இடுகைகள்

தேனீக்களைக் காப்பது எப்படி?

படம்
ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி தேனீக்களின் பெருக்கத்திற்கு நாம் எப்படி உதவுவது? பொதுவாக நாம் சூப்பர் மார்க்கெட்டுகளில்  வாங்கும் தேன் அனைத்தும் இறக்குமதி ரகத்தைச் சேர்ந்தவை. இதனால் உள்ளூர் மார்க்கெட்டுகளுக்கு காசு தவிர வேறெந்த லாபமுமில்லை. குறிப்பாக, சீனாவிலிருந்து பெருமளவில் தேன் இறக்குமதியாகி வருகிறது. தேனை அறுவடை செய்வதால் தேனீக்களுக்கு பிரச்னையில்லை. நீங்கள் தேனீக்களுக்கு உதவுவது என்றால், பூச்சிமருந்து தெளிப்பதை தவிர்க்க வலியுறுத்தலாம். அதுவே தேனீக்களைக் காக்கும். தேனை கடையில் வாங்கும்போது உள்ளூரைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்க எந்த கலப்படமில்லாத, சுவையூட்டி சேர்க்கப்படாத தேனை வாங்கலாம். நன்றி: பிபிசி image:  exchange.prx.org

கொலையும் உளவியலும்! - பென் பிளாக்கெலி வன்முறை மனம்

படம்
அசுர குலம் - கட்டவிழும் வன்முறை உலகிலேயே நாம் கண்டறிய முடியாத ஒன்று என்ன தெரியுமா? உலகின் வரைபடம் என்ற சிறுவயது காமெடி வேண்டாம். பல பதில்கள் இதற்கு வந்தாலும் உண்மையானது மனிதர்களின் மனம்தான். மனதிலுள்ள பல்வேறு குரூர உணர்ச்சிகளை வெற்றிடம் வெளிப்படுத்த வாய்ப்பு தருகிறது. சாதாரண மனிதர்கள் உறங்கும் எரிமலை போல்தான். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அந்த எரிமலைகள் வெடிக்க லாவா பொங்கும். அப்படி ஒரு நிகழ்வு இங்கிலாந்தில் நடைபெற்றது. உண்மையில் அப்படியொரு  நிகழ்வை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஜேய்டன் பார்க்கின்சன் வாழ்க்கை பலரின் பார்வைக்கு வந்தது அப்படித்தான். 2013 ஆம் ஆண்டு டிசம்பரில் இறந்தபோது பார்க்கின்சனின் வயது 17 தான். தன் முன்னாள் காதலரான டிட்காட்டிலுள்ள பென் பிளாக்கெலியைப் பார்க்கப் போனது மட்டுமே உலகிற்கு தெரியும். பின்னர் என்ன ஆனார் என்பது யாருக்குமே தெரியவில்லை. சரி, வேறு எங்காவது போனால் போனாவது செய்வாரே என்றால் அதற்கும் எந்த அறிகுறியும் கிடைக்கவில்லை. அப்போது தேசிய புள்ளியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுப்படி, முன்னாள் காதலர், கணவரால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கையில்

அமெரிக்காவை அச்சுறுத்தும் லைம் நோய்!

படம்
காய்ச்சல் அடிக்கிறதா, குளிருகிறதா, நரம்புரீதியாக பிரச்னைகள் இருக்கிறதா? இதயத்துடிப்பு அடிக்கடி எகிறுகிறதா? அப்படியானால் கையைக் கொடுங்கள். அப்படியே குளுக்கோஸ் ஏற்றிவிடலாம். ஆம். உங்களுக்கு லைம் எனும் நோய் பாக்டீரியாக்களால் ஏற்பட்டுள்ளது. எலிகளிடமிருந்து பரவும் இந்த நோயை உண்ணிகள் நமக்கு பரப்புகின்றன. பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களை இந்த லைம் நோய் பாதிக்கிறது. இந்த நோயைத் தடுக்க ஜீன் ட்ரைவ் எனும் முயற்சியை எம்ஐடி நிறுவனம் முன்னெடுத்துள்ளது. எலிகளின் மரபணுக்களை மாற்றுவதே ஐடியா. இதனை கெல்வின் எஸ்வெல்ட் என்ற அறிவியலாளர் கண்டுபிடித்துள்ளார். நோக்கம் மலேரியா போன்ற தடுக்க சிர மான நோய்களை இம்முறையில் தீர்க்கலாம் என நம்பிக்கை தருகிறார் இவர். பாக்டீரியாக்களின் டிஎன்ஏவில் செய்யும் மாறுதல் சில தலைமுறைகளுக்கு நோய் பரவலைத் தடைசெய்யும் என்பது இவரது கூற்று. இதில் தவறுகள் நேர்ந்தால் அடுத்த தலைமுறையே இருக்காது என்று கூறுகின்றனர். இதற்கு அவரே அடுத்த திட்டமாக டெய்ஸி ட்ரைவ் என்பதையும் முன்வைக்கிறார். சாத்தியமோ இல்லையோ பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றலாம் என நம்பிக்கை தருகிறார் கெல்வின்.

காற்று மாசுபாடு - சாதனங்கள் அறிமுகம்

படம்
2015 ஆம் ஆண்டு காற்று பற்றிய ஆய்வில் ஐந்தில் ஒருவர் காற்று மாசுபாட்டில் இறக்கிறார் என்ற அதிர்ச்சி செய்தி தெரிய வந்தது. இங்கிலாந்தில் காற்று மாசுபாட்டால் மட்டும் 50 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். எனவே காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் சாதனங்களைப் பார்த்துவிடுவோம். Airthings Wave Plus நம் அறையிலுள்ள நச்சு வாயுக்களின் அளவைச் சொல்லி நம்மை எச்சரிக்கும் சாதனம் இது. பார்க்க நெருப்பு அலாரம் டிசைனில் இருந்தாலும் பதவிசாக வேலை பார்க்கும் கருவி இது. மோசமில்லை. இதில் நிறைய செட்டிங்குகள் உள்ளன. கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட பல்வேறு வாயுக்களை அளவிடும் முறைகளும் உண்டு.சூதானமாக இதனைக் கவனித்தால் உயிர்பிழைக்க வாய்ப்புண்டு.  Awair இதுவும் மேற்சொன்ன சாதனத்தைப் போலத்தான். ஆனால் டிசைன் வேறு. அடிக்க வராதீர்கள். இதில் காற்றின் அளவு, ஈரப்பதம், ஆபத்தான அளவு, பாதிப்பற்ற அளவு என காற்றின் தரத்தை அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கும். அலெக்ஸா, கூகுள் ஹோம் என எதனுடன் வேண்டுமானாலும் இணைத்து காற்றின் தரத்தைக் கண்காணிக்கலாம். தூங்கும் அறை, வேலை செய்யும் அறை ஆகியவற்றுக் கு காற்றின் தரத்தை ச

மழையில் நனையும்போது ஒருவரின் முடி அடர் கருப்பாக தெரிவது ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நீரில் நனைந்தவுடன் முடி ஏன் கூடுதல் கறுப்பாக தெரிகிறது? நீரில் நனைந்த பெண்ணைப் பார்த்துவிட்டு ஏக காலமாக ரசித்துவிட்டு அறிவியல் கேள்வியை கேட்கிறீர்கள். ரைட் அறிவியல் அதிலும் உண்டுதான். இதில் நீர் செய்யும் மாயாஜாலம் ஏதுமில்லை. நீர் வெளிப்படையாக வறண்ட கூந்தலை ஈரமாக்கி ஒன்றுசேர்க்கிறது. அதில் ஒளி படும்போது நமக்கு முடியின் நிறம் கூடுதல் கருப்பாக இருப்பது போல தோன்றுகிறது. கருப்பு நிறம் என்றால் அது எதையும் பிரதிபலிப்பதில்லை என்பதை அறிவீர்கள்தானே? நன்றி: பிபிசி

தண்ணீரின் சுவை எப்படியிருக்கும்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி தண்ணீரின் சுவை எப்படியிருக்கும்? தூய நீர் என்பது உங்கள் நாக்கின் சுவை மொட்டுக்களை மலரவைக்காது. அதற்காக அதில் எந்த சுவையும் இல்லை என நினைத்து விடாதீர்கள். உங்கள் எச்சிலிலுள்ள வேதிப்பொருட்கள் நீருடன் வினைபுரிந்தால் டாடா குளுக்கோ ப்ளஸ் லெவலுக்கு இல்லையென்றால் சற்றே இனிப்பது போல தோன்றும். நன்றி: பிபிசி

இதயமற்ற சாத்தான் - டெட் பண்டி

படம்
டெட் பண்டி - தேவ அசுரன்! அசுரன் என்ற பெயர் இங்கு தீவிரத்தன்மையைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. டெட் பண்டிக்கு விநோத பழக்கமிருந்தது. பெண்கள் கல்லூரி பக்கம் வண்டியை விட்டு ஏதோ உதவி கேட்பது போல நடித்து காருக்குள் மயக்கமுறச்செய்து தள்ளுவான். அவ்வளவுதான் அவர்களுக்குத் தெரியும். பிறகு நடக்கும் சித்திரவதை அவர்கள் உயிர்பிரியும் கடைசி நொடிவரை மறக்க முடியாது. நல்ல இரும்பு ராடால் அடித்து வீழ்த்துவான். பிறகு வேட்கையோடு செக்ஸ் வைத்துக்கொண்டு பின்னர் கொல்லுவான். ஆளற்ற மரங்கள் நிறைந்த இடத்தில் உடலை புதைப்பான். அதேசமயம் செக்ஸ் ஆசை தோன்றினால் புதைத்த பிணங்களைத் தோண்டிக்கூட செக்ஸ் வைத்துக்கொண்டிருக்கிறான். அப்படி ஒரு வெறியாட்டம். கேட்டவுடனே போலீசுக்கே தலை கிறுகிறுத்தது. மேலே நீங்கள் பார்க்கும் பெண்கள் எல்லாரும் டெட்டால் பொட்டலமாக கட்டி தூக்கி எறியப்பட்டவர்கள். செக்ஸ் முடிந்ததும் உருக்குலைக்கப்பட்டு கொல்லப்பட்டவர்கள். டெட் பண்டிக்கு பெண்களின் மீது ஆசையும் வெறியும் தணியவேயில்லை. பசிஃபிக் நார்த்வெஸ்ட் பகுதியில் மட்டும் டெட் பண்டி தன் பீட்டில் கார்களை நிறுத்தி மாதம் ஐந்து பெண்களை வேட

கட்டுரை நூல்கள் 3! மே மாத வாசிப்பு

படம்
புத்தக விமர்சனம் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா? நீங்கள் இன்று உங்கள் தந்தையை விட அதிகம் சம்பாதிக்கிறீர்கள். அதிக வசதிகளை அனுபவிக்கிறீர்கள். ரெட்பாக்ஸ் ரெஸ்டாரண்ட் உணவை ஸோமாட்டோவில் ஆர்டர் செய்து சாப்பிடுகிறீர்கள். ஆனால் நீங்கள் வாழும் உலகம் நம்பிக்கையானதா? அதேசமயத்தில் வெனிசுலாவில் ஆட்சியாளருக்கு எதிராக கடும் கலவரம் நடைபெறுகிறது. சோமாலியாவில் சாப்பிட உணவின்றி குழந்தைகள் சாகின்றன. என்ன உலகம் இது? என்று வருத்தப்படவும் வைக்கிறது பூமி. எங்கிருந்து நம்பிக்கை பெற என வருந்தாதீர்கள். அதற்குத்தான் மார்க் மேன்சன் எவ்ரிதிங் இஸ் பக்டு என்ற நூலை எழுதியிருக்கிறார். நீங்கள் நம்பிக்கை கொள்வதற்கான அனைத்து விஷயங்களும் இதில் உண்டு. 2. இந்தியா கிரிப்டோ கரன்சியை நம்பாவிட்டாலும் விங்கிலோவ்ஸ் சகோதரர்கள் அதனை நம்புகிறார்கள். இவர்கள் மார்க் ஸூக்கர்பெர்க்கோடு இணைந்து ஃபேஸ்புக்கை உருவாக்கியவர்கள். பின்னர் மார்க் இவர்களுக்கு டாட்டா சொல்லிவிட இன்று கிரிப்டோ கரன்சி மூலம் மெகா பணக்காரர்கள் ஆகிவிட்டனர். இவர்கள் எப்படி ஜெயித்தார்கள் என்பதை இந்த நூல் விளக்குகிறது. 3. வா

குற்றவாளி காக்கிச்சட்டை - கவச்சம் எப்படி?

படம்
கவச்சம் (தெலுங்கு) இயக்கம்: ஸ்ரீனிவாஸ் மாமில்லா ஒளிப்பதிவு: சோட்டா கே நாயுடு எஸ்எஸ். தமன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய், நேர்மையான போலீசாக இருக்கவேண்டும் என்பதுதான் அவரின் அம்மாவின் ஆசை. அவரின் அப்பாவும் போலீஸ்தான். சாதாரணமாக ரிவைவ் இரண்டு லிட்டர் குடித்தது போல படத்தில் உலாவும் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸூக்கு இது போதாதா?  யெஸ். படம் பார்க்கும் நமக்கும் வில்லன்களை அடிக்கும்போதே நவ துளைகளின் வழியாக ரத்தம் வழிகிறது. கதைக்கான முக்கியத்துவத்தை கைவிட்டு ஹீரோவுக்கு ஆரத்தி எடுப்பதிலேயே முழுப்படமும் நாசமாக போய்விட்டது.  விஜய், வேலை பார்க்கும் ஸ்டேஷனலில் சின்டகாயலா ஆவேசம் அவரின் உயரதிகாரி. ஆனால் அனைத்துக்கும் கமிஷன் பார்ப்பதில் வேகமாக இருக்கிறார். விஜயின் ஹானஸ்ட் வேகத்தை தடுக்க மாட்டேன் என்று கூறி, அதற்கான கிரடிட்டை தனக்கு கொடுக்க வற்புறுத்துகிறார். விஜய், சரி நல்லது நடந்தால் போதும் என அதையும் ஏற்கிறார்.  இதுவே ஒப்பனிங் பாடலோடு இருபது நிமிடமாச்சே! ஹீரோயின் எங்கப்பா என்றால் காஜல்(சம்யுக்தா சக்சேனா) ஆர்ப்பாட்டமாக அறிமுகமாகிறார். மாலில், தொலைந்த பர்சை எடுத்துக்கொடுத்த

விபத்தால் இந்து - நேருவின் கதை- சசி தரூர்

படம்
நேரு: தி இன்வென்ஷன் ஆஃப் இந்தியா சசி தரூர் பெங்குயின் புக்ஸ் ரூ.299 (அமேஸானில் 270) கல்வியால் ஆங்கிலேயர் கலாசாரத்தால் முஸ்லீம் விபத்தால் இந்து 1889 ஆம் ஆண்டு நேரு பிறப்பு முதல் 1964 ஆம் ஆண்டுவரை நீளும் நூல் இது. சசி தரூரின் பார்வையில் நீளும் சுயசரிதை, பிற சுய சரிதைநூல்களிலிருந்து எங்கு வேறுபடுகிறது. நேருவின் அரசியல் வாழ்க்கை, அதன் பிரச்னைகளைப் பற்றி பலரும் விவாதித்து உள்ளனர். அதேயளவு அவரின் தனிப்பட்ட வாழ்க்கை, எங்கேயும் விட்டுக்கொடுக்காத சோசலிச கொள்கை, பொருளாதாரக் கொள்கைகளில் அதன் விளைவு, தனிப்பட்ட அவரது குணம், போஸ், காந்தி, படேல், தாண்டன் ஆகியோரிடம் அவரின் உறவு ஆகியவற்றை வரலாற்று நிகழ்ச்சிகளோடு, விமர்சனங்களையும் கலந்து எழுதியுள்ளார் சசி தரூர். நேரு செய்த அடிப்படைக் கட்டமைப்பு சார்ந்த பணிகளைக் கூறும்போது உடனே எட்வினா மவுன்ட்பேட்டன், பத்மஜா நாயுடு ஆகியோருக்கு அவர் எழுதிய காதல் கடிதங்கள், உறவு ஆகியவற்றை எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலரும் பேசுவார்கள். அதையும் தரூர் விட்டு வைக்காமல் எடுத்து எழுதியிருக்கிறார். அதோடு முக்கியமான பார்வை, நூல் 2003 ஆம் ஆண்டு வெளியா

எளிய அசுரனின் எழுச்சியும் வீழ்ச்சியும் - அசுரன்

படம்
புத்தக விமர்சனம் அசுரன் அரவிந்த் நீலகண்டன் தமிழில்: நாகலட்சுமி சண்முகம் மஞ்சுள் 622 பக்கங்கள் என்று எண்ணிப்பார்த்தால்தான் சற்றே அயருவீர்கள். அசுரன், ராவணனின் கதை.  அனைத்து சமூகத்தினருக்குமான ஆட்சியாக , மக்களுக்கு சமவாய்ப்பு கொடுப்பதாக அமைந்த இலங்கேஸ்வரனின் ரத்தமும் சதையுமான கதை. ராவணன், கீழ்நிலை அசுரர்களில் ஒருவரான பத்ரன் ஆகியோரின் பார்வையில் நாவல் நகர்கிறது. ஒன்று அரசரின் பார்வை. இன்னொன்று மக்களின் பார்வை. நாகலட்சுமி சண்முகத்தின் நெருடாத பிரமாதமான மொழிபெயர்ப்பு 622 பக்கங்களை மிக எளிதாக வாசிக்க உதவுகிறது. ராவணன் எப்படி அரசனாக உயர்கிறான் என்ற கதை எந்த ஜிம்மிக்ஸ் வேலைகளும் இன்றி இயல்பாக இருப்பது பருவம் பைரப்பாவை நினைவுபடுத்துகிறது. அரவிந்த் நீலகண்டனின் எழுத்துக்குச் சான்று, மகாபலியிடம் நான் எப்படிப்பட்ட அரசனாக இருப்பேன் என்று கூறி மகாபலி கடைபிடிக்க சொன்ன அத்தனையையும் மறுத்துப் பேசுவது. மண்டோதரி, இறுதியாக கணவனின் தவறுகளை வெடித்து பேசி சீதையை ராமனிடம் சேர்க்க கெஞ்சும் காட்சி. ஆகியவை படிக்கும் வாசகர்களுக்கு மறக்க முடியாத பகுதிகளாக இருக்கும். ராவணன்,