இடுகைகள்

செய்தியாளரை அழ வைத்த அதிபர் ட்ரம்ப் !

படம்
லீகல் கஞ்சா! உலகெங்கும் 125 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வந்தாலும் பெரும்பாலான நாடுகளில் அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பொருள் மரிஜூவானா . அண்மையில் கனடா ஜி 7 நாடுகளில் முதல்நாடாக கஞ்சா மீதான தடையை நீக்கி மாற்றி யோசித்துள்ளது . இன்னும் ஓராண்டுக்குள் கனடாவில் கஞ்சா சட்டப்பூர்வமாக விற்பனைக்கு வரும் . " செனட்டில் நாம் கொண்டுவந்துள்ள மசோதாவின் மூலம் கஞ்சா விற்பனையை சட்டவிரோத மனிதர்களின் கைகளிலிருந்து வெளிக்கொண்டு வந்துள்ளோம் " என்று ஏகத்துக்கும் பெருமைப்பட்ட  கனடா பிரதமர் ஜஸ்டின் மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதி இது . லீகல் செய்தால் கருப்பு மார்க்கெட்டிலிருந்து கஞ்சாவை வெளிக்கொண்டுவந்து அரசு கண்காணிக்க முடியும் . கஞ்சா அடிமைத்தனம் என்பது 9 சதவிகிதம் என்பதால் புகையிலை (32%), மது (15%), கோகைன் (16%) ஆகியவற்றை விட பாதிப்பு குறைவானதே . இத்தாலி மற்றும் இஸ்‌ரேல் கார்டல்களுக்கு செல்லும் பேரளவிலான வருவாய் இனி கனடா அரசுக்கு மட்டுமே சொந்தம் . உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதோடு வருமானமும் உயரும் .   நியூஸ்‌ரீடரை அழவைத்த ட்ரம்ப் அமெரிக்க அதிபர

டெல்லியில் அழிக்கப்படும் மரங்கள்!

படம்
சொகுசுக்காக அழிக்கப்படும் மரங்கள் ! இந்தியாவில் தலைநகரமான டெல்லியில் காற்று மாசு விவகாரம் உலகளவில் சூழலியல் தளங்களில் முக்கிய செய்தியானது . இதில் பலரும் அறியாத விஷயம் மாசுபடுதலை கட்டுப்படுத்தும் 16 ஆயிரத்து 500 மரங்கள் குடியிருப்பு வசதிக்காக அநீதியாக வெட்டப்பட்டு வரும் அவலம் . டெல்லியின் சரோஜினி நகர் , நௌரோஜி நகர் , நேதாஜி நகர் , தியாக்ராஜ் நகர் , மொகமத்பூர் , கஸ்தூர்பா நகர்  னிவாஸ்புரி ஆகிய இடங்களிலுள்ள மரங்களை வெட்ட வனத்துறை அனுமதி கொடுத்ததால் விளைந்த விபரீதம் இது . " குடியிருப்பு வசதிக்காக என்று கூறி மரங்களை வெட்டினால் இப்பகுதிகளிலுள்ள குழந்தைகள் , முதியோர்கள் ஆகியோர் பாதிக்கப்படமாட்டார்களா ?" என கேள்வி எழுப்புகிறார் மரங்களைக் காக்க போராடிவரும் ஜட்கா . ஆர்க் வலைதள நிறுவனர் சிக்லா குமார் . ஒரு மரம் வெட்டப்பட்டால் பத்து மரக்கன்றுகளை நடுவது வனத்துறை விதி . 1500 மரங்கள் வெட்டப்பட்டுவிட்ட நிலையில் மீதி மரங்களை காப்பாற்ற ஜட்கா . ஆர்க் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி வருகிறது . i

ஜப்பானின் மேஜர் வயது சட்டம்! -எதற்கு?

படம்
ஜப்பானின் இளமை ரகசியம் ! ஜப்பானில் வயதுவந்தோர் அதிக இளமையுடன் தோன்றக்காரணம் அரசின் சட்டம்தான் . 2022 ஆம் ஆண்டில் 18(20 வயதிலிருந்து குறைத்து ) வயது என அதிகாரப்பூர்வ சட்டத்தை திருத்தியுள்ளது . 1876 ஆம் ஆண்டுக்குப்பிறகு மக்களின் வயதுவந்தோர் சட்டத்தை அரசு முதல்முறையாக மாற்றியுள்ளது . இனி பதினெட்டு வயதைத் தொட்டால் பெற்றோரின் தலையீட்டை தவிர்த்து சுயமாக திருமணம் செய்ய அரசு வாய்ப்பளிக்கிறது . தற்போதுள்ள சட்டப்படி ஆண்கள் பதினெட்டும் பெண்கள் பதினாறு வயதை கடந்தால் திருமணம் செய்ய வழியுண்டு . இதில் பெண்களுக்கு பெற்றோரின் சம்மதம் அவசியம் . சுயமாக திருமணத்தை தேர்ந்தெடுக்க வயது இருபதை எட்ட வேண்டும் . வயது சட்டத்தை திருத்தினால் இருபதிற்கும் மேற்பட்ட சட்டங்களை திருத்தவேண்டியிருக்கும் . இதில் குடியுரிமை , படிப்பு உள்ளிட்டவை சேரும் . ஜப்பானில் பதினெட்டை எட்டாதவர்கள் குடிக்க , புகைக்க , சூதாட , குழந்தைகளை தத்தெடுக்கவும் தடையுள்ளது . குழந்தைபிறப்பு குறைந்த ஜப்பானை உயிர்ப்பிக்கவே இம்முடிவு என்கின்றது அரசில் வட்டாரங்கள் . 015 ஆம் ஆண்டு ஜப்பான் அரசு வாக்களிக்கும் வயதை இருபதிலிருந்து பதினெட்

ஊழல்களை பேசும் தென்னாப்பிரிக்கா போராளி!

படம்
நிதித்துறையில் போராளி ! தென்னாப்பிரிக்காவுக்கு முதல்முறையாக வந்தபோது வியர்ஸைக்காவுக்கு வயது 13. போலந்தில் மருத்துவர்களாக இருந்த பெற்றோர் அகதியாக அங்கு வந்து சேர்ந்தனர் . கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் பள்ளி , கல்லூரி வட்டாரத்தில் வெளுத்துவாங்கிய வியர்ஸைக்கா 2006 ஆம் ஆண்டு நிதி தொடர்பான நிறுவனத்தை அமைக்க முயற்சித்தார் . சைக்னியா நிதிதொடர்பான மென்பொருள்களை தயாரிக்க பிலடெல்பியாவிலிருந்த SEI என்ற கம்பெனியின் வர்த்த ஆர்டர் கிடைத்தது . லாபம் 14.7 பில்லியன் டாலர்கள் . நிதித்துறையில் ஊழல் பற்றி வியர்ஸைக்காவின் பேச்சு அவருக்கு முன்னணி ஊடக நிறுவனத்தின் சகர்மதா டெக்னாலஜிஸ் கசப்பையும் வெறுப்பை பெற்றுத்தந்திருக்கிறது . இனவெறுப்பு , விளம்பரத்திற்காக செய்கிறார் என இவரை விமர்சிக்கின்றனர் . பத்திரிகைகளில் தொடர்ச்சியாக நிதிதொடர்பாக கட்டுரைகளையும் ட்விட்டரிலும் தீவிரமாக செயல்பட்டு வந்தவர் தற்போது ட்விட்டரிலிருந்து வெளியேறியுள்ளார் . அதிபர் ஸூமாவுக்கு எதிரான ஊழல்களை மக்களிடம் சொல்லி விழிப்புணர்வு செய்துவருகிறார் வியர்ஸைக்கா .

எமர்ஜென்சி காலத்தில் மக்களைக் காப்பாற்றும் இமோஜி!

படம்
உலகைக் காப்பாற்றுமா இமோஜி ? இமோஜி உலகைக் காப்பாற்றும் என்று சொன்னால் பல் முளைக்காத குழந்தை கூட ஹவ் ? என்று கேட்கும் . ஆபத்துக்காலங்களில் குறிப்பாக நிலநடுக்க காலங்களில் நிலப்பரப்பு வேறுபாடு கடந்து உதவுவது இமோஜிக்கள் மட்டுமே என ஆராய்ச்சியாளர்கள் கூறுவதோடு அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இதனை யூனிகோட் முறையில் அமைக்கவும் லாபி செய்து வருகின்றனர் . " மூன்றில் ஒரு சதவிகித நாடுகள் நிலநடுக்க ஆபத்துக்குள்ளாகும் அபாயத்தை கொண்டுள்ளன . அனைத்து நாடுகளிலும் தொடர்புகொள்ள இமோஜி சரியான தீர்வு " என்கிறார் சவுத்தாம்டன் பல்கலையைச் சேர்ந்த நில அதிர்வு வல்லுநர் ஸ்டீபன் ஹிக்ஸ் . Emoji-quake பிரசாரத்தை உலகெங்கும் செய்துவருகிறார் ஸ்டீபன் . நிலநடுக்கம் என்பது எரிமலை வெடிப்பு போல வெளித்தெரிந்து நடப்பதில்லை . திடீரென நடைபெறுவது என்பதால் இமோஜி மூலம் உடனடியாக தகவல் தெரிவித்து உயிர்களைக் காக்கமுடியும் . emerji  என்ற பெயரில் சூழல் பிரச்னைகளை சொல்லும் இமோஜிகளை சாராடீன் என்ற அமெரிக்க கிராபிக் டிசைனர் உருவாக்கியுள்ளார் . பல்வேறு இமோஜிகளை இணைத்து செய்தி பரிமாறுவதில் தடுமாற்றங்கள் உள்ளதையும் கரு

ரா அமைப்பு இதுவரை செய்தது என்ன?

படம்
இந்தியாவின் ரகசிய திட்டங்கள் ! Operation Chanakya காஷ்மீரில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு ஆதரவான இக்வான் உல் முஸ்லீமின் , முஸ்லீம் முஜாகிதீன் ஆகிய அமைப்புகளை ஒடுக்க இந்தியாவுக்கு ஆதரவான அமைப்புகளை ரா (RAW) உருவாக்கும் திட்டமிது . Baloch Game காஷ்மீரில் குடைச்சல் கொடுக்கும் பாக்கின்    ஐஎஸ்ஐ ரூட்டை அப்படி காப்பியடித்த பலுசிஸ்தானில் செயல்படுத்தியது ரா அமைப்பு . 1980 ஆம் ஆண்டிலிருந்து டீம் எக்ஸ் என்ற பெயரில் ஆயுதங்களையும் , கரன்சிகளையும் அள்ளிக்கொடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக போராட போராளிகளை மடைமாற்றுகிறது . Operation Leech மியான்மரிலிருந்த காச்சின் விடுதலை ராணுவத்திற்கு (KIA) ரா அமைப்பு பயிற்சி அளித்தது . பின்னாளில் வடகிழக்கு மாநிலங்களில் அமைதிகெடவும் இச்செயல் ஆதாரமானது . இவ்வமைப்பின் ஆறு முக்கிய தலைவர்களை கொன்று 34 கொரில்லாக்களை கைது செய்து அமைப்பை முடக்கியது ரா . Bangala Partition பாகிஸ்தானுக்கு ஆதரவான லயோனல் ஜெனரல் எர்ஷாத்துக்கு எதிராக ஷேக் ஹசீனா , கலீல்தா ஸியா ஆகியோரை இணைத்து ஜனநாயகத்திற்கு ஆதரவான அரசியல் விளையாட்டை ரா அமைப்பு விளையாடியது . அ

பிளாக்குகளை ஒடுக்கும் தான்சானியா அரசு!

படம்
வலைத்தளங்களுக்கு ஒடுக்குமுறைவரி ! தான்சானியா அரசு விரைவில் சமூக வலைதளம் மற்றும் தனிநபர் வலைத்தளங்களுக்கு வரி விதிக்கவிருக்கிறது . ஜூன் 15 தேதி முதல் வலைத்தள நிறுவனர்கள் ஆண்டுக்கு 900 டாலர்களை கட்டினால் இணையத்தில் உயிர்வாழ முடியும் . இதில் யூட்யூப் சேனல்கள் , பிளாக்குகள் , சமூகவலைதளங்களும் உள்ளடங்கும் . விதியை மீறுபவர்களுக்கு 5 மில்லியன் அபராதமும் , ஒராண்டு தண்டனையும் உண்டு . சுதந்திர ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கும் தொலைத்தொடர்பு ஆணையம் (TCRA) இச்சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கையும் நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டது . தற்போது இத்தடையை எதிர்த்து இணையத்தில் கடுமையான விமர்சனங்களை தான்சானியர்கள் எழுதி வருகின்றனர் . " மூன்றில் ஒருபகுதியினர் வறுமையில் தவிக்கும் நாட்டில் லைசென்ஸ் வாங்கி இணையத்தில் எழுதுவது எப்படி சாத்தியம் ? அரசு தனக்கு எதிரான ஊடகங்களை டிஜிட்டல் அகதிகளாக மாற்றியுள்ளது " என்கிறது ஜாமி ஃபாரம் என்ற செய்தி வலைதள நிறுவனர் மெக்சன்ஸ் மெலோ . 2015 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜான் பி மகுஃபுலி எதிர்க்கட்சி மற்றும் தனக்கு எதிரான சக்த

ரத்தம் போதாது!- இழப்புகளும் விளைவுகளும்

படம்
ரத்ததான பற்றாக்குறை ! இந்தியாவில் ரத்ததான தேவை 1.9 மில்லியனாக உயர்ந்துள்ளது . இதன் மூலம் 3 லட்சத்து 20 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகள் , 49 ஆயிரம் உறுப்புமாற்று சிகிச்சைகளை செய்ய முடியும் . 2015-16 காலகட்டத்தில் பற்றாக்குறையின் அளவு 1.1 மில்லியனாக இருந்தது . கடந்தாண்டில் 13 மில்லியன் யூனிட் அளவில் 11.1 மில்லியன் மட்டுமே பெற முடிந்தது என்ற தகவலை சுகாதாரத்துறையின் துணை அமைச்சரான அனுபிரியா படேல் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் . உலகெங்கும் 112 மில்லியன் யூனிட் (1 யூனிட் =350 மி . லி ) ரத்தம் தானமாக பெறப்படுகிறது . இதில் 80 சதவிகித மக்கள் வாழும் வறுமை , நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு 50 சதவிகித ரத்தம் அளிக்கப்படுவதை ஆய்வு மூலம் உறுதிபடுத்தியுள்ளது உலக சுகாதார நிறுவனம் . இந்திய மாநிலங்களில் சண்டிகர் (74,408 யூனிட் )  அதிகளவு ரத்தம் சேகரித்தும் , பீகார் (9,85,015), உத்தரப்பிரதேசம் (61% பற்றாக்குறை ) ஆகியவை இலக்கில் சறுக்கியுமுள்ளன . " சண்டிகர் மாநிலம் தன்னார்வமாக முன்வந்து ரத்த தானம் அளித்ததால்தான் தேவையையும் மிஞ்சி சாதித்துள்ளது . தன்னார்வ ரத்ததான

உலகெங்கும் இனி கோல்டன் ரைஸ் ஆட்சி!

படம்
பட்டினிச்சாவுகளைத் தடுக்குமா கோல்டன் ரைஸ் ? அண்மையில் அமெரிக்காவின் எஃப்டிஏ , மரபணு மாற்றம் செய்யப்பட்ட கோல்டன் ரைசை சாப்பிடலாம் என அங்கீகரித்துள்ளது . முப்பது ஆண்டுகளாக நடந்து வந்த விவாதம் இத்தீர்மானத்தால் முடிவுக்கு வந்துள்ளது . உலகில் பட்டினிச்சாவுகளை கோல்டன் ரைஸ் தீர்க்கும் என அறிமுகப்படுத்தும்போது கூறப்பட்டது . விட்டமின் ஏ சத்து இருக்குமாறு டிஎன்ஏ மாற்றப்பட்டு உருவாக்கப்பட்டது . இதன்மூலம் 5 லட்சம் குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வையிழப்பை தடுக்க முடியும் என கூறப்பட்டது . தொண்ணூறுகளில் உருவான சிந்தனைக்கு நிதியளித்து 2000 த்தில் நிஜமாக்கியவர்கள் ராக்ஃபெல்லர் பவுண்டேஷன் மற்றும் கேட்ஸ் பவுண்டேஷன் . 40% அமெரிக்கர்களும் , ஐரோப்பா நாட்டினரும் ஜிஎம் உணவுகளுக்கு எதிராக உள்ளனர் . தற்போது அமெரிக்காவின் அனுமதி மெல்ல கோல்டன் ரைஸை விளைவிப்பதை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது . 

பாலுக்கும் கால்சியத்திற்கும் என்ன தொடர்பு?

படம்
ஏன் ? எதற்கு ? எப்படி ? Mr. ரோனி பால் குடித்தால் எலும்பு உறுதியாகுமா ? உடலுக்கு கால்சியம் அளிப்பதில் பாலுக்கு நிகர் பால் மட்டுமே . ஆனால் பெரியவர்கள் பாலை மட்டும் நம்பியிருக்காமல் சிறுதானிய உணவுகள் , கீரைகள் , காய்கறிகள் , ஊறவைத்த தானியங்கள் என சாப்பிடுவது உடலை ஆரோக்கியமான தன்மைக்கு கொண்டுவந்து சத்துக்களை சீராக பராமரிக்கும் . வலுவான எலும்புக்கு கால்சியம் மட்டுமல்ல ; விட்டமின் டி மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களும் அவசியம் . 

மனிதர்களின் குறைகள் அவர்களை வெற்றியாளர்களாக்கியது எப்படி?

படம்
புத்தகம் புதுசு ! Human Errors: A Panorama of Our Glitches, from Pointless Bones to Broken Genes by Nathan H. Lents 55 pages,Houghton Mifflin Harcourt பரிணாம வளர்ச்சியில் உயர்ந்த உயிரினமாக மனிதர்கள் உடலில் உள்ள பல்வேறு நேர்த்தியற்ற விஷயங்களைப் பற்றி பேசுகிற நூல் இது . முழங்கால் மூட்டு , தேவையற்ற எலும்புகளைக் கொண்ட மணிக்கட்டு , ஒரே குழாயின் வழியாக உணவும் உண்ணவும் மூச்சுவிடவும் உள்ள தன்மை எப்படி மனிதர்களின் வெற்றிக்கு காரணமானது என நாதன் இந்நூலில் விளக்கியுள்ளார் . Rocket Men: The Daring Odyssey of Apollo 8 and the Astronauts Who Made Man's First Journey to the Moon by Robert Kurson 384 pages Random House அப்பல்லோ 8 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பும் நேரத்தில் அமெரிக்கா சந்தித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நெருக்கடிகள் , அரசியல் நிலைமை ஆகியவற்றைப் பேசும் நூல் இது . ரஷ்யாவின் சாதனைகளை முந்தும் முனைப்பில் மனிதர்களை நிலவுக்கு அழைத்து சென்ற முதல் பயணத்தைப் பற்றிய சுவாரசியமாக எழுதியுள்ளார் ராபர்ட் கர்சன் .