இடுகைகள்

"அனிமேஷன் உலகின் கடவுள்"

படம்
ஒரு படம் ஒரு ஆளுமை  - லிஜி தி ரெட் பலூன் எந்திரமாய் மாறிப்போன இன்றைய வாழ்க்கைச் சூழலில் நாம் இழந்துவிட்ட குழந்தைப் பருவத்தையாவது திரும்பப் பெற்றுத்தருகிற சில படங்களில் முக்கியமானது ‘ தி ரெட் பலூன் ’. பாரிஸ் நகரில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு . அங்கே வசித்து வரும் சிறுவனுக்கு சிகப்பு பலூன் ஒன்று கிடைக்கிறது . நாளடைவில் பலூனும் அவனும் நண்பர்கள் ஆகிவிடுகிறார்கள் . பள்ளி , வீடு , கடைவீதி என்று சிறுவன் செல்லும் எல்லா இடங்களுக்கும் பலூனும் உடன் வருகிறது . இதைப் பார்க்கும் மற்ற சிறுவர்கள் அவன் மீது பொறாமையாகி , பலூனை அபகரித்துக் குரூரமாக காலால் மிதித்து உடைத்து விடுகின்றனர் . தன்னுடைய நண்பனை இழந்த சிறுவன் கதறி அழுகிறான் . அவனின் அழுகையைக் கேட்டு   நூற்றுக்கணக்கான வண்ணமயமான பலூன்கள் கூட்டாகக் கிளம்பி அவன் இருக்கும் இடத்தை நோக்கி வானில் பறந்து வருகிறது . அந்தப் பலூன்கள் வானத்தை நோக்கி அவனைத் தூக்கிச் செல்வதோடு படம் நிறைவடைகிறது . கேன்ஸ் , ஆஸ்கர் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ள இக்குறும்படத்தை இயக்கியவர் ஆல்பர்ட் லாமோரைஸ் .   ஹயோ மியாசகி இவ்வுலகிலி

நாஜி படைகளிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றியவர்!

படம்
ஒரு படம் ஒரு ஆளுமை ! - லிஜி தி ஹன்ட் மனைவியைப் பிரிந்து வாழும் நர்சரி ஆசிரியரான லூகாஸூக்கு ஒரு மகன் உண்டு . லூகாஸின் நெருங்கிய நண்பரான தியோவின் மகள் கிளாரா படிப்பதும் லூகாஸின் பள்ளியில்தான் . ஆசிரியர் , மாணவி என்பதைக் கடந்த நட்பு கிளாராவுக்கும் லூயிஸூக்கும் உருவாகிறது . ஒரு நாள் கிளாரா வீட்டில் இருக்கும்போது அவளுடைய அண்ணனும் , அவனின் நண்பனும் விளையாட்டாக ஐபேடிலுள்ள ஆபாசப் படத்தை கிளாராவுக்கு காட்டுகிறார்கள் . அடுத்த நாள் கிளாரா , பள்ளி முடிந்தும் வீட்டுக்குப் போகாமல் வகுப்பிலேயே அமர்ந்திருக்கிறாள் . ஆசிரியர் லூகாஸ் தன்னிடம் தவறாக நடந்துவிட்டதாக பள்ளி முதல்வரிடம் பொய்க்குற்றம் சாட்டுகிறாள் . கிளாராவைத் துருவி விசாரிக்கும் பள்ளி நிர்வாகம் , அவள் சொல்வது உண்மை என நம்பி , லூகாஸை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள் . லூகாஸ் தன் மீது விழுந்த பழிச்சொல்லை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே ‘ தி ஹன்ட் .’ திரைப்படம் . சர் நிக்கோலஸ் வின்டன் சில முன் டி . வி சேனலில் சிறப்பு விருந்தினராக முதியவர் அழைக்கப்பட்டிருந்தார் . அவர் மேடைக்கு வந்ததும் , பார்வையாளர்களின் எழுந்து நின்று

கிறிஸ்டோபர் நோலனும், மஜித் மஜீதியும்!

படம்
லோகோ: கார்டூன் கதிர் ஒருபடம் ஒரு ஆளுமை !- லிஜி தி பிரஸ்டீஜ் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான வித்தியாசமான கதையம்சத்தைக் கொண்ட படம் ‘ தி பிரஸ்டீஜ் ’. பிரபு வர்க்க மேஜிக் மேனுக்கும் , எளிய குடும்பத்தைச் சேர்ந்த மேஜிக் மேனுக்கும் இடையிலான பகைமையும் , இழப்புகளும்தான் படத்தின் கதை .   ஒரு கூண்டுக்குள் அழகான பறவை ஒன்று இருக்கும் . மேஜிக் மேன் அந்தக் கூண்டை துணியைக் கொண்டு மூடுவார் . சிறிது நேரத்தில் அந்த துணியை மேலே எடுப்பார் . அப்போது அந்த கூண்டும் , பறவையும் காணாமல் போயிருக்கும் . உடனே பார்வையாளர்கள் மேஜிக்மேன் தான் தன்னுடைய மாய சக்தியால் கூண்டையும் பறவையையும் மறைய வைத்துவிட்டான் என்று ஆச்சர்யத்தில் கை தட்டுவார்கள் . ஆனால் , அச்சிறுவனோ ‘‘ அவன் பறவையைக் கொன்று விட்டான் ...’’ என்று அழுதுகொண்டே மேஜிக் மேனை திட்டுவான் . மேஜிக் செய்பவர் புதிய பறவையைக் கொண்டுவந்தாலும் முதலில் மக்களுக்கு காட்டிய பறவை கொல்லப்பட்டிருக்கும் . நல்லவர் , கெட்டவர் என அனுமானிக்க முடியாத கதாபாத்திரங்கள் படத்தில் பெரும்பலம் . ஹ்யூஜாக்மேன் , கிறிஸ்டியன் பேல் , ஸ்கார்ல

கடலில் மனித உடல் சிதைந்து போக எத்தனை நாட்கள் தேவை?

படம்
ஏன் ? எதற்கு ? எப்படி ? கடலில் மனித உடல் சிதைந்து போக எத்தனை நாட்கள் தேவை ? கடல்நீரின் வெப்பநிலையைப் பொறுத்தது . குளிர்ந்த நீரில் பாக்டீரியாக்களின் வேகம் குறைவாக இருக்கும் . உடல் தசைகள் அழுகி , மீன்கள் தின்று உடல் காலியாக ஒருவாரம் தேவை . நம் உடலிலுள்ள கொழுப்பு உடல் சிதைவை பெருமளவு தடுக்கிறது . 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பல வாரங்கள் , ஆண்டுகள் கடலில் கிடக்கும் பிணங்களை கண்டெடுத்து காவல்துறை அடையாளமும் கண்டுபிடித்திருக்கின்றனர் . ஆனால் அரேபியக்கடலில் நான்குநாட்களில் உடல் பறவைகளுக்கும் மீன்களுக்கு இரையாகி எலும்புகள் மிஞ்சும் . கடலிலுள்ள அமிலத்தன்மையை பொறுத்து எலும்பும் கரைந்துவிடும் வாய்ப்பு அதிகம் .

சம்பள தீண்டாமை இல்லாத நாடு எது தெரியுமா?

படம்
பெல்ஜியத்தின் பெருமை ! ஐரோப்பிய நாடுகளிலேயே ஆண் , பெண் சம்பளவிகித வேறுபாடு குறைவாக உள்ள நாடு பெல்ஜியம்தான் . வித்தியாசம் 1.1% தான் . ப்ரூசெல்ஸை தலைநகரமாக கொண்ட பெல்ஜியம் நாட்டின் மக்கள்தொகை 11,429,336. ப்ரெஞ்சு , டச்சு மொழி பேசும் இங்கு தனிநபர் வருமானம் ( ஜிடிபி ) 46,301 டாலர்கள் .   இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் ஆண்களைவிட பெண்களுக்கு சம்பளம் குறைவு . ஸ்வீடனில் 10.5%, அமெரிக்காவில் 19.5% என்று அமைந்துள்ளது . இங்கு குறிப்பிட்ட சம்பள விகிதம் என்பது முழுநேர வேலைகளுக்கானது . பகுதிநேர வேலைகளுக்கான சம்பளவிகிதத்தில் பெல்ஜியம் இன்னும் இறங்கி வரவேண்டியிருக்கிறது . " இந்த மாற்றம் ஒரேநாளில் ஏற்படவில்லை . ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே வேலையைச் செய்தாலும் சமமான சம்பளம் தராதது தவறு என்று இன்றுதான் பலரும் உணரத்தொடங்கியுள்ளனர் " என்கிறார் பெல்ஜியத்தில் பெண்களுக்கு சம ஊதியம் கேட்டு போராடும் அமைப்பின் தலைவரான இன்கா வெர்ஹர்ட் .   

அன்டார்டிகாவில் விளைகிறது வெள்ளரிக்காய்!

படம்
அன்டார்டிகா சாலட் ! அன்டார்டிகாவில் விளைவித்த வெள்ளரிக்காய் , கீரைகளை ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் பறித்து வந்து உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர் . " தோட்டத்திலிருந்து பறித்து வந்தது போல புத்துணர்ச்சியான சுவை " என்கிறார் ஆராய்ச்சியாளர் பெர்ன்ஹார்ட் கிராப் . அன்டார்டிக்காவில் அமைக்கப்பட்டுள்ள நியூமேயர் ஸ்டேஷனில்தான் கீரைகளை விளைவித்திருக்கிறார்கள் . நானூறு மீட்டரில் அமைக்கப்பட்டுள்ள EDEB ISS என்ற பசுமைவீட்டில் காய்கறிகளை நுட்பதாக விதைத்து அறுவடை செய்திருக்கிறது ஆராய்ச்சியாளர்கள் குழு . எதற்கு இந்த ஆராய்ச்சி , எதிர்காலத்தில் செவ்வாய் உள்ளிட்ட கோள்களுக்கு சென்றால் விவசாயம் செய்தால்தானே உயிர்பிழைக்க முடியும் ? அதற்கான ஒத்திகைதான் இது .

தங்கவேட்டை கொள்ளையர்கள்!

படம்
வரலாற்று சுவாரசியங்கள் ரா . வேங்கடசாமி ஒரு நாட்டிலுள்ள தங்க இருப்பிற்கு ஏற்ப இன்று பணம் அச்சடிக்கப்படுகிறது . வியாபாரத்தில் தங்கத்தை பரிமாற்றம் செய்வதை ஊக்குவித்த நாடு பிரிட்டன்தான் . இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனிக்கு எதிராக போரிட தங்க நாணயங்களே பெருமளவு உதவின . தங்கத்தை கள்ள நாணயமாக பயன்படுத்தும் போக்கும் உருவாகி வளர்ந்தது .  மாசிடோனியாவைச் சேர்ந்த பணக்கார யூதர் ஜோஸ் பெராகா . 1941 ஆம் ஆண்டு ஜெர்மன் படை யூகோஸ்லேவியா நாட்டை ஆக்கிரமித்தபோது , ஜோஸ் பெராகவின் குடும்பத்தினர் சிறைபிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் . அப்போது பெராகவும் மிகச்சில உறவினர்களும் அல்பேனியாவுக்கு படகு வழியாக தப்பிச்சென்றனர் . உதவியது , தங்க நாணயங்கள்தான் . இத்தாலி மொழியைக் கற்ற பெராகா , தன் உறவினர்கள் மூலம் வியாபாரம் செய்யத் தொடங்கினார் . ஆனால் கரன்சி நோட்டுக்களின் மீதான கிடுக்குப்பிடி சட்டங்களால் ஏற்றுமதி தொழில் நஷ்டமாகி அழிந்தது . பிரிட்டனின் தங்க நாணயத்தில் பயன்படும் தங்கத்தின் மதிப்பு 9 பவுண்டுதான் . ஆனால்