ஜாலி பிட்ஸ் 2 - விக்டர் காமெஸி
ஜாலி பிட்ஸ் -விக்டர் காமெஸி லைசென்ஸ் இல்லாத பார்பி ஜீப் ! கலிஃபோர்னியாவின் ஹன்டிங்டன் பீச் . க்யூட் பார்பி ஜீப்பில் ரவுண்ட் அடித்த டேவி (3) என்ற சுட்டியிடம் லைசென்ஸ் , ஆர் . சி . புக் கேட்டு பீதி கிளப்பியிருக்கிறார் ஆபீசர் ஒருவர் . சுட்டியின் தாய் பலமுறை கேட்டும் பெயரைச் சொல்லாமல் எஸ்கேப்பாகிவிட்டார் ஆபீசர் . கமிஷன் கேட்கலியா ? சொதப்பிய ஏடிஎம் கொள்ளை ! அமெரிக்காவின் வாஷிங்டனின் எவரெட்டில் நடந்த ஃபிளாப்பான கொள்ளை அது . கோஸ்டல் வங்கியின் ஏடிஎம் ஸ்டீல் தகடுகளை நெருப்பு மூலம் திருடர்கள் உடைத்தார்கள் . ஜஸ்ட் மிஸ்ஸாகி ஸ்டீலோடு சேர்ந்து கரன்சியும் சாம்பலாகி போனது திருடர்களுக்கே செம ஷாக் . தற்போது அந்த டுபாக்கூர் திருடர்களை போலீஸ் தேடிவருகிறது . சர்ச்சையில் பிரமாண்ட தவளை ! டெக்சாஸின் அசல் வேட்டைக்காரரான மார்க்கஸ் ராங்கெல்லிடம் சிக்கியுள்ளது பிரமாண்ட தவளை . சிங்கத்தை பிடித்துவிட்டது போல மார்கஸ் போஸ் கொடுக்கும் படத்திலுள்ள தவளையின் சைஸ் , படத்தில் பார்ப்பது போல் பெரியது அல்ல என சர்ச்சைகள் கிளம்பியுள்ளன . படேஸ்வில்லே பகுதியில் பிடிபட்ட மெகா புல்ஃபிராக் தவளைய