இடுகைகள்

இளைஞர்கள் வேலையில் எதிர்பார்ப்பது என்ன?

படம்
இளைஞர்களின் வேலை ரகசியங்கள்! இன்ஸ்டாகிராமில் நொடிக்கு நொடி செல்பி போட்டோக்களை பதிவிடும் உழைப்போ, மெசஞ்சர்களில் வீடியோகாலில் ஆரவாரமாக கொண்டாடும் பர்த்டே பார்ட்டியோ இன்றைய யூத்களின் அதிரிபுதிரி செயல்பாடுகளுக்கு பெற்றோர் உட்பட உலகில் யாருமே அணைபோட முடியாது. இதில் அவர்களின் வேலை, ஹாபி, ஆபீஸ் சூழல் என அனைத்துமே உள்ளடங்கும். எல்லையில்லாத சுதந்திரம் என்பதையே பல்வேறு வார்த்தைகளில் விதவிதமான தொனிகளில் எதிரொலிக்கும் யூத் கூட்டம், 9 டூ 10 வேலையை விட ஷிப்ட் வேலைகளை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. சுதந்திரமும், பணமும் கிடைக்கும் கால்டாக்சி(உபர்,ஓலா), உணவு டெலிவரி வேலைகளையும்(ஸ்விக்கி, உபர் ஈட்ஸ்) இன்று இளைஞர்கள் ஏற்று செய்ய முன்வந்துள்ளது மாறிவரும் வேலைக் கலாசாரத்தின் முக்கிய அறிகுறி. "காலையில் கிளம்பி மாலை வீடு திரும்பும் 9 டூ 5 வேலை எனக்கு அலர்ஜி. வேலை செய்யும் அனுபவம் அனுதினமும் ப்ரெஷ்ஷாக இருந்தால் சூப்பர்தானே!" என உற்சாகமாக குரல் கொடுக்கிறார் மேக் மை பெயிண்டிங் நிறுவனத்தைச் சேர்ந்த ஆதித்யா தங். முதலில் வியட்நாமில் அதிகாரியாக வேலை செய்து வந்தவர்

ஊட்டச்சத்துக்குறைவால் தவிக்கும் இந்தியா!

படம்
ஊட்டச்சத்துக்குறைவால் தடுமாறும் குழந்தைகள்! - புதிய இந்தியாவின் மறுபக்கம்  தியேட்டரில் பாடும் தேசியகீதத்திற்கான மரியாதையை விட பள்ளிகளின் பிரேயரில் ரத்தசோகையால் மயங்கி விழும் மாணவிகளின் உடல்நலனில் இந்திய அரசு அக்கறை காட்டவேண்டும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறது. நவ.4 அன்று வெளியாகியுள்ள குளோபல் நியூட்ரிஷியன் ரிப்போர்ட் 2017. ஐந்து வயதுக்குட்பட்ட 38% குழந்தைகளும், அதில் 21% குழந்தைகள் உயரத்திற்கேற்ப எடையின்றி தவிப்பதாக பொட்டில் அறையும் நிஜத்தை கூறுகிறது ஊட்டச்சத்து அறிக்கை. இதில் 6-59 மாதக்குழந்தைகளில் 58.4% பேருக்கு ரத்தசோகை பிரச்னையும் உண்டு என்பது ஷாக் தகவல். மக்கள்தொகையில் 6 வயதுக்கும் குறைந்த குழந்தைகளின் விகிதம் 13.6%. ஊட்டச்சத்துக்குறைவு அச்சுறுத்தலை 2022க்குள் ஒழித்துவிட நிதி ஆயோக், குடும்பநல அமைச்சகம் பிளான் செய்து செயல்பட்டு வருவதால் பலன்களை இனிமேல்தான் அறியமுடியும். நாட்டிலுள்ள 14 லட்சம் அங்கன்வாடிகளிலும் இதுவரை   கர்ப்பிணி தாய்களின் வீடுதேடி ஊட்டச்சத்துப் பொருட்களை வழங்கிவந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட்டிருக்கிறது. கடும் சர்ச்சை கிளம்பிய தனது செ

அடையாளமற்ற இந்தியர்கள்! - அவலவாழ்வும் துயரும் அலசல் பார்வை!

அடையாளமற்ற இந்தியர்கள்!  உழைத்து அடையாளமற்று இறக்கும் வட இந்தியர்களின் அவல வாழ்க்கை. தமிழகத்தின் பெருநகரங்களிலுள்ள ஹோட்டல், பழச்சாறு கடை, பாலகம், தேநீர்க்கடை என அனைத்து இடங்களிலும் மாறாத ஒற்றுமை, மேற்சொன்ன அனைத்து இடங்களிலும் வேலை செய்யும் பணியாளர்கள்தான். இவர்கள் ஒருவர் கூட தமிழர்களாக இருக்க வாய்ப்பு கிடையாது. அனைவருமே உ.பி, பீகார், மேற்கு வங்கத்திலிருந்து இடம்பெயர்ந்த வட இந்தியர்கள்தான். இந்தி, போஜ்புரி பாடல்கள் ஒலிக்க எந்திரமாய் சுழன்று பிரமிக்க வைக்கிறார்கள். தமிழகம் மட்டுமல்ல கர்நாடகம், ஆந்திரா, கேரளா என சொந்த ஊர்க்காரர்கள் பலரும் நவீன பணம் கொழிக்கும் வேலைகளுக்கு மாறிவிட உடலுழைப்பு தொடர்பான வேலைகளுக்காகவே பல்லாயிரக்கணக்கான வட இந்தியர்கள் ரயில்களில் முட்டிமோதி ஏறிவருகின்றனர். இதற்கு முக்கியக்காரணம், கல்வி அறிவால் தென்னிந்தியர்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்டதும், கல்வியறிவின்மையால் வட இந்தியர்கள் அதனை தவிர்த்ததும்தான். அதிகரிக்கும் கிடுகிடு மக்கள்தொகை வட இந்தியாவில் வேலைவாய்ப்பின்மையை ஏற்படுத்த வளம்மிகுந்த சமூகத்திட்டங்கள் செழித்த தென் மாநிலங்கள் வட இந்தியர்களை

படேல் தேசத்தில் என்ன நடக்கிறது?

படம்
படேல் தேசம் உடைகிறது! இந்தியாவின் ஒற்றுமைக்கு  உதாரணம் என குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையை இந்திய அரசு கூவிவரும்போது. அங்கிருந்து பீகார் உத்தரபிரதேச தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர். சர்தார் சரோவர் அணையில் உருவாகியுள்ள சிலையின் மதிப்பு 2 ஆயிரத்து 900 கோடி. இதன் தொடக்கவிழாவின் போது, ஹர்திக் படேல் தொடங்கவிருக்கும் கிசான் சத்தியாகிரகமும் நடைபெறவிருக்கிறது. குஜராத்தில் படேலின் சிலையை செய்வதிலும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் உழைப்பு உண்டு. மாநிலத்தின் பொருளாதாரத்திலும் 4 மில்லியன் தொழிலாளர்களின் பங்களிப்பு உள்ளது. குஜராத்தின் 5 தாலுக்காக்களில் வறுமை தாண்டவமாடுகிறது. நர்மதா பகுதியில் மக்கள் நீர்தட்டுப்பாட்டால் நாயாய் அலைந்து வரும் இடங்களில்தான் 430 மில்லியன் டாலர் செலவில் இந்தியாவின் ஒற்றுமையை புகைப்படங்களில் பதிவு செய்ய படேல் சிலை உருவாகியுள்ளது. குஜராத்தில் நடந்த சிறுமி கற்பழிப்பு விவகாரத்தால் பீகார், உ.பி தொழிலாளர்கள் அனைவரும் போலீசாரின் வற்புறுத்தல் மற்றும் தாக்குதல் பயத்தால் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர். படேல் சிலை செய்ய ஒப்பந்தமான 4500 பேரில் பாதிப்

மனித உரிமைக்கவுன்சிலில் இந்தியா!

படம்
மனித உரிமை கவுன்சிலில் இந்தியா ! – மனித உரிமை கவுன்சில் தேர்தலில் இந்தியா 188 வாக்குகளைப் பெற்று வென்றுள்ளது. மூன்று ஆண்டுகள் செயல்படும் ஐ.நாவின் மனித உரிமை அமைப்பில், ஆசியா-பசிபிக் பிரிவில் இந்தியா பெருமளவு வாக்குகளைப் வென்றுள்ளது.   193 நாடுகளைக் கொண்ட ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் புதிதாக ஒரு நாடு தேர்வு பெற குறைந்தபட்சம் 97 வாக்குகளைப் பெறவேண்டும். ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இடத்திற்கு இந்தியா, பஹ்ரைன், ஃபிஜி, பிலிப்பைன்ஸ், வங்கதேசம் ஆகிய நாடுகள் போட்டியிட்டன. இந்தியா இதற்கு முன்பு ஜெனீவாவில் செயல்படும் மனித உரிமைக்கழகத்தின் உறுப்பினராக செயல்பட்டது. தற்போதைய உறுப்பினர் பதவி அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் செயல்பாட்டுக்கு வரும். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 47 உறுப்பினர் இடங்கள் உண்டு. ஆப்பிரிக்காவுக்கு 13 இடங்கள், ஆசியா- பசிபிக்குக்கு 13 இடங்கள், கிழக்கு ஐரோப்பா- 6, மேற்கு ஐரோப்பா மற்றும் பிற நாடுகளுக்கு 7 இடங்கள், லத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகளுக்கு 8 இடங்கள் என பிரிக்கப்பட்டுள்ளன.

மாரத்தானில் கல்யாணம்!

படம்
பிட்ஸ்! மாரத்தான் கல்யாணம்! அமெரிக்காவின் மிச்சிகனிலுள்ள டெட்ராய்டு நகரில் 42 கி.மீ மாரத்தான் போட்டி பிரமாண்டமாக நடைபெற்றது. வொய்ட்னி பிளாக் - –ஸ்டீவன் பிலிப்ஸ் என்ற காதல்ஜோடி இதில் பங்கேற்று பாதி மாரத்தானிலேயே ரிங் மாற்றி திருமணம் செய்து ஆச்சரியம் அளித்துள்ளனர். ஸ்டீவனின் காதலி வொய்ட்னி பிளாக், அண்மையில் விபத்தில் சிக்கி 20 ஆபரேஷன்கள் செய்யப்பட்டு உயிர் பிழைத்து மெல்ல நடக்கத் தொடங்கியுள்ளார். டிஸ்னி ஜோடி! அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தைச் சேர்ந்த ஹீதர்- கிளார்க் என்ஸ்மிங்கர் ஜோடி, புளோரிடா- கலிஃபோர்னியா மாநிலங்களிலுள்ள 6 டிஸ்னி பூங்காக்களை 24 மணிநேரத்தில் சுற்றி வந்து சாகச திரில்லை அனுபவித்துள்ளனர். கடந்தாண்டு ஹீதர்-கிளார்க் ஜோடி குடும்பத்துடன் டிஸ்னி பூங்கா செல்ல திட்டமிட்டிருந்தனர். அப்போது திடீரென கிளார்க் மனைவி ஹீதரின் தந்தை மரணிக்க, அன்று தடைபட்ட பயணத்தை நிறைவேற்றி மனைவியை மகிழ்வித்துள்ளார் கிளார்க். மூக்கை காணோம்! அமெரிக்காவின் ஓரேகானைச் சேர்ந்த குடும்பம், வீட்டின் முன் வைக்கப்பட்டு மிஸ் ஆன 2 அடி உயரமுள்ள மூக்கு சிற்பத்தை ஊரெங்கும் ப

தூக்கத்தை கனவுகள் குறைக்கிறதா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? – Mr.ரோனி கனவுகள் தூக்கத்தை குறைப்பது உண்மையா? பாம்பு உங்களை காட்டில் துரத்துவது, ரத்தம் குடிக்கும் காட்டேரிகளிடம் தப்பி ஓடி பள்ளத்தில் வீழ்வது என கனவு கண்டு எழும்போது அலறி எழும்போது குப்பென உடல் வியர்த்து தூக்கம் கலைந்துவிடும். பொதுவாக தூங்கி எழுந்து வேண்டாவெறுப்பாக சோம்பல் முறிக்கும்போது பெரும்பாலான கனவுகள் 90 சதவிகிதம் மூளையின் லாக்கர்களிலிருந்து கீழிறங்கிவிடும். அப்படி நினைவிருந்தால் அக்கனவுகள் உங்கள் தூக்கத்தை தீவிரமாக பாதித்துள்ளது என புரிந்துகொள்ளலாம். அன்றைய நாளின் கோபம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி நிகழ்வுகளை டைரியில் குறித்து வைப்பது கனவுகளின் எண்ணிக்கையை குறைக்க உதவக்கூடும்.  

இந்தியாவில் பாலின பாகுபாடு - ஆக்ஸ்பேம் அறிக்கை

படம்
பாலின பாகுபாடு! அண்மையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்ஃபேம் நிறுவனம் வெளியிட்டுள்ள பாலின பாகுபாடு பட்டியலில் இந்தியா 147 ஆவது இடம் பிடித்துள்ளது. 1.3 பில்லியன் மக்கள் வாழும் இந்தியாவில், பெரும்பாலான பெண்கள் வறுமைநிலையில் வாழ்ந்துவருகின்றனர். இந்தியா பாலின பாகுபாட்டின் அளவைக் குறைத்தால் 17 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்க முடியும் என அறிவுறுத்தியுள்ளது ஆக்ஸ்ஃபேம் நிறுவன அறிக்கை. இந்தியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் இப்பட்டியலில் மோசமாக செயல்பட்டாலும் ஜப்பான்(11 வது இடம்), தென்கொரியா (56 வது இடம்), நமீபியா, உருகுவே ஆகிய நாடுகள் பாலின பாகுபாட்டை குறைப்பதில் உறுதியான நடவடிக்கைகள் எடுத்துள்ளன. 157 நாடுகளைக் கொண்ட ஆக்ஸ்ஃபேம் பட்டியலில் அரசு சமூகநலத்திட்டங்களுக்கு செயல்படுத்தும் தொகை, தொழிலாளர் உரிமைகள், பெண்களுக்கான சம்பளம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. பாலியல் பாகுபாட்டை குறைக்கும் அசத்தலான நடவடிக்கைகளால் டென்மார்க், இப்பட்டியலில் முன்னணி வகிக்கிறது.   கல்விக்கு செலவழிப்பதில் எத்தியோப்பியாவும்(131), கார்ப்பரேட் வரிகளை விதிப்பதில் சிலியும்(35), குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சுகா

பத்திரிக்கையாளரை கொன்ற சவுதி அரேபியா!

படம்
பத்திரிகையாளர் கொல்லப்பட்டாரா? கடந்த வாரம் துருக்கியிலுள்ள சவுதி அரேபியா தூதரகத்திற்கு சென்ற பத்திரிகையாளர் ஜமால் காஷோகி, கொல்லப்பட்டிருக்கலாம் என வதந்திகள் கிளம்பியுள்ளன. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இச்செய்தியை தீர்க்கமாக மறுத்துள்ளார். விசாரணையில் விபரீதம் நடந்து காஷோகி இறந்துவிட்டார் என்று செய்திகள் கசிந்தாலும் துருக்கியும் இதனை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பதோடு சவுதி அரசுக்கும் இதன் மூலம் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பத்திரிகையாளர் காணாமல் போய் ஒருவாரத்திற்கு மேலாகிறது. “காஷோகி உயிரோடு இருப்பார் என்ற நம்பிக்கை தேய்ந்துவருகிறது” என கலங்குகிறார் அமெரிக்காவிலுள்ள காஷோகியின் துணைவியான ஹேட்டிஸ் சென்கிஷ். துருக்கி, அமெரிக்கா என இருநாடுகளும் சவுதியின் நட்பு வட்டத்தில் உள்ளதால் இதில் அடக்கி வாசிக்கின்றன. காஷோகி காணாமல் போன தினத்தில் சவுதியிலிருந்து பதினைந்து பாதுகாப்புத்துறை ஏஜென்டுகள் துருக்கியிலுள்ள சவுதி தூதரகத்திற்கு வந்துள்ளது காஷோகி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற யூகத்திற்கு வலு சேர்க்கிறது. காஷோகி கொல்லப்பட்ட விவகாரத்தில் சல்மானுக்கு எந்த குற்றவுணர்

இன்டர்வியூவில் கட்டாயமாகும் பாலிகிராப் டெஸ்ட்!

படம்
பாலிகிராப் டெஸ்ட்! போலீஸ் விசாரணையில் ஒருவர் பொய் சொல்கிறாரா என்று கண்டறிய பயன்படுத்துவதே பாலிகிராப் டெஸ்ட். அமெரிக்காவின் சிஐஏ, எஃப்பிஐ உள்ளிட்ட அரசு ஏஜென்சிகளின் பணியாளர்களுக்கு பாலிகிராப் டெஸ்ட் கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது. பொய் கண்டறியும் சோதனையில் உடலில் ஆறு சென்சார்கள் பொறுத்தப்பட்டு மூச்சு, நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், வியர்வை ஆகியவையும் கை, கால்களின் இயக்கமும் வரைபடமாக காகிதத்தில் பதிவு செய்யப்படுகிறது. இந்த சோதனையில் பொதுவாக நான்கு கேள்விகள் கேட்கப்படும். இதற்கான பதிலை ஒருவர் கூறினாலும் பாலிகிராப்பில் பதிவாகும் பதிலே நிஜம். இதயத்துடிப்பு அதிகரித்து ரத்த அழுத்தம் எகிறி வியர்வை வந்தால் பதில் கூறியவர், பொய் சொல்லியிருக்கிறார் என்பது உறுதி. ஆனால் இதில் தப்பிக்கும் வித்தையை இன்று பலரும் கற்றுக்கொண்டுவிட்டதால் குற்றவாளிகளை இதில் கண்டறிவது கடினமாகி வருகிறது. பல்வேறு வேலைகளுக்கான பணியில் பாலிகிராப் டெஸ்ட், முக்கிய இடம் வகிப்பதோடு இதற்கான கேள்விகளும் இணையத்தில் பரவலாக கிடைக்கிறது.  

மூளையை எவ்வளவு பயன்படுத்துகிறோம்?

மூளையின் உபயோகம் எவ்வளவு? மூளையின் பத்து சதவிகிதத்தை மட்டுமே பயன்படுத்துகிறோம் என பலரும் சொல்ல கேட்டிருப்பீர்கள். ஆனால் தினசரி நாம் மூளையை நம் வேலைகளுக்கு தேவையான விதத்தில் முழுமையாக பயன்படுத்துகிறோம் என்பதே உண்மை. நிறங்களை புரிந்துகொள்வது, பிரச்னைகளை தீர்க்கும் திறன் ஆகியவற்றில் மூளையின் பங்குண்டு.  இவை மட்டுமின்றி நாமறியாத பல்வேறு நிகழ்ச்சிகளில் மூளையின் இன்றியமையாத பங்குண்டு என்பதை ஆராய்ச்சியாளர்களை் டோமோகிராமி மூலம் கண்டறிந்தனர். உடலின் சக்தியில் 20 சதவிகிதத்தை எடுத்துக்கொள்ளும் மூளை உடலின் எடையில் இருபங்காகும். ஆங்கில எழுத்தாளர் லோவெல் தாம்சன் டெல் கார்னெகியின் How to win and Influence people என்ற நூலில் மூளையின் பத்து சதவிகித திறன் பற்றிய தவறான கருத்துக்களை எழுதி மூடநம்பிக்கையை தொடங்கி வைத்தார்.பின்னர் நரம்பியல் மருத்துவரான வைல்டர் பென்ஃபீல்டு மூளையின் அமைதியான பாகங்கள் குறித்த தியரியை 1930 ஆம் ஆண்டு எடுத்துக்கூற மூளையின் திறன் பயன்பாடு குறித்த வதந்திகள் நிறைய பரவிவிட்டன. மூளையின் முழுத்திறன் என்பதை பல்வேறு புதிர்கள், அறிவுத்திறனுக்கு சவாலான விஷயங்களில் ஈடுபட்டு