இடுகைகள்

இந்தியாவை குறிவைக்கும் ரஷ்யா!

படம்
பெற்றோர்களை கைவிட்டால் சம்பளம் கட் ! வயதான பெற்றோர்கள் , மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை கைவிடும் மாநில அரசு பணியாளர்களுக்கு சம்பளம் கட் என்று அசாம் அரசு இயற்றிய சட்டம் மக்கள் பிரதிநிதிகளின் ஒப்புதல் பெற்று விரைவில் அமுலுக்கு வரவிருக்கிறது . பெற்றோர்களை கைவிடும் பிள்ளைகளைக் கட்டுப்படுத்தும் பிரணாம் (PRANAM) எனும் இச்சட்டம் கடந்தாண்டு தயாரிக்கப்பட்டது . " அரசு பணியாளர் தன்னை நம்பியுள்ள பெற்றோர்களை கைவிட்டால் , அவரின் ஊதியத்தில் 10% பிடிக்கப்பட்டு பெற்றோர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் " என அதிர்ச்சி தகவல் தருகிறார் அசாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா . அதேசமயம் பெற்றோர்களுடன் மாற்றுத்திறனாளி சகோதரர்கள் இருந்தால் இத்தொகை 15% ஆக உயரும் என அசாம் அரசு சட்டம் எச்சரிக்கிறது . அன்பு பிறந்தால் எதுவும் கட்டாயமில்லை என்பதை உணரவேண்டிய நேரமிது .   குட்கா விபரீதம் ! உ . பியிலுள்ள மதுராவில் ஒருவரை உயிரோடு கொளுத்த முயற்சித்த இரு நண்பர்கள் பிடிபட்டனர் . குட்காவை ஷேர் செய்ய மறுத்ததற்காகத்தான் இந்த கொலைவெறி . மதுராவின் சம்போகா கிராமத்தை

காதலர்களுக்கு சிறுநீர் தண்டனை!

படம்
காஷ்மீரி கஃபே ! ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான  நகரில் , மேவிஷ் என்ற இளம்பெண் , கஃபே ஒன்றை திறந்து பிரபலமாகியுள்ளார் . ஏனெனில் காஷ்மீரில் பெண் ஒருவர் தனி தொழில்நிறுவனத்தை தொடங்கி நடத்துவது இதுவே முதல் முறை . மேவிஷின் தந்தை புற்றுநோயால் திடீரென இறந்துவிட குடும்பத்தைக் காப்பாற்ற மேவிஷ் கஃபேயை தொடங்கி நடத்திவருகிறார் . " கஃபேயை தொடங்கியபோது பல்வேறு விமர்சனங்கள் , சிரமங்கள் ஏற்பட்டன . ஆனால் இதனை தொடர்ச்சியாக நடத்தமுடியும் என்ற நம்பிக்கை குறையவில்லை " எனும் மேவிஷுக்கு உதவியாக அவரின் தாய் மற்றும் சகோதரிகள் உதவிவருகின்றனர் . சட்டபட்டதாரியான மேவிஷ் தன் கனவை நோக்கிச்செல்ல தன் உழைப்பை மட்டுமே நம்புகிறார் . " பெண் , தனக்கு தேவையான விஷயங்களை யாரையும் சாராமல் தானே பெறமுடியும் என்பதை நம்பாதவர்கள் என்னை விமர்சனம் செய்கிறார்கள் . அவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை " என துணிச்சலாக பேசுகிறார் மேவிஷ் . கம்பீர ராசாத்தி ! 2 மக்களை பிரிக்கும் சதி ! அசாமில் அமுல்படுத்தப்பட்டுள்ள மக்கள் தொகை பதிவேடு பிரச்னையால் 40 லட்சம் மக்களின் வாழ்க்கை நிர்க்கத

பெண்களால் புனிதம் கெடுகிறதா?

படம்
விசா பெற சோஷியல் பதிவுகள் முக்கியம் ! அமெரிக்கா , இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல விசா அப்ளை செய்தவர்கள் , சோஷியல் தளங்களில் உஷாராக கருத்துக்களை பதிவிட்டால் மட்டுமே அந்நாடுகளை எட்டிப்பார்க்க முடியும் . என்னாச்சு ? அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளிலுள்ள குடியேற்ற அதிகாரிகள் தற்போது விசாவுக்கு விண்ணப்பிப்பவரின் சமூக வலைதளங்களையும் கண்காணித்து தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இல்லை என உறுதிப்படுத்தியபிறகே விசா வழங்குவது என முடிவெடுத்துள்ளனர் . மேலும் உங்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் ஸ்மார்ட்போன் , லேப்டாப் ஆகியவற்றையும் திறந்து பார்க்க அவர்களது நாட்டு சட்டப்படி அனுமதி உண்டு . அமெரிக்க குடியேற்றத்துறை இதுவரை சந்தேகவலையில் மாட்டியவர்களின் இருநூறு எலக்ட்ரானிக் பொருட்களை சோதித்துள்ளதை பெர்ரி ஆப்பிள்மேன் அண்ட் லெய்டன் எனும் சட்ட அமைப்பின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது . எனவே வெறுப்பு வாதம் , பிரிவினை என கருத்துகளை பதிவிட்டால் உங்கள் பேரன்களுக்கு கூட அமெரிக்கா செல்லும் பாக்கியம் கிடைக்காது உஷார் ! 2 சூழலுக்கு உதவும் பேப்பர் பேனா ! உத்தரப்பிரதேசத்தில

டான்ஸ் போலீஸின் குத்தாட்டம்!- பிட்ஸ்!

படம்
டான்ஸ் போலீஸ் ! ஹரியானாவைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் , மதுவருந்திவிட்டு நள்ளிரவில் டான்ஸ் ஆடியதோடு காரை சாலையை மறித்து நிறுத்தி இம்சை இடஞ்சல்களை ஏற்படுத்தி துறைரீதியான என்கொயரிக்கு உள்ளாகியுள்ளார் . ஹரியானாவின் குருகிராமிலுள்ள சீட்லாமட சாலையில் காரில் இசைச்சூறாவளி சுழன்றடிக்க சாலையில் இறங்கினார் வாலிபர் . நள்ளிரவில் ஷார்ட்ஸ் , ஸ்லீவ்லெஸ் பனியன் கெட்டப்பில் அரைமணிநேரம் உற்சாக குத்தாட்டம் போட்டு மக்களை மெர்சலாக்கினார் . ட்ராஃபிக் நெரிசலாவுதே ப்ரோ என கேட்டவர்களை " நான் இன்ஸ்பெக்டர் டான்ஸ் ஆட உரிமையுண்டு " என கெட்டவார்த்தைகளால் வசை பாடினார் . மீட்க வந்த ரோந்துப்படையினரையே தாக்க முயன்ற டான்ஸ் போலீஸ்காரரை மிகவும் சிரமப்பட்டு காவல்நிலையத்திற்கு கூட்டி வந்துள்ளனர் .   தருண் தாகியா என்ற டான்ஸ் போலீஸூம் , காரிலிருந்து அவரது நண்பரும் நூஹ் மாவட்டத்தின் தாரு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது என்கொயரில் தெரியவந்திருக்கிறது . மக்களின் புகாரும் , ஊடகங்களின் நெருக்கடியும் ஒன்றுசேர , அவரை சஸ்பெண்ட் செய்ய குருகிராம் கமிஷனர் கே . கே . ராவ் பரிந்துரைத்துள்ளார் . 2 எவரெஸ்

"பெண்கள் உரிமை காகித்ததில் மட்டும்தான் மிச்சமிருக்கிறது"

படம்
பெண்கள் உரிமை! துனிசியாவில் நடைமுறையிலுள்ள வல்லுறவு பாதுகாப்பு சட்டம் எழுபது எண்பதுகளில் வந்த தமிழ்சினிமாவை நினைவுபடுத்தும். தான் கற்பழித்த பெண்ணை அதே ஆண் மணம் செய்துகொண்டால் சிறைதண்டனை கிடையாது எனும் காருண்யத்தை அரசு பெண்களுக்கு வழங்குகிறது.  48% பெண்கள் துனிசியாவில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது 2010 ஆம் ஆண்டு செய்த தேசிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. “காகிதத்தில் சிறப்பாக எழுதப்பட்டுள்ள பெண்களுக்கான சட்டம் துனிசியாவின் சிறப்பு” என்கிறார் மனித உரிமை கண்காணிப்பக ஆராய்ச்சியாளர் ஆம்னா குலேலாலி. ஏடிஎஃப்டி(ATFD- Tunisian Association of Democratic Women ) எனும் பெண்களுக்கான அமைப்பு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து மக்களை ஒருங்கிணைத்து போராடி வருகிறது. “பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளே, திருமணம் என்றால் வன்முறை சகஜம் என்றால் நீதி எப்படி கிடைக்கும்?” என்கிறார் வழக்குரைஞரான ஹாயட் ஜாஸர்.  இவ்வாண்டில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் அமுலானால் இதற்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. பல்வேறு நகரங்களில் வசிக்கும் பெண்களும் தங்களுக்கான உ

உலகிலுள்ள சூழல் கட்டிடங்கள்!

சூழல் கட்டிடங்கள்! இங்கிலாந்திலுள்ள 5,500 தேவாலயங்கள்(லிவர்பூல் கதீட்ரல் உள்ளிட்டவை) புதுப்பிக்கும் ஆற்றல் கொண்டவையாக மாற்றப்பட்டுள்ளன. பசுமை மாற்றங்களை செயல்படுத்திய பிற கட்டுமானங்கள் எவை… தாஜ்மஹால் தாஜ்மஹாலைச் சுற்றி 500 மீட்டர் தூரத்திற்கு குப்பைகளை இல்லாமல் பார்த்துக்கொள்வது இந்திய அரசின் திட்டம். ஒருமுறை பயன்படுத்தி எறியும் பிளாஸ்டிக் அதிகரிப்பு குறித்த எச்சரிக்கை இந்த அறிவிப்புக்கு முக்கியக் காரணம். நிலக்கரி அருங்காட்சியகம் அமெரிக்காவின் ஹாரியன் கவுன்டியிலுள்ள கென்டக்கி நிலக்கரி மியூசியத்தில் சூரிய ஒளி ஆற்றல் மின்சாரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. நிலக்கரி மற்றும் சோலார் என இருவகை ஆற்றலும் அருங்காட்சியகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் கழகம் 2008 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு திறந்த அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலுள்ள அறிவியல் கழகம், உலகின் முதல் பசுமை அருங்காட்சியமாக புகழ்பெற்றுள்ளது.