இடுகைகள்

பசுமை பேச்சாளர்கள் 16 அர்னால்டு அல்கோர் ஜூனியர் ச.அன்பரசு

படம்
பசுமை பேச்சாளர்கள் 16 அர்னால்டு அல்கோர் ஜூனியர் ச . அன்பரசு அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் 1948 ஆம் ஆண்டு பிறந்த ஆல்பெர்ட் அர்னால்ட் ஜூனியர் , முன்னாள் துணை அதிபர் , எழுத்தாளர் , சூழலியலாளர் , வழக்குரைஞர் , பேச்சாளர் என தூள் கிளப்பிய மல்டிடாஸ்க் மாஸ்டர் .   டென்னிஸி மாநிலத்தின் செனட்டராக 18 ஆண்டுகள் பணியாற்றிய அல்கோர் , தன் 24 ஆண்டு அரசியல் வாழ்வு கடந்து சூழலியல் நேயராக உலகிற்கு அறிமுகமானவர் . சிறுவயதில் பெரும்பாலும் கார்டேஜ் பண்ணை நிலத்தில் விலங்குகளை , புகையிலை ஆகியவற்றை விளைவிப்பதில் ஆர்வமாக இருந்தார் . ஸ்காட் - ஐரிஷ் வம்சாவழியைச் சேர்ந்தவர் படிப்பில் படு சுட்டி என்பதே , பள்ளிக்குப் பிறகு ஹார்வர்டில் விண்ணப்பித்த உடனே படிக்க அனுமதி கிடைக்க ஒரே காரணம் . 1976 ஆம் ஆண்டிலிருந்து அல்கோரின் இயற்கை மீதான செயல்பாடுகள் தூய நீர் , காற்று , பசுமை இல்ல வாயுக்கள் ஆகியவற்றுக்கு எதிராக மாநாடு நடத்துவதிலிருந்து தொடங்கின . An Inconvenient Truth என்ற சூழல் நூல் அல்கோரின் பெருமையை வேறு லெவலுக்கு மாற்றியது . மேலும் பல புத்தகங்களை எழுதிய அல்கோர் 2007 ஆம் ஆண்டு அமைதிக்கான நோ

சுடச்சுட அறிவியல் ! - விக்டர் காமெஸி

படம்
சாக்லெட் சந்தோஷம் ஏன் ? காசை கூட கடன் கொடுக்கும் குட்டீஸ்கள் உண்டு .  ஆனால் சாக்லெட் மேட்டரில் பகிர்தல் , பங்கு என்றால் வெட்டுக்குத்து ஆகிவிடுகிறது . சாக்லெட் ஃபுல்லா எனக்கே வேணும் என அப்படியே பஞ்சாமிர்தமாக வாயில் வழிய வழிய குட்டீஸ் சாப்பிடும் ரகசியம் என்ன ? Tryptophan,Phenylethylalanine,Theobromine இந்த மூன்று மும்மூர்த்திகள்தான் சுட்டி டிவி பார்த்தபடி சமயத்தில் வாங்கிக்கொடுத்த நமக்கே கொடுக்காமல் சாக்லெட்டை வாண்டுகள் வாயில் தாம்பூலமாய் குதப்பி சாப்பிடக்காரணம் .   மின்சார உணவு சாப்பிட ரெடியா ? கரண்டைத் தொட்டால் சாவுதான் வரும் . சோறு வருமா ? ஏன் வராது என்கிறார்கள் பின்லாந்தைச் சேர்ந்த லாப்பீன்ரன்டா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் VTT தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள் . என்ன தேவை ? தேவையான அளவு மின்சாரம் , தேவையான அளவு நீர் , சிறிது கார்பன்டை ஆக்சைடு , கொஞ்சம் நுண்ணுயிரிகள் . பயோரியாக்டரில் மேற்சொன்ன பொருட்களை கொட்டினால் சில நிமிடங்களில் பவுடர் (50% புரதம் 25% கார்போஹைட்ரேட் ) கிடைக்கும் . அதில் நுண்ணுயிரிகள் இதன் தன்மையை மாற்றினால் உணவு ரெடி

விநோதரசமஞ்சரி- தொகுப்பு: ரோனி ப்ரௌன்

படம்
அழகு மனைவிக்காக புடவை அபேஸ் ! மனைவி மேல் லவ் இருந்தால் என்ன செய்வீர்கள் ? பக்கெட் பிரியாணியை ஆஃபரில் ஆர்டர் செய்வோம் , ஆடி ஆஃபர் தள்ளுபடி கடைகளை கூகுளில் காட்டலாம் . தண்ணீர் லாரி வந்தால் டோக்கன் போட்டு குடம் வைக்கலாம் . ஆனால் தன் அதிலோக சுந்தரி மனைவிக்காக ஹஸ்பெண்ட் என்ன செய்தார் தெரியுமா ? சத்தீஸ்கரின் பிலாஸ்பூரைச் சேர்ந்த  காந்த் குப்தாதான் மனைவி பிரமிளா மேல் டன் கணக்கில் பாசம் கொண்ட கணவர் . மனைவி பிரமிளா பிலாஸ்பூரில் நடந்த சாவன் சுந்தரி என்ற லோக்கல் அழகிப்போட்டிக்கு பெயர் கொடுத்துவிட , மனைவி கண்ணுக்கு லட்சணமாக நின்றால்தானே தனக்கு கௌரவம் என்று நினைத்த  காந்த் அதன்பின் எல்லாம் நோ யோசனை .  டிசைனர் கடை ஜெட் வேகத்தில் சென்றவர் , 50 ஆயிரம் மதிப்புள்ள ஆடைகளை டக்கென  அபேஸ் செய்தவர் , அதனை தன் மனைவிக்கு போட்டு அழகுபார்த்ததோடு நின்றிருக்கலாம் . ஆனால் அழகிப்போட்டியில் ராம்ப்வாக் செல்ல திருட்டு புடவையைக் கட்டிவிட்டதுதான் வினையானது . விழாவில் புடவையைப் பார்த்து ஒருவர் போலீசுக்கு மிஸ்டுகால் கொடுக்க , பிரதீப் இப்போது மாமியார் வீட்டில் கம்பி எண்ணுகிறார் . மின்சாரமில்லாத மே

சீனாவின் மூர்க்கமான குணம்தான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம்!

படம்
சீனாவின் மூர்க்கமான குணம்தான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் ! நேர்காணல் : முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஷியாம் சரா தமிழில் : ச . அன்பரசு இந்தியாவுக்கு விசா நெருக்கடி தந்ததிலிருந்து பாரீஸ் சூழல் ஒப்பந்தத்திலிருந்து விலகியதுவரையிலான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவு பற்றி என்ன கூறுகிறீர்கள் ? இதில் ஆச்சரியம் ஏதுமில்லை . ஏனெனில் அமெரிக்க அதிபரான ட்ரம்ப் இதற்கு முன்பும் இதுபோல ஏராளமான மூர்க்கத்தன அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார் . நாம் நம்முடைய முந்தைய வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் செயல்படுவதுதான் நல்லது . இந்தியா தன் வெளியுறவுக்கொள்கை தோல்வி என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்துவிட்டது . சரி ,  இந்தியா தன் இத்தனை ஆண்டுகளாக கையாண்ட வெளியுறவுக்கொள்கையில் சாதித்தது என்ன ? இந்தியா - அமெரிக்க உறவு என்பது விரிவானது என்பதோடு விளக்குவதும் கடினம் . ஐடி வேலைவாய்ப்புகளில் ட்ரம்பின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு ஆதரவாக இல்லையென்றாலும் , பாதுகாப்பு ஆயுதங்கள் , தீவிரவாத எதிர்ப்பு , தொழில்நுட்ப கூட்டுறவு போன்றவற்றில் அமெரிக்க உதவி வருவது உண்மை . தலாய்லாமா , அ

நீதியை எதிர்கொள்ள லாலுபிரசாத்திடம் வலுவில்லை! நேர்காணல்: சுசில்குமார் மோடி, பீகார் பா.ஜ.க தலைவர் தமிழில்: ச.அன்பரசு

படம்
நீதியை எதிர்கொள்ள லாலுபிரசாத்திடம் வலுவில்லை ! நேர்காணல் : சுசில்குமார் மோடி , பீகார் பா . ஜ . க தலைவர் தமிழில் : ச . அன்பரசு பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஒருங்கிணைந்த ஜனதாதளமும் , லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளமும் ஒன்றிணைந்து ஆட்சி செய்துவரும்நிலையில் நிதிஷ் பா . ஜ . கவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரித்து பேசினார் . அடுத்த அதிரடியாக லாலுவின் வீட்டில் வருமானவரிச் சோதனை நடந்தது . அவரின் மீதான ஊழல் வழக்கும் தூசு தட்டப்பட்டு வருகிற நிலையில் பாஜகவின் அடுத்த திட்டம் என்ன என்று பீகார் பா . ஜ . க தலைவர் சுசில்குமார் மோடியை சந்தித்து பேசினோம் . பீகாரில் உங்களின் மிஷன் முடிந்துவிட்டதா ? அரசியலைப்பொறுத்தவரை ஓய்வே கிடையாது . நாங்கள் லாலுவைப் பற்றி கூறியிருப்பதில் இன்னும் 40% விஷயங்கள் மிச்சமுள்ளது . தன் 45 ஆண்டுகால அரசியல் வாழ்வில் பல்வேறு திட்டங்களில் ஊழல்கள் , சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகள் என கிரிமினல்களோடு பழகி , இன்று ஊழல் குற்றச்சாட்டு கூட அவரை அசைக்க முடியவில்லை . மிகவும் கேஷூவ