இடுகைகள்

மயிலாப்பூர் டைம்ஸ்!- 2 கோயில்சூழ் வாழ்வு

படம்
மயிலாப்பூர் டைம்ஸ்!- 2 குடித்தனமும், கோயில் வாசமும் மயிலாப்பூரில் குறைந்த சம்பளம் வாங்கிக்கொண்டு காலம் தள்ளுவது மிக சிரமமான ஒன்று. இந்த சிரமங்களை தாங்கிக்கொண்டும் இங்கு தங்கியிருக்க காரணம் போக்குவரத்து வசதிகளும், கூடக்குறைய இருக்கும் மரங்களும்தான். பறவைகள் உட்கார ஒரு மரம் கூட இல்லாமல் இருக்கும் இடத்தில் எப்படி வசிப்பது? ரயில், பஸ்களின் பேரிரைச்சல்கள் மனதை ராஜீவ் ரவியில் கேமரா கோணங்கள் போல திகைப்புக்குள்ளாக்கி விடும். சிலர் இதனை வர்க்கம் சார்ந்த பிரச்னையாக பார்க்கிறார்கள். தனக்கான சுயநலம் என்றால் கூட அதற்கு பிறரையும் சம்மதிக்க வைத்து ஏதேனும் செய்கிறார்களே என்று சந்தோஷப்படவேண்டியதுதான். கபாலி கோயில் வெளிநாட்டு வருகையாளர்களால் பரபரப்பானாலும் ஆசுவாசம் தர ஆதிகேசவ பெருமாள், மாதவப்பெருமாள் குறையாத புன்னகையுடன் வரவேற்கிறார்கள். போகும் வழியில் முண்டக்கண்ணியம்மன் தன் தாய்மடியை ஆறுதல் தேடிப்போகும் உங்கள் நீட்டுகிறாள். அப்புறமென்ன? பேருந்துக்கு போட்டியாக ரயில்வே இன்று மக்களை இணைக்கிறது. முண்டக்கண்ணியம்மன் ஸ்டேஷன் தொடங்கப்பட்டதிலிருந்து பெரும் மக்கள் கூட்டம் குறைந்த காசில் நகருக்குள்

அமெரிக்காவில் டர்பன் சிங்!

படம்
திருநங்கைகளுக்கு பான்கார்டு! சாதாரண மக்களுக்கே பான்கார்டு எடுப்பது சிரமமான வேலை . இதில் மாற்றுப் பாலினத்தவரான திருநங்கைகளுக்கு அவர்களின் பாலினத்தை குறிக்க ஆப்ஷனே இன்றி ,  பான்கார்டு பெறுவது எப்படி ? தற்போது மத்திய வரிகளுக்கான ஆணையம் (CBDT), திருநங்கைகளுக்காக பாலினத்தைக் குறிக்க டிக் செய்யும்படி பாக்ஸ் ஒன்றை ஆவணங்களில் உருவாக்கி இணைத்து அவர்களுக்கும் பான்கார்டு வழங்க முடிவு செய்துள்ளது . ஆதார் ஆவணங்களில் முன்பே மாற்றுப்பாலினத்தவர்களுக்கான இடம் உண்டு . ஆனால் பான்கார்டுகளில் ஆண் , பெண் என்று மட்டுமே குறிப்பிட்டிருப்பதால் வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்வதற்கும் ஆதார் , பான் இரண்டையும் இணைப்பதற்கும் மாற்றுப்பாலினத்தவர்கள் தடுமாறி வந்தனர் . தற்போது இப்பிரச்னைக்கு அரசு தீர்வு கண்டுள்ளது .  2 டீ விற்கும் மாரத்தான் பெண் ! நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விளையாட்டு வீரர்கள் பலர் இன்றும் அரசால் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது வேதனையான ஒன்று . கோயம்புத்தூரில் டீ விற்கும் கலைமணி , இவ்வகையைச் சேர்ந்த முன்னாள் மாரத்தான் வீரர் . கோயம்புத்தூரைச் சேர்ந்த மாநில அள

தொழில்துறை சூப்பர்ஸ்டார் தனிமையில் ஜெயித்தது எப்படி?

படம்
தனிமையில் தலைவன்: ஜெயித்தது எப்படி ?  -  ச . அன்பரசு அந்த புகழ்பெற்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனருக்கு இரவில் அடுத்தடுத்து போன் அழைப்புகள் , குறுஞ்செய்திகள் வந்தன . " நான் தனியாக இருக்கிறேன் . இன்றிரவு உன் வீட்டில் தங்க அனுமதி கிடைக்குமா ?" என்பதுதான் அந்த செய்தி . செய்தியைப் படித்துவிட்டு அழைப்பு எண்ணைப் பார்த்தவர் எந்த பதிலும் அனுப்பாமல் புன்னகையுடன் தூங்கச் சென்றுவிட்டார் . இதுபோல மாதத்திற்கு பலமுறை அழைப்பும் குறுஞ்செய்திகளும் வருவது அவருக்கு பழகிவிட்டது .   விடாக்கண்டனாக அழைப்பவரும் அதேபோல்தான் . அழைத்தவர் நவீன தொழில்துறையின் சூப்பர் ஸ்டாரான எலன்மஸ்க் , செய்திகளைப் பெற்றவர் அவரின் நண்பரான கூகுளின் லாரிபேஜ் . தன் எட்டு நிறுவனங்களின் மூலம் ஒரு கோடியே 37 லட்சம் கோடி ரூபாய்களுக்கு சொந்தக்காரான எலன் மஸ்க் , இன்றைய ஸ்டார்ட்அப் இளைஞர்கள் மனதில் வெற்றிவேட்கையை அள்ளி ஊட்டும் மந்திரச்சொல் . எட்டு சொகுசு வீடுகளை வைத்திருந்தும் அங்கு தங்காமல் இரவில் நண்பரின் வீட்டில் எலன்மஸ்க் தங்க நி

சீனாவில் உருவாகிறது புதிய சினிமா சந்தை!

படம்
சீனாவில் இந்தியக்கொடி பறக்குது !- ச . அன்பரசு சீனாவின் பெய்ஜிங் நகரிலுள்ள புகழ்பெற்ற சினிமா தியேட்டர் . திரையில் ஓடிய படத்தில் கண்ணிமைக்கக்கூட மறந்து லயித்து போயிருந்தனர் சீன இளைஞர்கள் . காம்போ ஆஃபரில் வாங்கிய பாப்கார்னைக்கூட படத்தின் சுவாரசியத்தில் சாப்பிடத் தோன்றவில்லை . அதிசய மிருகங்களால் உலகுக்கு ஆபத்து , ரேஸ் கார்கள் , சூப்பர் கதாநாயகர்கள் , ரத்தம் தெறிக்கும் வரலாற்றுப்படம் என்றெல்லாம் ஹாலிட் படங்களோடு அந்தப்படத்தை ஒப்பிட முடியாது . கிராபிக்ஸ் கலப்படங்கள் இல்லாத சிம்பிளான கதை . தந்தை தன் இரு மகள்களை மல்யுத்த வீரர்களாக்கும் உணர்ச்சிப்பூர்வமான மொழிமாற்றுப்படத்தில் ஒன்றிப்போய் நெஞ்சம் நெகிழ்ந்துபோய் கண்கள் கசிய பார்த்துக்கொண்டிருந்தனர் சீனர்கள் . ஆம் . 2016 ஆம் ஆண்டு நிதிஷ் திவாரியின் இயக்கத்தில் அமீர்கானின் அட்டகாச நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி உலகமெங்கும் பாராட்டுக்களையும் கரன்சியையும் குவித்த ' தங்கல் ' படம்தான் அது . ஏறத்தாழ சீனாவில் மட்டும் படம் வெளியான இரண்டே மாதங்களில் பத்தொன்பது கோடி ரூபாய் சம்பாதித்து தந்திருக்கிறது . " பலருக்கும் நம்