இடுகைகள்

நூல் விமர்சனம்: காந்தியார் சாந்தியடைய

படம்
காந்தியார் சாந்தியடைய ப.திருமாவேலன் மாற்று வெளியீட்டகம் ரூ. 160 1900 ஆம் ஆண்டிலிருந்து சுதந்திரம் வரையில் நாட்டில் என்ன நடந்தது என்பதை காந்தி, நேரு, படேல் ஆகியோரின் எழுத்துக்கள் உரை வழியாக இந்நூல் பதிவு செய்துள்ளது. இது இன்றைக்கு எந்தளவு பிரயோஜனம் உண்டு என்றால், ராம ராஜ்யம் என ரதம் இழுத்து பிரிவினையை தூண்டும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பிரிவினை கட்சிகளின் நோக்கம் என்ன என்பதை துல்லிய துலக்கமாக அறிய ப.திருமாவேலனின் இத்தகைய வரலாற்று நூல்கள் அவசியம்.  ராமராஜ்யம் எனும் பகுதியில்  சுதந்திரப்போராட்டத்தை பின்னுக்கிழுக்கும்படி முஸ்லீம்களும், இந்துக்களும் முட்டி மோதிக்கொண்டனர். இதனை காந்தி எப்படி பார்த்தார், என்ன எழுதினார் பேசினார் என்பதையும் இ்ந்நூல் பேசுகிறது. இந்துஸ்தான் பகுதியில் முஸ்லீம்களை முடிந்தளவு ஓரே நாட்டுக்குள் இணக்கமாக வைத்திருக்க காந்தி செய்த முயற்சிகளையும் அதனை உடைத்த காங்கிரஸ் கட்சியின் செயல்பாடும், அதனை விரைவுபடுத்தியா ஸ்வயம் சேவக் சாவர்க்கரின் பணியையும், பிரிவினை சக்திகளை மனதளவில் ஆதரித்த படேலின் செயல்பாடுகளையும் படிக்கலாம். கடைசிபகுதி காந்திஸ்தானில் காந்தி தான்

தீர்க்காயுஷ்மான் பவ!

படம்
தீர்க்காயுஷ்மான் பவ ! - ச . அன்பரசு சிந்திக்க தெரிந்த மனிதர்களுக்கு மரணபயம் பிற உயிரினங்களை விட சற்றே அதிகம்தான் . இன்று உலகளவில் சராசரி வாழ்நாள் 71 ஆண்டுகள் . சில அதிர்ஷ்டசாலிகள் மட்டும் சதமடித்து அவுட்டாகிறார்கள் . உலிசஸ் எஸ் கிராண்ட் வாழ்ந்தபோது பிறந்த பிரெஞ்ச் பெண்மணி ஜீன் கால்மன்ட் 122 ஆண்டுகள் வாழ்ந்து கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருக்கும்போது காலமாகி பலரையும் ஆச்சரியப்படுத்தினார் . 1900 ஆம் ஆண்டில் வாழ்நாள் 47 ஆக இருந்தது . இன்று அமெரிக்காவில் உலகின் தோராய சராசரி வாழ்நாளை விட அதிகமாக 79 ஆண்டுகள் வரை வாழ்கிறார்கள் . கொஞ்சம் அதிகமாக வாழ என்ன செய்யலாம் ? தடுப்பூசிகள் , ஆன்டிபயாடிக்குகள் , டயட் உணவு , ஆன்டிசெப்டிக் மருந்துகள் என மக்கள் அலைபாய்கின்றனர் . முகம் , உடல் ஆகியவற்றின் வயதாகும் தன்மையை குறைக்க உதவும் சந்தை மதிப்பு 250 பில்லியன் டாலர்கள் . அதிகநாட்கள் உயிர்வாழும் உயிரிகளைப் பற்றித் தெரிந்தால்தானே நம்மை அந்த உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் ? red sea urchin இருநூறு ஆண்டுகள் வாழும் உயிரி . நீண்டநாட்கள் தன் ஆயுளைப் பராமரிக்கும் வகையில் டிஎன்ஏ

வாசிக்கவேண்டிய ஆப்பிரிக்க அமெரிக்க நூல்கள்

படம்
அலமாரி : ஆப்பிரிக்க - அமெரிக்க நூல்கள்   THE FIRE NEXT TIME // JAMES BALDWIN இருபதாம் நூற்றாண்டின் முக்கிய எழுத்தாளரான ஜேம்ஸ் பேல்ட்வின் , இலக்கியம் , சினிமா ஆகியவற்றை தீவிரமாக விமர்சித்து எழுதிவரும் ஆளுமை . 1963 ஆம் ஆண்டு வெளியான இவரின் The Fire Next Time நூல் முக்கியமானது . இதில் பதினான்கு வயதான சிறுவனுக்கு எழுதும் கடிதமும் , இரண்டாவது பகுதியில் தன் இளமைக்கால போராட்டங்களையும் தந்தையுடனான உறவுச்சிக்கலையும் எழுதியுள்ளார் .  BETWEEN THE WORLD AND ME // TA-NEHISI COATES ஜேம்ஸ் பேல்ட்வின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளரான கோட்ஸ் எழுதிய நூல் இது . தனது மகனுக்கு அமெரிக்காவின் வெள்ளை இனவாதம் பற்றி கூறுவதாக எழுதப்பட்ட நூல் இது . கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தில் நிகழ்ந்த நிகழப்போகும் கறுப்பர்கள் மீதான வன்முறைகளை கேள்விக்குள்ளாக்குகிறார் கோட்ஸ் .  THE WARMTH OF OTHER SUNS: THE EPIC STORY OF AMERICA'S GREAT MIGRATION // ISABEL WILKERSON அமெரிக்காவின் ஜிம் க்ரோ சட்டத்திலிருந்து தப்பிக்க ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் , வடக்கு மற்றும் மேற்கு பகுதி நக

நேர்காணல்: "சமூகவலைதளங்களில் உண்மையை அறிவது சிரமம்"

படம்
முத்தாரம் நேர்காணல் "சமூகவலைதளங்களில் உண்மையை அறிவது சிரமம்' டோனி ஹால் , பிபிசி நிறுவன இயக்குநர் . தமிழில் : ச . அன்பரசு பிபிசி இயக்குநரான டோனி ஹால் , 2013 ஆம் ஆண்டு பிபிசி நிறுவனத்தில் மீண்டும் பணியில் இணைந்துள்ளார் . 1973 ஆம் ஆண்டில் நியூஸ் ட்ரெய்னியாக பணியில் இணைந்தவர் , பிபிசி ஆன்லைன் , பிபிசி பார்லிமெண்ட் , பிபிசி ரேடியோ 5 லைவ் ஆகியவற்றை தொடங்கிய சாதனையாளர் . நியூயார்க் டைம்ஸ் இயக்குநர் அண்மையில் அச்சு ஊடகத்தின் எதிர்காலம் பத்தாண்டுகள் என்று கூறியிருக்கிறார் . பிபிசிக்கு அச்சு ஊடகம் இல்லை . பத்திரிகைகள் இல்லாத உலகம் எப்படியிருக்கும் ? அச்சு ஊடகம் காணாமல் போகும் என்று நான் நம்பவில்லை . மக்கள் முதலில் ரேடியா , அடுத்து சினிமா சாகும் என்றார்கள் . இன்று என்னாயிற்று ? மார்க் தாம்சனின் கருத்தை எங்களுடைய பிஸினஸ் மாடலுக்கு பொருத்தமுடியாது . ஆனால் தரம் வெல்லும் . அச்சு ஊடகம் சரிந்தால் , நாம் வேறுவழியைத் தேர்ந்தெடுப்போம் . மக்களிடம் நடத்திய சர்வேயில் பல்வேறு செய்தி தளங்களை செக் செய்து இறுதியாக பிபிசி வந்து உண்மையான தகவல்களை அறிகிறோம் என்றார

சார் போஸ்ட்!

படம்
சார் போஸ்ட் ! தபால்பெட்டி ஆபத்து ! வீட்டில் முன்னாடியே வைத்திருக்கும் தபால்பெட்டி என்றாலும் தொப்பி , ஜோல்னாபை என சுற்றும் தபால்காரரை நாய்கள் சும்மாவிடுமா ? எனவே வெளிப்புறத்தைவிட உட்புறம் உள்ள போஸ்ட்பாக்ஸ்களை திறப்பதில் கவனம் தேவை . நாய் உங்களை அட்டாக் செய்யும்போது , சடக்கென ஜோல்னாபையை நுன்சாக்காக பயன்படுத்தி தடுத்து உயிர்தப்பி ஓடலாம் . எக்சர்ஸைஸ் வேண்டாம் ! தபால்களை பட்டுவாடா செய்வதே உடற்பயிற்சிதான் பாஸ் ! வெட்டுக்கிளி கால்களும் ஆட்டோமேடிக்காக நடந்து சைக்கிள் பெடல் செய்து கட்டழகு கால்களாக மாறிவிடுவதோடு டயட்டின்றி எடையும் குறையும் . அதோடு கொண்டுவரும் பார்சல் கிப்ட்கள் தொடர்புடையவருக்கு பரம சந்தோஷம் தந்தால்  தீபாவளி , பொங்கல் என டிப்ஸ்களும் நிறைய கிடைக்கும் . அதிகாரமற்ற பாதுகாவலர்கள் ! உடல்நலமற்ற பெற்றோர்களுக்கு கடிதம் அனுப்புகிறீர்கள் . கொண்டுவரும் தபால்களை பெற வீட்டுக்காரர் வரவில்லை எனில் உடனே உதவி கோரி சம்பந்தப்பட்டவர் நலமாக இருக்கிறாரா என்பதையும் தபால்காரர் உறுதி செய்கிறார் . குப்பை கடிதங்களையும் கூட அக்கறையாக டெலிவரி செய்பவர் நம்ம ஊர் தபால்கார

சர்ச்சை -சர்க்கஸ் -சாமியார்!

படம்
சர்ச்சை ஆன்மிகவாதி ! எட்கர் ஆலன்போ “Mellonta Tauta" என்ற நாவலில் ஜாக்சன் டேவிசை நக்கல் செய்திருப்பார் . பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆன்மிக டூப் சாதனைகளுக்காக இன்றும் நினைவுகூரப்படுபவர் ஜாக்சன் டேவிஸ் . அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தவர் ஆண்ட்ரூ ஜாக்சன் டேவிஸ் (1826-1910). குடிகார தந்தையை நம்பாமல் டேவிசும் அவரின் சகோதரியும் சில்லறை வேலைகளைச் செய்து வந்தனர் . கூடவே இரா ஆர்ம்ஸ்ட்ராங்கிடம் ஷூ செய்வதில் உதவியாளராக பணியாற்றினார் . பின் 1830 ஆம் ஆண்டு ஆன்டன் மெஸ்மர் என்ற ஜெர்மனி மருத்துவர் காந்தங்களின் மூலம் நோய்களை குணமாக்கும் முறையை செயல்படுத்தி வந்தார் . அதை மெஸ்மரிசம் , ஹிப்னாடிசம் சேர்த்த டேவிஸ் ஏராளமாக பணம் சேர்த்தார் . The Magic Staff, The Principles of Nature, Her Divine Revelation, and a Voice to Mankind ஆகிய புத்தகங்களை எழுதி தன் மருத்துவமுறை பிரபலப்படுத்தி கடும் கண்டனங்களை சந்தித்தார் . டாக்டர் லைசென்ஸ் வாங்கியவர் , நோயாளிகளுக்கு சிகிச்சையளித்ததோடு Poughkeepsie Seer என்ற பெயரையும் பெற்றார் . தொகுப்பு: கோமாளிமேடை டீம் நன்றி: முத்தாரம்  

பத்தாயிரம்் ஆண்டு கடிகாரம்!

படம்
பத்தாயிரம்் ஆண்டு கடிகாரம் ! அமேஸான் பத்தாயிரம் ஆண்டு ஓடும் கடிகாரத்தை செதுக்கிக்கொண்டிருக்கிறது என்றால் நம்புவீர்களா ? யெஸ் . உண்மைதான் அது . டெக்சாஸிலுள்ள சியரா டயாப்லா மலையை வாங்கியுள்ள அமேஸான் நிறுவனர் ஜெஃப் பேஸோஸ் , அங்கு பதிக்க கடிகாரத்தை 4.5 கோடி செலவில் தயாரித்து வருகிறார் . விஞ்ஞானி டேனி ஹில்லிசின் ஐடியா இது . 152 மீட்டர் உயரத்திலுள்ள இக்கடிகாரம் , விரைவில் தன் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் . " அரசுகள் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் இக்கடிகாரம் உள்ளவரையில் அமெரிக்கா வாழும் " என்கிறார் ஜெஃப் பெஸோஸ் . சரியான டைமுக்கு அங்கிருந்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை கடிகாரத்தின் அலார சத்தத்தைக் கேட்கலாம் . இந்த கடிகாரத்தினால் என்ன பிரயோஜனம் நீங்கள் கேட்கலாம் . நல்ல கேள்வி , எலன் மஸ்க் தன் காரை விண்வெளிக்கு அனுப்பினாரே அதேயளவு பிரயோஜனம்தான் இதுவும் . தொகுப்பு: கோமாளிமேடை டீம் நன்றி: முத்தாரம்

ஆன்டிபயாடிக்கிற்கு மாற்று!

படம்
எதிரியின் எதிரி ! கடந்தாண்டு ஏப்ரலில் , சான்டியாகோ மருத்துவக்கல்லூரியில் தீவிர தொற்றுநோய் பாதிப்பில் அட்மிட்டானவருக்கு எந்த ஆன்டிபயாடிக்கும் பயனளிக்கவில்லை . கோமா சென்றவர் இறப்புக்கு அருகிலிருந்தார் அப்போது ட்ரையலாக bacteriophages    எனும் பாக்டீரியா உண்ணும் வைரஸை உடலில் செலுத்த பேஷன்ட் பிழைத்தார் . எஃப்டிஏ   இச்சிகிச்சையை பயன்படுத்த அனுமதி தந்ததோடு விவசாயத்துறையிலும் கால்நடைகளிலும் பயன்படுத்த பர்மிஷன் தந்துவிட்டது . ஐரோப்பிய யூனியன் தீப்புண்களை ஆற்ற பாக்டீரியாதின்னி வைரஸ்களை பயன்படுத்த யோசித்துள்ளது . 1919 ஆம் ஆண்டு பிரான்சின் பாரீசிலுள்ள பாஸ்டர் இன்ஸ்டிடியூட்டில் ஃபெலிக்ஸ் ஹெரல்லே வயிற்றுப்போக்கு தீராத சிறுவனுக்கு பாக்டீரியாதின்னி (Phage therapy) வைரஸை உடலில் செலுத்தி குணமாக்கினார் . 1915 ஆம் ஆண்டே பேஜோதெரபியை ஃபெலிக்ஸ் கண்டறிந்தாலும் முறையான கல்வி கற்காததால் இவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை . இதன் இன்னொருவடிவாக 1945 ஆம் ஆண்டு பென்சிலின் கண்டுபிடிக்கப்பட்டது . ஆனால் இன்று ஆன்டிபயாடிக்குகளை பாக்டீரியாக்கள் எளிதாக எதிர்க்கத் தொடங்கிவிட்டதால் மாற்று வழியாக ப

காதல் படுகொலைகள்!

படம்
காதல் கொலைகள் ! ஐஸ்லாந்திலுள்ள Illugastaoir பண்ணையிலிருந்து ஓடிவந்த ஆக்னஸ் என்ற பெண் , பண்ணை வீடு தீ பற்றிக்கொண்டது என அலற , மக்கள் பலரும் ஓடிப்பார்க்க , அங்கு பண்ணை ஓனர் நாதன் கெட்டில்சன் , அவரின் நண்பரான பீட்டர் ஜான்சன் இருவரும் தீயில் உருளைக்கிழங்காய் வெந்திருந்தார்கள் . ஆனால் இருவரும் கத்தியால் குத்தியும் , சுத்தியலால் தாக்கப்பட்ட காயங்களை போலீசார் கண்டுபிடித்தனர் . அனைத்துக்கும் காரணம் , நாதனின் காதல் லீலைகள்தான் . இயற்கை மருத்துவரான நாதன் , உள்ளூர் கவிஞரான ரோசா , டீனேஜ் பெண் சிக்ரியர் என்ற இருவரையும் தெலுங்கு ஹீரோவாக லவ் செய்தார் . பொறாமையில் வெந்த ஆக்னஸ் , சிகர்ஸன் மற்றும் தோழி ஒருத்தியை சேர்த்து செய்த மர்டர்தான் இது என தெரியவந்தது . மூவரில் ஆக்னஸின் தோழிக்கு மட்டும் ஆயுள் தண்டனை . சிகர்ஸனுக்கும் ஆக்னசுக்கும் 1830 ஜனவரி 12 அன்று மரணதண்டனை . கோடாரியால் வெட்டப்பட்ட இருவரின் தலைகளும் அங்கேயே ஈட்டியில் குத்தி வைக்கப்பட்டன . சிலமணி நேரத்திலேயே இருவரின் தலைகளும் மிஸ்ஸிங் . பின் 1930 ஆம் ஆண்டில் Illugastaoir பண்ணையருகே ஜோர்ன் என்ற இடத்தில் தலையோடு இரு எலும்

மோடிக்கு பில்!

படம்
ரேடியோ பேபி ! ஹாஸ்பிடலில் அல்லது வீட்டில் அல்லது விமானத்தில் கூட குழந்தை பிறந்து கேள்விப்பட்டிருப்பீர்கள் . ஆனால் காற்றில் குழந்தை பிறப்பது புதுசுதானே ! யெஸ் இது அத்தென்டிக் அமெரிக்கன் ரவுசு . அமெரிக்காவைச் சேர்ந்த ரேடியோ காம்பியர் கேசிடே பிராக்டர் , செயின்ட் லூயிசிலுள்ள ஆர்ச் ஸ்டேஷனில் தன் காலை ஷோவில் ஊரையே  கலாய்த்துவந்தார் . மேரேஜ் ஆகி , கர்ப்பம் தரித்தபோதும் லீவ் போடாமல் ஜாலிகோழியாக வேலை பார்த்த கேசிக்கு திடீரென டெலிவரி அவசரம் . ஷோடைமின்போது ஹாஸ்பிடலில் இருந்தார் கேசி . அங்கேயே மைக் சகிதமாக ரேடியோகுழு செல்ல , கேசி தன் குழந்தை பிறப்பை லைவ் கமெண்ட்ரியாக தன் ரேடியோ விசிறிகளுக்காக ஒலிபரப்பி பீதியூட்டினார் .  கமெண்ட்ரி மட்டுமல்ல , க்யூட் செல்லத்துக்கு பெயர் சொல்லுங்களேன் என மினிபோட்டியையும் நடத்தியிருக்கிறார் கேசி . விரைவில் நல்ல பெயரை ஓட்டுபோட்டு செலக்ட் செய்யவிருக்கிறார்கள் .  2 வெஜ் ஷூக்கள் வாங்குங்க ! வீகன் , சைவ உணவு பிரசாரம் பரவி வரும்போது வெஜ் பொருட்களும் சந்தையில் சேல்சிற்கு வந்தால்தானே ஜரூராக கல்லா கட்டமுடியும் . கர்நாடகாவின் சிரவ

"விவசாயிகளின் தற்கொலை இருமடங்கு ஆகியுள்ளது"

படம்
முத்தாரம் mini ராஷ்ட்ரிய கிசான் மகாசங்கம் எப்போது தோன்றியது ? சண்டிகரில் அரசின் நிலச்சீர்திருத்த மசோதாவுக்கு எதிராக திரண்ட அறுபது விவசாயங்கள் இணைந்து கிசான் ஏக்தா என ஒரு அமைப்பானது . ஹரிஷ் சௌகான் தலைமையில் பெங்களூரு , சிம்லா என மாநாடு நடந்தது . கமிஷன்களால் ஏமாற்றப்பட்டபோதும் நாங்கள் அமைதியாக இருந்தோம் .2019 தேர்தல் எங்களைப் பற்றி உலகுக்கு சொல்லும் . உங்களது கோரிக்கைகள் என்ன ? கடன் தள்ளுபடி , குறைந்தபட்ச உத்தரவாத விலை அதிகரிப்பு ஆகியவையே . கடந்தாண்டு செய்த போராட்டங்களைப் பற்றிக் கூறுங்கள் . 2017 ஆம் ஆண்டு ஜனவரி 10-12 ஆகிய நாட்களில் போபாலில் போராட்டம் நடத்தினோம் . 22 மாநிலங்களில் 290 தேசிய ஹைவேகளில் போராடுவதாக பிளான் . மக்களுக்காக அதனை விலக்கிக்கொண்டு , 9-15 தேதிகளில் ஜெயில் பாரோ அந்தோலன் திட்டப்படி 45 ஆயிரம் விவசாயிகள் சுதந்திர தினங்களில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம் . இனி டெல்லியில் பெரியளவு போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம் . விவசாயிகளின் தற்கொலை அதிகரித்திருக்கிறதா ? மோடியில் ஆட்சியில் மட்டும் விவசாயிகளின் தற்கொலை 43%  அதிக