இடுகைகள்

வாட் எ மேன்!- டெலிவரி புயல்!

படம்
பிட்ஸ்! வெள்ளை மலை! சீனாவின் குவாங்ஸி சூவாங் பகுதியிலுள்ள நானிங் நகரில் திடீரென மெகா சைசில் வெள்ளை நுரைகள் தோன்றின. வெள்ளமா? என மக்கள் அலறியடித்து சோதித்தபோது நுரைக்கு காரணம், பிளாஸ்டிக் பாட்டில்களை கழுவ கிராமத்து மனிதர் பயன்படுத்திய அதீத சோப்பு என தெரியவந்துள்ளது. கழிவுநீரில் கனமழைபெய்தவுடன் சோப்பு நுரைகள் பெரிதாகி மக்களை பீதிக்குள்ளாக்கியிருக்கிறது. சோப்பை தண்ணியா கரைச்சிருக்காரே! ஹைஜம்ப் சாதனை! அமெரிக்காவின் மேரிலாண்டைச் சேர்ந்த சமந்தா வாலே, தனது காப்பகத்திலுள்ள கைவிடப்பட்ட நாய்களுக்கு ஜம்ப்பிங் பயிற்சியளித்து கின்னஸில் இடம்பிடித்திருக்கிறார். கெரோனிமோ, ஃபெதர் என இரு நாய்களும் ஒரு நிமிடத்திற்கு 91, 128 என தாவிக்குதித்து கின்னஸ் அங்கீகாரத்தை வென்றிருக்கின்றன.”ஆதரவற்ற நாய்கள் என்றாலும் திறமை காட்டுவதில் தம்மை நிரூபித்துவிட்டன” என்கிறார் சமந்தா. DJ பாட்டி! ஜப்பானைச் சேர்ந்த சுமிகோ இவாமுரா 77 வயதில் டிஜே பயிற்சி பெற்றார். 83 வயதில் டிஜே பாட்டியாகி பாரிஸ், நியூசிலாந்து டூர் சென்று திறமை காட்டி வயதான டிஜே என கின்னஸ் சாதனையையும் தற்போது சொந்தமாக்கிவிட

வாடகைக்கு செக்ஸ்!- கொதிக்கும் மத அமைப்புகள்

படம்
பிட்ஸ்! கண்ணை நம்பாதே! அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மூளையை மிரட்டும் மாயபிம்ப அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. நம் கண்களையே நம்ப முடியாத அளவு ஹோலோகிராம், புதிர்கள், சமூக விழிப்புணர்வு என பல்வேறு தீம்களில் படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆப்டிகல் இல்யூசனை எப்படி உருவாக்கினோம் என விளக்கி கூறுவது இந்த மியூசியத்தின் ஸ்பெஷல். பொம்மை பெண்! அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள கிங்கிஸ்டால்ஸ் நிறுவனம், அண்மையில் செக்ஸ் பொம்மைகளை வாடகைக்கு விடத்தொடங்கியவுடன் பிரச்னை தொடங்கிவிட்டது. ரோபோ விபச்சாரம் நம் நகரத்திற்கு ஆகாது; கற்பழிப்புகளை ஊக்குவிக்கும் என கொதித்தெழுந்த உள்ளூர் கலாசார அமைப்புகள் நகர மேயரிடம் உடனே மனுகொடுத்து போராட்டத்தில் குதித்துள்ளன. கம்பெனி எந்த ரூல்ஸையும் மீறலையே என நகரமேயர் குழம்பி வருகிறார். சிலந்தி ராஜாங்கம்! கிரீசிலுள்ள அய்டோலிகா கடற்கரை பகுதியில் 300 மீட்டருக்கு Tetragnatha genus   இன சிலந்திகள், மரம், செடி என அனைத்தையும் மூடி தம் வலையைக் கட்டி இடத்தை ஆக்கிரமித்திருப்பதுதான் இணைய வைரல் ஸ்டோரி.   கியானிஸ் கியானாபௌலோஸ் என்பவரின் வீடியோ மூலம் சி

காந்தி, சரளாதேவி உறவு இயல்பான ஒன்று!

படம்
ராமச்சந்திர குஹா.....4  1928 ஆம் ஆண்டு காந்தி தன் மகன் தேவதாஸ், ராஜாஜியின் மகள் லட்சுமியை திருமணம் செய்யும் முயற்சிக்கு ஏன் மறுப்பு தெரிவிக்கிறார்?  சாதி மறுப்பு திருமணம் என்பதே காரணமா? அம்மறுப்புக்கு தார்மிக ரீதியான பல்வேறு காரணங்கள் இருந்தன. முதல் காரணம்,  தீண்டாமை குறித்த காந்தியின் கருத்துகள் சாதி இந்துக்களை கடுமையான சீண்டியிருந்தது. மேலும் காந்தி இளைஞர்களை பலரை பிரம்மச்சரியம் காக்கும்படி பிரசாரம் செய்திருந்ததும் அவரை உறுத்தியிருக்கலாம். அப்போது அவரின் மூத்த மகன் மணிலால் முஸ்லீம் பெண்ணை மணக்க விரும்பினார். அதுவும் காந்தியின் கொள்கைக்கு விரோதமான பிரச்னையாக மாறியிருந்தது. இந்துக்கள் தம் பெண்களை கவரவே தம் மதத்திற்கு மாறுகிறார்கள் என முஸ்லீம்கள் கூறிவிடுவார்கள் என்ற அச்சம் காந்திக்கு ஏற்பட்டதால் முடிவெடுக்க தயங்கினார்.  இன்று தலைகீழாக நிலைமை மாறி  காந்தி பயப்பட்ட வாசகத்தை வலதுசாரி இந்துத்துவவாதிகள் கூறிவருகின்றனர். காந்தி தன் காலத்தில் சிந்தித்து எழுதியதை விட டாக்டர் அம்பேத்கர் தொலைநோக்காக நிறைய செயல்பாடுகளை செய்துள்ளார் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? சந்தேகத்

புற்றுநோய் பாதிப்பை ஏற்றுக்கொள்வது அசாதாரணமானது!

படம்
புற்றுநோய் போராளி! கேரளாவிலுள்ள திரிசூரில் புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு பேலியேட்டிவ் சிகிச்சை மையத்தை உருவாக்கி ஆதரவளித்து வருகிறார் ஷீபா அமீர். தனது பனிரெண்டு வயது மகள் நிலோஃபா லுக்குமியா நோயால்  பாதிக்கப்பட்டிருப்பதை 1997 ஆம் ஆண்டு அறிந்தபோது ஷீபாவின் வாழ்க்கை அடியோடு மாறியது. "என் மகளுக்கு லுக்குமியா புற்றுநோய் வந்த செய்தியறிந்து நொறுங்கிப்போனேன். அவளை மும்பை டாடா நினைவு மருத்துவமனைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். நாங்கள் அங்கிருந்த 11 வது மாடி முழுவதுமே சிகிச்சை நோயாளிகளால் நிறைந்திருந்தது.  சிலருக்கு கண்களில் புற்றுநோய், சிலருக்கு புற்றின் பாதிப்பில் கால்கள் இல்லை என அடுத்தநாளை அக்குழந்தைகள் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை" என தீர்க்கமாக பேசுகிறார் ஷீபா. அந்த பாதிப்பு அவருக்கு இறுதிவரை குறையவே இல்லை. அதுவே சோலஸ் என்ற என்ஜிஓவை தொடங்க வைத்தது. அப்போது அவரது மகள் நிலோஃபா தனது வாழ்நாளின் இறுதியில் இருந்தாள். "அம்மா, என்னை நிச்சயம் காப்பாத்திடுவேல்ல" என்பதுதான் அவள் இறுதியாக பேசியது. 2013 ஆம் ஆண்

ரஷ்யாவின் ராணுவ அணிவகுப்பு!

படம்
தில் ரஷ்யா! திகிலில் உலகம்!- ரோனி தொண்ணூறுகளில் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு அமெரிக்கா அனைத்து நாடுகளுக்கும் அட்வைஸ் செய்யும் நம்பர் 1 வஸ்தாதுவாக மாறியது. உலகநாடுகளை வளைத்து டஜன் கணக்கிலான பொருளாதாரத் தடைகளை ரஷ்யாமீது விதித்த அமெரிக்கா, தன்னை மிஞ்சி வளராதபடி பார்த்துக்கொண்டது. ஆனால் ரஷ்யா சும்மாவா இருக்கும்? எண்ணெய் விலை வீழ்ந்ததில் தடுமாறிய ரஷ்யா, புதின் அதிபரானபின் உறுதியான நாடாகியது. அமெரிக்க தேர்தலில் குறுக்கீடு, உக்ரைன்மீது சைபர் தாக்குதல், சிரியாவுக்கு ஆதரவு, இங்கிலாந்தில் முன்னாள் உளவாளிகள் மீது நச்சுத்தாக்குதல் என ரஷ்யாவின் ஆக்சன்கள் அனைத்தும் அதகள அதிரடிகளாயின. கெட்டப்பையன் இமேஜை மாற்றி பொருளாதார பலத்தை நிரூபிக்க ஃபிபா கால்பந்து போட்டியை நடத்தி லட்சியத்தில் மாஸாக வென்றது. இருந்தாலும் வெளியுலகிற்கு தன்னை புஜபல பீமனாக நிரூபிக்க என்ன தேவை? ராணுவம்தானே! அண்மையில் 3 லட்சம் படைவீரர்கள், 36 ஆயிரம் கவசவாகனங்கள், 1000 விமானங்கள் (ட்ரான்கள்,ஹெலிகாப்டர்கள்), 80 கப்பல்கள் என கிழக்கு சைபீரியாவில் ராணுவ டிரில்லை ரஷ்யா தொடங்கியுள்ளது. வோஸ்டாக் -2018 எனும் ப

ஏஐ எதிர்காலம்!

படம்
2025 ஆம் ஆண்டு எதிர்காலம்! இன்னும் 7 ஆண்டுகள்தான். 2025 ஆம் ஆண்டில் எந்திரங்கள் தொழில்துறைக்கு வந்துவிடும் என தீர்க்கதரிசனம் கூறியுள்ளது உலக பொருளாதார அமைப்பு(WEF). பல்வேறு தொழிற்சாலைகள் தானியங்கி எந்திரங்களை தற்போதே இயக்கத் தொடங்கிவிட்டனர். அடுத்த நான்கு ஆண்டுகளில் உலகின் ஐம்பது சதவிகித நிறுவனங்கள் எந்திரங்களின் மூலமே பணியாற்றுவார்கள். தகவல்தொடர்பு, ஆய்வுத்துறையில் 54% பணியாளர்கள் தம் திறனை 2022 ஆம் ஆண்டுக்குள் அப்டேட் செய்துகொள்வது அவசியம் என கூறியுள்ளது உலக பொருளாதார அமைப்பு. “எதிர்கால வேலைவாய்ப்பு மாற்றங்கள் நிகழ்வதற்கு அதிக காலம் தேவைப்படாது” என்கிறார் பொருளாதார அமைப்பின் தலைவர் க்ளாஸ் ஸ்வாப். மனிதர்கள் தற்போது பணியாற்றும் நேரம் 71% என்பது 2025 ஆம் ஆண்டு எந்திரங்களின் வரவால் 48 சதவிகிதமாக குறையும். அதேசமயம் எந்திரங்களின் பணிநேரம் 52%   உயரும் என உலக பொருளாதார அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.

புராண விலங்குகள்!

படம்
மர்ம விலங்குகள்! வென்டிகோ 1661 ஆம் ஆண்டு அல்கோங்குயின்ஸ் என்ற செவ்விந்தியர்களை மதம் மாற்ற சென்ற கிறிஸ்துவ மிஷனரி உடல்நலம் குன்றினர். காரணம், அவர்களை அச்சுறுத்திய மனித இறைச்சி உண்ணும் வெண்டிகோ எனும் விலங்கு. இதனை விரட்ட அல்கோங்குயின்ஸ் பழங்குடிகள் கடைபிடிக்கும் சடங்குகளும் அன்று பிரபலம். மினோடர் கிரேட்டே மன்னன் மினோஸ், தன் மகனை இறப்பிலிருந்து காப்பாற்ற தன் மக்களை மினோடர் எனும் விலங்குக்கு இரையாக்கினான். காளை முகமும், மனித உடலும் கொண்ட மினோடர் அரசன் மினோசின் மனைவி. பேசிலிஸ்க் 1587 ஆம் ஆண்டில் குழந்தைகளை தூக்கிச்சென்று கொன்று போட்டதாக நினைவுகூரப்படும் டைனோசர் போன்ற பிரமாண்ட பறவை பேசிலிஸ்க். நியான் யானை உருவத்தில் இரண்டு கொம்புகளைக் கொண்ட ரம்ப பற்களைக் கொண்ட குழந்தைகளை கொன்று தின்னும் விலங்கு. சிவப்பு, ஒலி ஆகாது என கண்டுபிடித்து நியானிடமிருந்து தப்பி பிழைக்க இன்றுவரையும் விழா எடுக்கிறது சீனர்கள் கூட்டம்.       

மொழி மீட்பு வலைதளம்!

படம்
மொழியை மீட்கும் வலைதளம்! பிலிப்பைன்ஸிலுள்ள 170 மொழிகளில் ஒன்றான Chabacano மொழி, தென்பகுதி நகரான ஜம்போங்காவில் சரளமாக பேசப்பட்டு வருகிறது. இம்மொழியை பிரபலப்படுத்த Bien Chabacano என்ற வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை கல்வியாளர்களும் மொழியியல் ஆய்வு மாணவர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.   “நாங்கள் உருவாக்கியுள்ள வலைதளம் மூலம் சபாகனோ மொழியின் வரலாறு, இலக்கணம் ஆகியவற்றை இளம் தலைமுறையினர் தெரிந்துகொள்ள உதவும்” என்கிறார் வலைதள நிறுவனரான ஜெரோம் ஹெரிரா. இதில் சபாகனோ மொழி பாடல்களும், சிறுகதைகளும் பதிவிடப்பட்டுள்ளதோடு மொழியை எளிதில் பழகுவதற்கான சிறுசிறு வார்த்தைகளும் உள்ளன.   தற்போது பிலிப்பைன்ஸில் 6 லட்சம் சபாகனோ மொழியை பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பிலிப்பைன்ஸ் மூன்று நூற்றாண்டுகளாக ஸ்பெயின் நாட்டின் காலனிநாடாக(1595-1898) இருந்தது.

சீனாவின் ரோல்மாடல் ஜாக் மா

படம்
கேப்டன் ஜாக் மா! தன் 54 வயதில் அலிபாபா நிறுவனத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறார் ஜாக் மா. தன் நிறுவனத்துடன் இணைந்து சீனாவையும் வளர்த்தெடுத்திருக்கிறார் முன்னாள் ஆங்கில ஆசிரியரான ஜாக் மா. சீனாவின் கடுமையான தணிக்கைமுறைகளை சமாளித்து இபே, அமேஸான் நிறுவனங்களோடு போட்டியிட்டு 40 பில்லியன் டாலர்களை சம்பாதித்துவிட்டார் ஜாக் மா. 1964 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சூ பகுதியில் இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்த ஜாக் மா, பள்ளிக்கல்வியோடு டூரிஸ்ட் கைடாக வேலைபார்த்தே ஆங்கிலத்தை கற்ற சாமர்த்தியசாலி. மொழிபெயர்ப்பு நிறுவனம் தொடங்கி பின்னர் 1999 ஆம் ஆண்டு உருவானது அலிபாபா சாம்ராஜ்யம். இபேயுடன் போட்டியிட்டு வென்ற தாவோபாவோ இணையதளம் என இருபது ஆண்டுகளில் நிறுவனத்தின் மதிப்பை 429 பில்லியன் டாலர்களாக உயர்த்திக் காட்டிய தலைவர் ஜாக் மா.   “புதிய கோணத்தில் பிரச்னைகளை பார்க்க கற்றால் நீங்கள் ஜெயிக்க முடியும்” என்பது ஜாக் மாவின் வெற்றிச்சொல். சீனாவின் இளம் தலைமுறையினர் ஜாக் மாவை முன்மாதிரியாக கொண்டு உழைத்துவருவது ஜாக் மாவின் உழைப்புக்கு சாட்சி.    

காந்தியின் ராமன் வித்தியாசமானவன்!

படம்
ராமச்சந்திர குஹா ...... பகுதி 3 காந்தியின் ராமன், பாஜகவின் ராமன் என்ன வித்தியாசம்? காந்தியின் ராமன் அல்லா என்று கூறக்கூடியவன். உண்மையை அடிப்படையாக கொண்ட எளிமையானவன் என்பதால் அவனுக்கு பிரமாண்ட கோவிலின் தேவை கிடையாது. காந்தி மதத்தை அணுகிய விதத்தில் நிச்சயம் முஸ்லீம்களும் அவரின் கோணத்தை புரிந்துகொண்டிருக்க முடியாது. முக்கியமாக காந்தியின் ராமன் என்பவன் தனித்த மதிப்புள்ள இதயத்திலுள்ள ஒரு பிம்பம். காந்தி மென்மையான இந்துத்துவாவை வலியுறுத்தினார் என விமர்சனங்கள் உலவுகிறதே? பிறர் மட்டுமல்ல முஸ்லீம் லீக்கின் ஜின்னாவும் கூட அப்படி நினைத்தார். ஆனால் இந்து மதத்தை சமூக கட்டமைப்புக்கான கருவியாக பார்த்தவரை  இந்து மகாசபை, சங்கராச்சாரியார், இந்து வெறியர்கள் அனைவரும் கடுமையாக எதிர்த்தனர்.  மதுரை மீனாட்சி கோவிலில் தலித் கோவில் நுழைவுக்காக கலந்துகொண்டதை தவிர்த்து கோவிலுக்கு செல்லாத ஆளுமை. தீவிர சமூக சமய சீர்த்திருத்தவாதியாக இருந்த காந்தியை எப்படி மென்மையான இந்துத்துவவாதியாக கருத முடியும்? மகாத்மா காந்திக்கு சரளாதேவி சௌதுராணியிடம் உறவு இருந்தது என ராஜ்மோகன் காந்தி எழுதியுள்ளார். இதுபற்ற

காந்தி: புனலும் அழிக்கமுடியாத சத்தியம்!

படம்
காந்தி 150! இருபது பேர்களை மையத்தில் அமரவைத்து பேசினால் ஜனநாயகம் மலர்ந்துவிடாது. சமூகத்தின் கீழேயுள்ள கிராமங்களிலிருந்து ஜனநாயக மறுமலர்ச்சி தொடங்கவேண்டும் - ஹரிஜன் இதழ், 1948 காந்தி இன்றும் சிறந்த தலைவராக உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள தலைவர்களால் மதிக்கப்படுவதற்கான காரணம், போராட்டத்திற்கான ஆயுதமாக உண்மையை கையில் ஏந்தியதையும், தன் வாழ்வையே அதற்காக அர்ப்பணித்த குணமும்தான். ஒருவகையில் அரசியல்வாதிகளுக்கு காந்தி ஒரு அச்சமூட்டும் தலைவர்தான். தன் வாழ்வை நேரடியாக மக்கள் முன்வைத்து அவருக்கு எதிராக பேசுவதற்கான விஷயங்களையும் அவரே வழங்கியவர். எந்த மனிதனும் தன்னை கொல்வதற்கான ஆயுதத்தை தானே கூர்தீட்டி எதிரியிடம் வழங்குவதில்லை. ஆனால் காந்தி தான் முரண்படும் இடங்களை சரி செய்துகொண்டு தென்னாப்பிரிக்க தலித்துகள், அம்பேத்கர், பகத்சிங், ஆங்கிலேய அரசு, வைக்கம் போர்  என தான் சந்திக்க நேர்ந்த அனைத்து மனிதர்களிடமிருந்தும் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டு தன்னை மாற்றிக்கொள்ள இறக்கும்வரை  அவர் தயங்கவில்லை. மனிதர்களை அவர் திடமாக நம்பினார். பின்னாளில் அவர் நம்பிய அகிம்சை, உண்மை ஆகிய கொள்கைகள் சர