இடுகைகள்

இறப்பு என்பது இயல்பானது!

படம்
இறப்பு என்பது சாதாரணமானது! மரு. காத்தரின் மானிக்ஸ் நான் முப்பது ஆண்டுகளாக பேலியேட்டிவ் துறையில் பணியாற்றி வருகிறேன். ஏறத்தாழ நோயாளிகளின் இறுதிக்கணங்களில் அவர்களின் இயல்பை, உயிர் பிரியும் கணத்தின் துயரத்தை கண்டிருக்கிறேன். இறப்பு என்பது நாம் பேச தயங்கும் உண்மை. நம்மைச் சுற்றியுள்ள டிவி, சினிமா என அனைத்தும் இறப்பை சோகம், துக்கம் என பெயர்மாற்றி மக்களின் மனங்களை கெடுத்துள்ளன. நோய்கள் உடலின் தன்மையை மாற்றி ஆற்றலை குறைக்கின்றன. தூக்கம் மீண்டும் ஆற்றலைப் பெற உதவுகிறது. மீண்டும் நாம் எழுந்ததும் ஆற்றல் செலவாகத் தொடங்குகிறது. இதில் இறப்பு நிகழும்போது நாம் இழப்பது நிரந்தரமாக சுயநினைவு என்ற ஒரு தன்மையை மட்டுமே.  இறப்பில் கூடுதலாக நிகழ்வது, உள்ளே வரும் காற்று வெளியேறும் சக்தியை உடல் இழப்பதுதான். மெல்ல மூளையின் இயக்க ஆற்றல் குறைந்து எச்சில் மெல்ல தொண்டைக்குழியில் தேங்கும்.  இதன்விளைவாக மூக்கில் அவை வெளியேறும் வாய்ப்பு உள்ளது.  நன்றி:சயின்ஸ்போகஸ்

சுமோ தேய்கிறதா?

படம்
சுமோ சக்தி! சுமோ வீரர்கள் சண்டையிடும் மைதானத்தின் சுற்றளவு 4.55 மீட்டர். சுமோ வீரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 23. சுமோ வீரர்கள் இடுப்பில் அணியும் மாவஸி என்ற பட்டு உடையின் நீளம் 30 அடி. 1930, 1940 ஆம் ஆண்டு சாம்பியன் சுமோ வீரர் ஃபியுடுபாயாமாவின் எடை 138 கி.கி இந்த விளையாட்டில்(Dohyo) பெண்கள் புனிதத்தை கெடுத்துவிடுவார்கள் என பெண்களை சுமோ அரங்கில் அனுமதிப்பதில்லை. வீரர்களாக என்று நீங்கள் புரிந்துகொண்டால் போதும். ஜப்பானில் உருவாகி வரும் பெண் வீரர்களை சுமோ அசோசியேஷன் அனுமதிக்க மறுத்து வருகிறது. அழியும் விளையாட்டு என கூக்குரல் இட்டாலும் அதைப்பற்றி கேட்போர்தான் யாருமில்லை. கடந்த ஜூனில் சுமோ விளையாட்டு வரலாற்றில் இரண்டாம் முறையாக உடல் தகுதி சோதனையை சுமோ சங்கம் ரத்து செய்தது. இதற்கு காரணம், சுமோ விளையாட்டிற்கு வீரர்கள் யாரும் அப்ளை செய்யாததுதான். சுமோ சங்கத்தின் கடுமையான விதிகள்  புதிய வீரர்களின்  ஆர்வத்திற்கு தடைபோடுவது உண்மை. கூடவே ஜப்பானில் குழந்தைகள் பிறப்பும் குறைந்துள்ளது என்ற காரணத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும். 

பாலினப்பாகுபாடு அதிகரித்துள்ளது!

படம்
பாலினப் பாகுபாடு பயங்கரம்! இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாலினப்பாகுபாடு தீவிரமாக உள்ளது என்பதை நிதி ஆயோக் அமைப்பு தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.  சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பெண்களுக்கு பாரபட்ச அணுகுமுறை உள்ளதாக நிதி ஆயோக் கருத்து தெரிவித்துள்ளது.  2001 ஆம் ஆண்டில் 927 என்ற பெண்களின் எண்ணிக்கை 2011 ஆம் ஆண்டு 919 என்ற எண்ணிக்கையாக குறைந்துள்ளது. கல்வி அறிவில் ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்கள் 65 சதவிகிதம் தான் என்கிறது நிதி ஆயோக் அறிக்கை. 

நிலவில் சீனா!

நிலவின் அறியாத பக்கத்தில் சீனா! நிலவின் அறியாத பக்கத்தில் தெற்குப்புறமாக சீனாவின் சாங்4 விண்கலம் இறங்கியுள்ளதாக சீன ஊடகங்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் உள்ளன. ஆனால் இந்த மகிழ்ச்சிகர செய்தியை சீனாவின் சீனா டெய்லி, மற்றும் சிஜிடிஎன் ஊடகங்கள் பகிர்ந்துகொண்டு அதனை அழித்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எதற்கு திடீரென நிலவுப்பயணம்? அதிலுள்ள கனிமங்களைக் குறித்து அறியத்தான். ”சீனா உலகளவில் மிகப்பெரும் சக்தியாக வளர்ந்துவருவதற்கு சிறந்த சாட்சி இது. சீனாவின் அதிகார வளர்ச்சிக்கு விண்வெளியும் தப்பாது” என புகழ்ந்துள்ளார் ஆஸ்திரேலியாவின் கொள்கை கழகத்தைச் சேர்ந்த மால்கம் டேவிஸ். அசத்தும் சாதனை என வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது நாசா. அமெரிக்கா, ரஷ்யாவின் வழியில் பயணிக்கும் சீனா விரைவில் நிலவுக்கு டைக்னோநட் எனும் தன் நாட்டு விண்வெளி வீரர்களை அனுப்பும் வாய்ப்பு இதன் மூலம் உறுதியாகி உள்ளது. பிறநாடுகளை ராணுவ பலம் மூலமும், கடன்களை கொடுத்து வளைக்கும் சீனா, விரைவில் விண்வெளியிலும் தன் ஆதிக்கத்தை நிறுவ வாய்ப்பு உள்ளது.

புதையல் டைரி என்ன சொல்கிறது?

படம்
புதையல் டைரி யெஸ்.பாலபாரதி பாரதி புத்தகாலயம் விகடனில் மரப்பாச்சி சொன்ன ரகசியம் என்ற நூலுக்காக பாலபாரதி விருதுபெற்றிருக்கிறார். இந்த நேரத்தில்தான் அவரது புதையல் டைரி என்ற நூல் வாசிக்க கிடைத்தது. மகேஷின் கைவண்ணத்தில் ஓவியங்கள் அனைத்தும் நேர்த்தியாக உள்ளன. ஜான்சனின் தாத்தா இறந்துவிடுகிறார். தன் பேரனுக்கு பரிசாக ஒரே ஒரு டைரியை விட்டுச்செல்கிறார். அதில் பல்வேறு புதிர்கள். நண்பர்கள் எப்படி புதிர்களை விடுவித்து பொக்கிஷத்தை அடைகிறார்கள் என்பதே கதை. புதிர்கள் அனைத்தும் சிறுவர்களின் புத்திக்கு ஏற்றபடி கிடையாது. சில இடங்களில் ஸமீரா, சில இடங்களில் சர்ச் பாதிரியார் என உதவி வழிகாட்டுகிறார்கள். இறுதியாக தாத்தா தன் பேரனுக்கு என்ன பரிசை தந்துவிட்டு சென்றார் என்பது நீங்கள் வாசித்து அறிய வேண்டியது அவசியம். கணிதம், வேதியியல், அளவீடுகள், சமயோசித திறன் என அனைத்து விஷயங்களையும் நூலில் பயன்படுத்தி கதையையும் சுவாரசியப்படுத்தி உள்ளார் பாலபாரதி. இவரது உழைப்பிற்கு சான்றாக விடுகதைகளின் இறுதி முடிச்சை அவிழ்க்கும் ஸமீராவின் பெயரைக் கூறலாம். இஸ்லாமிய தளங்களில் இப்பெயருக்கான அர்த்தத்தை தேடியபோது,

தீவிரவாத தாக்குதல்களை கணக்கு போட்டு தடுக்கலாமா?

படம்
கணக்கு போட்டு தீவிரவாத தாக்குதல்களை குறைக்க முடியுமா? முடியும் என தீர்மானமாக பேசுகிறார் மியாமி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நீல் ஜான்சன். தொண்ணூறுகளில் கொலம்பியா சென்று அரசுக்கும் தீவிரவாத குழுக்களுக்குமான தாக்குதல்களை ஆராய்ந்து இந்த துணிச்சலான உண்மையை கண்டுபிடித்திருக்கிறார். “ செய்தி சேனல்களை பார்த்தபோது ஐந்து, இரண்டு, ஆறு என மாறுபட்ட எண்ணிக்கையில் இறப்புகள் நிகழ்ந்தன. எனவே அதனை வைத்து கிராப் ஒன்றை தயாரித்தோம்.” என்கிறார் ஜான்சன்.  பின்னர் பொருளாதார பேராசிரியர் மைக் ஸ்பாகட் கொலம்பியாவின் 20 ஆயிரம் தாக்குதல்களை ஆராய்ந்து கிராப்பினை செம்மை செய்திருக்கிறார். கிராபின் ஒருமுனை குறைந்த தாக்குதல்களில் அதிக இறப்பு, அதிக தாக்குதல்களில் குறைந்த இறப்புகள் என இரண்டு தன்மையையும் சுட்டிக்காட்டுகிறது. இது அப்படியே இராக் நாட்டிற்கும் பொருந்துகிறது. இதனை பவர் லா என குறிப்பிடுகிறார்கள். இதன் மூலம் தீவிரவாத தாக்குதல்களை கணிக்க முடியுமா?  ”9/11 தாக்குதலில் 2,996 பேர் பலியாயினர். ஆனால் இதன் பலி அளவு 30 சதவிகிதம்  என்பதை வைத்து எப்போது அடுத்த தாக்குதல் நடைபெறும் எனவும் பலி எண்ணிக்கையும் கணிப

கட்டுரை நூல்கள் அறிமுகம் 2019

படம்
How to Date Men When You Hate Men by   Blythe Roberson நியூயார்க்கர் இதழில் காமெடிகளை கொளுத்திப்போட்டு எழுதும் ராபர்சன், ஆண்களும் பெண்களும் இணைந்து செல்லும் டேட்டிங் பற்றிய நிகழ்வுகளை காமெடியுடன் அணுகி எழுதியுள்ளார். திறந்த மனதுடன் நீங்கள் படித்தால் நூல் ருசிக்கும்.  Thick: And Other Essays by   Tressie McMillan Cottom இன்று நீங்கள் பேசும் காசு, பணம், இனவெறி என அத்தனை விஷயங்களையும் பற்றி கட்டுரை ஆசிரியர் தெளிவாக பேசியுள்ளார். கருப்பின பெண்களின் பைபிள் என சொல்லும்படி அவர்களின் நிலைமை குறித்து எழுதியுள்ளது ஈர்க்கிறது.  How to Hold a Grudge: From Resentment to Contentment—The Power of Grudges to Transform Your Life by   Sophie Hannah   பகையுணர்ச்சி என்பது தவறானது என்று பலரும் கூறியிருப்பார்கள். அதனை எப்படி வாழ்க்கைக்கு ஏற்றாற்போல ஆற்றலாக மாற்றுவது என கற்றுக்கொடுக்கிறார் சோபி ஹன்னா.  Team Human by   Douglas Rushkoff உலகில் ஏற்படும் பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு, மனிதர்கள் ஒன்றாக இணை

கிளிப்பேச்சு சீக்ரெட்ஸ்!

படம்
கிளிகள் எப்படி பேசுகின்றன? கிளிகள் எப்படி ஜோசியம் பார்க்கிறதோ அதேபோல்தான். காமெடி இல்லை. பழக்கம்தான். சாதாரணமாகவே பிற கிளிகளின் குரல்களை மிமிக்ரி செய்வது இதன் வேலை. மனிதர்கள் கூண்டில் அடைத்து தானியங்கள் கொடுப்பதால், சமத்காரமாக அவர்களின் வார்த்தைகளை அப்படியே இமிடேட் செய்து பேசும். நல்லதோ கெட்டதோ வார்த்தைகளை திரும்ப கூறும் திறன் கொண்டது கிளி. பொதுவாக 25 ஆண்டுகள் வரை ஆயுள் உண்டு. 

சிட்ரஸ் மணத்திற்கு உள்ள சக்தி!

படம்
எலுமிச்சை மணம் சுத்தத்தின் அடையாளமாக கருதப்படுவது ஏன்? எலுமிச்சைகள் ஆரம்ப காலம் தொட்டே வீடுகளை சுத்தப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகின்றன. செம்பு பாத்திரங்களை சுத்தப்படுத்த எலுமிச்சை சாறும், மரச்சாமான்களை பளிச்சென மாற்ற எலுமிச்சை தோல்களும் பயன்படுகின்றன. இதன்காரணமாகவே, பாத்திரம் விளக்கும் விம் பார் முதல் குளியல் சோப்கள் வரை எலுமிச்சை பிரதானமாக மாறியது. அதன் வாசனை சுத்தத்தின் அடையாளமாக மாற்றப்பட்டது. இன்று ஏராளமான சுத்தப்படுத்தும் பொருட்கள் லாவண்டர், மல்லிகை என வந்தாலும் எலுமிச்சை தனது இடத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு விட்டது. உண்மையில் சிட்ரஸ் மணம் என்பது சுத்தமாகிவிட்டதை நம் மனதில் உறுதியாக நம்ப வைக்கிறது என்றே கூறலாம்.

சோறு முக்கியம் பாஸ்! -

படம்
சோறு தேடும் காக்கைகள்! வேலை அமைவதும். அதன் கூடவே நண்பர்களின் ஜாகை அமைவதும் சாதாரண விஷயமல்ல. வேலை காரணமாக பெருங்குடிக்கு கிளம்பியபோது வயிற்றில் மெட்ரோ ரெயில்கள் டஜன் பெட்டிகளோடு மேலேறி சறுக்கின.பின்னே சோறு முக்கியமில்லையா?  நினைத்ததற்கு மாறாக இருந்த அத்தனை கடைகளும் எலைட். கம்பெனியில் சம்பளம் போடவே மேலேயும் கீழேயும் பார்ப்பார்கள். என்ன செய்வது? எலைட் கடைகளை புரட்டிப்போடுட  சாப்பிட நானென்றும் சீப் எடிட்டர் சக்தி இல்லையே? உணவு தேடி ருசிக்கு சாப்பிடுவதில் அவர் கைதேர்ந்தவர். இப்படி நாங்கள் புகுந்து அலாசியதில் எங்களுக்கு நேரெதிரான போட்டி ஐடி ஆட்கள்தான். உள்ளேயே புட்கோர்ட் இருந்தாலும் ஒரு பயலும் உள்ளே உட்கார்ந்து கார்டு தேய்த்து சாப்பிடுவதில்லை. அத்தனை பேரும் நேராக கேரளா கடை, அல்லது ஆந்திரா மெஸ்ஸூக்கு வந்து பனிரெண்டு பேர் உட்காருகிற டேபிளை குத்தகைக்கு எடுத்து விடுகிறார்கள். ஆம்லெட், சிக்கன் என தின்று கொழுப்பதால் நாங்கள் சென்றால் ஜனதா சாப்பாடு டிக்கெட் வந்தது போல பாந்தமான கவனிப்பு. என்ன செய்வது? பாபு பப்பு வரலை என்று கூவித்தொலைத்து தின்றுவிட்டு கல்லாவிலுள்ள பழத்தை முறித்து தின்ற

இங்கிலாந்தில் மைக்ரோ மோட்டார் அமலானது!

படம்
மைக்ரோ மோட்டார் இங்கிலாந்தில் அணுவுலை பகுதிகளில் வேலை செய்வதற்காக மைக்ரோ ரோபோட்களை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த மைக்ரோ ரோபோட்களை இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் தயாரித்துள்ளன. இதனை அரசு பயன்படுத்தவுள்ளது. நீருக்கடியில், மனிதர்களால் செல்ல முடியாத  வாயு அழுத்தமிக்க இடங்களில் மைக்ரோ ரோபோட்டுகள் செயல்படவிருக்கின்றன. சுரங்கம் உள்ளிட்ட இடங்களில் ரோபோட்டுகளை பயன்படுத்துவதற்காக அரசு 26.6 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது. பிர்மிங்காம், பிரிஸ்டல், லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுக்கு 7.2 மில்லியன் டாலர்களை அரசு மானியமாக அளித்துள்ளது. ”இம்முறையில் சாலைகளில் ஏற்படும் உடைப்புகளை மைக்ரோ ரோபோட்டுகள் சரி செய்யும். இதன்விளைவாக மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் தவிர்க்கப்படும். ” என்கிறார் பேராசிரியர் கிரில் ஹோரோஷென்கோவ்.