இடுகைகள்

ஸ்டார்ட்அப் மந்திரம் 2 வெளியீடு!

படம்
இனிய நண்பர்களுக்கு, குங்குமம் இதழில் வணிகத்தொடர் ஒன்றை எழுத ஆசிரியர் கே.என்.எஸ். ஊக்குவித்தார். ஆனால் அதற்கான சூழலும் தைரியமும் எனக்கு உண்டா என்பதில் அச்சமிருந்தது. மேலும் அப்போது ஸ்டார்ட்அப் மந்திரம் தொடரை எழுதிக்கொண்டிருந்தேன். செய்வதை திருந்தச்செய்வோம் என குங்குமம் வாய்ப்பை மறுத்துவிட்டு முத்தாரத்தி கவனம் செலுத்தினேன். ஸ்டார்ட்அப் மந்திரம் 2 , ஸ்டார்ட்அப் ஐடியா வின் செயலாக்கம், அதில் ஏற்படும் பிரச்னைகள், முதலீடு பெறுவது எப்படி, நிறுவனத்தில் ஏற்படும் பதவி விலகல்கள் உள்ளிட்டவற்றை பற்றி உரையாடுகிறது. புத்தகத்தை படித்துவிட்டு தொழிலில் ஜெயிக்க முடியாது என்பது உண்மை. ஆனால் தொழில் தொடங்குவதற்கான அடிப்படை அறிவை புத்தகம் வழங்கும். காலத்திற்கேற்ப பல்வேறு நூல்கள் தொழில்களை முன்னகர்த்த உதவும் எனபதை கவனத்தில் கொள்வது அவசியம். ஸ்டார்ட்அப் மந்திரம் லோகோவை வடிவமைத்த டிசைனர் திலீப் பிரசாந்த், சீரியல் பார்த்துக்கொண்டே தொடரை டிசைன் செய்த வடிவமைப்பாளர் சூர்யக்குமார், நீ ஆயிரம் தொடரை எழுதினாலும் அதில் நான் தப்பு கண்டுபிடிப்பேன் என அடம்பிடித்து தொடரின் பிழைகளை சுட்டிக்காண்பித்து ஐரோப்பிய

வெட்டிங் போட்டோகிராபி! - முந்தும் கேரளா

வைரல் கல்யாண ஜோடி! –  கேரளாவில் பிச்சு பிரதாபன் - இந்து பிச்சுவின் கல்யாண ஆல்ப புகைப்படம்தான் இணையத்தில் ஹாட் வைரல். சும்மாயில்லை, கல்யாணம் முடிந்தபின் நடந்த ஆல்ப ஷூட்டிங்கில் செயற்கை மழையை பொழியவைத்து எட்டு மணிநேரம் இதனை எடுத்திருப்பதுதான் ஆச்சரியம். “கல்யாண ஆல்பத்தை அதற்கென சிச்சுவேஷன் உருவாக்கி செய்வதுதான் இன்றைய டிரெண்ட். எங்களுடைய போட்டோவை பார்த்துவிட்டு அழைக்கும் நண்பர்களின் அன்லிமிடெட் அழைப்புகளுக்கு அளவேயில்லை” என புன்னகை பூக்கிறார் புதுமாப்பிளை பிரதாபன். கேரளாவில் குளம், நதி, படகு, செடி, கொடி பசுமை கொண்டாட்டமாக இருப்பதால் சிம்பிளாக செல்போன் கேமிராவில் எடுத்தாலே படங்கள் கண்களில் ஒற்றிக்கொள்ளும் பேரழகு. கல்யாண ஆல்பத்தை பிரதாபன் வீட்டின் பின்புறமுள்ள குளத்தில் படகை மிதக்கவிட்டு லைட் செட் செய்து எடுத்துள்ளார் புகைப்படக்காரர் ஷைன் சித்தார்த். “பார்த்தால் சிம்பிளாக தோன்றும். செயற்கையான நீரை மழையாக பொழியவிட்டு படகை நகராமல் வைத்து ஒளியை கணித்து புகைப்படங்களை எங்கள் குழு பதிவு செய்தது” என்கிறார் ஷைன் சித்தார்த். எதற்கு இவ்வளவு மெனக்கெடல்? கல்யாணம் வாழ்க்கையில் ஒருமுறைதான்

இனிக்கும் வாழ்க்கை - சியர்ஸ் ஹோன்ஜாக் சொல்லுங்க!

படம்
சியர்ஸ் ஹோன்ஜாக்  தனிமையில் தவிப்பது எல்லாம் இனி பழங்கதை. தனியாக சமைத்து வேலைக்கு போய் விடுமுறையையும் ஜாலியாக திட்டமிட்டு வாழும் பழக்கம் உலகெங்கும் வைரலாக பரவிவருகிறது. தென்கொரியாவில் இப்படி வாழ்பவர்களுக்கு கடந்தாண்டு ஹோன்ஜோக்(Honjok) என பெயரே சூட்டிவிட்டார்கள். தனியாக வாழ்வதற்கு என்ன காரணம்? குடும்பம் கொடுக்கும் எக்கச்சக்க பொறுப்புகளும், சுமைகளும் அதனை சமாளிக்கும் விதத்தில் அதிகரிக்காத சம்பளம்தான் முக்கியக்காரணம். கூடவே சாதிக்கும் லட்சியங்களையும் கண்முன் நிறுத்தினால் பார்ட்னர் தேடுவதும், குழந்தைகளை பெறுவதும் முதலிடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு நகர்ந்திருக்கிறது. குடும்பம், கலாசாரம் என்பதற்கு முதலிடம் தரும் தென்கொரியா, இந்தியா ஆகிய நாடுகளில் திருமணம் மறுத்து தனியாக வாழும் மக்கள் அதிகரித்து வருவது புதுமைதான் அல்லவா? ”சரியான ஆண் கிடைக்கவில்லை என்று சொன்னால் அது பொய். தனியாக இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. இப்போது எனக்கு நானே பெஸ்ட் கம்பெனி என புரிந்துகொண்டேன்” என்கிறார் டெல்லி பத்திரிகையாளரான அயன்திராலி தத்தா. நவ.11 என்பதை சீன மக்கள் தனியாக வாழ்பவர்களு

ஆன்லைன் ஷாப்பிங்கில் காமெடி!

படம்
ஸ்பீக்கருக்கு பதில் லட்டு!  வீட்டிலேயே ஸ்மார்ட்போனில் பொருட்களை ஆர்டர் செய்து சொகுசாக வீட்டு வாசலுக்கு சென்று வாங்கும் ஆன்லைன் பர்சேஸ் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. பில்லியன் டாலர் விற்பனையிலும் பொருட்கள் மாறும் காமெடி அரங்கேறுவதுதான் சிச்சுவேஷன் காமெடி. தீபாவளிக்கு ஸ்பீக்கர் வாங்கி கொண்டாட நினைத்த வாடிகையாளர் ஒருவர், அமேஸானில் ஆர்ப்பாட்டமாக தேடி சலித்து புகழ்பெற்ற பிராண்டை ஆர்டர் செய்தார். ரூ.7 ஆயிரம் செலுத்தி ஸ்பீக்கர் வாங்கிவிட்டோம் என்ற கெத்தில் டெலிவரி முகவரி கொடுத்தவருக்கு சில நாட்கள் கழித்து ரூ. 20 மதிப்புள்ள லட்டுகள் மட்டுமே கிடைத்தன. “எனக்கு நடந்த அநீதியைப் பாருங்களேன்” என டென்ஷனான வாடிக்கையாளர் அதை சமூகவலைதளத்தில் படம்பிடித்து போட அமேஸானுக்கு பெரும் தர்மசங்கடமாக, மன்னிப்பு கேட்டு தவறான பார்சலை மாற்றிக்கொடுப்பதாக கோரியுள்ளது. ஆன்லைன் டெலிவரிகளில் போலிகளும் புயலாய் உள்ளே புக, வாடிக்கையாளர்களின் போலீஸ் புகார்களும், பணத்தை திரும்ப தரும் இக்கட்டும் ஆன்லைன் நிறுவனங்களுக்கு ஏற்படத்தொடங்கியுள்ளது.

சுதேசி புரோசஸர் - சக்தி!

படம்
இந்தியாவின் சுதேசி சக்தி புரோசஸர்!  இந்தியாவின் முதல் சுதேசி மைக்ரோபுரோசஸர் விரைவில் ஸ்மார்ட்போன், சிசிடிவி கேமரா ஆகியவற்றில் இடம்பெறவிருக்கிறது. சக்தி என பெயரிடப்பட்ட இதனை ஐஐடி மெட்ராஸ் வடிவமைத்து மேம்படுத்தியுள்ளது. வெளிநாட்டு மைக்ரோசிப்புகளில் சைபர் தாக்குதல்கள் அதிகளவு நிகழ்வதால் பாதுகாப்பு மற்றும் தொலைத்தொடர்பு வட்டாரங்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை களைய புதிய மைக்ரோபுரோசஸர் சக்தி உதவக்கூடும். “ப்ளூஸ்பெக் என்ற கட்டற்ற சின்தெசிஸ் மொழியில் சக்தி புரோசஸரை உருவாக்கியுள்ளோம். சக்தியை சிசிடிவி, ஸ்மார்ட்போன் என பல்வேறு பொருட்களில் அதற்கேற்ப மாற்றி பயன்படுத்திகொள்ளலாம்” என்கிறார் பேராசிரியர் காமகோடி விழிநாதன். கடந்த ஜூலையில் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்களின் கைவண்ணத்தில் சிப்களை தயாரித்து இறுதிக்கட்ட பணிகளை அமெரிக்காவிலுள்ள ஒரேகானின் இன்டெல் நிறுவனத்தில் செய்தனர். தற்போது பதிமூன்று நிறுவனங்களுடன் சக்தி புரோசஸரை விற்பதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளது. சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கென பராசக்தி என தனி மைக்ரோபுரோசஸரை விரைவில் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட

குடும்ப கஷ்டத்தை தீர்க்க வங்கி கொள்ளை!

பொம்மைத் துப்பாக்கி திருடர்!  ஹைதராபாத்தைச் சேர்ந்த டெக் ஊழியர் வங்கியில் துப்பாக்கி முனையில் கேஷியரை மிரட்டி இரண்டரை லட்சம் கொள்ளையடித்தார். ரிசல்ட்? காமெடிதான். மணிகொண்டா பகுதியிலுள்ள தனியார் வங்கியில் மாலை 3.30 க்கு பர்தா அணிந்து வந்த டேவிட் பிரவீன், நேராக கேஷியர் சிவசங்கர் கேபினுக்கு சென்றார். பொம்மைத்துப்பாக்கியை நீட்டி ஜஸ்ட் 2.5 லட்ச ரூபாயை அசால்டாக கேட்டார். கொடுக்க மறுத்த சிவசங்கரை   கன்னத்தில் குத்தி பணத்தை எடுத்துக்கொண்டு ஓடியவரை வங்கி ஊழியர்கள், மக்கள் விடாப்பிடியாக துரத்தினர். உடனே டம்பி வெடிகுண்டை வெடிச்சு உங்களுக்கு இப்பவே அட்வான்சாக தீபாவளி கொண்டிடுறேன் என மிரட்டிய பிரவீன் வேகமாக ஓடி காரில் ஏறி தப்ப முயன்றார். ஆனால் மக்கள்கூட்டம் அவரது மிரட்டலை காதிலேயே வாங்காமல் அங்கேயே போட்டு புரட்டி எடுத்து போலீசில் ஒப்படைத்தது. ஐ.டியில் புதிய வேலைக்கு மாறிய பிரவீனுக்கு, சம்பளம் போடாமல் கம்பெனி இழுத்தடித்தது. ஸ்கூல்பீஸ், வீட்டுச்செலவு என பிரச்னைகள் வெடிக்க பிளாஸ்டிக் பிஸ்டல், டம்மி பாமுடன் பிரவீன் வங்கியை கொள்ளையடிக்க கிளம்பிய வீரதீர கதையை ஹைதரபாத் போலீஸ் பா

அமெரிக்கா செல்வது கஷ்டம்!

படம்
இனி அமெரிக்கா செல்வது கஷ்டம்! – அமெரிக்காவில் H1B விசா விதிகளை அதிபர் ட்ரம்ப் மேலும் இறுக்கியுள்ளார். அமெரிக்காவின் திடீர் கெடுபிடியால் இந்தியர்களின் அயல்நாட்டு கல்வி மற்றும் வேலைக்கான ஸ்பாட்களாக கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகள் மாறியுள்ளன.   அமெரிக்கர்களின் வாக்குகளைப் பெற அமெரிக்க பொருட்களை வாங்குவோம், வேலைக்கு அமெரிக்கர்களை அமர்த்துவோம் என தேர்தல் பேரணிகளில் இனவெறுப்புடன் முழங்கி வருகிறார் அதிபர் ட்ரம்ப். “அகதிகளின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் ஒரேநாடு, அமெரிக்காதான்” என மெக்சிகோ எல்லையில் அமெரிக்காவில் நுழைய காத்திருக்கும் அகதிகளை எதிர்த்து ஆக்ரோஷமாக பேசியுள்ளார் ட்ரம்ப். அமெரிக்க சட்டத்தின் 14 பிரிவில் அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை தரும் பிரிவை ட்ரம்ப் மாற்றுவதற்கு முயற்சிப்பாளர் என்ற அச்சம் தற்போது மக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்க நிறுவனங்கள் இந்தியா, சீனா உள்ளிட்ட வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்துவதற்கு பல்வேறு கெடுபிடிகளை அமெரிக்கா விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.    

ஓய்வூதியத்தில் இலவச பேருந்து - அசத்தும் டாக்டரின் சேவை!

படம்
ஓய்வூதியப் பணத்தில் மகளிர் பேருந்து வயதான காலத்தில் கிடைக்கும் பென்ஷன் பணத்தை மருத்துவம், ஆன்மிக பயணம் என ஜாலியாக செலவு செய்வதை பார்த்திருப்போம். இலவசபேருந்தை மாதச்செலவு செய்து இயக்குவார்களா? ராஜஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் பென்ஷன் பணத்தில் பெண்கள் கல்லூரிக்கு செல்ல பேருந்தை இயக்கி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு காரில் ராமேஷ்வர் பிரசாத் தன் மனைவியுடன் ராஜஸ்தானிலுள்ள சுரி என்ற பூர்விக கிராமத்துக்கு சென்றார். வழியில் மழை பெய்யத்தொடங்க, காரின் வேகத்தை குறைத்தவர் சாலையோரத்தில் பேருந்தை எதிர்பார்த்து கல்லூரி செல்வதற்காக தவிப்புடன் நின்ற மாணவிகளைப் பார்த்தார். விபரம் கேட்டு காரில் ஏற்றிக்கொண்ட ராமேஷ்வர்பிரசாத் யாதவ், பதினெட்டு கி.மீ தொலைவிலுள்ள காட்புட்லியிலுள்ள கல்லூரியில் அவர்களை இறக்கிவிட்டார். காரில் மாணவிகளிடம் பேசும்போதுதான் தினசரி கிராமத்திலிருந்து பேருந்து நிறுத்தம் வரவே 6 கி.மீ நடக்கவேண்டுமென்பதும் அதன்பிறகு அரசு பேருந்துக்கு மணிக்கணக்கில் காத்திருந்து இளைஞர்களின் கேலி கிண்டல்களை சகித்து கல்லூரிக்கு வரவேண்டுமென்பதும் ராமேஷ்வர் தெரிந்துகொண்டார். இதற்கு ஏ

கெட்அப் மாற்றி கொல்லும் சைக்கோ!

படம்
டியாகோ ஹென்ட்ரிக் கோம்ஸ் பிரேசில் செக்யூரிட்டியான டியாகோ, முகம் தெரியாதவர்களின் பைக்கில் லிஃப்ட்கேட்டு ஏறி 39(2011-14) பேர்களை சுட்டுக்கொல்வது இவர் ஹாபி.ஆதரவற்ற, தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களை அதிகம் கொன்றவர், 12 பேர்களை கொன்றதற்காக 25 ஆண்டுகளை சிறைதண்டனை அனுபவித்து வருகிறார். யாங் ஜின்ஹாய்(1968-2004) சீனாவின் ஹெனன் பகுதியில் பிறந்த யாங், கப்சிப் புத்திசாலி. 1985 ஆம் பள்ளியிலிருந்து வெளியேறியவர் கூலித்தொழிலாளியாக மாறினார். தினசரி வித்யாசமான உடைகளில் வீட்டில் பழுதுபார்ப்பவராக நுழைந்து கற்பழித்து கொலைசெய்வது வாடிக்கை. 67 கொலை, 23 கற்பழிப்பு குற்றங்களுக்கு தண்டனையாக சுட்டுக்கொல்லப்பட்டார் யாங். ரிச்சர்ட் ராமிரெஸ்(1960-2013) லாஸ் ஏஞ்சல்ஸ், சான்பிரான்சிஸ்கோவில் வீடுபுகுந்து திருட்டு, கற்பழிப்பு, கொலை ஆகியவற்றை காம்போவாக செய்ய இயக்குநர் ராஜமௌலி போல யோசித்து வித்தியாச ஆயுதங்களை நாடினார். மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்தபோது நோய்தாக்குதலால் இறந்துபோனார்.  

சிஎன்என் ஜிம் அகோஸ்டா - ட்ரம்மை வைத்த செய்தியாளர்!

படம்
ட்ரம்பை வதைத்த செய்தியாளர்! வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சிஎன்என் நிருபர் ஜிம் அகோஸ்டா கேட்ட கேள்வியால் டரியலான அதிபர் ட்ரம்ப், ஜிம் வெள்ளை மாளிகையில் நுழைவதற்கான அனுமதியை ரத்து செய்துள்ளார்.  இதுதொடர்பாக சிஎன்என் தொடர்ந்த வழக்கில், வெள்ளை மாளிகையில் நிருபர்கள் நுழைவதற்கான அரசியல் சட்ட அனுமதி கிடையாது என கூறியுள்ளது ட்ரம்ப் அரசு. நவ.7 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அகதிகள் பிரச்னை பற்றி திரும்ப திரும்ப ஜிம் கேட்ட கேள்விகள் ட்ரம்பை சங்கடப்படுத்த, மேடையிலேயே அவரை வசைபாடினார் ட்ரம்ப். பின்னர் வெளியான வீடியோவில் ஜிம் மீது வெள்ளை மாளிகை பெண் ஊழியர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அது போலி என பின்னர் நிரூபணமானது.  சிஎன்என் இதுதொடர்பாக தொடர்ந்த வழக்குக்கு ஃபாக்ஸ் நியூஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. 1962 ஆம் ஆண்டு கியூபாவிலிருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த வந்த ஜிம் அகோஸ்டா, ரேடியோவில் பத்திரிகைப்பணியைத் தொடங்கி பின்னர் டிவி சேனல்களுக்கு மாறியவர். 2007 ஆம் ஆண்டிலிருந்து சிஎன்என் சேனலில் பயணியாற்றிவருகிறார். ஒபாமாவின் கியூப பய

காமிக்ஸ் பிதாமகன்!

படம்
காமிக்ஸ் பிதாமகன்! ராணிகாமிக்ஸ், முத்து காமிக்ஸ் படித்து வளர்ந்தவர்களுக்கு ஸ்பைடர்மேன், அயர்ன்மேன் படங்கள் பிடிக்காமலிருக்காது. நிஜ உலகின் அத்தனை கவலைகளையும் மறக்கவைக்கும் மாயாஜால மெய்நிகர் உலகத்தை காமிக்ஸ் இன்று அனிமேஷன், திரைப்படங்கள் வழியாக உருவாக்கிவிட்டது. அன்று ராணி காமிக்ஸின் முகமூடி வீரர் மாயாவி, இரும்புக்கை மாயாவி, லேடி மாடஸ்தி, கரும்புலி ஆகிய கேரக்டர்களை மறக்க முடியுமா?  அப்படி காமிக்ஸாக இருந்த புத்தக நிறுவனம் திரைப்பட தயாரிப்பில் முன்னோடியாக இருக்கிறது என்றால் அது டிஸ்னியின் மார்வெல்  மட்டுமே.  மார்வெல் காமிக்ஸை யுனிவர்ஸாக மாற்றிய உழைப்புக்கு சொந்தக்காரர், ஸ்டான்லீ. 1922 ஆம் ஆண்டு டிச.28 அன்று அமெரிக்காவின் மன்ஹாட்டனில் பிறந்த ஸ்டான்லீ, பத்து வயதிலேயே ஷேக்ஸ்பியர், ஆர்தர் கானன் டாயில், மார்க் ட்வைன் ஆகியோரின் நூல்களை வாசிக்கத் தொடங்கிவிட்டார். ரோமானியாவை பூர்விகமாக கொண்ட ஸ்டான்லீ, டெவிட் பள்ளியில் படித்தார்.  தீவிர இலக்கியவாதி வேட்கையில் பல்வேறு வேலைகளை பார்த்தவர், டைம்லி பப்ளிகேஷன் என்ற தனது உறவினரின் கம்பெனியில் வாரத்திற்கு 8 டாலர்கள் சம்ப