இடுகைகள்

கிராமத்தில் இளைஞர்கள்!- கோவா கிராம புதுமை!

படம்
கிராமத்தை நோக்கி நகரும் இளைஞர்களின் படை ! வைஃபை வனமாக எல்இடி ஒளியில் டாலடிக்கும் நகரங்களில் வார இறுதி சினிமா , திரும்பிய இடங்களில் ஸ்நாக்ஸ் , மீல்ஸ் என டெபிட் கார்டு தேய்த்தால் கிடைக்காததுதான் என்ன ? ஆனால் இதையெல்லாம் லட்சியம் செய்யாமல் வங்கி கணக்கில் செழிப்பான இளைஞர்கள் கூட்டம் கோவாவிலுள்ள கிராமங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர் . நகரங்களைப் போல எந்த வசதியும் இல்லை என தெரிந்தபிறகும் கிராமங்களுக்கு எதற்கு குடும்பத்துடன் செல்கிறார்கள் ? பிக்னிக்கோ , சுற்றுலாவோ கிடையாது . நிம்மதியுடன் வாழத்தான் என்ற அசல் பதிலை நம்மில் எத்தனைபேர் ஏற்றுக்கொள்வார்களோ ? நிஜம் அதுதான் .  அங்கு தங்கியுள்ளவர்கள் அனைவரும் பெருநகரங்களின் தொழில்களையும் முடிந்தவரை கிராமத்திற்கு எடுத்துச்சென்று வாடகை வீடு பிடித்தாலும் வசந்தமான புன்னகையுடன் வாழ்கிறார்கள் . 4 ஆயிரம் மக்கள் வாழும் கிராமமான அசாகாவோ இளைஞர்கள் டிக் அடிக்கும் ஒரே சாய்ஸ் . காரணம் , அருகிலுள்ள ஜில் கடற்கரைதான் . புகைப்படக்காரர்கள் , உடை வடிவமைப்பாளர்கள் , கிராபிக் டிசைனர்கள் என பலரும் கிளம்பிவர வில்லா , அபார்ட்மென்ட் ர

போதையில் சரிந்துவிழும் பஞ்சாப்!

படம்
போதை ஒழிப்பில் பஞ்சாப் ! பஞ்சாப் அரசு பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் சிரிஞ்ச் விற்க விதித்திருந்த தடையை அண்மையில் விலக்கிக்கொண்டுள்ளது . அரசின் தடையால் ஒரே சிரிஞ்சுகளை பயன்படுத்தும் நிலையால் ஹெபடைடிஸ் பி முதல் எய்ட்ஸ் வரை ஆட்படுவார்கள் என மருத்துவ வட்டாரங்கள் எச்சரித்ததால் அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது . இவ்வாண்டின் ஜூன் மாதத்தில் மட்டும் போதைப் பொருட்களால் 23 பேர் உயிரிழந்துள்ளனர் . போதைப்பழக்கத்தை ஒழிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அமரிந்தர் தலைமையிலான அரசுக்கு பெரும் நிர்பந்தம் அளித்துள்ளது . பஞ்சாபில் மட்டும் போதைப்பொருட்களை 8 லட்சத்து 60 ஆயிரம் பேர் பயன்படுத்திவருவதாகவும் இதில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் இப்பொருட்களை தீவிரமாக சார்ந்திருப்பதாகவும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் வேலைவாய்ப்புத்துறை ஆய்வு முடிவுகள் (2015) தெரிவிக்கின்றன . இதில் ஹெராயின் (53%), ஓபியம் (33%), மருத்துவதுறை ஒபியாய்டுகள் (14%) என பஞ்சாபில் பயன்பாடு உள்ளது . இதில் ஆண்களின் அளவு 99%(18-35 வயது -76%) படித்தவர்களின் விகிதம் 89% உள்ளது என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது . ப

மனிதர்களே இல்லாத வனத்தில் புலிகள் என்ன செய்யும்?

படம்
புலிகளுக்காக பழங்குடிகளை அழிப்போம் ! வனவிலங்கு காப்பகங்களிலுள்ள விலங்குகளை காப்பாற்றுகிறோம் என்று அரசும் , என்ஜிஓக்களின் செயல்பாட்டில் பழங்குடி மக்கள் தம் வாழ்வாதாரத்திலிருந்து விரட்டப்பட்டு வருகின்றனர் . கடந்த ஜூனில் ம . பியைச் சேர்ந்த பழங்குடி மனிதர் ரூப்சந்த் சோன்வானே , விறகுகளை காட்டில் சேகரித்த குற்றத்திற்காக வனத்துறை அதிகாரிகளால் அடித்து கொல்லப்பட்டு உடலையும் எரித்துள்ளனர் . மியான்மரில் 700 குடும்பங்கள் வனங்களிலுள்ள வாழ்வாதாரத்தை இழந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் . அசாமிலும் வனவிலங்கு காப்பகத்திற்காக பழங்குடிகளின் குடியிருப்புகளை , பள்ளிகளை அடித்து நொறுக்கியுள்ளது அம்மாநில வனத்துறை . கர்நாடகா , சத்தீஸ்கர் , மத்தியப்பிரதேசம் , மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நாகர்கோல் , அச்நாக்மர் , உடந்தி , தடோபா அந்தாரி புலிகள் காப்பகம் , மேல்ஹட் , பென்ச் ஆகிய இடங்களில் வனவிலங்கு காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது . தேசிய புலிகள் காப்பக ஆணையம் (NTCA), பழங்குடிகளை தாய்நிலத்திலிருந்து நகருக்கு விரட்டி அவர்களின் கலாசாரத்தை அழிப்பதோடு மனித உரிமை மீறல்களுக்கும் துணைபோகிறது . 19 ஆம் நூற்ற

இறுகும் சீனாவின் கண்காணிப்பு- அப்டேட் ரிப்போர்ட்!

படம்
கண்காணிப்பு அரசு ! சீனாவிலுள்ள ஸெங்சூ , கிய்ங்டாவோ , வூஹூ ஆகிய நகரங்களில் உள்ள குற்றவாளிகளை போலீஸ கண்டுபிடித்து கைது செய்தது . சிம்பிள் ஏஐ தொழில்நுட்பம் மூலம்தான் . தேசியளவில் மக்களை கண்காணித்து கட்டுப்படுத்த ஏஐ கண்காணிப்பு திட்டத்தை நாடு முழுவதும் அமைத்து வருகிறது சீன கம்யூனிஸ்ட் அரசு . தற்போது 1.4 பில்லியன் மக்களை அரசு ஏஐ மூலம் கண்காணித்து பின்தொடர்ந்து வருகிறது . குற்றவாளிகளை பிடிக்க முக்கிய நகரங்களிலுள்ள ரயில்வே நிலையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டும் கடன்களை கட்டாதவர்களின் பெயரும் பெரும் எல்இடி திரைகளில் வெளியிடப்பட்டுவருகிறது . வீடுகளின் நுழைவாயில்களிலும் முகத்தைக் கண்டுபிடுக்கும் அல்காரித கருவிகள் பொருத்தபட்டு அமெரிக்காவைக் காட்டிலும் 200 மில்லியன் கேமராக்களோடு சீனா கண்காணிப்பு தேசமாக மாறிவருகிறது . உய்கூர் முஸ்லீம் சிறுபான்மையினரை தீவிரமாக கண்காணிக்கும் சீன அரசு அவர்களின் உறவுகளை அத்தனையும் கண்காணித்து வருகிறது . " சமூகத்தையும் சமூகத்தையும் சீன அரசு அல்காரிதம் வழியில் கட்டுப்படுத்துகிறது " என்கிறார் பீட்டர்சன் உலகளாவிய பொருளாதார மையத்தை

கடல் தடத்தை மூடுகிறதா ஈரான்?

படம்
கடல்தடத்தை மூடும் ஈரான் ! அமெரிக்கா அணுஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதையடுத்த தனது ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஹோர்முஷ் கடல்வழியை மூடப்போவதாக ஈரான் அதிபர் ஹசன் ருகானி அறிவித்துள்ளார் . ஈரான் , ஈராக் , குவைத் , பஹ்ரைன் , கத்தார் , சவுதி அரேபியா , ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் கச்சா எண்ணெய் வணிகம் முழுக்க 21 கி . மீ நீளம் கொண்ட இந்த ஹோர்முஷ் கடல்வழியை நம்பியே நடைபெற்று வருகிறது . உலகில் நடைபெறும் மொத்த வணிகத்தில் 30 சதவிகிதம் இப்பாதையைப் பயன்படுத்தி நடைபெறுகிறது . 1980 ஆம் ஆண்டு ஈரான் - ஈராக் போர் ஏற்பட்டபோது இப்பாதையில் செல்வது மிகவும் ஆபத்தானதாக மாறியது . குவைத் போக்குவரத்து அமெரிக்காவின் கப்பல்வழியே நடைபெற்றதோடு , காப்பீட்டு கட்டணம் உயர பெட்ரோல் டீசல் விலைகளை உலகெங்கும் உயர்ந்தன . அரேபிய நாடுகளை இந்தியாவுடன் இணைக்கும் வழித்தடம் இது . ஈரான் வழித்தடத்தை தன் சிறியரக ஏவுகணைகளால் தாக்கி சேதம் ஏற்படுத்தி கப்பல்களை நிறுத்தி வைக்கும் வாய்ப்பு உள்ளது . தைரியமாக இதனை ஈரான் செய்யுமா என்பதைத்தான் அரசியல் விமர்சகர்கள் கவனித்துக்கொண்டிருக்கின்றனர் .  

தலைசுற்றல் தகவல்கள்!

படம்
வெர்டிகோ எனும் விநோதம் ! நிற்கிறோம் அல்லது விழுகிறோம் என்ற உணர்ச்சியை மூளைக்கு கடத்துவதில் கண்கள் , காது உள்ளிட்டவற்றில் ஏற்படும் பிரச்னையே தலைசுற்றல் . " இப்பிரச்னை உள்ளவர்களுக்கு தலைச்சுற்றலோடு குமட்டல் , வாந்தி உள்ளிட்ட பிரச்னைகளும் ஏற்படும் " என்கிறார் நரம்பியல் வல்லுநர் டேவிட் ஸீ .   அமெரிக்காவில் 40 வயதைக் கடந்த மூன்றில் ஒருபகுதியினர் வெர்டிகோ பாதிப்பை சந்தித்துள்ளனர் . சராசரியாக 69 மில்லியன் மக்கள் இப்பாதிப்பை வாழ்வில் ஒருமுறையேனும் உணர்ந்துள்ளனர் . பேஸ்கெட்பால் வீரர் பாவ் காசல் , கோல்ஃப் வீரர் ஜாசன் டே ஆகியோருக்கு தலைச்சுற்றல் பாதிப்பு உண்டு . வயதாகும்போது ஏற்படும் எலும்பு அடர்த்தி குறைவு , வைட்டமின் டி குறைபாடு ஆகியவற்றின் விளைவாக பெண்களுக்கு வெர்ட்டிகோ பாதிப்பு ஆண்களை விட அதிகம் உள்ளது . திடீரென ஏற்படும் தலைச்சுற்றல் பாதிப்பு , மனப்பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது . நீண்டகால நோக்கிலும் தலைச்சுற்றல் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துவதால் தினசரி பணிகளை செய்யமுடியாமல் இந்நோயாளிகள் தடுமாறுவார்கள் . குறைந்த உப்பு உணவுகள் , மெக்

இந்தியாவுக்கு எதிரான முயற்சிகளுக்கு நேபாளம் உதவாது!

படம்
முத்தாரம் Mini நேபாளத்தில் இருபது ஆண்டுகளாக முழு ஆட்சிக்காலம் நீடிக்காத அரசுகளை பார்த்துள்ளோம் . என்ன பிரச்னை ? சட்டங்களின் ஒருங்கிணைப்பு போதாமைதான் காரணம் . இதோடு பிறநாடுகளின் தலையீடுகளும் ஒன்றுசேர அரசு உறுதியாக உருவாகவில்லை . அரசு சரியாக பணியாற்றாதபோது அதனை திரும்பபெறும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு . இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து உறுப்பினர்களின் எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது பெரும்பலம்தானே ? கம்யூனிச இயக்கம் நேபாளத்தின் வளர்ச்சிக்கு தேவையான விஷயங்களை லட்சியமாக கொண்டுள்ளது . கம்யூனிய கட்சிகள் ஜனநாயகமற்று நடந்துகொள்வதைப் போன்று சித்தரிக்க முயல்கிறார்கள் . ஆனால் உண்மையில் ஜனநாயக தேரை தோளில் சுமந்து பயணிப்பது கம்யூனிச கட்சிகள்தான் . திறந்தவெளி சமுதாயத்தை பல்வேறு கலாசார மக்களை ஒருங்கிணைத்து கட்டமைக்க முயற்சிக்கிறோம் . நேபாள பிரதமர் சீனாவுக்கு சென்றுவந்த பயணம் குறித்து ..? சீனாவுடன் பெரும் ஒப்பந்தங்களை செய்துள்ளோம் . நேபாளத்தின் நோக்கம் பரஸ்பர லாபம்தான் . சீனாவுடன் கொண்ட நட்பை எல்லைப்புற நாடுகள் சந்தேகத்துடன் பார்க்கவேண்டியதில்லை . பிறந

நைஜீரியாவை அறிய வாசிக்க வேண்டிய நூல்கள்!

படம்
நைஜீரியாவை வாசிப்போம் ! EASY MOTION TOURIST BY LEYE ADENLE அமரர் இசைக்கலைஞர் ஃபடாய் ரோலிங் டாலர் என்பவரின் வரிதான் நூலின் தலைப்பு . லகோஸ் நகரில் இறந்த விலைமாதுக்களின் கொலையை கய் கோலின்ஸ் என்பவர் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதை . அதிகாரவெறி கொண்ட அரசியல்வாதிகள் , லஞ்சத்தில் மூழ்கிய போலீஸ்துறை ஏற்படுத்தும் ட்விஸ்டுகள் நூலை சுவாரசியமாக்குகின்றன . CARNIVOROUS CITY BY TONI KAN ஆபல் டைக் என்ற சிறுநகரத்தில் பணியாற்றும் ஆசிரியருக்கு அவரின் தொலைந்து போன சகோதரர் குறித்த தகவல் வருகிறது . கூடவே சோனி என்ற குற்றவாளியின் கதையும் தொடர க்ளைமேக்ஸை நோக்கிய ரோலர்கோஸ்டர் பயணத்தை தரும் நாவலை எளிமையாக வாசிக்கலாம் . SATANS AND SHAITANS BY OBINNA UDENWE கடவுள் இறந்துவிட்ட உலகில் என்ன நடக்கும் ? குற்றங்களும் அநீதிகளும்தானே ! இல்லுமினாடிகளின் உலகை அம்பலப்படுத்த முயலும் டொனால்டு அமெச்சி , சுவிஷேச பிரசாரகர் கிரிஸ் சுபாவுக்கு நிகழும் சம்பவங்கள்தான் கதை . தற்கொலைப்படை தாக்குதல் , கொலைமுயற்சி , அரசியல் சதிகள் ஆகியவற்றை பேசுகிற நூல் இது . 

வலி நிவாரணிகளில் இது புதுசு! - ஓபியாய்டு அடிமைத்தனத்திற்கு தீர்வு!

படம்
வலிநிவாரணிகளில் இது புதுசு ! ஓபியாய்டுகளில் பயன்பாடு , அமெரிக்காவில் அடிமைப் பிரச்னை ஏற்படுத்தி வரும் நிலையில் , அடிமைத்தனம் இல்லாத வலிநிவாரணிகளை ஆராய்ச்சிகள் தேடிவந்தனர் . EMA401 என்ற வலிநிவாரணி நம்பிக்கை தருவதாக செயின்டன் லூயிசிலுள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் . அமெரிக்காவில் 2016 ஆம் ஆண்டில் மட்டும் 64 ஆயிரம் இறப்புகள் வலிநிவாரணியாக பயன்பட்ட ஓபியாய்டு பயன்பாட்டினால் சம்பவித்துள்ளன . புதிய வலிநிவாரணியான EMA401 நரம்பு செல்களை தாக்கவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது . " நரம்பு மண்டலத்தை நோக்கி வலிநிவாரணிகள் செயல்படும் . ஆனால் இம்மருந்து நோய் எதிர்ப்பு செல்களான மேக்ரோபேஜஸ் என்பதை குறிவைத்து செயல்படுகிறது " என்கிறார் ஆராய்ச்சியாளர் டி . பி . மொகபத்ரா . ரத்தநாளங்களைக் கட்டுப்படுத்தி (Angiotensin) வலியைத் தீர்ப்பதில் புதுவிதமாக செயல்படும் இம்மருந்து ஓபியாய்டுகளின் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை . இதன் விளைவாக நீண்டகால நரம்புமண்டல பிரச்னைகளுக்கேற்ற வலிநிவாரணியாக பயன்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது .

போதை அடிமைகளை மீட்கும் வெப் சீரிஸ்!

படம்
போதையிலிருந்து மீண்ட ஸ்வீட் ! கலிஃபோர்னியாவைச் சேர்ந்த டெஸ் ஸ்வீட் இருபதில் நடந்த வல்லுறவினால் நம்பிக்கை இழந்து போதைப்பழக்கத்தில் வீழ்ந்து தற்கொலை செய்துகொள்ள நினைத்தார் . ஆனால் அம்முயற்சி தோல்வியுற்றது . அதன் நற்பேறாக , நாற்பத்தாறு வயதில் இன்று போதைப்பழக்கத்தில் தடுமாறும் இளைஞர்களை நல்வழிப்படுத்த அவர்களையே நடிகர்களாக்கி திரைப்படங்களை எடுத்துவருகிறார் இயக்குநர் ஸ்வீட் . வெப் சீரிஸ் வடிவில் தனது லட்சிய திட்டமாக Cleaner Daze என்ற அவல நகைச்சுவை தொடரை படமாக்கி வருகிறார் . போதையால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை ஆடிஷன் வைத்து தேர்ந்தெடுத்து தொடரில் நடிக்க வைத்து அவர்களை திருத்துகிறார் இயக்குநர் ஸ்வீட் . ஆஸ்டின் திரைப்பட விழாவில் பங்குபெற்று ஜூரி விருது வென்றும் , சிறந்த கதைக்கான விருதையும் வென்றுள்ளது . நடிகர்களுக்கான திரைப்பட ஷெட்யூல்களை மாற்றி படமெடுத்தது ஆவணப்பட அலுப்பை சில இடங்களில் தந்தாலும் அசல் நோக்கம் வரவேற்பைப் பெற்றுள்ளது . 2001 ஆம் ஆண்டு போதைப்பழக்கத்திலிருந்து மீண்டவர் , தன் வலியை அனுபவிக்கும் பிறரையும் அதிலிருந்து காப்பாற்ற நினைத்தது அவரது வ

தீம்பார்க்கில் சம்பளம் பெறும் சிறுவர்கள்!

படம்
பிட்ஸ் ! மெக்சிகோவைச் சேர்ந்த கிட்ஸானியா தீம் பார்க்கில் , சிறுவர்கள் ஜாலி ரைடு விளையாட்டுகளுக்கு பதில் பைலட் , தீயணைப்புத்துறை உள்ளிட்ட ஏதேனும் வேலைகளை தேர்வு செய்து கிடைக்கும் சம்பளத்தில் ஏதேனும் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் . 1975 ஆம் ஆண்டு அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் செயல்பட்ட மதுபானத் தொழிற்சாலையில் தீப்பிடித்து தொழிலாளர்கள் 13 பேர் இறந்தனர் . விபத்தில் கொட்டிய விஸ்கியை குடித்த மக்களும் அதன் விஷத்தன்மையால் இறந்துபோனதால் கிரேட் விஸ்கி ஃபையர் எனும் இவ்விபத்தின் காரணமே தெரியாமல் போனது . ஃபின்லாந்தில் பிஹெச்டி பட்டம் வென்றவர்களுக்கு டாப் ஹேட் தொப்பியை அணிவித்து கௌரவிக்கிறார்கள் . நாய் அல்லது பூனை தன் கால்களை பரப்பு குப்புற படுத்து உறங்கினால் அதற்கு Sploot என்று பெயர் . 2005 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் Mate என்ற சொல்லை 24 மணிநேரம் பயன்படுத்த தடைவிதித்திருந்தது . ஸ்பைசி காரசார உணவுகளை சாப்பிட நம்மைத்தூண்டும் ஹார்மோன்களின் பெயர் டோபமைன் , எண்டோர்பின் .