இடுகைகள்

5 ஜி போன்கள் ரெடி!

படம்
5ஜிக்கு ரெடியா? அரசு சம்மதிக்கிறதோ இல்லையோ சீனா 5 ஜி புரட்சிக்கு ரெடியாகிவிட்டது. சீனாவின் ஜியோமி, இசட் டி இ, ஹூவெய் ஆகிய நிறுவனங்கள் பார்சிலோனாவில் நடந்த மொபைல் வேர்ல்டு காங்கிரசில் தம் புரோடோடைப் மாடல்கள் மூலம் இதனை நிரூபித்து விட்டன. ஹூவெய் சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்தான். தற்போது 5 ஜி போனை உருவாக்கி விட்டது. மேட்  எக்ஸ் என்ற மாடல், சாம்சங்கின் மடக்கும் போனுக்கு நிகராக பார்க்கப்படுகிறது. தற்போது 4.6 ஜிபிபிஎஸ் வேகத்தில் தரவுகளை தரவிறக்க முடியும். இதற்கான சோதனையை ஹூவெய் செய்து பார்த்தது. ஆனால் விலை 2 ஆயிரத்து 600 டாலர்கள். மேட் எக்ஸ் என்ற போனும் மடக்கும் அம்சம் கொண்டதுதான். சாம்சங் தன் மடக்கும் போனை வரும் மே மாதம் விற்பனைக்கு கொண்டுவரவிருக்கிறது. ஜியோமி எம்ஐ போன் கம்பெனிதான். இவர்கள் மடக்கும் வகையிலான போனுக்கு மெனக்கெடவில்லை. ஆனால் 5ஜி போனுக்கான விஷயங்களை ரெடி செய்துவிட்டனர். 2 ஜிபிபிஎஸ் வேகத்தில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. 680 டாலர்கள் செலவில் விற்கப்படும் என தெரிகிறது. இசட் டி இ  ஹூவெய்க்கு இணையான நிறுவனம்தான் இது. விரைவில் இசட் ட

பில்கேட்சிற்கு பிடித்த நூல்களில் சில....

படம்
ஐ கன்டைன் மல்டியூட்ஸ் எட் யங் வயிற்றிலுள்ள பாக்டீரியாக்கள் எப்படி நுண்ணூட்டச்சத்து பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று எட் யங் எழுதியுள்ளார். பிஹைண்ட் தி பியூட்டிஃபுல் ஃபாரெவர் காத்தரின் பூ கழிவறைகளை மாற்றி அமைக்கவேண்டும் என்று நம்புவர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது. எனர்ஜி மித்ஸ் அண்ட் ரியாலிட்டிஸ் வேக்லாவ் ஸ்மில் அணுசக்தி என்பது கார்பன் வெளியீட்டைத் தடுக்கும் என ஸ்மில் நம்புகிறார். நம்முடைய இன்றைய அணுசக்தி முயற்சி எதிர்காலத்தை எப்படி கட்டமைக்கும் என்று கூறியிருக்கிறார். தி மோஸ்ட் பவர்புல் ஐடியா இன் தி வேர்ல்டு வில்லியம் ரோசன் உலகை மாற்றிய கண்டுபிடிப்பு நீராவி எஞ்சின். அதன் வரலாற்றை ரோசன் விவரித்திருக்கிறார்.

மவுசு கூடுகிறது கேசட்டுக்கு! ரீஎன்ட்ரிக்கு ரெடி!

படம்
மீண்டும் பிரபலமாகும் கேசட்ஸ்! தற்போது ஜஸ்டின் பைபர், அரியானா கிராண்டே ஆகியோர் தங்களுடைய ஆல்பங்களை கேசட்டாக வெளியிடத் தொடங்கிவிட்டனர். ஊரில் பஸ்ஸில் ஏ,பி என எழுதப்பட்ட இருபுறங்களிலும் பதியப்பட்ட பாடல்களை கேட்டிருப்பீர்கள். அதற்குப்பிறகு சிடி,டிவிடி அந்த இடத்தை எடுத்துக்கொண்டது. இன்று அந்த இடத்தை பென்ட்ரைவ் கைப்பற்றி உள்ளது. இது இனிமேல் புதிய வணிகத்திட்டமாக மாறலாம் என்கிறார் நேஷனல் ஆடியோ கம்பெனி நிறுவனரான ஸ்டீவ் ஸ்டெப். இவர் 50 ஆண்டுகளாக ஆடியோ கம்பெனியை நடத்தி வருகிறார். கடந்த 2000 ஆம் ஆண்டில் பியர்ல் ஜாம் அண்ட் தி ஸ்மாசிங் பம்கின்ஸ் என்ற பேண்டிற்காக, ஆடியோ டேப்களை வெளியிட்டனர். பிரெஞ்சு நிறுவனமான முலன், கேசட்களை வெளியிட முடிவு செய்து வருகிறது. தி மாஸ்டர்ஸ் என்ற பிராண்டின் கீழ் ஆடியோ டேப்களை வெளியிட திட்டம் தீட்டி வருகிறது. நன்றி: தி இந்து ஆங்கிலம். 

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி டியோட்ரண்ட்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக டியோட்ரண்ட் விற்கப்படுகிறது? இதில் என்ன வித்தியாசம் உள்ளது? பொதுவாக டியோட்ரண்டுகளில் பெரிய வித்தியாசம் இல்லை. அதன் வேதிப்பொருட்களும் கூட மாறாது. மாறுவது அதன் வாசனைகள் மட்டுமே.  டியோட்ரண்டுகளை எதற்கு பயன்படுத்துகிறோம்? பெண்களைக் கவர என காமெடி பண்ணாதீர்கள். அக்குள் பகுதியில் உருவாகும் பாக்டீரியாக்களின் ரகளையை காலிசெய்யத்தான். இதற்காக அலுமினியம் மற்றும் ஸிர்கோனியம் அடிப்படையிலான வேதிப்பொருட்களை சேர்க்கிறோம்.  இந்த வேதிப்பொருட்கள் உடலின் வியர்வை சுரப்பிகளின் பணியை மட்டுப்படுத்துகிறது. பாக்டீரியா ஆண்களுக்கு 3 ஹைட்ராக்ஸி 3 மெத்தில் ஹெக்சானிக் அமிலம், பெண்களுக்கு சல்பர் ரிச் 3 மெத்தில் 3 சல்ஃபானிஹெக்ஸன் 1 ஆல் என்ற வேதிப்பொருளை உருவாக்குகிறது.  நன்றி: சயின்ஸ் ஃபோகஸ் பிபிசி

தேஜா வூ ஏற்படுவது ஏன்?

படம்
Youtube ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி தேஜா வூ ஏற்படுவது ஏன்? தேஜா வூ என்ற பிரெஞ்சு சொல்லுக்கு முன்னமே பார்த்த என்று பொருள். நம்பில் பலருக்கும் தேஜா வூ பழகியிருக்கலாம். ஒரு சூழ்நிலையைச் சந்திக்கும்போது, அதனை முன்னமே சந்தித்தது போன்று இருக்கும். அதுதான் தேஜா வூ. 2004 ஆம் ஆண்டு செய்த தேஜாவூ ஆராய்ச்சியில் 50 பேர் பங்கேற்றனர் இதில் மூன்றில் இருபங்கினருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது. பார்வை உள்ளவர்களுக்கு மட்டுமல்ல; கண்பார்வையற்றவர்களுக்கும் கூட தேஜாவூவை உணர முடிந்திருக்கிறது. கனவுகளைப் போல தேஜா வூவை ஆய்வாளர்களால் கணிக்க முடியவில்லை. தேஜா வூ நிகழ்வுகளை உங்களைக் குறித்த நினைவில்லாத நிலையில் பார்க்கிறீர்கள். அதுவும் பின்னர் மறந்துவிடுகிறது. ஆனால் குறிப்பிட்ட முன்னரே பார்த்த நிகழ்வுகள் திரும்ப நடக்கும்போது அவை நினைவுக்கு வருகிறது. இதில் முக்கியமான ஒற்றுமை, நீங்கள் பார்க்கும் அறைகளில் ஏதோவொரு விஷயம் நீங்கள் பார்த்த அறைகளோடு பொருந்திப்போகும். இதனால்தான் தேஜாவூவில் நீங்கள் பார்த்த  நண்பரின் அறை அவ்வளவு துல்லியமாக உள்ளது. அதேசமயம் நீங்கள் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில்

நாட்டின் சகிப்புத்தன்மை சிதைந்து அச்சம் கூடியுள்ளது

படம்
Youtube மகேஸ் எல்குஞ்ச்வர், விஜய் டெண்டுல்கருக்கு அடுத்து பெரிதும் மதிக்கப்படும் நாடக ஆளுமை. அண்மையில் மகிந்திரா எக்சலன்ஸ் ஆஃப் தியேட்டர் விருதை, வாழ்நாள் சாதனைக்காக வென்றிருக்கிறார்.  விஜய் டெண்டுல்கர், விஜயா மேத்தா, சத்யதேவ் துபே ஆகியோர் மகாராஷ்டிராவில் நாடக இயக்கத்தை உருவாக்கி இருக்கியிருக்கிறீர்கள். இப்போதுள்ள நாடகங்களை எப்படி புரிந்துகொள்கிறீர்கள்.  வெளிப்படையாக சொல்வதென்றால், எனக்கு அதுபற்றி எந்த கருத்துமில்லை. நான் தற்போது நாக்பூரில் வசித்து வருகிறேன். இதனால் நாடக இயக்கங்களோடு பெரியளவு தொடர்புகள் கிடையாது. எனக்கு இருக்கும் தற்போதைய ஆதங்கள், எழுத்தாளர்களும் இயக்குநர்களும் நாடகத்தில் ஆழமாக தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை எனபதே. விஜய் டெண்டுல்கர் ரங்காயன் எனும் குழுவை உருவாக்கி நாடகங்களை உருவாக்கி வந்தார். பிறரும் அப்படித்தான். விமர்சகர்கள் உங்களை விஜய் டெண்டுல்கருடன் சேர்த்துத்தான் பேசுகின்றனர். ஒருவகையில் நீங்கள் இருவரும் சேர்ந்து பல்வேறு பரிசோதனை முயற்சிகளை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளீர்கள். இதில் உங்களை எப்படி வேறுபடுத்திக்கொள்கிறீர்கள்? எனக்கு ஆச்சரியமே

ஓடினால் மழை குறைவாக நனைக்குமா?

படம்
Erika Lidberg \pinterest ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர். ரோனி மழை பெய்கிறது. அப்போது நடந்து சென்றால் அதிகம் நனையுமா? அல்லது ஓடினால் அதிகம் நனையுமா? முட்டை, கோழி கேள்வி அல்ல. அறிவியல்பூர்வமான விளக்கம் உள்ளது. ஹார்வர்டு கணித வல்லுநரான டேவிட் பெல், இதற்கான விளக்கம் தேடி அலைந்த  ஆண்டு 1976.  தெருவில் நடந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள். நூறு மீட்டர் தொலைவில் நீங்கள் அடைய வேண்டிய இடம். சட்டென மழை பிடித்துக்கொண்டு அடித்துப் பெய்கிறது. செங்குத்தான் மழைத்துளிகளில் ஓடுகிறீர்கள். முகத்தில் அறைகிறது மழை. இப்போது நீங்கள் குறைவாகவே நனைவீர்கள் என்கிறது டேவிட்டின் ஆய்வு.    The Mathematical Gazette இதழில் வெளியானது இவரின் விரிவான ஆய்வு. மழை பெய்யும்போது நடந்து போவது, ஓடுவது என்பதில் பெரியளவு வித்தியாசம் இல்லை. ஏன் என்றால் கீழே தேங்கும் தண்ணீரால் பாதி, பெய்யும் மழையால் பாதி என நனைவீர்கள்.  உசேன் போல்டு கணக்காக ஓடினால் மழைநீர் உங்களை குறைவாகவே நனைக்கும். இதன் அளவு 10 சதவீதம்.  நன்றி: பிபிசி