இடுகைகள்

கருத்தடை மாத்திரைகள் பாஸ் பாஸ்!

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் பற்றி வலைத்தள நிறுவனர் அன்பரசு மாங்கு மாங்கென்று குங்குமத்தில் குவியலாக டைம் கட்டுரையை காப்பியடித்து டப்பிங் செய்தார். எடிட்டோரியலில் காமெடியாக பார்க்கப்பட்ட அந்த கட்டுரையில் கூறியிருந்த விஷயங்கள் இன்று நிஜமாகியுள்ளது. சோதனையில் அந்த கருத்தடை மாத்திரைகள் பாஸ் ஆகிவிட்டன. ஹூர்ரே என குதிக்க தேவையில்லை. டைம் கட்டுரையில் நிறைய வழிமுறைகள் கூறப்பட்டன. தோளில் தடவும் க்ரீம் அல்லது ஜெல், ஊசி, மூன்றாவதாக மாத்திரைகள். இதில் மூன்றாவதாக கூறப்பட்ட மாத்திரைகள் சோதனையில் வென்றுள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் உலகில் அறிமுகமாயின. அப்போது அது புரட்சிகரமான மாற்றம், கண்டுபிடிப்பு என புகழப்பட்டது. இன்று ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் வெளியாகின்றது. கர்ப்பம் என்பதற்கு ஆண், பெண் என இருபாலினத்தவரின் பங்கும் உண்டுதானே? இனி வலியை, வேதனையை பெண்களைப் போலவே ஆண்களும் ஏற்றுக்கொள்வார்களான என்பது இனிமேல்தான் தெரியும். அமெரிக்கா இதிலும் முன்னோடிதான். 2010 ஆம் ஆண்டு அமெரிக்கா 13.6 பில்லியன் டாலர்கள் செலவு செய்து, கருத்தடை மாத்திரைகளை ஆண்க

சைக்கோ திரைப்பட பாத்திரங்கள்!

படம்
பீதியூட்டும் சைக்கோ கதாபாத்திரங்கள் நிஜத்தில் கொலை செய்கிறார்கள் என்றாலும் திரைப்பட பாத்திரங்கள் வேற லெவலில் மிரட்டுவார்கள். அவர்களின் சில..... Anton Chigurh (No Country for Old Men) மனிதர் படம் முழுக்க யாரை ஏறிட்டுப் பார்த்தாலும் நமக்கு வயிற்றைக் கவ்வும். அடுத்த ஷாட் இவன்தான். சும்மாதான் இரேண்டா வாய் விட்டே சொல்லுவதும் உண்டு. சிகர் கேஸ் துப்பாக்கியால் பலரைக் கொல்வது படம் பார்க்கும்போதே திகிலூட்டும். அதிலும் இதனை தமிழ் டப்பிங்கில் பார்த்தீர்கள் என்றால் மோட்சம் நிச்சயம். இரவிலும்  கனவில் சிகர் வருவார். உணர்ச்சியற்ற முகம், பதற்றமற்ற உடல்மொழி என ஆல்டைம் சைக்கோ கொலைகார ர்களில் இவரை மறக்கவே முடியாது.  Begbie (Trainspotting) நண்பனாக தோளில் கைபோட்டுக்கொண்டே பீர் பாட்டிலை உடைத்து, அருகிலிருக்கும் நண்பனின் தொண்டையில் சொருகிவிட்டு சும்மா ஜஸ்ட் ஃபார் ஃபன் மச்சான், கோவிச்சுக்காத என்று சிரிப்பது பெக்பீயின் பாணி. நிச்சயம் இதற்காக நீங்கள் கோப ப் படவே முடியாது. பின்னே நீங்கள் உயிரோடு இருக்கவேண்டுமே! Alex DeLarge (A Clockwork Orange) ஸ்டான்லி குப்ரிக்கின் தயாரிப்பு. கூலிப்படையினர

ஃபோர்ப்ஸ் 30 / 30

படம்
ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் இடம்பெறுவது என்பது பலரின் கனவு.  இதில் ஆசியாவைச்சேர்ந்த முப்பது முன்னோடி தொழில்முனைவோர் இடம்பெற்றுள்ளனர். 23 நாடுகளிலிருந்து வந்த 2000 விண்ணப்பங்களிலிருந்து 300 பேர்களைத்தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் சிலரைப் பார்ப்போம். லியு லியுவான்(29), லியாவோ வென்லாங் (29)(கவாரோபாட், சீனா) தானியங்கி தொழில்நுட்பம்தான் லியு, லியாவோவின் ஐக்யூ சொத்து. 2015 ஆம் ஆண்டு கார்களை தானியங்கி முறையில் உருவாக்க முயற்சித்தவர்களுக்கு கைகூடியது சூட்கேஸ்தான். ஆம் சூட்கேஸை நீங்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இழுத்து வருகிறீர்கள் அல்லவா? இனி அது தேவையில்லை. அதுவே உங்களை ஃபாலோ செய்யும். தொந்தி அங்கிள் இடிக்கிறா, மயிலாப்பூர் மாமி தடுக்கிறாரா அத்தனையையும் ரோவர் சூட்கேஸ் சமாளித்து உங்களை பின்பற்றும். சீனாவில் 800 டாலர்களுக்கு விற்கும் இந்த சூட்கேஸ் வெளிநாடுகளில் 66 டாலர்கள் அதிகமாக சேல்ஸ் ஆகிறது. 12 ஆயிரம் சூட்கேஸ்களை விற்று சாதனை செய்தவர்கள் அதோடு நிற்கவில்லை. அடுத்து ட்ரக்குகளை தானியங்கி முறையில் செயல்படுத்தி விற்கத் தொடங்கிவிட்டனர். 50 ட்ரக்குகளை விற்றவர்கள், தானியங்கி பயணிகள் கா

ராயல் சொசைட்டியில் இந்தியப் பெண்மணி!

படம்
ராயல் சொசைட்டியில் இந்தியப் பெண்! டாக்டர் ககன்தீப் கங், நானூறு ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட ராயல் சொசைட்டியில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் தடுப்பூசி திட்டங்களை மேம்படுத்திய பணிகளின் சாதனைக்காக இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரோட்டோ வைரஸ், டைபாய்டு காய்ச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி பெருமைக்குரியவர் டாக்டர் கங். தன்னார்வலர்களை தொற்றுநோய்க்கு எதிரான சிகிச்சையில் பயன்படுத்தும் சிம் எனும் முறையை இந்தியாவில் செயல்படுத்தி கவனம் ஈர்த்திருக்கிறார். மருத்துவத்துறையில் மருந்துகளை மனிதர்களுக்கு வழங்கும் முன்பு விலங்குகளிடம் சோதித்துப் பார்ப்பார்கள். இதற்கு மனிதர்களைப் போன்றே உடல் அமைப்பு கொண்ட விலங்குகளை தேர்ந்தெடுப்பார்கள். பெரும்பாலும் எலி இதற்கு பயன்படுத்தப்படும். சிம் சோதனையில் நல்ல உடல் தகுதி கொண்ட மனிதர்கள் பயன்படுத்தப்படுவார்கள். முழு ஆற்றல் கொண்ட கிருமி இம்முறையில் உடலில் செலுத்தப்பட மாட்டாது. குறைந்த ஆற்றல் கொண்ட கிருமியை உடலில் செலுத்து தொடர்ச்சியாக கண்காணித்து நோயின் தன்மையைக் குறித்து கொள்வார்

மக்களுக்காக பணியாற்றுவதைத் தவிர வேறொன்றுமில்லை

படம்
நேர்காணல் நவீன் பட்நாயக், ஒடிஷா முதல்வர், ஒடிஷா.  இருபது ஆண்டுகளாக ஓடிஷாவை ஆண்டுவருகிறார் நவீன் பட்நாயக். பிற தலைவர்களைப் போல ஆக்ரோஷமான பேச்சு, சூறாவளிப் பிரசாரம் ஆகியவற்றை இவரிடம் பார்க்க முடியாது. தேர்தலில் எப்படி வெல்கிறார்? மக்கள் இவரை நம்புகிறார்கள். அவ்வளவுதான். இம்முறை தேர்தலில் வென்றால் ஐந்தாம் முறை முதல்வராகும் வாய்ப்புள்ளது. பிஜூ ஜனதா தளம் மக்களை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறது. வளர்ச்சி, மேம்பாடு, நலம் ஆகியவற்றை மட்டுமே நாங்கள் முன் வைக்கிறோம். உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? பிஜூ பாபுவை மக்கள் விரும்பினார்கள். காரணம், மாநிலத்தில் அரசு சரியாக செயல்பட்டதுதான். ஒடிய மொழியில் சரளமாக பேசுபவரல்ல நீங்கள். மேலும் அமைதியாக வேலைசெய்பவரும் கூட. எப்படி மக்களுடன் தொடர்பு கொள்கிறீர்கள். நான் மக்களைப் புரிந்துகொள்கிறேன். மக்கள் என்னைப் புரிந்துகொள்கிறார்கள். அவ்வளவுதான். இம்முறை தேர்தலில் மக்களுக்கு கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் என்ன? சமூகத்திலுள்ள அனைத்து பிரிவினருக்குமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம், விவசாயிகளுக்கு காலியா என்ற திட்டத்தையும், கர

இருகோள்கள் ஒரே வட்டப்பாதையில் சாத்தியமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி?  மிஸ்டர் ரோனி இரண்டு கோள்கள் ஒரே வட்டப்பாதையில் சுற்றிவருவது சாத்தியமா? இரண்டு கோள்களின் கோணங்களைப் பொறுத்தே இதனை உறுதிப்படுத்த முடியும். ஒன்றைப் பின்பற்றி ஒன்று வரலாம். ஆனாலும் கூட இரண்டும் தன்னைத்தானே சுற்றும் வேகம், ஈர்ப்புவிசை ஆகியவையும் இதில் முக்கியமானது. இதோடு கோள்களை இயக்கும் மையத்திலுள்ள நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசை வட்டப்பாதையை தீர்மானிக்கிறது. சூரியன், வியாழன் ஆகியவற்றுக்கு இடையே இதுபோல சில கோள்கள் சுற்றி வருகின்றன. நன்றி: பிபிசி

நவீன பாதுகாப்பு அம்சங்கள் - 2019

படம்
நவீன பாதுகாப்பு அம்சங்கள் அவசியமா? முன்புபோல வங்கியை கிரில் கதவுகள் போட்டு காப்பாற்ற முடியாது. ஏனென்றால் இணைய வாசல் மூலம் தேட்டை போட்டுவிட்டு ஓடிவிடுகிறது தொழிலதிபர் கூட்டம். அதற்கு கமிஷன் வாங்கிக்கொண்டு அனுமதிக்கிறது மக்கள் பிரதிநிதிகளின் கும்பல். இந்த லட்சணத்தில் நாம் யாரை நம்புவது? ஆம் வேறு வழியே இல்லை. தொழில்நுட்பத்தைத்தான் நம்பியாக வேண்டும். அமேசான் இகோ இதுவும் பயனர் பற்றிய பல்வேறு தகவல்களை அசைபோட்டு அவருக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதுதான். ஆனால் தனிநபரின் தகவல்களை அரசே கேட்டாலும் தராது என்பதுதான் இதன் பிளஸ். கொலை குற்றம் தொடர்பான வழக்கில், குற்றவாளியைக் கண்டறிய இவர்கள் உதவியுள்ளது விதிவிலக்கானது. இதேபோல ஆப்பிள் தனது பாதுகாப்பு வசதிகளை உடைக்க முடியாது என எஃப்பிஐயிடம் போராடியது நினைவுக்கு வருகிறதா? பிலிப்ஸ் அவென்ட் - குழந்தைகளை கண்காணிக்கும் கருவி சில வக்கிரம் பிடித்தவர்கள் குழந்தைகளைக் கண்காணிக்கும் கருவியின் வீடியோவையும் இணையத்தில் வெளியிடத் தயங்குவதில்லை. வைஃபையில் இணைந்தாலும் இதனை எளிதாக ஹேக் செய்யமுடியாது என்கிறது பிலிப்ஸ் நிறுவனம்.

சைக்கோ கொலைகாரர்களைப் பற்றிய நூல்!

படம்
சைக்கோ கொலைகாரர்கள் - நூல்கள் சைக்கோ கொலைகாரர்களைப் பற்றிய நூல்களை படிக்காவிட்டால் நீங்கள், எஃப்பிஐ, கேஜிபி, மொசாட் என பல்வேறு நாடுகளின் க்ரைம் பட்டியல்களை துப்பு துலக்க வேண்டியிருக்கும். அதற்காகத்தான் பத்திரிகையாளர்கள் ஏராளமாக தகவல்களைச் சேகரித்து நூல்களாக எழுதியுள்ளனர்.அப்படிப்பட்ட நூல்களில் சில.. The Misbegotten Son by Jack Olsen ஆர்தர் ஜே சாகிராஸ் என்ற சீரியல் கொலைகாரரைப் பற்றி ஜேக் ஆல்சன் ஆராய்ந்துள்ள நூல் இது. நுணுக்கமாக நுட்பமாக இவரின் மனநிலையைப் பற்றி ஆராய்ந்து எழுதியுள்ளார். ஒருகாலத்தில் நியூயார்க் வாசிகளை தூங்கவிடாமல் வதைத்த கொடூரனின் கதை இது. Lustmord by Brian King I : The Creation of a Serial Killer by Brian King நூல் முழுக்க கட்டுரை, வாசகங்கள், கவிதை என அனைத்தும் உண்டு. இவை எதையும் பிரையன் கிங் எழுதவில்லை என்பதுதான் விசேஷம். எழுதியவர்கள் அனைவரும் சீரியல் கொலைகாரர்கள். ராஜேஷ்குமார், கோட்டயம் புஷ்பநாத் போல எழுதவில்லை என்றாலும் ஒருவர் என்ன நினைக்கிறார் என்பதை எழுதினால் அடையாளம் கண்டு கொள்ளலாம் அல்லவா? நூல் அதற்கு உதவும். இரண்டாவது நூல், ஹீத் ஹன்டர் ஜ

அமைதியைக் குலைத்த இஸ்ரேல் பிரதமரின் வெற்றி!

படம்
இஸ்ரேலின் நீண்டகால அதிபர்! வேறுயார்? பாலஸ்தீனத்தை கடுமையாக தாக்கி அப்படியொரு நாடே இல்லை என்று கூறிய பெஞ்சமின் நேடான்யாஹூதான் அவர். ஐந்தாவது முறையாக அதிபராகி சமாதானம் விரும்புபவர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறார். இதுபோல இந்தியாவிலும் மோடி வென்று வர வாய்ப்புள்ளது. தன்னை எதிர்த்து போட்டியிட்ட பென்னி கன்ட்ஸைத் தோற்கடித்து பெஞ்சமின் நேடான்யாஹூ வென்றுள்ளார். பெஞ்சமின் மற்றும் அவரது சகாக்கள்மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட புகார்கள் இருந்தாலும் அத்தனையிலும் மீண்டு ஊடகங்கள், நாட்டின் நீதித்துறைக்கு எதிராக பேரணி நடத்தி தேர்தலிலும் வென்று காட்டிவிட்டார். பெஞ்சமினின் வெற்றி, குறைந்தபட்சம் பாலஸ்தீனுக்கும் இஸ்ரேலுக்கும் இருந்த பிரச்னைகளை தீர்க்கும் என்று நினைத்த நம்பிக்கையைக் கூட அழித்துவிட்டது என்று கருத்து சொல்லியிருக்கிறார் முன்னாள் பிரதமர் ஈஹட் பாரக்கின் பிரதம செயலரான ஜில்லீடு ஷெர். நன்றி: டைம் இதழ்

பெண்களுக்கு என்ன தேவை? குடும்பமா? செக்ஸா? - சேட்டன் பகத்

படம்
இளைஞர்களின் இந்தியாவுக்குப் பிறகு சேட்டன் பகத் கோமாளிமேடைக்கு வருகிறார். இந்த விமர்சனப் பதிவு மூலம்.  கதை, அதே லைன்தான். உயர் கல்லூரிகளில் படிப்பு, நட்பு, கோல்டன் சாக் எனும்  முதலீட்டு நிறுவனத்தில் வேலை, காதல், பாலுறவு, பிரிவு, திருமணம் என சேட்டனிடம் என்ன எதிர்பார்த்து கிராஸ்வேர்டு கடையில் வாங்கினோமோ அத்தனை விஷயங்களும் நூலில் உண்டு.  ராதிகா மேத்தா என்ற படிப்பில் பட்டையை கிளப்பும் சுமார் மூஞ்சிப் பெண் கோல்ட்மேன் சாக் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். தன் மீதான தாழ்வு மனப்பான்மையில் தடுமாறுபவர்,  டெபனீஸ் சென் என்ற விளம்பரத்துறை இளைஞர் மீது காதலில் விழுகிறார். ஆனால் அவர், டிபிக்கல் பெங்காலி ஆள். காதலிக்கும் பெண் தன்னை விட ஒரு ரூபாயேனும் குறைவாக சம்பாதிக்க வேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்டவர். இதுதெரிய காதல் புட்டுக்கொள்கிறது. இது அமெரிக்காவில், ப்ரூக்ளின் நடைபெறுகிறது. உடனே ட்ரான்ஸ்பர் கேட்க, கம்பெனி ஹாங்காங் போங்களேன் என்று சொல்லுகிறது.  யெஸ். அங்கும் காதல்தான். ஆனால் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நீல் குப்தாவுடன் கிறுக்குத்தனமான ஆனால் ராதிகா மேத்தா

ஆவிகளை துவைத்து எடுக்கும் கரும்புலி!

படம்
கரும்புலி தோன்றும் ஆவி உலகம் கதை, ஒரே லைன்தான். காட்டுக்குள் ஆவிகள் முழுநிலவு நாளில் பூஜை ஒன்றை ஏற்பாடு செய்கிறார்கள். அந்த பூஜையை தடுக்காவிட்டால் அவர்கள் சக்தி பெற்று உலகை அழிப்பார்கள். எவ்வளவு பெரிய கதை. உலகை புலி, கரும்புலி, அவரின் மாமா மூவருமே ஜஸ்ட் லைக் தட் காப்பாற்றி விடுகிறார்கள். எப்படி என்று கேட்டால் கரும்புலி பிடறில் எட்டி உதைப்பார். காட்டில் நடைபெறும் சண்டைக்காட்சிகள் மட்டுமே கொஞ்சம் காமிக்ஸ்தான் படிக்கிறோம் என நினைக்க வைக்கிறது. மற்ற விஷயங்கள் எல்லாம் எப்போது எழுதின காமிக்ஸ் இது என நினைக்க வைக்கிறது. இப்படியொரு தத்தியான கதையா என வியக்க வைக்கிறது. ராணி காமிக்ஸ் உருப்படாமல் நொடிந்து போனதற்கு இந்த கதை தேர்வு முக்கியமானதாக இருக்கும் என நம்புகிறோம். கதை முன்னாடியிலிருந்து அல்லது பின்னாடியிலிருந்து என எப்படி படித்தாலும் பிரச்னையில்லை. குழப்பமே இருக்காது. அப்படியொரு கதை லைன். கரும்புலி பாத்திரத்தை ஏதோ சர்க்கஸில் மரணக்கிணறு ஓட்டுபவர் போல மாற்றியிருப்பதை எப்படி புரிந்துகொள்வது? நன்றி: தமிழ் டிஜிட்டல் காமிக்ஸ் குழு. படம் உதவி:  jsc johny