இடுகைகள்

தண்ணீர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கலாம்?

படம்
தண்ணீர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கலாம்? சென்னைக்கு நீர் வழங்கும் பல்வேறு ஏரிகள் மழை பொய்த்துப் போனதால் வறண்டுபோய்விட்டன. மக்கள் அரசு வழங்கும் குடிநீருக்காக குடங்களுடன் காத்திருக்கின்றனர். இந்தச்சூழலை எப்படி சமாளிக்கலாம் என கணினியும் கீபோர்டுமாக யோசித்தோம். 1.வாசல் தெளிக்க பக்கெட் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கவேண்டும. அதற்கு பதில் சுப நிகழ்வுகளில் இளம்பெண்கள் பன்னீர் தெளிக்கிறார்களே அதே பாட்டிலைப் பயன்படுத்தலாம். 2.ஹோட்டல்களில் சாப்பிடச்செல்லும்போதே, சாப்பாட்டை நெஞ்சுவரை சாப்பிடுங்கள். மீதி மூக்கு வரை உள்ள இடத்திற்கு நீரை தம் பிடித்து குடியுங்கள். சவாலில் ஜெயித்தால் கேன் வாட்டர் காசு மிச்சம். 3.அகன்ற வாய் கொண்ட தண்ணீர் பாட்டில்களில் குடித்தால்தானே நீர் அதிகம் செலவாகும்? வீட்டுக்கு வரும் விருந்தினருக்குக் கூட பக்கத்து பிளே ஸ்கூல் பாப்பாவிடம் அபேஸ் செய்த ஸ்ட்ரா போட்ட பாட்டில், ஃபீடிங் பாட்டிலில்  நீர் நிரப்பி கொடுத்து வரவேற்கலாம்.  4.தண்ணீர்க்குடம் வரிசையில் நின்று நீர்பிடித்து வருவது ஒலிம்பிக் பதக்கம் வெல்வதை விட கஷ்டம். எனவே, அதிக ஏசி மாட்டியுள்ள வீடுகளை குறி

ஒருவர் அழகானவர் என்று எப்படி முடிவு செய்கிறீர்கள்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி ஒருவர் அழகாக இருக்கிறார் என நாம் முடிவு செய்வதற்கு காரணம் என்ன? ரேமண்ட் சர்ட், கெனித் பார்க்கர் பேண்ட் போட்டதற்காக ஒருவரை நாம் அழகாக இருக்கிறார் என்று கூறிவிடுவதில்லை. காரணம், உடை ஒருவரை கவனிக்க வைக்கலாம். ஆனால் கண்கள்தான் அவர் அழகாக இருக்கிறாரா இல்லையா என்று கூறும். அப்படி கூறுவதற்கான விஷயமாக உளவியலாளர்கள் வரையறுப்பது முகத்தின் வடிவம். நீளமாக, வட்டமாக சதுரமாக என பெரும்பாலும் யாரையேனும் நினைவுபடுத்தும் பழகிய முகம்போல இருப்பவர்களே அழகானவர்கள் என்று கூறப்படுகிறார்கள். நாம் இப்படி சொன்னதற்காக, மனைவியையோ, காதலியையோ நீ அவளைப்போல என உதாரணம் சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டால், எங்களைக் குற்றம் சொல்லாதீர்கள். நன்றி:பிபிசி

டீ குடித்தால் என்னாகும்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி அளவுக்கு அதிகமாக டீ குடித்தால் என்னாகும்? ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய டஸ்ட் டீயையே இன்றுவரை ரசித்து குடித்து பழகிவிட்டோம். இதிலும் நிறைய வகைகள் உண்டு. இதில் பயன்படுத்தும் பூச்சிமருந்துகளின் பாதிப்பும் நம் உடலில் தாக்கம் ஏற்படுத்துகிறது. விஷயம் டீ பாதிப்பு தருமா? என்றால் பெரியளவு கிடையாது. டீயில் பாலிபெனல் எனும் ஆன்டி ஆக்சிடன்ஸ் உண்டு. இந்தியர்கள், சீனர்கள், ஆங்கிலேயர்கள் அதிகம் டீ அருந்தும் வழக்கம் கொண்டவர்கள். ஒரு நாளுக்கு மூன்று கப் என்பது சரியான அளவு. இந்த அளவு ஆன்டி ஆக்சிடன்ஸ் மாரடைப்பு வரும் அபாயத்தைக் குறைக்கிறது. ஒரு கப்பில் 40 கிராம் காபீன் டீயில் இருக்கிறது. இது காபியை விட பாதிதான். அமெரிக்காவில் உள்ள பெண் ஒருவர் டீ குடித்து தன் பற்களை இழந்தார். காரணம், பதினேழு ஆண்டுகளில் 150 டீ பேக்குகளை ஐஸ் டீயாக போட்டு குடித்துக்கொண்டே இருந்திருக்கிறார். நன்றி: பிபிசி

கேரட் தின்றால் இருட்டில் பார்க்க முடியுமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி கேரட் தின்றால் இருட்டில் கண்கள் தெரியுமா? கண்களில் ஆரோக்கியத்திற்கு காய்கறிகள் நல்லது. கேரட்டும் அப்படியே. அதற்காக நாய், பூனை போல உங்கள் கண்கள் இருட்டிலும் கவனிக்கும் திறன் பெறமுடியாது. கேரட்டிலுள்ள பீட்டா கரோட்டின், கண்களிலுள்ள ரெட்டினாலுக்கு உதவுகிறது. இதனால் கண்பார்வை ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறலாம். இரண்டாம் உலகப்போரில் இரவில் தாக்கிய ஜெர்மனி நாட்டு விமானங்களை சுட்டுவீழ்த்த கண்பார்வை இல்லை என வீர ர்கள் தடுமாறினர். அப்போது அவர்களுக்கு அரசு கேரட்டை வழங்கியதாகவும், அதனால் அவர்கள் ஜெர்மனியை வீழ்த்தியதாகவும் கதை உண்டு. ஆனால் அது உண்மையல்ல. ரெட்டினாலிலிருந்து கிடைக்கும் ரெட்டினல் எனும் சுரப்பி கண்பார்வை, பெருக உதவுகிறது. மற்றபடி விட்டமின் ஏ வீக்காக இருந்தால் ஸ்பெக்ஸ் மேக்கர்ஸிடம் அப்பாய்ட்மெண்ட் கேட்டு கண்ணாடி வாங்கி போட்டுக்கொள்வதே நல்லது. நன்றி - பிபிசி

தோத்தவன் ஜெயிச்சா அது வெற்றி அல்ல வரலாறு! - சித்ரலஹரி விமர்சனம்!

படம்
சித்ரலஹரி கிஷோர் திருமலா ஜேகே தேவி ஸ்ரீ பிரசாத் பிடித்தது சாய் தரம் தேஜ், கல்யாணி, நிவேதா பெத்துராஜ் ஆகியோரின் நம்பிக்கையான நடிப்பு. பொசனேனி கிருஷ்ணாவின் அசலான நடிப்பு. சுனிலின் காமெடி டிஎஸ்பியின் சூழலுக்கு ஏற்ற நடிப்பு அசத்தல் கிஷோர் திருமலா இப்படத்திற்காக எழுதிய வசனங்கள் அனைத்துமே பிரமாதம். வாழ்க்கையில் ஜெயிக்கவே முடியாத ஒருவனின் விரக்திதான் ஒன்லைன். இதை வைத்தே அவன் வாழ்க்கை எப்படி பிறரால் கணிக்கப்படுகிறது என்பதை இந்தளவு ஆழமாக சொல்ல முடியும், அதற்கு பிரபலமான நடிகரான சாய் தரம் தேஜை ஒப்புக்கொள்ள வைத்து நடிக்க வைக்க முடியும் என்பதையே நம்ப முடியவில்லை. வசனம், காட்சி அமைப்புகள் என ஒவ்வொரு பிரேமும் இயக்குநரின் பெயர் சொல்ல வைக்கிறது. அடுத்து, இளையராஜாவின் பக்தரான டிஎஸ்பியின் இசை, கொண்டாட்டமோ, துயரமோ அவ்வளவு பாந்தமாக இழைகிறது. காதலில், பிரேம வெண்ணிலா தாலட்டல் சொக்க வைக்கிறது. வெண்ணிலா கிஷோர் கஞ்சப்பிசினாறி தமிழனாய் நடித்து பின்னியிருக்கிறார். பத்து நிமிடங்கள்தான் படத்தில் வருகிறார். கிடைத்த கேப்பில் ரசிக்க வைப்பது அழகு. கவனிங்க ப்ளீஸ்!

கீ - தந்தை மகன் பாசம் மட்டுமே காப்பாற்றுகிறது

படம்
கீ காளீஸ் மனதில் நிற்பது கதை, இரும்புத்திரை படத்தின் கதையைப் போல செல்கிறது. ஆனால் அப்பா - மகன் பாசம்தான் மனதில் நிற்கிறது. சுவாரசியம் வில்லனின் கதாபாத்திரம். பிறரை ஆட்டிவைப்பதும், உயிருக்கு அவர்கள் கெஞ்சுவதும் அவரை கடவுளாக மாற்றுகிறது. சலனமான மனது, உறுதியில்லாத மனிதர்களை உடைத்து உலகை விட்டே எறியும் உணர்ச்சிகளைக் களைந்த வில்லன் சுவாரசியம். தற்கொலை முயற்சிகளுக்கான ஸ்கெட்ச், பயமுறுத்துகிறது. கதை நாயகன் ஜீவா மீண்டும் கல்லூரி செல்கிறார். அதை நாம் ஏற்கமாட்டோம் என்பதாலோ என்னமோ காலேஜ் காட்சிகள் குறைவு. பெரும்பாலும் ஜாலியாக போனில், கணினியில் நோண்டிக்கொண்டிருக்கும் காட்சிகள் அதிகம். மைனஸ் மேலே சொன்ன விஷயங்களை தவிர்த்து எல்லாமே போதாது ரகம்தான். காளீஸூக்கு முதல் படத்தில்  திரைப்படமாக்கம், வசனம் என அனைத்தும் செய்து இருக்கிறார். சில இடங்களில் ரசிக்க வைக்கிறார். சில இடங்களில் அடப்போய்யா என சொல்ல வைத்திருக்கிறார். இசையை தேட வேண்டியிருக்கிறது. நாயகி பற்றி சொல்ல ஏதுமில்லை. உருப்படியான விஷயம் ராஜேந்திர பிரசாத். தெலுங்கு ராவுகாரு பிரமாதமாக நடித்து நம் மனதில் இடம்ப

ஐட்யூனை மூடும் ஆப்பிள்!

படம்
ஆப்பிள் நிறுவனம் விரைவில் ஐட்யூன், டவுன்லோடு சேவைகளை மூடவிருக்கிறது. என்ன காரணம்? இசை, பாட்காஸ்ட் உள்ளிட்ட சேவைகளுக்கென தனி ஆப்களை உருவாக்கி வருவதால் இந்த அதிரடி முடிவு. 2001 ஆம் ஆண்டு ஜனவரி 9 அன்று ஐட்யூன் சேவை தொடங்கப்பட்டது. ஆப்பிளின் கிரியேட்டிவிட்டி இயக்குநரான ஸ்டீவ் ஜாப்ஸ், சிடி, டிவிடிகளிலிருந்த பாடல்களை இணையத்திற்கு கொண்டு வந்தார். ஐட்யூன் தளத்தில் வடிவமைப்பு அப்போது கோப்புகளை பரிமாற்றம் செய்து வந்த நாப்ஸ்டர் எனும் தளத்தை ஒத்திருந்தது. ஆனால் ஐட்யூனின் வெற்றி மிக குறைவான நாட்களே இருந்தது. காரணம், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பாட்டிஃபை போன்ற இலவச, கட்டண சேவை நிறுவனங்கள் இசையை ஜனரங்க மக்களிடம் கொண்டு போய் சேர்த்தன. 2020 ஆம் ஆண்டு வரை ஐட்யூன் வலைத்தளம் இணைய உலகில் நிற்பது கடினம் என கணித்துள்ளனர் டெக் வல்லுநர்கள். நன்றி: தி கார்டியன்

2019 தேர்தலில் பெண் எம்.பிக்கள் சாதித்தது எப்படி?

படம்
ரம்யா ஹரிதாஸ்  32 வயதில் எம்.பியாகியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி சார்பாக வென்றவர் நாட்டுப்புற பாடல்களைப் பாடுவதன் வழியாக மக்களை அணுகினார். கேரளாவிலிருந்து நாடாளுமன்றம் செல்லும் பழங்குடி இன எம்.பி இவரே. இதற்கு 48 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் பல சொதப்பல் பிளான்களை இந்த தேர்தலில் செய்தாலும், செய்த உருப்படியான விஷயம் நிறைய பெண் வேட்பாளர்களை தொகுதிகளில் நிறுத்த முயற்சித்த துதான். வென்ற பெண் வேட்பாளர்களில் ரம்யா ஹரிதாசும் ஒருவர். அம்மா, தையல் கலைஞர், அப்பா தினக்கூலி செய்துவருகிறவர். 2011 ஆம் ஆண்டு ராகுல் காந்தியால் அடையாளம் காணப்பட்டவர், தற்போது எம்.பியாகி உள்ளார். இதற்கு முன்பு பஞ்சாயத்து தலைவியாக செயல்பட்டிருக்கிறார். தேர்தல் செலவுகளுக்கு க்ரௌடு ஃபண்டிங் மூலம் பத்து லட்சம் நிதிதிரட்டி செலவு செய்த தைரியம் பாராட்டத்தக்கது. அம்மா மகிளா காங்கிரஸ் கட்சி உறுப்பினர் என்றாலும் திறமை மூலமே அடையாளம் காணப்பட்டிருக்கிறார் ரம்யா. கேரளாவின் ஒரே பெண் எம்.பி இவர்தான். மக்களின் குடிநீர் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்காக பாடுபடுவேன் என்று கூ

எந்த ரத்தம் உசத்தி?

படம்
மும்பையில் டாக்டர் பாயல் தத்வி, மூத்த மாணவிகளால் அவமானப்படுத்தப்பட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி எப்போதும்போல அரசால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. ஏனெனில் சாதிமுறையை ஆதரிக்கும் அரசு, அதனைப் பயன்படுத்தியே தேர்தலிலும் வென்று அதிகாரத்தைப் பிடித்திருக்கிறது. அரசு எப்படி இதில் மாணவர்களுக்கு உதவப்போகிறது? கல்லூரி வளாகத்தை அனைவருக்குமானதாக எப்படி மாற்றுவது என சுக்காதோ தோரட் கூறுகிறார். தீண்டாமை பாராட்டுவது தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவித்து நோட்டீஸ் ஓட்டுவதோடு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். பேசும் முறை, செயல்பாடுகள் ஆகியவற்றுக்கான நடத்தை நெறிமுறைகளை வகுக்கவேண்டும். புகார் தரும் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கான விசாரணையில் ஆசிரியர்களும் ஆர்வம் காட்டி உதவ வேண்டும். இதில் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஒதுக்கி வைக்க கூடாது. தீண்டாமையை தவறு என வலியுறுத்தும் பாடங்களை பள்ளிகளிலேயே  உருவாக்கி பயிற்றுவிக்க வேண்டும். உயர்கல்வி நிலையங்களில் மூத்த மாணவர்கள் உங்களின் பெயர்களை கவனிப்பார்கள். அதில் ஜாதி இருந்தால் அதிலேயே புரிந்துகொண்டு உங்களை அந்த ஜாதிக்கேற்றபடி தரத்தில் நடத்துவார்கள்.

கொல்வதற்காகவே பிறந்தவன்!- ஹூவாங் யாங்

படம்
அசுரகுலம் ஹூவாங் யாங் (நேற்றைய தொடர்ச்சி) தஹூவாங்சுஹூவாங் எனும் கிராமத்தில் வீட்டில் தங்கியிருந்தார். யாங். கிராமம் பெரியதுதான். ஆனால் யாங் வாங்கும் சம்பளத்திற்கு சிறிய அறைதான் கிடைத்தது. அங்கு நிறைய கஃபே, தேநீர்கடைகள் இருந்தன. நியான் ஒளிகளால் நிறைந்த அந்த இடத்தில் தன் வேட்டையை யாங் தொடங்கினார். மெல்ல அங்கிருந்த இளைஞர்கள் காணாமல் போகத் தொடங்கினர். இது குறித்த புகார் வர போலீசாரும் கண்காணிக்கத் தொடங்கினர். கம்ப்யூட்டரோ அல்லது வேறு விஷயங்களை செய்துகொண்டிருக்கும் மாணவர்களை அணுகுவது யாங்கின் வழக்கம். மெல்ல அவர்களுக்கு வேலை தருவதாக பேசி மனதை மயக்குவார். நம்பிக்கை பெறுவார். பின் விழிப்புணர்வோடு இருந்தால் எப்படி வல்லுறவு செய்வது? என்று போதைப்பொருட்களை மதுபானத்தில் கலந்து கொடுப்பது யாங் பாணி. போதையில் கவிழ்ந்தவுடன் அவர்களை நண்பர் போல கைபிடித்து வீட்டுக்கு அழைத்து செல்வதாக பாவ்லா காட்டி தன் வீட்டிற்கு கொண்டு சென்றுவிடுவார். வீட்டிற்கு தள்ளி உள்ள ஷெட்டிற்கு இளைஞர்களை கொண்டு சென்று, மரக்குதிரை போன்ற நூடுல்ஸ் செய்யும் கருவி அருகே கிடத்துவார். அந்த கருவி மூலம்தான் மாணவர்களை அழுத்தி எ

தடுப்பூசியில் அலுமினியம் உள்ளதா?

படம்
ஆங்கிலப் பேராசிரியர் ஒருவர் தடுப்பூசியில் அலுமினியம் உள்ளதாக கூறி அதற்கு எதிரான செயல்பாடுகளுக்கு நிதி திரட்டியுள்ள சம்பவத்தை கார்டியன் பத்திரிகை வெளிப்படுத்தியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் எக்ஸ்லி, தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரத்தை செய்து வருகிறார். அவர் பல்கலைக்கழக வலைத்தளத்தில் தடுப்பூசிக்கு எதிராக நிதியுதவிகளைப் பெற்றிருப்பது தற்போது வெளியாகியுள்ளது. இவர் 2017 ஆம் ஆண்டு செய்த ஆராய்ச்சி அறிக்கையில், அலுமினியம் ஆட்டிசக்குழந்தைகளின் மூளையில் படிந்துள்ளது. இதற்கு காரணம் தடுப்பூசி என சர்ச்சையைக் கிளப்பினார். தனது ஆராய்ச்சிக்கான நிதியாக மக்களிடமிருந்து 22 ஆயிரம் பவுண்டுகளைப் பெற்றிருக்கிறார். குறைந்த பட்ச தொகை நூறு பவுண்டுகள். இதற்கு நிதியுதவி செய்தது, தடுப்பூசிக்கு எதிராக செயல்படும் சில்ரன் மெடிக்கல் சேப்டி மெடிசின் இன்ஸ்டிடியூட் ஆகும். இந்த விவரங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தி கார்டியன் நாளிதழ் வாங்கி பிரசுரித்து உள்ளது. இதுகுறித்து எக்ஸ்லியிடம் கேட்டபோது, இதில் தவறு ஏதும் இல்லை. நான் ஆய்வகச்செலவுகளுக்காக இத்தொகையைப் பயன்படுத்தினேன். இதில் ச