இடுகைகள்

தேசியவிருது ஆசிரியர்!

படம்
பெண்கல்விக்கு பாடுபடும் ஆசிரியர்! ஹரியானாவின் மேவத் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் பஸ்ருதீன்கான், பெண்குழந்தைகளின் இடைநிற்றல் அளவை குறைத்து ஆசிரியர் தினத்தில் இந்தியப் பிரதமரின் பாராட்டையும் பெற்றுள்ளார். மேவத் நகரில் படிக்கும் மாணவர்களில் 20 சதவிகிதப் பேர் இடைநின்றுவிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அறிவியல் மற்றும் கணித ஆசிரியரான பஸ்‌ருதீன்கான், உடான் எனும் தன்னார்வ நிறுவனத்தை தொடங்கி கல்வி, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். 1993 ஆம் ஆண்டு ஜார்புரி கிராமத்தில் தன் கல்விப்பணியை 20 மாணவர்களுடன் தொடங்கிய பஸ்‌ருதீன்கான், இரண்டு ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கையை 57 ஆக மாற்றிக்காட்டினார். பின் சிரோலி கிராம பள்ளியில் 96 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கையை 638 ஆக உயர்த்தி சாதித்தவர், நூறு சதவிகித தேர்ச்சி சாதனையையும் நிகழ்த்தினார். தற்போது தப்பன் நகர நடுநிலைப்பள்ளியில் காலை 7 முதல் இரவு 7 வரை பணியாற்றுகிறார். 25 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றும் பஸ்‌ருதீன்கான், இதுவரை பள்ளியின் அடிப்படை கட்டமைப்புக்காக   என்ஜிஓக்கள் உதவிகோரி ரூ.1.7 கோடி பெற்றுத்தந்துள்ளார். “குழந்தைகளோடு உங்க

தலித் சொல்லை நீக்கிய இந்திய அரசு!

படம்
ஆஃப்கன் காதல்! காதலர்களுக்கு உலகிலுள்ள எந்த தடைகளும் பிரச்னையில்லை. ஆனால் உறவுகள், சொந்தங்கள் ஆட்சேபித்தால் திருமணம் எப்படி சிதறும் என்பதற்கு ஆஃப்கன் காதலே சாட்சி. ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஃபரீதுல் ரஃப்தாய், ஃபேஸ்புக் மூலமாக வலைவீசி உ.பியின் கலிலாபாத் நகரைச் சேர்ந்த பெண்ணுடன் நட்பானார். பின் சாட்டிங்கில் போனை தேய்த்து பேசி காதல் வளர்த்தவர்கள் கல்யாணத்திற்கும் ரெடி. காதல் விவகாரம் தெரிய வந்த இருதரப்பு பெற்றோர்களும் கூட ஓகே சொல்லிவிட்டனர். திருமணவிழா உ.பியிலுள்ள பெண் வீட்டில் தடபுடலாக ஏற்பாடானது. பங்கேற்ற உறவுகள், சொந்தங்கள் திடீரென கல்யாணம் நடக்ககூடாது. நம் பெண்ணை இன்னொரு நாட்டிற்கு அனுப்புவது சரியல்ல என்று குழந்தையாக அடம்பிடித்து போராடி அதையே சாக்காக வைத்து கல்யாணத்தை நிறுத்திவிட்டனர். ஆஃப்கன் மாப்பிள்ளை ரஃப்தாய், நெதர்லாந்திலிருந்து வந்திருந்த அவரது உறவினர்கள் அனைவரும் சமாதானம் பேசினர். ஆனால் பெண்ணின் தந்தை மகளை படிக்கவைக்கப்போகிறேன் என்று கூற ஆஃப்கன் மாப்பிள்ளை விரக்தியுடன் ஊர் திரும்பியுள்ளார். 2 தலித்துன்னு சொல்லாதீங்க! இந்தியாவிலுள்ள செய்தி சேன

தபால் வங்கி வளருமா?- அலசல்

படம்
தபால்வங்கியில் என்ன எதிர்பார்க்கலாம்?  அண்மையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான தபால் வங்கியை பிரதமர் மோடி பெருமையுடன் திறந்துவைத்தார். இதில் இந்திய அரசின் முதலீடு ரூ.1,435 கோடி. 1 லட்சத்து 55 ஆயிரம் தபால் அலுவலகங்கள், 4 லட்சம் பணியாளர்கள் என பிரம்மாண்ட கட்டுமானம் கொண்டது தபால் வங்கி(IPPB). 2015 ஆம் ஆண்டே வங்கி தொடங்குவதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கியிடம் பெற்றுவிட்டது. வங்கிக்கு விண்ணப்பித்த ஏர்டெல், ஃபினோ, பேடிஎம் ஆகிய நிறுவனங்களைவிட பரவலான மக்களின் நம்பிக்கையை தபால்வங்கி பெற்றுள்ளது. தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள 17 கோடி மக்கள் தபால் வங்கி மூலம் வங்கிச்சேவையில் நுழைய உள்ளனர். ஏர்டெல், பேடிஎம் உள்ளிட்டவை நிதிச்சேவை விதிகளை(e-KYC) மீறியதால் தடைவிதிக்கப்பட்டு புதிய வாடிக்கையாளர்களை அணுகமுடியாமல் தடுமாறி வருகின்றன. இதனைப் பயன்படுத்தி தபால் வங்கி எளிதாக வளரலாம் என நினைப்பீர்கள்; ஆனால் தபால் வங்கியின் கட்டண விதிகளே தடையாக உள்ளதுதான் சோகம். தபால் வங்கியில் ரூ.15 ஆயிரத்திற்கு மேல் செலுத்தினால் (அ) பெற்றால் ரூ.25 ரூபாயுடன் ஜிஎஸ்டி வரியும் மக்கள் தலைமீ

அமெரிக்காவின் முகத்திரையை கிழித்த போட்டோகிராபர்!

படம்
நான் எடுக்கிற படம் இதழின் அட்டையில் வெளிவரவேண்டும். உள் அட்டையில், பிற பக்கங்களில் வருவது எனக்கு பிடிக்காது. இப்படி சொல்பவர் யாராக இருக்க முடியும்? 1972 ஆம் ஆண்டு வியட்நாமில் எடுத்த புகைப்படம் மூலம் உலகின் மூலை முடுகெங்கும் பிரபலமான புகைப்பட கலைஞர் நிக் வுட்தான் அது. போரின் கொடூரம் என்ற பெயரில் இவர் வெளியிட்ட நிர்வாண சிறுமியின் புகைப்படம் அமெரிக்கா , வியட்நாம் நாட்டின் மீது தொடுத்த அநீதியான போரின் வரலாற்று சாட்சியானது. என்னுடைய கனவு எப்போதும் புகைப்படக்காரராக பணியாற்றுவதே. இதற்கு இன்ஸ்பிரேஷன் என் சகோதரர்தான். எனும் நிக் வுட் தான் எடுத்த புகைப்படம் மூலம் 21 வயதிலேயே புலிட்சர் பரிசை வென்றார். அசோசியேட் பிரஸ் நிறுவனத்தில் வேலை செய்த நிக் வுட், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் பணிபுரிந்து அண்மையில் 51 வயதில் பணி ஓய்வு பெற்றார். அசோசியேட் பிரஸ்ஸில் புகைப்படக்காரராக பணியாற்றிய நிக்வுட்டின் சகோதரர், மேகாங் டெல்டா பகுதியில் கொல்லப்பட்டார். அப்போது நிக்கின் வயது 16. உடனே சகோதரரின் பணியில் இணைய ஆசைப்பட்டு அணுகியபோதும் நிறுவனத்தினர் அவருக்கு வேலை தர மறுத்துவிட்டனர். ஏனெனில் ந

வண்ணத்துப்பூச்சி ஆய்வு!

படம்
Mini பேட்டி  பூச்சிகள் ஆய்வாளராக தற்போதைய தங்களது பணி..? பட்டாம்பூச்சிகளின் பரிமாண வளர்ச்சியை அளவிட்டு வருகிறேன். இதற்காக கோஸ்டாரிகா, ஈகுவடார், பனாமா ஆகிய நாடுகளின் காடுகளில் பணிபுரிந்துள்ளேன். என்ன சவால்களை சந்தித்தீர்கள்? ஈகுவடாரிலுள்ள இடத்திற்கு பதினைந்து மணிநேரம் பஸ்ஸிலும் பின்னர் படகிலும் பயணம் செய்த அனுபவத்தை மறக்க முடியாது. அங்குள்ள பழங்குடிகளின் வாழ்க்கையும், என்னை சுற்றி வந்த குரங்கு குட்டிகளுமாக இயற்கை சூழ்நிலை என்னை ஈர்த்தது.   காடுகளில் உங்கள் ஆராய்ச்சி..? பட்டாம்பூச்சிகளை சேகரிப்பது. 9 மீட்டர் அளவு பறக்கும் பட்டாம்பூச்சிகளை சேகரிக்கும் பணி சாதாரணமல்ல. நகரத்தில் வாழும் சூழலில் பஸ், ரயிலை தவறவிடுவது பிரச்னை. காடுகளில் பாம்பு கடிகள், சிலந்தி – அட்டைப்பூச்சி கடிகள், குரங்குகளில் மிரட்டல்கள் ஆகியவற்றை சமாளிக்க வேண்டும். ஹவ்லர் குரங்கள் என்மீது சிறுநீர் கழித்து என்னை அங்கிருந்து விரட்ட முயன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. நீங்கள் முன்னாள் மாடலாக இருந்தவர் அல்லவா? மேல்நிலைப்பள்ளியில் அழகிப்போட்டி ஆர்வம் இருந்தது. ஆனால் என் இதயம் அறிவியல் ப

2008 லெஹ்மன் ப்ரோஸ் வங்கி திவால் நினைவு நூல்கள்!

படம்
நிதி நூல்கள்! 2008 ஆம் ஆண்டு உலகில் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. அமெரிக்காவில் லெஹ்மன் சகோதரர்களை சுருட்டிய வீழ்ச்சி நிகழ்ந்து பத்து ஆண்டுகளாகின்றன. அவை குறித்த நிதிநூல்கள் சில.. Crashed HOW A DECADE OF FINANCIAL CRISES CHANGED THE WORLD By ADAM TOOZE 720pp Rs.1,412 அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் நிதி அமைப்புகளை பற்றி விளக்குவதோடு, 2008 ஆம் ஆண்டு நடந்த பொருளாதார சரிவு உலக அரசியல் மாற்றங்களுக்கு எப்படி காரணமானது என்பதை ஆசிரியர் ஆடம் டூசெ விவரித்துள்ளார். DEBT—THE FIRST 5000 YEARS David Graeber Penguin Rs.399 5 ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களின் வாழ்க்கையில் தொடர்ந்து வரும் கடன் பின்னலை 2008 ஆம் ஆண்டு வரை இழுத்து வந்து பிரச்னைக்கான முடிச்சை சுவாரசியமாக அவிழ்க்கிறார் ஆசிரியர் டேவிட். The Return of Depression Economics and the Crisis of 2008 Paul Krugman 214pp W. W. Norton & Company 1930 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார சரிவுக்கு பிறகான அமெரிக்காவின் பொருளாதாரம் பேராசையின்பாற்பட்டு எப்படி சரிந்தது தனக்கே உரித்

ஆங்கில திரைப்படத்தை தடுத்த சீனா!

படம்
பிட்ஸ்! உலகிலேயே வாட்டிகனிலுள்ள வங்கியில் மட்டுமே லத்தீன் மொழியில் இன்றும் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும். மனிதர்களின் மூளை உறைந்து போவதற்கு Sphenopalatine ganglioneuralgia   என்று பெயர். போக்குவரத்து சிக்னல்களை மதிக்காது செல்பவர்களை Jaywalker என்று குறிப்பிடுகின்றனர். Jay என்ற சொல்லுக்கு முட்டாள் மனிதர் என்று அர்த்தம். 1931 ஆம் ஆண்டு சீனாவின் ஹூனன் பகுதியில் Alice In Wonderland ஆங்கிலத்திரைப்படம் தடை செய்யப்பட்டது. கரடி, சிங்கம் உள்ளிட்ட விலங்குகள் மனிதர்களின் மொழியைப் பேசுவது அவர்களை அவமானப்படுத்துவது போல இருக்கிறது என விநோத காரணம் சொன்னார் நகர ஆளுநர். உலகின் 95 சதவிகித விஸ்கி தயாரிப்பாளரான கென்டக்கி மாநிலத்தின் அதிகாரப்பூர்வ குடிபானம், பால். போலந்திலுள்ள வனத்தின் பைன் மரங்கள் 90 டிகிரியில் விநோதமாக வளர்ந்து பார்வையாளர்களை ஆச்சரியமூட்டுகிறது. துருக்கியின் அங்காரா நகரிலுள்ள நூலகத்தில் சிறப்பு, அங்குள்ள நூல்கள் அனைத்தும் குப்பைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்டவை என்பதுதான்.