இடுகைகள்

கண்களைப் பார்த்து நோயை சொல்லலாமா?

படம்
கண்களைப் பார்த்து நோய் அறியலாம் டாக்டர் கண்களில் டார்ச் அடித்துப் பார்த்து நம் நோய் அறிகுறிகளை அறிகிறாரல்லவா அதேதான். உடலில் ஏற்படும் அனைத்து நோய்களையும் எளிதாக கண்களைப் பார்த்தே அறியலாம் என்கிறது புதிய மருத்துவ ஆராய்ச்சிகள். “உங்களுடைய கண்களின் பாதிப்பைப் பொறுத்து உடலில் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அறியலாம்.” என்கிறார் அறிவியல் ஆராய்ச்சியாளரும் மிசௌரி பல்கலைக்கழக பேராசிரியருமான ஹையூப் கிம்.  பலரும் இன்று மல்ட்டி டாஸ்க்கிங் செய்யும் மன்னவர்கள்தான். ஆனால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் வெளித்தெரிந்தாலும் மனநலனில் ஏற்படும் பாதிப்புகளை அறிவது கடினம். தொழிற்சாலை பணியாளர், அலுவலக பணியாளர் என அனைவருக்குமான அளவீடாக இதனை வரையறுக்க கிம் முயற்சித்து வருகிறார். பல்வேறு பணிகளை செய்பவர்களையும் கருத்தில் கொண்டுள்ளனர். மோஷன் கேப்சர் மற்றும் கண்களை ட்ராக் செய்யும் வசதி மூலம் நம் உடலின் தன்மைகளை அறிய முடியும். curiosity

ஏன்?எதற்கு?எப்படி? - விஆர் ஹெட்செட் பயன்படுத்தலாமா?

படம்
SF ஏன்?எதற்கு?எப்படி? விஆர் ஹெட்செட் ஆபத்தானவையா? ரெடிபிளேயர் ஒன் படம் போல மெய்நிகர் உலகை காட்டும் திறன் கொண்டது விஆர் ஹெட்செட். மிதமிஞ்சி பயன்படுத்தினால் என்றைக்குமே ஆபத்துதான். அது தலைவலியைத் தருகிறது என்று புகார்கள் கிளம்பியுள்ளன.  3டி யை எடுத்துக்கொள்ளுங்கள். காட்சிகள் சினிமா தியேட்டரில் பிரமாதமாக இருந்தாலும் சிறிது நேரத்திலேயே நம் கண்களுக்கு பொருந்தாத அக்காட்சிகளின் முப்பரிமாணம் கண்களை வருத்துகிறது. அதே விஷயம் விஆர் ஹெட்செட்டுக்கும் பொருந்தும். அண்மையில் லீட்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் விஆர் ஹெட்செட்டைப் பயன்படுத்திய சிறுவர்களுக்கு கிட்டப்பார்வை, தூரப்பார்வை பிரச்னை ஏற்பட்டதாக ஆய்வு முடிவை தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் விஆர் ஹெட்செட் பிரச்னை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. நிஜ உலகை மறந்து விளையாட்டுக்குள் புக முக்கியமான விஷயம், கண்களை மறைப்பது. விஆருக்கான படங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஏ.ஆர். ரஹ்மான் தான் இயக்கிய படத்தை இம்முறையில் வெளியிடும் ஐடியாவை கூறியது பலரது கவனத்தையும் ஈர்த்தது. 

இதயத்தைக் காப்பாற்றும் டெக்னிக் என்ன?

படம்
SF இதயத்தை காப்பாற்றுவோம்! 1976 ஆம் ஆண்டு மருத்துவத்துறைக்கு மறக்கமுடியாத ஆண்டு. அந்த ஆண்டுதான் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் மைக்கேல் டேவிஸ், இதயத்தில் ஏற்படும் ரத்த அடைப்பு பற்றி கண்டுபிடித்தார். இதன் விளைவாக பல்லாயிரம் இதய நோயாளிகள் காப்பாற்றப்பட்டனர். கொழுப்பு படிந்து ரத்தக்குழாய் அடைத்துக்கொள்வது, அதனை சரி செய்வது, ஆக்சிஜன் போதாமை, ரத்தக்குழாய் அடைப்புக்கான புதிய கண்டுபிடிப்புகள் என மருத்துவத்துறை யோசிக்கத் தொடங்கியது அப்போதுதான். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதயக்குழாய்களில் கெட்ட கொழுப்பு படிந்து இறப்பு நேரிடும் அளவு, நான்கு மடங்கு அதிகமாக இருந்தது. இன்று என்ன மாறியிருக்கிறது. பெரியளவு மாற்றமில்லை. இன்றும் கூட இங்கிலாந்தில் ஏழுபேர்களுக்கு ஒருவர் என்ற அளவில் இதயநோய் மனிதர்களை தின்று வருகிறது. அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் ”இதயநோய் ஆராய்ச்சியில் நாம் போகவேண்டிய தொலைவு அதிகம். இதில் புதிய கண்டுபிடிப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்கிறார் ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான மெடின் அவ்கிரன். இதயத்தில் ஸ்கேன் செய்வது, ஸ்டென்ட் வைப்பது, அறுவை சிகிச்சை என நோய்க்கு ஏற்றபட

இஸ்ரோவின் 2019 திட்டம் இதுதான்!

படம்
இஸ்ரோ அடுத்த என்ன செய்யப்போகிறது? சந்திரயான் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வியில் நிலவுக்கான பயணம் தொடங்கவிருக்கிறது. இதில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என மூன்று சாதனங்கள் இருக்கும். நிலவை ஆர்பிட்டர் நூறு கி.மீ அளவுக்கு நின்று சுற்றிவரும். ஆறு கால்களைக் கொண்ட ரோவர் நிலவின் மண்ணை சோதிக்கும். ஆர்பிட்டர் நிலவின் மண்ணை படம் பிடித்து அதிலுள்ள கனிமங்களை , கதிர்வீச்சுகளை, நீரின் தடத்தை படம் பிடிக்கும். லேண்டர் நிலவின் உள்பரப்பு தன்மையை கண்டறிய முயற்சிக்கும். சிறிய செயற்கைக் கோள்கள் SSLV 2019 ஆம் ஆண்டின் மத்தியில் சிறிய செயற்கைக் கோள்களை  இஸ்ரோ விண்ணில் ஏவவிருக்கிறது. நானோ மைக்ரோ செயற்கைக்கோள்களை ஏற்றியபடி 500 கி.கி எடையை விண்ணில் கொண்டு செல்லும் திறனுடன் ராக்கெட்டுகள் இருக்கும். அசெம்பிள் செய்ய 48 மணிநேரங்கள் மட்டுமே தேவை. ADITYA L1 நாசாவின் பார்க்கருக்கு போட்டியாக இஸ்ரோ சூரியனை ஆராய உருவாக்கவிருக்கும் செயற்கைக் கோள் இது. எடை 800 கி.கி. பூமியிலிருந்து 1.5 மில்லியன் கி.மீ தள்ளி நிலைநிறுத்தப்படும். சூரியனின் தோற்றம், அதன் தன்மை குறித்து ஆராய்வதே லட்சியம்

எம்.முகுந்தனின் தாய்ப்பால் எப்படி? - புத்தகத்திருவிழா 2019 ஸ்பெஷல்

படம்
புத்தக விமர்சனம் தாய்ப்பால் மலையாள மூலம்: எம்.முகுந்தன் தமிழில்: தி.சு. சதாசிவம் சாகித்திய அகாதெமி எம்.முகுந்தனின் கடவுளின் குறும்புகள் என்ற நூலை மட்டுமே முன்னர் படித்த நினைவு. ஆனால் இச்சிறுகதைகள் வேறு ரகம். இருபதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள் நேரடியான கதை சொல்லும் முறை போல படிக்கும் போது தோன்றும். இடையில் அப்படியே கதையை மூடுபனியாக சில உணர்ச்சிகள் மறைக்க வாசகனுக்கு எழும் திகைப்புதான் முகுந்தனின் வெற்றி . தாய்ப்பால் கதை தரும் திகைப்பு வேறுவிதமானது. சிறுவனுக்கு பாலூட்டி, குழந்தைக்கும் பால் கொடுப்பதால் தாயின் உடல்நலம் கெடுகிறது. மருத்துவர் இது தவறான அணுகுமுறை என தடுத்தும் அம்மாவின் பாசம் அனைத்தையும் வெல்கிறது. ஆனால் கணவருக்கு பாசவெறியின் இறுதிக்கட்டம் கண்ணில் தெரிய மகனை தனியறையில் அடைத்து தாய்ப்பால் வெறியை தணிக்க முனைகிறார். என்ன ஆனது என்பது திகைக்க வைக்கும் இறுதிப்பகுதி. தொகுப்பிற்கு தாய்ப்பால் என்பது ஏன் பொருத்தமான பெயர் என அதிலேயே தீர்மானித்து கொள்ளலாம். புகைப்படத்தின் மையம் இன்றைய மீடூ காலத்திற்கு முன்பே எழுதப்பட்ட அதிரடி கதை. புகைப்படம் எடுக்கும் ஆசை சிறுமியை எ

அன்று முதல் இன்றுவரை - ரோபோக்கள் வரலாறு

படம்
ரோபோக்கள் வரலாறு 1939 மோட்டார்கள், போட்டோவோல்டைக் செல்களைப் பயன்படுத்தி ரோபோக்கள் உருவாக்கப்பட்டன. வெஸ்டிங் ஹவுஸ் எலக்ட்ரிக் கார்ப் கம்பெனியைச் சேர்ந்தவர் கண்டுபிடித்த எலக்ட்ரோ, இவ்வகையில் ஏழடி உயரம் கொண்டது. பேச, நடக்க, ஸ்டைலாக சிகரெட் புகைக்கும் திறன் கொண்டது. எடை 265 பவுண்டுகள். 1950 ஆலன் டூரிங், மனிதனைப் போல யோசித்து செயல்படும் மெஷினை உருவாக்க முயற்சித்தார். இதனை டூரிங் டெஸ்ட் என்று குறிப்பிட்டனர். 1969 இன்றைய தானியங்கி ரோபோ கைகளுக்கான அச்சாரம் அன்றே போட்டதுதான். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விக்டர் சீன்மென் ரோபோ கரத்தை உருவாக்கினார். 1973 ஜப்பானைச் சேர்ந்த வசிடா பல்கலைக்கழக பேராசிரியர் இச்சிரோ காடோ, வாபோட் -1 என்ற மனிதர்களை ஒத்த ரோபாட்டை உருவாக்கினர். 1999 அனைத்து எலக்ட்ரிக் பொருட்களையும் சுளுவாக போணி செய்யும் சோனி , பெட் விலங்கான அய்போவை உருவாக்கியது. ரோபோட்டிக் நாயான அய்போ, தன் எஜமானருடன் வளவளவென பேசும் தன்மை கொண்டது. 2000 சோனி பாய்ந்தால் ஹோண்டா சும்மாயிருக்குமா? அசிமோ என்ற ஹியூமனாய்டு ரோபோவை உருவாக்கியது ஹோண்டா. 2004 ஹெலிகாப

ஆணும் பெண்ணும் தனித்தனியே பரிணாம வளர்ச்சி பெறலாமா?

படம்
SF ஏன்?எதற்கு? எப்படி? ஆணும் பெண்ணும் தனித்தனியாக பரிணாம வளர்ச்சி பெற முடியுமா? ஆண் எண்பது வயது வரை விந்தணுக்களோடு வீரியம் குறையாமல் இருப்பது மனித குலத்திற்காகத்தான். ஆனால் பெண்களுக்கு இயற்கையின் கருணை நாற்பது வயதுடன் முடிந்துவிடும். ஆணுக்கும் பெண்ணுக்குமான வேறுபாடு ஹார்மோன்களில் மட்டுமல்ல குரோசோம்களிலும் உண்டு. ஒய் குரோசோம்களில் இருக்கிறது அத்தனை வேறுபாடுகளும். இதன்விளைவாக, ஆண், பெண் உடல்களில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்படுகின்றன. பரிணாம வளர்ச்சியில் மாற்றம் ஏற்படுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் டிஎன்ஏ எடிட்டிங் முறைகள், குளோனிங் என அறிவியல் அதிநவீனமாவதில் வாய்ப்புகள் உள்ளன. நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

ஹோலோகிராம் மனைவி - வருகிறது டிஜிசெக்சுவல்ஸ் கலாசாரம்

படம்
ஜப்பானின் டோக்கியோவைச் சேர்ந்த அகிகோ கோண்டோ என்ற கல்வி நிறுவனப் பணியாளர், கல்யாணத்தில் புதுமையைச் செய்துள்ளார். கடந்த நவம்பரில் சுற்றும் சூழ நாற்பது பேர் ஒன்றுசேர்ந்து வாழ்த்த  ஹட்சுனே மிகு என்ற ஹோலோகிராம் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். அகிகோ தன் ஹோலோகிராம் மனைவியுடன் ஆனால் இது பப்ளிசிட்டி கல்யாணம் அல்ல. உண்மையிலேயே காதலியை விரும்பி திருமணம் செய்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவு என்பது ரோபோக்களில் மட்டுமல்ல கேமராக்கள், பொருட்கள் என அனைத்து இடங்களிலும் பரவி வருகிறது. அப்புறம் படுக்கை அறைக்கும் வருவதற்கு என்ன? ஜப்பான் டைம்ஸ் அகிகோவின் கதையை வெளியிட்டு தவறானது என தீர்ப்பு எழுதியுள்ளது. ஆனால் யாரோ ஒருவர் தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கை குறித்து தீர்ப்பு எழுதுவதை எப்படி ஏற்க முடியும்? அகிகோ போல உலகில் யாருமே இல்லையா? 2016 ஆம் ஆண்டு பிரெஞ்சு பெண்மணி, ”தன்னால் ஆண்களோடு உறவு வைத்துக்கொள்ள முடியவில்லை. ரோபோக்களே பெஸ்ட். மனிதர்களில் ஆண்களுடன் காதலிக்க மட்டுமே என்னால் முடியும். செக்ஸ் வைத்துக்கொள்வது சாத்தியமில்லை ” என்று கூறியுள்ளார். இவர்களை டிஜி செக்ஸூவல் என்று குறிப்பிடுகின

முன்னோர்களைத் தேடி....

படம்
முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் சென்று வர வாய்ப்பு கிடைத்தால் எப்படியிருக்கும்? மனிதர்களின் முன்னோர்களை நீங்கள் நேரடியாக சந்திக்கலாம்.  அவர்கள் இரு கால்களைக் கொண்டவர்களாக அல்லது வேறுபட்டும் இருக்கலாம்.  இதே கனவைத்தான் ஆவணப்படமாக்கியுள்ளார் பிரெஞ்சு இயக்குநரான ஃபிரடெரிக் ஃபோகியா. ”நாம் அனைவரும் தெரிந்துகொள்ள விரும்பும் கேள்வி நாம் எங்கிருந்து வந்தோம் என்பது. நாம் யார், எங்கிருந்து வந்தோம், நமக்கான விதிகள் எப்படி உருவாயின, நமக்கான அரசியல் எது, ஆகியவற்றை இந்த ஆவணப்படம் உள்ளடக்கும் ” என்கிறார் ஃபிரடெரிக். இவர் இதற்கு முன்பு ஹனுமான், வைல்ட் பிரான்ஸ் ஆகிய ஆவணப்படங்களை எடுத்துள்ளார். 90 நிமிஷ ஆவணப்படத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட கேரக்டர்கள் உள்ளனர். உண்மையான பல்வேற உயிரினங்களின் மண்டை ஓடுகள், படிமங்கள் ஆகியவற்றை காட்சிபடுத்தியுள்ளனர். ரெவனனட் படத்திற்கான மேக்அப் குழு இந்த ஆவணப்படத்திற்கு பணிபுரிந்துள்ளது. “நம் முன்னோர்கள் எப்படியிருப்பார்கள் என்ற தெளிவுக்கு வரவே இரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சி தேவைப்பட்டது. அதனை சுவாரசியமாக சொல்லுவது என்பது அடுத்தகட்ட சவால். இதில் பங்கேற்

அடுத்த நொடியை நம்மால் தீர்மானிக்க முடியாது - லிசா ரே

படம்
லிசா ரே, கேன்சரால் பாதிக்கப்பட்டு உயிருடன் மீண்டிருக்கிறார். தற்போது 4 மோர் ஷாட்ஸ் ப்ளீஸ் என்ற அமேசான் ப்ரைம் தொடரில் நடிக்கவிருக்கிறார். 2018 ஆம் ஆண்டு உங்களுடைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக நீங்கள் தாயானது, நடிப்பு ஆகியவை.... ஜார்ஜியாவிலுள்ள காகஸ் மலைத்தொடருக்கு சென்று வந்தது அருமையாக இருந்தது. என் குழந்தைகளுடன் சென்று வந்த பயணம் அது. 2009 ஆம் ஆண்டு மைலோமா புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்ட நொடி தொடங்கி 2012 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டம் நெருக்கடியான நிலைகளைக் கொண்டது. 2018 ஆம் ஆண்டு என் குழந்தைகளை பிரசவித்தேன். மகிழ்ச்சியான நிகழ்வு அது. பொறுப்பு, தகவல் தொடர்பு என நிறைய விஷயங்கள் மாறியுள்ளன. குறிப்பிட்ட விதிகளின்படி வாழ்கிறீர்கள் என்று கூறியுள்ளீர்கள். அதைப்பற்றி விளக்குங்கள்.  நான் நடிகை என்பதை என் ஆழ்மனம் ஏற்க மறுக்கிறது. புற்றுநோய் சம்பந்தமான கட்டுரைகள், அனுபவங்களை முன்னமே நான் எழுதியுள்ளேன். யெல்லோ டையரீஸ் என்ற நூலை நீங்கள் படித்திருக்க கூடும். மேலும் பல்வேறு மேடைகளில் புற்றுநோய் பற்றிய தன்னம்பிக்கை பேச்சுகளை நிகழ்த்தியுள்ளேன். இவையெல்லாம் என

சந்தோஷ புத்தகங்கள்! - ஜனவரி ரிலீஸ்

படம்
ஜனவரி ஜனுஹேரி என இந்த ஆண்டுக்கான ட்ரெண்டுகள் கிளம்பிவிட்டன. ஜனவரி மாதத்திற்கான புத்தகங்களும் வெளியாகத்தொடங்கிவிட்டன. அதில் சில நூல்கள்: விழிகள் தெறிக்கும் நேரம் வரை படிப்பு, கடிகாரமுள் ஓவர்டைம் பார்க்கும் வேலை,  தொந்தி தள்ளும் வயிறு, பேங்க் பேலன்ஸைக் காட்டி அந்தஸ்தான கல்யாணம் என இவை இருந்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமா? ஹேப்பி எவர் ஆஃப்டர் நூலாசிரியர் பால் டோலன், இவற்றை மறுத்து தன் எழுத்து வழியே புது வழி காட்டுகிறார். வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒரு விதம் எனும்போது மேலே சொன்ன விஷயங்கள் எப்படி அனைவருக்கும் ஒன்றுபோல செட்டாகும் என யோசிக்க வைக்கிறது . உலகெங்கும் நியூஸ் எங்கில்லை. பாரம்பரிய சேனல்கள், பத்திரிகைகள் தாண்டி சமூகவலைதளங்கள் புதிய செய்திகளைச் சொல்லும் அதிவேக ஊடகங்களாகி பல ஆண்டுகளாகிவிட்டன. இந்த செய்தி சுனாமிகளிடமிருந்த நமக்கான அந்தர உலகைக் காப்பாற்றி எப்படி வாழுவது என்பதை ஆசிரியர் மேட் ஹைக் சொல்லுகிறார். சந்தோஷம் எப்படி உருவாகிறது என யோசித்திருக்கிறீர்களா? தந்தி முதல் தினகரன் வரை இதனை எப்படி அணுகி கட்டுரை எழுதுவார்கள்? டோபமைன், செரடோனின் என அறிவியல் முறையி