இடுகைகள்

பூமி சுற்றுவதை நாம் ஏன் அறிய முடிவதில்லை?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி பூமி சுற்றுவதை நம்மால் ஏன் அறிய முடியவில்லை? காவேரி ஆற்றை படகில் நீங்கள் கடக்கிறீர்கள் என்றால் அப்போது ஆற்றில் ஏற்படும் சுழலை நீங்கள் உணர்வீர்கள். காரணம் அதன் வலிமை அப்படி. படகில் செயல்படும் துடுப்பு விசையை விட சுழலின் விசை அதிகமாக இருக்கும்போது அதனை நீங்கள் உணர முடியும்.  பூமி, விண்வெளியில் சுற்றும் வேகம் மணிக்கு ஆயிரம் கி.மீ வேகம்(இங்கிலாந்து அடிப்படையில்). இதனை உணர முடியாத தற்கு காரணம், நம்மீது செயல்படும் ஈர்ப்புவிசைதான்.  நன்றி: பிபிசி

சீனாவில் சகிப்புத்தன்மையற்ற சர்வாதிகாரம் நிலவுகிறது

படம்
தியான்மென் சதுக்க படுகொலைகளை சீன அரசு பாடுபட்டு மறைக்க முயன்றும் அதனை பலர் இணையத்தில் அதைவிட தீவிரமாக வேலைபார்த்து வெளியிட்டு வருகின்றனர். 1989 ஆம் ஆண்டு சீன அரசு, ஒடுக்குமுறையை செய்தபோது சூ ஃபெங்சுவோ மாணவர் சங்கத் தலைவராக இருந்தார். தற்போது அமெரிக்காவில் வசிப்பவர் அன்றைய சூழ்நிலை குறித்து பேசுகிறார். ஜூலை 4 தேதி நடந்த நிகழ்ச்சிக்கான அரசின் பொறுப்பு ஏற்பு என்பதற்கே பெரும் கஷ்டப்படவேண்டி உள்ளது. சம்பவம் குறித்து உங்களது கருத்தைச் சொல்லுங்கள்.  சீன கம்யூனிஸ்ட் கட்சிதான் முழு பொறுப்பு. அதை நாம் முதலில் ஏற்பது அவசியம். நேரடியான தொடர்பு என்றால் முன்னாள் சீனத் தலைவர்களான டெங் ஜியாபிங் மற்றும் லீ பெங் ஆகியோரைச் சொல்லலாம். ஜனநாயக வழியில் இதற்கான பொறுப்பேற்று அரசு செயல்பட்டு மேற்சொன்ன இரு குடும்பங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும். அவர்களின் தலைமுறைகளின் சொத்துக்களும் இதில் அடங்கும். பொறுப்பு என்பது நீதியோடு தொடர்புடையது. மேலும் இதன் தடத்தைப் பின்பற்றினால் உண்மையை நாம் சென்று அடையலாம். மக்களை ஏன் அவர்கள் கொன்றார்கள்? எப்படி அந்த முடிவை எடுத்தார்கள் என்ற கேள்விகளை நாம் ந

கடத்தல் பிஸினஸில் ட்ரோன்கள்!

படம்
கடந்த ஜூன் 8 இல் அரசின் டிஆர்ஐ துறை சென்னையில் 48 ட்ரோன்களை கடைகளில் இருந்து பறிமுதல் செய்தனர். இந்த ட்ரோன்களின் மதிப்பு 23 லட்ச ரூபாய். இந்த ட்ரோன்களை எழும்பூரிலுள்ள கடைகளிலிருந்து அரசு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த ட்ரோன்கள் சீனாவிலிருந்து மியான்மர் வழியாக இந்தியாவிற்குள் கடத்தப்படுகிறது. இதற்கு பயன்படும் அதே வழியில்தான் நம் நாட்டிற்குள் தங்கமும் பயன்படுத்தப்படுகிறது. தங்கமும் ட்ரோனும் ஒன்றா எனக்கேட்பீர்கள். ட்ரோன் மார்க்கெட் 2021 ஆம் ஆண்டுக்குள் 881 மில்லியன் டாலர்களை எட்டவிருக்கிறது. சீனாவிலிருந்து பெரும்பான்மையான ட்ரோன்கள் விற்கப்பட்டு வருகின்றன. அதன் அசல் விலையை விட 40 சதவீதம் அதிகமாக உள்ளது.  சென்னையில் ட்ரோன்களை வாங்க முடியுமா? நிச்சயம் முடியும் ஆனால் பில் இல்லாமல்தான் கிடைக்கும். சென்னையில் 15 முதல் 20 வரையிலான ட்ரோன்கள் தினசரி இங்கு விற்கின்றன. இடைத்தரகர்கள் இதற்கும் உண்டு. கடத்தல் ஐடியா எலக்ட்ரானிக் ஐட்டம் என்று கூறி ட்ரோன்களை பகுதிப் பொருட்களாக வாங்கி பின்னர் ஆன்லைன் டுடோரியல் மூலம் அசெம்பிள் செய்து பயன்படுத்துகின்றனர். விற்கின்றனர். இதனைக் கண்டுபிடித்து

ஒரே நாடு ஒரே தேர்தல் பின்னணி என்ன?

படம்
2017 ஆம் ஆண்டு குடியரசு தினத்தில் பிரனாப் முகர்ஜி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைப் பற்றி பேசினார். அன்று சொன்னதை இரண்டாவது முறை ஆட்சியைப் பிடித்ததும் மோடி அமலுக்கு கொண்டுவர முயற்சிகளைத் தொடங்கிவிட்டார். இதன் பாசிட்டிவ் பக்கம் காசுதான். ஒரே நேரத்தில் தேர்தல் என்பதால் நேரமும் பணமும் குறைய வாய்ப்புள்ளது. அதேசமயம், மத்திய, மாநில அரசுகளின் அமைச்சர்கள் கொள்கைகள் குறித்து உரையாடவும் நிறைய நேரம் கிடைக்கும். இந்தியாவின் முதல் தேர்தல் 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது. சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. 1967 ஆம் ஆண்டு வரை தொடர்ந்த நடைமுறை, பின்னர் கைவிடப்பட்டது. காரணம், மக்களவை கவிழ்ந்ததால்தான். இந்திய அரசமைப்புச்சட்டம் 83(2), மக்களவையை தேர்தலுக்காக முன்பே கலைப்பதற்கான குறிப்புகளைக் கொண்டுள்ளது. இதேபோல சட்டம் 172 மாநில அரசுகளுக்கானது.  இதிலுள்ள சட்டச்சிக்கல், தேர்தலுக்காக மத்திய மாநில அரசுகள் தம் ஆட்சிக்காலம் முடிவதற்குள் சட்டசபையை, மக்கள் அவையை கலைக்க வாய்ப்புள்ளது. ஆனால் இது, அரசியலமைப்புச்சட்டத்திற்கு எதிரானது. ஏறத்தாழ ஒரே நாடு ஒரே

தினசரி பிளாஸ்டிக் சாப்பிடுகிறோமா?

படம்
நாம் சாப்பிடும் உணவில் பிளாஸ்டிக் உள்ளது. அதன் அளவு வாரத்திற்கு கிரடிட் கார்டு அளவு என்று இது குறித்து வெளியான ஆய்வு குறிப்பிடுகிறது. ஆஸ்திரேலியாவிலுள்ள நியூகேஸ்டில் பல்கலைக்கழகம் இதுகுறித்த ஆய்வை வெளியிட்டுள்ளது. உலகளவில் 2 ஆயிரம் சிறு துகள்கள் அளவுக்கு சாப்பிடுகின்றனர் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பிளாஸ்டிக் துகள்களின் எடை வாரத்திற்கு 5 கிராம் என ஆண்டிற்கு 250 கிராம் பிளாடிஸ்க்கை நாம் சாப்பிட்டு வருகிறோம் என்கிறார்கள் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். பொதுக்குடிநீர் பைப்புகளில்தான் பெரும்பான்மையான பிளாஸ்டிக் கலப்படம் நிகழ்கிறது. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இதன் அளவு அதிகமாக உள்ளது. உப்பு, மீன், பீர் ஆகியவற்றில் இந்த பிளாஸ்டிக் கலப்பு அபரிமிதமாக உள்ளது. இந்த ஆய்வு நாம் கவனிக்க வேண்டிய விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளது. எனவே நாடுகள் உடனடியாக மக்கள் பிளாஸ்டிக் கலப்பு உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க உதவ வேண்டும் என்று கூறுகிறார் உலக வைல்ட் ஃபன் உலக இயக்குநர் மார்கோ லாம்பெர்டினி. இந்த ஆராய்ச்சியை தவ பழனிச்சாமி செய்துள்ளார். இந்த அறிக்க

சிறுபிள்ளைத்தனமான காமெடி - ரசிக்கலாம் பாஸ் ஆராயாதீங்க!

படம்
சில்லி ஃபெலோஸ் இயக்கம்: பீமனேனி ஸ்ரீனிவாச ராவ் கேமரா: அனிஸ் தருண்குமார் இசை: ஸ்ரீவசந்த் வேலைன்னு வந்துட்ட வெள்ளக்காரன் படத்தின் தெலுங்கு ரீமேக். அலரி நரேஷ்(வீரபாகு), சுனில்(சூரி) இருவரின் அட்டகாச கெமிஸ்ட்ரியில் படம் காமெடியில் கொடி கட்டுகிறது. ஜாக்கெட் ஜானகி ராமன் எம்எல்ஏவின் வலதுகரமான அலரி நரேஷ், செய்யும் அலப்பறைகள்தான் படத்தை ரசிக்க வைக்கின்றன. இலவச திருமணம், பத்து லட்சம் வாங்கி போலீஸ் வேலை வாங்கித் தருவது என செய்யும் உல்டா புல்டா வேலைகளால் சுனில், சித்ரா சுக்லா ஆகியோர் பரம வெறியாகி இவரைத் துரத்துவதே கதை. ஜாக்கெட் ஜானகி ராமனாக, ஜெயப்பிரகாஷ் ரெட்டி பின்னி எடுத்திருக்கிறார். புஷ்பாவாக, நந்தினிராய் கிரிப்பாக நடித்திருக்கிறார். மற்றபடி படம் முழுக்க புஷ்பாவிடம் கையெழுத்து வாங்க முயற்சிக்கும் சுனிலின் காமெடி கைவரிசை பின்னி எடுக்கிறது. சித்ரா சுக்லாவை என்ன செய்வது என இயக்குநருக்கும் தெரியவில்லை நமக்கும் தெரியவில்லை. பாடல்கள் கடனே என்று கடக்கின்றன. சீரியசா, காமெடியா என அவரும் முழிக்கிறார். லாஜிக் மறந்து ஜாலியாக ரசிக்கலாம். -கோமாளிமேடை டீம்

கிண்டல்களுக்கு ஆளாகும் பள்ளிக்குழந்தைகள்!

படம்
பள்ளிகளில் சாதி,பொருளாதாரம் சார்ந்த கிண்டல்கள் சகஜமாக நடைபெறும். தற்போது கூடுதலாக ஆணோ, பெண்ணோ பாலினம் சார்ந்து கிண்டல்களை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக டெல்லி யுனெஸ்கோ ஆய்வுக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 60 சதவீத குழந்தைகள் நடுநிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் கடுமையான கிண்டல்களைச் சந்திக்கின்றனர். 43 சதவீத குழந்தைகள் பாலியல் ரீதியாக பல்வேறு தாக்குதல்களை தொடக்கப் பள்ளிகளில் சந்திக்கின்றனர். இதில் 18 சதவீத அறிக்கைகள் பள்ளி நிர்வாகத்திடமிருந்து பெறப்பட்டுள்ளன. கடுமையான கிண்டல்கள், இன, சாதி, பாலின வேறுபாடு பிரச்னைகளால் பாதிக்கப்படும் மாணவர்களின் அளவு 70 சதவீதம். இவர்கள் படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் தடுமாறி வருகின்றனர். இதில் 33 சதவீதம் பேர் கிண்டல், கேலிகளால் பள்ளியை விட்டே விலகி விடுகின்றனர். நன்றி: டைம்ஸ் Image: Kids helpline