இடுகைகள்

இத்தாலியின் முதல் கருப்பின உறுப்பினர்!

படம்
இத்தாலியின் முதல் கருப்பின உறுப்பினர் ! இத்தாலியின் முதல் கருப்பின உறுப்பினராக வலதுசாரி கட்சியின் சார்பாக டோனி ஐயோபி நியமிக்கப்பட்டிருக்கிறார் . நைஜீரியாவை பூர்விகமாக கொண்ட டோனி , அனுமதி பெற்ற அகதிகளுக்கு எந்த பிரச்னையுமில்லை என்று கூறினார் . வலதுசாரிக்கட்சியான லீக் கட்சியின் ஸ்லோகன் ஊடுருவலைத் தடுப்போம் என்பதுதான் . இத்தாலியின் பெர்காமோவிலுள்ள ஸ்பிரானோவில் வென்ற கருப்பின வணிகர் டோனி , பெருமிதத்தில் மிதக்கிறார் . 1970 ஆம்ஆண்டு இத்தாலி வந்த டோனி , பெருகியாவில் படிப்பை முடித்து ஸ்பிரானோவில் செட்டிலானார் . அங்கு தன் மனைவியை அடையாளம் கண்டதோடு , லீக் கட்சியில அங்கமாகி 1995 ஆம் ஆண்டு கட்சியில் கவுன்சிலர் ஆனார் . லீக் கட்சி மக்களின் வாக்குகளைப் பெற்றாலும் 40% ஆதரவு இன்னும் தேவையிருக்கிறது .  அகதி மற்றும் பாதுகாப்பு கமிட்டி ஆகியவற்றின் தலைவராக கட்சித்தலைவர் மாட்டியோ சால்வினியால் 2015 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார் . கடந்த நான்கு ஆண்டுகளில் 6 லட்சம் அங்கீகாரமற்ற அகதிகள் இத்தாலியின் தென்புறங்களில் வசிக்கின்றனர் . மேலும் நைஜீரியர்களிடமிருந்து அரசுக்கு அகதி

வந்துவிட்டது ஆண்ட்ராய்ட் P!

படம்
பாக்டீரியா க்ரீம் ! கோடைக்காலங்களில் பயன்படுத்தும் சன்ஸ்க்ரீன் க்ரீம்களில் oxybenzone,octinoxate ஆகிய வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன . தோலில் சூரிய வெப்பத்தினால் ஏற்படும் காயங்கள் , தோல் புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து காக்கும் இந்த க்ரீம்களிலுள்ள வேதிப்பொருட்கள் சுற்றுச்சூழலுக்கும் தோல் அலர்ஜிக்கும் காரணமாக அமைக்கின்றன . கடல்புறங்களில் 14 ஆயிரம் டன்கள் சன்ஸ்க்ரீன் பொருட்கள் கடலில் கலக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன . ப்ளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் , சிவப்பு பாசியிலிருந்து ஷினோரின் என்ற அமினோ அமிலத்தை மாற்றுப் பொருட்களாக க்ரீம்களின் பயன்படுத்த ஆய்வுகள் செய்துவருகின்றனர் . ஆனால் இதனை நீண்டநாட்கள் வளர்த்து பெறும் வேதிப்பொருளை பக்குவப்படுத்த அதிகநாட்கள் தேவை . இதற்கு மாற்றாக Synechocystis எனும் சயனோபாக்டீரியத்தை வளர்த்து 2.37 ml ஷினோரினை பெறுகிறார்கள் . விரைவில் இம்முறை சந்தைப்படுத்தப்பட இருக்கிறது . 2 நிலவில் பேசலாம் ! நிலவில் கால்வைத்த பழம்பெருமையை செவ்வாயில் ஆராய்ச்சி நடத்தும் இப்போதும் பேசிக்கொண்டிருந்தால் நன்றாகவா இருக

இதயநோய்கள் அதிகரித்துவருவதன் காரணம் என்ன?

படம்
இதயம் துடிக்கிறதா ? இந்தியாவில் இதயநோய் தொடர்பாக 53 சதவிகித இறப்புகள் நிகழ்வதாக ஹெல்த் சயின்ஸ் இணையதளம் தகவல் தெரிவிக்கிறது . " இதயம் ரத்தவோட்டத்தை சரிவர இயங்கச்செய்தால் மட்டுமே உடல் இயங்கும் . பலவீனமான இதயம் உயிரைக்கொல்வது உறுதி " என்கிறார் இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜிலுள்ள அடன்ப்ரூக் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் சஞ்சய் சின்கா . தோல் , கல்லீரல் , இதயம் ஆகிய மூன்றின் தானாகவே குணமடையும் திறன் மிக குறைவு . இதயத்தின் திறன் 0.5%. இந்நிலையில் இதயமாற்று ஒரே தீர்வு . விபத்தில் இறந்தவர்களின் உடலிலுள்ள இதயம் மட்டுமே இதற்கு உதவும் . இதயமாற்றுக்கு கட்டணம் 18-40 லட்சம் செலவு . மற்றொரு தீர்வாக , ஸ்டெம்செல்லை பாதிக்கப்பட்ட இதயத்தில் நேரடியாக செலுத்துவதை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் . ஹார்ட் பேட்ச் என்பதை மூன்றாவது தீர்வாக சின்கா முன்வைக்கிறார் . 2.5 ச . செ . மீ அளவில் லேபில் உருவாக்கப்படும் இதயத்தசையை ஸ்டெம் செல் மூலமாக உடலில் தேவைக்கேற்ப ரத்தநாள செல்களாக , இதயதசை செல்களாக மாற்றிப் பயன்படுத்த முடியும் . ட்யூக் மற்றும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாள

நூ்ல்விமர்சனம்: யூதர்கள் - வரலாறும் வாழ்க்கையும்

படம்
யூதர்கள் - வரலாறும் வாழ்க்கையும் முகில் கிழக்கு ரூ.100 இஸ்‌ரேல்- பாலஸ்தீன பிரச்னையை வாசித்து வருத்தப்படுபவர்களுக்கும் கூட அம்மண்ணின் வரலாறு தெரியுமா என்பது சந்தேகம்தான். ஏனெனில் யூதர்கள் அப்படிப்பட்ட விநோத ஆன்மாக்கள். தோரா என்ற புனிதநூலை வழிபடும் யூதர்களின் கூட்டத்தில் பிறரை இதன் ரபி சேர்த்துக்கொள்வது கடினம். எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தனியாக தங்களுக்கென கோவில், வழிபாடு, கல்வி வாழ்வதே இவர்களின் வழக்கம். அதனாலே கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இவர்களை தாக்கி அழிப்பது, அடித்து விரட்டுவது வரலாறு முழுக்க நடந்து வரும் நிகழ்வு. உண்மையில் யூதர்களின் தேவையென்ன? அவர்கள் வரலாறு முழுக்க ஓட ஓட விரட்டப்பட்டதன் காரணம் பற்றி முகில் எழுதியுள்ள நூல்தான் யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும். தங்களுக்கென ஜெருசலேம் புனித மண்ணில் வசிக்க இடம் வேண்டும் என்ற ஆசையில் யூதர்கள் செய்த முயற்சிகள்தான் அனைத்து அரசியல் பிரச்னைகளுக்கும் காரணம். ஆபிரஹாமின் பிள்ளைகளான இஸ்மயில், ஈஸாக் ஆகியோரின் பிள்ளைகள்தான் அரேபியர்களும், யூதர்களும் . ஆனால் இன்று இஸ்‌ரேலில் யூதர்களும் , பாலஸ்தீனில் அரேபியர்களும் தங

நூல் விமர்சனம்! ஒரு பார்வையில் சென்னை நகரம்!

படம்
ஒரு பார்வையில் சென்னை நகரம்! அசோகமித்திரன் கவிதா பதிப்பகம் ரூ.70 சென்னையிலுள்ள நகரங்கள் பற்றி அறி்ந்த இடம் அறியாத விஷயம், ஒருநாள் ஓரிடம் , ஸ்பாட் என்று வார இதழ்களில் பலரும் வரலாற்று நோக்குடன் எழுதி வருகின்றனர். அசோகமித்திரனும் அப்படித்தான் எழுதுகிறார். ஆனால் அனைத்தும் அனுபவ பகிர்வுகள். 1948 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தது தொடங்கி எழும்பூர், அண்ணாசாலை, குரோம்பேட்டை, வேளச்சேரி, நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை , அம்பத்தூர், மயிலாப்பூர், திருவான்மியூர் என தான் சைக்கிளில் அலைந்து திரிந்த அத்தனை இடங்களையும் எளிமையும் இனிய பகடியுமாக வாசகர்களிடம் பகிர்வது அசோகமித்திரனின் தனிச்சிறப்பு. மேற்கு மாம்பலத்தின் யானைக்கால் சிறப்பு, ரயில்வே கேட், ஆழ்வார்பேட்டையின் தனிச்சிறப்பு, மயிலாப்பூரில் உள்ள இடங்கள் பற்றிய குறிப்பு, குரோம்பேட்டையின் பெயர்க்காரணம், அம்பத்தூர் ஓ.டியின் என்பதன் அர்த்தம் என எளிமையாக புதிர்களை விடுவித்து எழுதுவது வாசிப்பை எளிதாக்குகிறது. ஒரே மூச்சில் நூற்று அறுபது பக்கங்களையும் நீங்கள் வாசிக்க முடியும். குறிப்பிட்ட காலகட்டத்தில் சென்னை எப்படியிருந்தது என நமக்கு காட்டும் மனோ

நம் மனதில் நாம் அறியாத இனவெறுப்பு முகம் ஒன்றுண்டு!"

படம்
முத்தாரம் நேர்காணல் " நம் மனதில் நாம் அறியாத இனவெறுப்பு முகம் ஒன்றுண்டு !" ஜோர்டன் பீலே , ஆங்கிலப்பட இயக்குநர் கெட் அவுட் திரைப்படத்திற்கு , சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை அதன் இயக்குநர் ஜோர்டன் பீலே பெற்றுள்ளார் . அகாடமி விருதின் தொண்ணூறு ஆண்டுகால வரலாற்றில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும் ஐந்தாவது கருப்பின இயக்குநர் ஜோர்டன் பீலே . தன் திரைப்படம் குறித்தும் பேசுகிறார் . பெண்தோழியின் பெற்றோரை சந்திக்கும் காட்சி அவ்வளவு எதார்த்தமாக இருந்தது . காகசியன் பெண்ணோடு எனக்கு நட்பிருந்தது . அவளின் பெற்றோரை சந்திக்கச் சென்றபோது நடந்த விஷயம் அது . ஏனெனில் நான் கருப்பின நபர் என அவள் தன் வீட்டில் சொல்லவில்லை என்பது கடும் திகிலூட்டியது . தங்கள் மனதிலுள்ள கருத்தை பெரியவர்கள் மறைக்க முயற்சிப்பது எனக்கு அருவெருப்பைத் தந்தது . ஆ ஸ்கர் விருதுக்காக நான்கு பிரிவுகளில் தங்களின் கெட்அவுட் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது . இனவெறி குறித்த சாகசதிரைப்படமான கெட்அவுட் குறித்தும் , அதற்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள் . நான் கடந்துவந்த பாதை

விண்வெளியில் இந்தியர்கள் முன்னேறி வருகிறார்களா?

படம்
விண்வெளி பிரைவேட் லிட் . நாசா , இஸ் ‌ ரோ என கோலாச்சி வந்த விண்வெளி பந்தயத்தில் இனி தனியார் நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன . ஸ்பேஸ் எக்ஸ் எலன் மஸ்க் , வர்ஜின் ரிச்சர்ட் பிரான்சன் ஆகியோர் உலகளவில் விண்வெளி டூர் உள்ளிட்டவற்றை பிரபலப்படுத்துகின்றனர் . தற்போது இந்தியாவிலும் இதற்கென தனியார் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன . கடந்த மாதம் பிப் .6 அன்று எலன்மஸ்க் விண்வெளிக்கு தன் டெஸ்லா காரையே அனுப்பி சுற்றிவரச்செய்தார் . எலன்மஸ்கின் முயற்சிகள்தான் மைசூரிலுள்ள பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ரோகன் கணபதிக்கு இன்ஸ்பிரேஷன் . தன் 22 வயதில் இந்நிறுவனத்தைத் தொடங்கிய ரோகன் , 2016 ஆம் ஆண்டு இஸ் ‌ ரோவுடன் ஒப்பந்தம் செய்யுமளவு முன்னேறியுள்ளார் . மேலும் வணிகரீதியிலான ராக்கெட் தொழிற்நுட்பத்திற்கான குடியரசுத்தலைவர் விருதையும் பெற்றுள்ளனர் . " ராக்கெட்டுகள் தற்போது 40 ட்ரான்ஸ்பான்டர்களை தூக்கிச்செல்கிறது என்றால் , எரிபொருள் பயன்பாட்டை குறைத்தால் நூற்றியெட்டு ட்ரான்ஸ்பான்டர்களை சுமந்து செல்ல முடியும் " என ஆர்வமாக பேசுகிறார் ரோகன் கணபதி . உந்துவிசைக்கு மரபாக வே

டாட்டூ மம்மி!

படம்
டாட்டூ மம்மி ! பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ள பதப்படுத்தப்பட்ட மம்மிக்களின் உடல்களில் காளை , செம்மறி ஆடு உள்ளி விலங்குகளின் உருவங்கள் டாட்டூவாக வரையப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது . கி . மு . 3351 -3017 காலகட்டத்தைச் சேர்ந்த மம்மிக்களான இவை , டாட்டூ வரலாற்றையே மாற்றியமைத்துள்ளன . "5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்பிரிக்காவில் டாட்டூ கலாசாரம் இருந்தது என்பது நம்பமுடியாத ஒன்று " என ஆர்வமாக பேசுகிறார் டேனியல் ஆன்டைன் . ஆண் மம்மி கெபலெய்ன் , ஏறத்தாழ உலகிலேயே மிகச்சிறந்த முறையில் பதப்படுத்தப்பட்ட உடலைக் கொண்டுள்ளது . முதுகில் குத்தி கொல்லப்பட்டுள்ள இந்த ஆண் மம்மி , கண்டுபிடிக்கப்பட்டு நூறு ஆண்டுகளுக்கும் மேலாகிறது . காளை மற்றும் ஆடு என்பது வலிமையின் குறியீடு எனவும் , பெண் மம்மியின் உடலில் எஸ் வடிவ குறியீடுகள் இருந்ததையும் குறிப்பிடுகின்றனர் . டாட்டூ என்பது பொதுவானது என்றாலும் புதிய கண்டுபிடிப்பாக மிகச்சிறந்த முறையில் பதப்படுத்தப்பட்ட மம்மிகளில் அவை இடம்பெற்றுள்ளது பற்றி ஆய்வை தொடர்ந்துவருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள் .    2 போன் புதுசு ! AS