இடுகைகள்

பார்டரில் ஒரு ஃபேன்டஸி உலகம்!

படம்
பார்டரில் ஒரு ஃபேன்டஸி உலகம் ! - ச . அன்பரசு ஃபாரீன் டூர்தான் ஆல்வேஸ் பரவசமா ? உள்ளூரில் டிஸ்னி லேண்டை விட பரவசம் தரும் பல்வேறு ஃபேன்டஸி உலகங்கள் இந்தியாவில் உண்டு . அதில் ஒன்றுதான் கிழக்கு ஸ்காட்லாந்து என்ற செல்லப்பெயர் கொண்ட மேகாலயாவின் ஜெய்ன்டியா ஹில்ஸ் மாவட்டத்திலுள்ள டாகி நகரின் உமன்காட் நதி . இதுவரை நீங்கள் பார்த்திராத கிறிஸ்டல் கிளியரான தூய நதியும் கூடத்தான் . உமன்காட் நதி படகு சவாரிக்கு ஃபேவரிட் ஸ்பாட் என்பதோடு இந்தியா மற்றும் வங்காளதேசம் என இரு நாட்டு மீனவர்களுக்கான மீன்பிடிக்கும் முக்கிய இடம் . மேகாலயாவின் சிரபுஞ்சியிலிருந்து 85 கி . மீ . பயணித்தால் கிழக்கு ஜெய்ன்டியா மலைத்தொடரிலுள்ள டாகி நகரை ஜம்மென மனம் நிறைக்கும் ஜில் காற்றோடு அடையலாம் . வங்காளதேசத்தின் சில்ஹெட் மாவட்டத்திற்கு நெருக்கமான ஏரியா இது . இந்தியா , வங்காள தேசம் என இரு நாட்டிற்குமான முக்கிய வணிக நகரம் டாகி . மேகாலயா - வங்காளதேசம் என இரு நாடுகளையும் இயற்கையாக உமன்காட் நதி பிரிக்கிற இடமிது . பாரம்பர

முத்தாரம் பிட்ஸ்!

படம்
ஒருபக்கம்! க்யூபா தூதரக மர்மம் ! க்யூபாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு , கடந்த ஓராண்டாக ஞாபகமறதி , கேட்கும்திறன் பாதிப்பு , குமட்டல் ஆகிய பிரச்னைகள் ஏற்பட்டன . கனடா தூதரக அதிகாரிகள் உட்பட 21 பேர்களுக்கு இப்பாதிப்பு அறியப்பட்டிருக்கிறது . மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த   Flash Bang grenades, sound cannons ஆகிய ஒலி ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன . அமெரிக்க ஊழியர்களுக்கு கடந்தாண்டு டிசம்பரிலிருந்தே இரவுகளில் குமட்டல் , ஞாபகமறதி , கோபம் , சோர்வு உள்ளிட்டவை ஏற்பட்டாலும் பலரும் பெரிதாக அதை கருதவில்லை . ஊழியர்கள் சோனிக் ஆயுதம் மூலம் ஒலி அலைகளை  எழுப்பி தாக்கப்பட்டிருக்கலாம் என சர்ச்சை கிளம்பியுள்ளது . LRAD ஒலி ஆயுதம் மூலம் வலி தரும் ஒலி அலைகளை உருவாக்கி , ஒருவரை காதை செவிடாக்கவும் இதனால் முடியும் . 2014 ஆம் ஆண்டு நியூயார்க் போலீசார் மக்கள் மீது LRAD பயன்படுத்தியதற்காக வழக்கு பதிவாகியுள்ளது . ஆராய்ச்சியாளர்கள் அதிகாரிகளின் பிரச்னைகளை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறார்கள் .      வயர்லெஸ் சார்ஜிங் ஹிட்டா ? ப்ளாப்பா ? ஆப்பிள் எக்ஸ் , 8,8 பிளஸ் என மூன்று

வில்லன் டூ ஹீரோக்கள் -விக்டர் காமெஸி

படம்
வில்லன் டூ ஹீரோக்கள் திருடர் ராஜா கார்டூசே (1693- 1721) இங்கிலாந்தில் கௌரவமான குடும்பத்தில் பிறந்த திருடர்தான் கார்டூசே . பதினொரு வயதில் வீட்டை விட்டு ஓடிப்போன கார்டூசே ஜிப்சிக்கூட்டத்தில் சேர்ந்தலைந்து தனி கேங்கின் தலைவராகி திருட்டுத்தொழிலில் முன்னேறிக்கொண்டிருந்தார் . மிலிட்டரியில் கிடைத்த குறுகியகால பயிற்சி அவரின் தொழிலுக்கு உதவியது . தன் கூட்டத்தினரில் ஒருவரை ஏமாற்ற முயன்று போலீசிடம் சிக்கியவரை இவரது கேங்கே கைவிட்டது பேரவலம் . போலீசிடம் இருந்த ஆதாரங்களை ஏற்று குற்றத்தை இறுதிவரை ஒப்புக்கொள்ளவே இல்லை . பின் குற்றம் செய்தவர்களைப் பற்றிய தகவல்கள் கூறத்தொடங்க பலருக்கும் தூக்கு கயிற்றில் தொங்கும் பாக்கியம் கிடைத்தது . கார்டூசே இறந்தபின்னும் இவர் பற்றி பாடல்கள் , நாடகங்கள் , ப்ரெஞ்சு படம் உட்பட உருவாக்கப்பட்டு திருடர்களின் ராஜா என்ற பட்டமும் கார்டூசேவுக்கு வழங்கப்பட்டது . அட்டிலா அம்ப்ரஸ் ஹங்கேரியைச் சேர்ந்த அட்டிலா , முதலில் ஹாக்கி வீரராக அறியப்பட்டாலும் செகண்ட் பார்ட்டில்  செம திருட்டுக்கோழி . 1993-1999 காலகட்டத்தில் வங்கிகளில் 29 கொள்ளைகள் , அதோடு தபால் நிலையங