெட்டின் டாப் 10 தரவரிசையிலும் கூட நான் இடம்பெறாதபோது எப்படி நம்பிக்கை வரும் ? ஐதராபாத் அணிக்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதை டிவியில் பார்த்து தெரிந்துகொண்டேன் . ஏலத்தொகையை விட ஐபிஎல்லில் விளையாடும் வாய்ப்பு என்பதையே பெரிதாக நினைத்தேன் . ஐபிஎல் விளையாட்டில் பங்கேற்ற வீரர்களோடான அனுபவங்களைக் கூறுங்கள் . நான் முன்னமே

நேர்காணல்: பேரி W. ஃபிட்ஸ்ஜெரால்டு, டெல்ஃப்ட் யுனிவர்சிட்டி.

படம்
நீங்களும் சூப்பர் ஹீரோ ஆகலாம் ! நேர்காணல் : பேரி W. ஃபிட்ஸ்ஜெரால்டு , டெல்ஃப்ட் யுனிவர்சிட்டி . தமிழில் : ச . அன்பரசு டெல்ஃப் பல்கலையின் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளரான பேரி ஃபிட்ஸ்ஜெரால்டு சூப்பர் ஹீரோக்கள் பற்றிய புத்தகம் எழுதியதோடு , அவர்களின் சூப்பர் பவர் குறித்த பத்திரிகை ஒன்றையும் தொடங்கவிருக்கிறார் . அதில் மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள் , பொறியியல் ஆகியவை மக்களுக்கும் சூப்பர்ஹீரோ சக்தியை கொண்டுவந்து சேர்க்கும் என என நம்புகிற வித்தியாசமான ஆராய்ச்சியாளர் இவர் . தகவல் தெரிந்ததும் உடனே மிஸ்டுகால் கொடுத்து எடுத்த பேட்டி இது . சூப்பர்ஹீரோ பற்றிய ஆராய்ச்சியில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது ? நான் தீவிர காமிக்ஸ் விசிறியெல்லாம் கிடையாது . 1985 ஆம் ஆண்டு சூப்பர்மேன் படம் பார்த்தேன் . பறப்பது , சுவர்களை லேசரால் துளைப்பது என அந்த வயதில் எனக்கும் சூப்பர்பவர் தேவை என நினைக்க வைத்த படம் அது . அதன்பின் பேட்மேன் (1980), எக்ஸ்மேன் (2000) ஆகிய படங்கள் மனிதர்களுக்கு இந்த அபூர்வ சக்தி இருந்தால் நன்றாயிருக்குமே என பேராசைப்பட வைத்தன . அப்போது லீமெரிக் பல்கலையில் அப்ளைடு