இடுகைகள்

ஆள்மாறாட்ட கோல்மால்!

படம்
வரலாற்று சுவாரசியங்கள் 2 ஆள்மாறாட்ட கோல்மால்!   ரா . வேங்கடசாமி தனது தாயிடமிருந்து ஆண்டிற்கு ஆயிரம் பவுன்கள் பயணப்படியாக பெற்ற கேஸ்ட்ரோ இங்கிலாந்துக்குத் திரும்பி , தனது டிச் போர்னே எஸ்டேட்டுக்கு இயல்பாக உரிமை கொண்டாடினார் . ரோஜரின் குடும்ப விவகாரங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டவர் , அறிமுகமான எல்லோரையும் நுணுக்கமாக ஏமாற்றியது மட்டுமின்றி , தான்தான் ரோஜர் என்று பகிரங்கமாகவே சொல்லத் தொடங்கினார் . அதற்கு ஸ்டோரி வேண்டுமே ? உயிர் தப்பியதை லாஜிக் நழுவாத கதையாக மாற்றி எல்லோரிடமும் சொன்னார் காஸ்ட்ரோ. கடலில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருக்கும்போது , ஆஸ்திரேலியா கப்பல் தன்னைக் காப்பாற்றியது ; கவனக்குறைவால் தான் பிழைத்ததை வீட்டாருக்கு சொல்லவில்லை என கூசாமல் பொய் சொன்னார். இங்கிலாந்து போகும்போதுதான் காதலியோடு நெருங்கியதால் அவள் கர்ப்பிணியாகி விட்டதாகவும் கதை கட்டினார் . இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடுப்பதற்கு நான்கு ஆண்டுகள் ஆனது . எஸ்டேட் நிலங்களை பகுதியாகப் பிரித்து 100 பவுன்கள் வீதம் விற்றதால் காஸ்ட்ரோ ஏராளமாக் கரன்ஸி பார்த்துவிட்டார் . போலியான ஒ

சயின்ஸ் பிட்ஸ்!

படம்
பிட்ஸ் ! பழக்கப்படாத இடத்தில் நாம் தூங்கும்போது மூளையின் ஒரு பகுதி ஓய்வெடுக்கும் , மற்றொரு பகுதி ஆபத்தை எதிர்கொள்ள அலர்ட்டாக இருக்கும் . ஜப்பானில் 2007 ஆம் ஆண்டு கிஷி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பதவியேற்ற டாமா (1999-2015) என்ற பூனை , பயணிகளின் எண்ணிக்கையை 10% உயர்த்தி வருமானத்தை 1.1 பில்லியன் யென்னாக மாற்றியது . ஓவியர் வான்கா தன் வாழ்நாளில் விற்றது ஒரே ஒரு ஓவியம்தான் . ரோம அரசரான டியோகிளெட்டியன் கி . பி . 305 இல் , பதவி விலகியவர் மீதி வாழ்வை தன் தோட்டத்தில் முட்டைக்கோஸ்களை வளர்ப்பதில் செலவிட்டார் . 1928 ஆம் ஆண்டில் படகு பந்தய வீரர் பாபி பியர்ஸ் பங்கேற்றார் . போட்டியில் நீரில் பயணித்த வாத்துகளுக்காக காத்திருந்து துடுப்பசைத்தவர் அந்த ரவுண்டில் எட்டு போட்டியாளர்களை முறியடித்து சாம்பியனானார் .     பிட்ஸ் ! சீனாவிலுள்ள 85% மக்களின் பின்னொட்டு பெயர்கள் ஒரேமாதிரியாகவே உள்ளது . Trader Joe என்பவரின் கடையில் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் சாம்பிள் சோதித்து வாங்கும் வசதி உண்டு . Johannese Gumpp என்ற ஓவியர் தன்னைத்தானே வரைந்த போர்ட்ரைட்

அதிசயிக்கும் அறிவியல்!

படம்
மரபணுவை சிதைக்கும் மது ! ஆல்கஹால் குடிப்பது உடலின் ஸ்டெம்செல்களை தாக்கி மரபணுரீதியான பாதிப்பை ஏற்படுத்துவதோடு புற்றுநோயை உண்டாக்கும் காரணியாகவும் உள்ளது என்பதை கேம்பிரிட்ஜ் பல்கலையின் மூலக்கூறு உயிரியல் பிரிவு கண்டறிந்துள்ளது . இதுகுறித்து எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஆல்கஹால் எலிகளின் உடலில் புற்றுநோய்க்கான தூண்டுதலை ஏற்படுத்தியுள்ளது . " மது உடலில் ஏற்படுத்தும் பாதிப்பின் அளவு என்பதை கண்டறிய முயற்சித்து வருகிறோம் . ஆனால் மது , டிஎன்ஏ செல்களை பாதிக்கிறது என்பது உறுதி " என்கிறார் ஆராய்ச்சியாளர் கேட்டன் படேல் . ஆல்கஹாலில் உள்ள அசிட்டால்ஹைடு என்ற நச்சு உடலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை மட்டும் இதில் அடையாளப்படுத்தி உள்ளார்கள் . உடலில் புதிய ரத்த அணுக்கள் உருவாவதை தடுத்து , டிஎன்ஏ செல்களின் இயல்பான பணியையும் தடுத்து உடலை பாதிக்கிறது மதுபானத்திலுள்ள நச்சு .    புதிய புரோஜெக்டர் ! 2018 ஆம் ஆண்டில் 4K துல்லியத்தில் HU80KA புரொஜெக்டரை உருவாக்கி புத்தாண்டை உற்சாகமாக தொடங்கியுள்ளது எல்ஜி . பிற ஹெச்டி புரொஜக்டர்களை விட ஸ்லிம்மாக , விலை குறைவாக கவனம் ஈர்க்கும்

வரலாற்று சுவாரசியங்கள் 1- ரா.வேங்கடசாமி

படம்
வரலாற்று சுவாரசியங்கள் 1 பணத்துக்காக மாறுவேடம் ! ரா . வேங்கடசாமி தெ ற்கு இங்கிலாந்து பகுதியில் , ஹாம்ஷைபரில் எஸ்டேட் அதிபர் டிச்போர்னே பிரபு. அவரது தலைமுறையில் பத்தாவது வாரிசு . அவருக்கு ஜேம்ஸ் என்றொரு சகோதரன். இவரின் மூத்த மகனின் பெயர் , ரோஜர் டிச் போர்னே. ரோஜர் பிறந்தது 1829-ஆம் ஆண்டு ; யார்க்‌ஷையரில். கத்தோலிக்கர்கள் படிப்பதற்கான போர்டிங் ஸ்கூல் ‘ ஸ்டோனி ஹர்ஸ்ட் ’ டில் ரோஜர் படித்தார். தனது இருபதாவது வயதில் ‘ சிக்த் டிராகூன் கார்ட்ஸ் ’ கமிஷனில் தேறியவர் வெற்றிக்களிப்போடு வெளியே வந்தார் . பத்தாவது பட்டம் வகித்த பிரபு வாரிசு இன்றி காலமாகிவிடவே அவரது ஒன்றுவிட்ட சகோதரன் எட்வர்டு டப்டி வாரிசானார். ஆனால் இவருக்கும் வாரிசு இல்லை. எனவே அவரது சகோதரி மகன் ரோஜர் பட்டத்திற்கு உரியவன் என்ற பேச்சு கிளம்பியது. ஆனால் 1852-ஆம் ஆண்டு , ரோஜர் சர்எட்வர்டின் மகள் காதரினைக் காதலித்தார். ஆனால் இவர்களது திருமணத்திற்கு கத்தோலிக்க சர்ச் ஒப்புதல் தரவில்லை . என்ன பிரச்னை ? ஒன்றுவிட்ட சகோதர , சகோதரிகள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற விதிதான் காரணம் . காதலை அனுமதித்த சர் எட்வர்டு ஒரு ப

மினி பிட்ஸ்!

படம்
பிட்ஸ் ! ஈமு குளியல் ! ஆஸ்திரேலியாவில் மேற்கு பகுதியிலுள்ள மங்கி மியா பீச்சில் இங்கிலாந்து டூரிஸ்டுகள் ஜாலியாக நீந்திக்கொண்டிருந்தனர் . அப்போது யாரும் எதிர்பார்க்காத நண்பராக ஈமு பறவையும் அவர்களோடு வந்து இணைய , சுற்றுலாவாசிகள் பீதியானார்கள் . ஆனால் ஈமு ஜாலியாக நீந்திய வீடியோ , இணையத்தில் செமையாக ரவுண்ட் அடித்து வருகிறது . டாட்டூ பெண் ! அமெரிக்காவின் ப்ளோரிடாவைச் சேர்ந்த சார்லட் குடன்பர்க் என்ற பெண் தன் உடலின் 98.75% அளவு டாட்டூ குத்தி கின்னஸ் நூலில் சீட் போட்டிருக்கிறார் . 50 வயதில் டாட்டூ குத்த தொடங்கியவருக்கு இன்று மிச்சமிருப்பது முகம் மட்டும் கைகள் மட்டுமே . 2015 ஆம் ஆண்டும் கின்னஸ் சாதனை செய்தவர் இந்த அம்மணி . மானிய நாய் ! அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் வேலையற்றோர் மானியத்தை மைக்கேல் ரைடர் என்ற நாய் பெற்றுள்ளது . காப்பீடு அலுவலகத்தில் ரைடருக்கு வாரத்திற்கு 360 டாலர்கள் கிடைக்கவிருக்கிறது . " எனது நாயிற்கு கிடைத்துள்ள பணத்தை என்ன செய்வது என ரைடர்தான் தீர்மானிக்கும் " என புன்னகைகிறார் அதன் ஓனர் மைக்கேல் ஹடோக் . அரசு இதுகுறித்த என்க

தகவல்தொடர்பில் பேச்சுக்கு முக்கிய தொடர்புண்டு!

படம்
முத்தாரம் நேர்காணல் சோபி ஸ்காட் , நரம்பியல் வல்லுநர் மற்றும் பேராசிரியர் . தமிழில் : ச . அன்பரசு நன்றி : James Lloyed, sciencefocus.com நாம் பேசும் சொற்களுக்கும் தகவல் தொடர்புக்கும் என்ன தொடர்பிருக்கிறது ? பேச்சுக்கு தகவல் தொடர்பில் இன்றியமையாத இடமுண்டு . நீங்கள் என்னை பார்க்காதபோதும் , குரலைக்கேட்டே எனது ஊர் , வயது , எனது மனநிலை ஆகியவற்றை எளிதாக யூகிக்க முடியும் என்பதுதான் இதன் பலம் . வயது வந்த ஆண்களுக்கும் , பெண்களுக்கும் குரல் உடைந்து பேசும் தொனியும் மாறும் . இதற்கு சமூக , கலாசார தொடர்புண்டு . பேச்சு கடந்து உடல்ரீதியான தகவல்தொடர்பை பற்றி கூறுங்கள் . முகத்தில் காட்டும் உணர்ச்சிகள் , உடலின் அசைவுகள் ஆகியவை செய்தியை வார்த்தைகளால் கூறுவதற்கு முன்பே எதிரிலிருப்பவருக்கு கூறிவிடுகின்றன . ஒருவரின் உடல்மொழியை வைத்தே கூறவரும் விஷயத்தை யூகிப்பது பயிற்சியால் சாத்தியம் . பாடகர்கள் பாடலை பாடும்போது , பாடலின் தன்மைக்கேற்ப மாறும் அவர்களின் உடல் அசைவுகளை பாருங்கள் . இதனை சரியானபடி உணர்ந்தால் , உடல்மொழி குறிப்புகளின் வழி ஒருவரின் மனதைப் படித்துவிடலா

ஜவான் வந்தாச்சு!

படம்
விசுவாச ஜவான் ! Rhodesian Ridgeback தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ரிட்ஜ்பேக் , பண்ணை விலங்குகளை சிங்கங்களிடமிருந்து காக்கும் வீரம் கொண்டது . டேலன்டும் , புத்தியும் சாணை பிடித்த கத்தி போல இருப்பதால் , வெளியாட்கள் கவனமாக வீட்டுக்கு வெளியே இருப்பது உயிருக்கு நல்லது . அதேநேரம் பயிற்சி அளித்தால் அவை சோஷியலாக பழகும் தன்மையில் அவார்ட் ஜெயிக்கும் அளவு நண்பன்தான் . அதேநேரம் கடுப்பேற்றினால் , உயிருக்கு எமனாகும் . Bull Terrier   முட்டை ஷேப்பில் உருவான தலைதான் இந்த நாயை தனியாக காட்டும் அம்சம் . ஆக்ரோஷமான நாய் என குறிப்பாக அடையாளம் காட்ட முடியாது . ஆனால் இரையை வேட்டையாடுவதில் புல் டெரியர் காட்டும் வேகம் நெஞ்சில் அனலாய் பீதியூட்டும் .   Tosa Inu   91 கிலோ எடையில் 81 செ . மீ உயரத்தில் பார்ப்பவர்களை மிரட்டும் டோசா இனு , வளர்க்கப்படுவதே சண்டைக்காகத்தான் . இதன் ஆக்ரோஷ போர் குணத்தால் உலகின் பலநாடுகளில் இந்நாயை வளர்க்க சட்டப்பூர்வத் தடையே உண்டு .       Dogo Argentino   அர்ஜென்டினாவைச் சேர்ந்த மஸில் ஜவான்தான் டோகோ . டோகோவை டெவலப் செய்ததே புமா , பன்றி ஆகியவற்றை