இடுகைகள்

நிலவுக்குச் செல்லும் தீவிரம் ஏன்?

படம்
சந்திரயான் சிறப்பிதழ்! நிலவுக்குச்செல்ல ஏன் இந்த அவசரம்? அமெரிக்கா அப்போலோ 11 விண்கலம் மூலம் நிலவுக்கு சென்று வந்த வரலாற்று நிகழ்ச்சி நடந்து அரைநூற்றாண்டு ஆகிவிட்டது. ஆனால் இன்றும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்குச் செல்ல பேரார்வத்துடன் செயற்பட்டு வருகின்றன. இதற்கு என்ன காரணம்? பூமியைப் போல மற்றொரு மனிதர்கள் வாழும் சூழல் கொண்ட கோளைக் கண்டுபிடிப்பதுதான். இந்தியா நிலவை ஆராய முடிவெடுத்து சந்திரயான் -1 விண்கலனை விண்ணில் செலுத்தியபோது பல்வேறு விமர்சனங்கள் கிளம்பின. ஆனால், நிலவின் பரப்பில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததும்தான் விமர்சகர்கள் அமைதியானார்கள்.  சந்திரயான் 1 இல் வட்டப்பாதையைச் சுற்றிவரும் ஆர்பிட்டர் மட்டுமே உண்டு. அமெரிக்கா, ரஷ்யா ஆகியோர் செலவழித்த தொகையில் பாதிக்கும் குறைவாக 386 கோடி ரூபாயை மட்டுமே இந்தியா கொண்டு புதிய கண்டுபிடிப்பை சாதித்தது. சந்திரயான் 2 இல் ஆர்பிட்டர், ரோவர், லேண்டர் ஆகிய சாதனங்களும் இடம்பெற்றுள்ளன. சோவியத் ரஷ்யா 1959ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று லூனா 2 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதுவே நிலவுக்குச் சென்ற முதல்

சந்திரயான் ஸ்பெஷல்!- நோக்கம் என்ன?

படம்
சந்திரயான் 2 ஏவப்பட்டதன் நோக்கம்! இஸ்ரோ நிறுவனம், சந்திரயான் 1யை விண்ணுக்கு அனுப்பி நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது உலக நாடுகள் நிலவை ஆராய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன. காரணம், வெப்பமயமாதலால் பூமி பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. பூமியில் நீராதாரம் குறைந்து வருவதும், மக்கள் வாழ்வதற்கான இயற்கை வளங்கள் அரிதாகி வருவதும் முதன்மைக் காரணங்கள். இந்தியா, நிலவை ஆராய சந்திரயான் 2 வை அனுப்பி வைக்க 2018 ஆம் ஆண்டிலிருந்து  முயற்சித்து வருகிறது. ஆனால், தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக சந்திரயான் விண்ணுக்கு ஏவப்படுவது தள்ளி வைக்கப்பட்டு வந்தது. விண்ணில் ஏவப்பட்டு 52 நாட்களுக்குப் பிறகு நிலவின் தரைப்பரப்பில் சந்திரயான் 2 விண்கலம் இறங்கும். நாசா ஆய்வுக்கு அனுப்பிய விண்கலங்கள் ஈக்குவடார் பகுதியில் இறங்கின. சீனாவின் சாங் 4 விண்கலம் தெற்குத் துருவப் பகுதியில் இறங்கி நிலவின் மறுபுறத்தை சோதித்தது. இந்தியாவும் சீனாவின் வழியைப் பின்பற்றவிருக்கிறது. விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2, பதினாறு நாட்கள் பூமியின் வட்டப்பாதையை வலம் வரும்.

மூன்றாம் உலக முத்தமா?

படம்
கிஸ் கதை! மாலை நேரம். காதலியோடு நடக்கிறீர்கள். எதையோ சொல்ல நினைக்கிறீர்கள். மெல்லிய புன்னகையோடு ஒரக்கண்ணால் காதலியைப் பார்க்கிறீர்கள். பெண்கள் 360 டிகிரியில் அனைத்தும் அறிவார்களே! உங்களது  அசட்டுத்தனத்தைப் பார்த்தபடி உதடு கடித்து இன்னும் ஏண்டா லேட் என படபடப்பாக பார்க்கிறார். அவரின் இதயத்துடிப்பு மெல்ல உங்களுக்குக் கேட்கிறது. அப்போது நீங்கள் நடந்துசெல்லும் இடம் கார்னரை எட்டுகிறது. அங்கு சோடியம் வேபரின் தொந்தரவு கூட இல்லை. என்ன நடக்கும்? வாய்ப்பை துணிச்சலாக பயன்படுத்துகிறீர்கள்?  மெல்ல தலைசாய்த்து இதழோடு இதழ் ஒட்டி எடுக்கிறீர்கள். மெல்ல ம் என திணறி முழுக்க ஒப்புக்கொடுக்காமல் பின்னர் உங்கள் கைகளுக்கு இதமாக அர்ப்பணித்து காதலியும் நிற்கிறார். இதை நீங்கள் பென்சன் வாங்கும் காலத்தில் நினைத்தாலும் எப்படி நடந்த து என நினைத்து ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் இதற்கு காரணம் நமது முன்னோர்கள்தான் என்பதால் மடத்தனம் என்றோ முட்டாள்தனம் என்றோ நினைப்பதை தூரம் தள்ளி வையுங்கள். தொன்மைக்காலத்தில் தாய் உணவை அரைத்து மென்று வாய் வழியாக குழந்தைக்கு கொடுப்பதே பழக்கம். இதுதான் முத்தமாக மாறி இன்றைக்கும் ச

போரடிக்குதா மக்களே! - சூப்பர் டேட்டா!

படம்
போர் அடிக்குது என்று சொல்வதை இமைக்கா நொடிகள் போன்ற திரில்லர் படம் பார்க்கும்போது கூட நம்மால் சொல்ல முடிகிறது. காரணம், நாம் பார்க்கும் ஏராளமான திரைப்படங்களால் அடுத்து வரும் காட்சியை வேகமாக ஊகிக்க முடிகிறது. இதன் காரணமாக சினிமாவும் சலித்துப்போக வேறு ஊடகங்களை நோக்கி நகர்கிறோம். இதெல்லாம் பள்ளி, கல்லூரி என போரடிக்கும் போர்க்களங்களைத் தாண்டித்தான் நடக்கிறது. பள்ளியில் கணக்கு, அறிவியல் குறிப்பாக சமூக அறிவியல் போன்ற பாடங்களில் சரிந்துவிழாத தலைகளே கிடையாது. எப்படி நிறுத்திவைத்தாலும் மாணவர்களின் தலை பொசுக்கெடீரென மேசையில் மோதும். விண்கல் மோதுவதைக்கூட இப்படி ரசித்துப் பார்க்க முடியாது. அப்போது சமூக அறிவியல் ஆசிரியை ராஜம்மா டீச்சர், காதைப்பிடித்து இழுத்துச் சொல்லுவார். நீ இப்படித்தூங்கினா சட்டி சுரண்டத்தான் லாயக்கு என்ற அவரின் டயலாக் அன்று ஒன்பது, பத்தாவது மாணவர்களின் மத்தியில் அப்படி ஒரு பிரபலம். மேல்மருவத்தூர் பராசக்தியின் தீவிர பக்தை, தீக்கனல் கண்ணில் தெறிக்க பேசுவது அந்த சாமியே வந்து நமக்கு சாபம் விடுவது போலத் தெரியும். எனக்கு பொதுவாக போரடித்தால் உடனே கண்களை மூடிக்கொள்வேன். விண்ட

அமானுஷ்யத்தை அள்ளிவழங்கும் தேவமோகினி!- கோட்டயம் புஷ்பநாத் ஸ்பெஷல்

படம்
தேவமோகினி கோட்டயம் புஷ்பநாத் தமிழில் சிவன் கேரளத்தின் பழமையான கோவிலகம் அது. நம்பூதிரிகள் வாழ்ந்த இடம். பாழ்பட்டு கிடக்கிறது. அதனை சந்திரமோகன் என்பவர் காசுகொடுத்து வாங்குகிறார். பல்வேறு இடங்களிலுள்ள கோவிலக சிலைகளை கொண்டு வந்து வீட்டில் கண்காட்சி போல அடுக்குகிறார். அப்போது அதன் கொடுமையான விளைவுகள் அவருக்கு தெரியவில்லை. ஆனால் பின்னர், தெரியவரும்போது அவற்றைக் காக்கும் பெரும் பொறுப்பு வந்து சேருகிறது. அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் கதை. முதல் அத்தியாயம் முதலே பரபரப்பு தொடங்கிவிடுகிறது. சந்திரமோகன், அமைதியாக வாழ விரும்புபவர். ஆனால் அங்குள்ள ராஜசேகரன் உள்ளிட்டோருக்கு அவர் புகழ்பெறுவது பிடிக்கவில்லை. எனவே, கிரகப்பிரவேசத்திற்கு அழைப்பிதழ் வழங்காத அவரை அங்கேயே கொல்ல நினைக்கிறார்கள். அந்த திட்டத்தை எளிமையாக தடுக்கிறாள் அங்கு வசிக்கும் தேவ மோகினி. இவள் மட்டுமல்ல அங்கு வசிப்பது. சந்திரமோகனின் உயிரைப் பறிக்கும் வேகம் கொண்ட பைசாச சக்திகளை மிக எளிதாக விலக்கிக் காக்கிறது அங்குள்ள சில சக்திகள். அவை ஏன் அப்படிச் செய்கின்றன? அதன் பின்னாலுள்ள ரகசியங்கள் என படித்தால் கதை முடிந்துவ

புத்தக அறிமுகம்- இணைய தாக்கம் மொழியை மாற்றியது இப்படித்தான்!

படம்
புத்தக அறிமுகம் இணையத்தால் ஏற்பட்ட தாக்கம்! இணையத்தில் எதுவும் மிகச்சிறியதாக கூறவேண்டும். முதலில் நிறைய பிளாக்குகளில் எழுதியவர்கள் கூட தடுமாறிப்போய், பின் மெல்ல சமூக வலைத்தளத்திற்கு பழகிப்போனார்கள். இணையத்தில் நீளமான செய்திகளிலிருந்து எப்படி மீம்ஸ்களுக்கு மக்கள் பழகினார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இந்த நூல் உதவும். வாங்கிப்படியுங்கள். குறிப்பாக ஆங்கிலமொழியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கிரெட்சன் எளிமையாக விளக்கியுள்ளார். எபோலா ஏற்படுத்திய மரணபயம்! 2013-14 தொடங்கி இன்றுவரை எபோலா தாக்குதல் ஏற்படுத்திய அச்சம் பலருக்கும் தீரவில்லை. எப்படி தடுப்பது, மக்களைக் காப்பாற்றுவது என மருத்துவர்கள் தடுமாறிப்போனார்கள். கண்டங்கள் தாண்டி எபோலா எப்படி மக்களைத் தாக்கி வீழ்த்தியது என்று ஆசிரியர் விளக்கியுள்ளார். அதோடு இந்த நூல் ஒருவகையில் எதிர்காலத்தில் நமக்கு ஏற்படும் நோய்களை நாம் எப்படி தடுக்கவேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. பெண்களின் உடல்நலம்! 1970களுக்குப்பிறகு பெண்கள் வெறும் குடும்பம் என்று இல்லாமல் பல்வேறு பணிவாய்ப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்

அரசியல்வாதிகளின் பின்னே நிற்காதீர்கள் - சேட்டன் பகத்

படம்
சேட்டன் பகத் -  2016 ஆம் ஆண்டு பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை எனக்கு அதிர்ச்சி தந்தது. காரணம், காங்கிரஸ் அரசின் தவறையே இந்த அரசும் செய்கிறதோ என்று எனக்குத் தோன்றியது. ஓய்வூதிய சேமிப்புகளுக்கு கூட வரி போடுவதை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. அரசுகள் வரி போடுவதால் என்ன பயன்? வருவாய் அதிகரிப்போது ஏழைகளை நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்களை மேல்தட்டுக்கும் நகர்த்துவதற்கான முயற்சிகளை செய்யமுடியும். ஆனால், அளவுக்கு அதிகமான வரி என மக்களை நினைக்க வைப்பது இதற்கு எதிர்மறையான விளைவைத் தரும். மும்பையில் ஒரு கஃபே செயல்படுகிறது என வைத்துக்கொள்வோம். அங்கு அருகிலுள்ள அரசு அலுவலகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் வந்து டீ, காபி, ஸ்நாக்ஸ் என நொறுக்கி எறிகின்றனர். பில்லிலும் வரி உண்டு. அந்த அதிகாரிகளின் சம்பளத்திலும் வரி பிடித்தம் உண்டு. அவர்கள் வாங்கும் ஒவ்வொரு பொருட்களிலும் கல்வி வரி உள்ளிட்டவை அடங்கும். மேலும், பெட்ரோல் டீசலும் முக்கியமான வரிகள் உண்டு. இப்போது வரி அதிகமாவதால் கூட்டம் குறைகிறது. கஃபே மூடிவிடுகிறார்கள் எனில் என்னாகும்? அங்கு வேலைவாய்ப்புகள் குறைகிறது என்று பொருள்

குற்றங்களுக்கு மரபணுக்கள் காரணமா?

ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி ஒருவர் மோசமான குற்றவாளி ஆக மரபணுக்கள் காரணமா? இப்படி கேள்வி பிறக்க, தந்தி கட்டுரைகளை தொடர்ந்து படித்தால்போதும். ரத்தம் தெறிக்க ஒன்லைனை வைத்துக்கொண்டு கொலை செய்தவர்களே படித்து சிரிக்கும் கதைகள் அங்குள்ள உதவி ஆசிரியர்கள் எழுதும் திறன் பெற்றவர்கள். சரி அறிவியல் முறைக்கு வருவோம். வெளிப்படையாக சொல்வதென்றால், சமூகம் எப்படி நடந்துகொள்கிறதோ அதன் வெளிப்படை அவர்கள் குற்றச்செயல்களாக வெளிக்காட்டுகிறார்கள். தீவிர தொடர் கொலைகார ர்களை போலீசாரும், உளவியலாளர்களும் ஆராய்ந்தபோது, சிதைந்துபோன அவர்களது குடும்பமும்,  வன்முறையான பெற்றோரின் குணாதிசயங்களும் அவர்களின் மனதை இரும்பாக்கி உணர்ச்சிகளே இல்லாதவர்களாக மாற்றுகிறது. மேலும் சிறுவயதில் தீவிர அவமானங்களை சந்திப்பவர்கள், அதற்கு நிச்சயம் பின்னால் பழிவாங்குவது உறுதி. அது குறிப்பிட்ட சம்பவத்திற்கு காரணமானவர்களாக இருக்கவேண்டுமென்ற அவசியம் இல்லை. அதற்கு சமூகம் பதில் சொல்ல வேண்டும். தவறான நடத்தைகளை திருத்திக்கொள்ள வாய்ப்பு கொடுத்து, குற்றவாளிகளை சமூகத்தோடு இணைத்துக்கொள்வதே நல்லது. காரணம், அவர்கள் செவ்வாய் கிரகத்திலிருந்த

அட்ரினலின் சுரப்பு ஆபத்தா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நாம் பயப்படும்போது உடல் நடுங்குவது ஏன்? இஎம்ஐ கட்டாதபோது, மனைவி சொன்ன காய்கறியை வாங்காதபோது, பிறந்தநாளுக்கு பார்ட்டி என்ற சொல்லை நண்பன் சொல்லுவானோ என நினைக்கும்போது நம் உடல் நடுங்கத்தொடங்கும். இதற்கு காரணம், மூளையிலுள்ள அமைக்தலா எனும் பகுதியாகும். இந்நேரத்தில் மூளையில் அட்ரினலின் வேதிப்பொருள் அபரிமிதமாக சுரக்கும். இதன் விளைவாக காந்தியின் நோஞ்சான் உடல் கொண்டவர்களின் உடலும் கூட வேகமாக முறுக்கிக்கொண்டு வலிமை பெறும். இதற்கு காரணம், அப்போது ஏற்படும் நெருக்கடிக்கு ஏற்ப அதனை சமாளிப்பதற்குத்தான். அதிகளவிலான அட்ரினலின் சுரப்பது உடலை கட்டுப்படுத்தமுடியாதபடி மாற்றிக்கொண்டிருக்கும். இதனை அறிவிக்கும் உடல்மொழிதான் உடல் நடுங்குவது. இதன் அர்த்தம் நீங்கள் ஹெர்குலஸ் போல வலிமை பெற்றவர் ஆகிறீர்கள் என்பதல்ல. அந்த நேரத்திற்கு அப்படி இருப்பீர்கள். அம்புட்டுத்தேன். நன்றி: பிபிசி

இங்கிலாந்து மேயரின் சாதனை ஆர்வம்!

படம்
உலகம் முழுக்க வெப்பமயமாதல் பற்றி அக்கறையும் பயமும் உள்ளது. இதன்பொருட்டு அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த மக்கள் உழைத்து வருகின்றனர். இதற்காக இங்கிலாந்தில் புதிதாக பொறுப்பேற்ற மேயர் அசத்தலான காரியம் ஒன்றை செய்திருக்கிறார். வெப்பமயமாதல் பற்றி மாணவர்களுக்கு விளக்க பாடம் சொல்லித்தரவென ஆசிரியர்களை தொடக்கப் பள்ளியில் நியமிக்க இருக்கிறார். ஜேமி டிரிஸ்கோல் என்பவர் வடக்கு டைன் பகுதியில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இவர்தான் இந்த ஆசிரியர்களை நியமிக்கும் பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டிருக்கிறார். இந்த முறையில் சுற்றுச்சூழல் கல்வியை ஐ.நா அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் கற்றுத்தர இருக்கிறார். இது மாணவர்களின் கல்வியை முழுமையாக்கும் என்கிறார் இவர். இம்முறையில் ஐம்பதிற்கும் மேலான ஆசிரியர்கள் , இப்பயிற்சியில் சேர விண்ணப்பித்து உள்ளனர். இந்தவகையில் சூழல் தொடர்பான கவனத்தை மேயர் தொடக்கத்திலேயே ஏற்படுத்தியுள்ளது பலரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நன்றி: இகோ வாட்ச்

மாற்றம் இங்கே தொடங்குகிறது: மாற்றம் தரும் இளைஞர்கள்!

படம்
சான்டியாகோ மார்டினெஸ் - கொலம்பியா இந்த இளைஞர் டிசைன் யுவர் நேஷன் எனும் திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். உலகின் முக்கியமான பிரச்னைகளுக்கான தீர்வுகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்க இவர் உதவுகிறார். முழுக்க இவை டிஜிட்டல் வடிவில் இருக்கும். லிடரோட்டெகா எனும் பலரும் ஒன்றுகூடி எதிர்கால பிரச்னைகளுக்கான தீர்வுகளைத் தரக்கூடிய அமைப்பை உருவாக்கியிருக்கிறார். ஐ.நா சபை திட்டங்களில் செயற்பாட்டாளர், டெட்எக்ஸ் பேச்சாளர் என பல்வேறு வகைகளிலும் சமூகத்தை முன்னேற்றுவதற்கான பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். ஸன்ஜி சிங்களா - ஸாம்பியா ஸாம்பியா பல்கலையில் பொருளாதாரம் படித்து வரும் பெண் உரிமை செயற்பாட்டாளர். சிறந்த செயற்பாட்டாளருக்கான பரிசை தன் நாட்டில் பெற்றவருக்கு வயது 23தான் ஆகிறது. வுமன் தபூஸ் ரேடியோ, வானச்சி பவுண்டேஷன் ஆகிய அமைப்புகளை நடத்தி வருகிறார். யாஸ்மின் அல்மெய்டா லோபெடா பிரேசிலிருந்து வந்து உலகம் காக்க வந்த இசைப்பறவை. போஸ்டன் பல்கலையில் உலக உறவுகள் மற்றும் அரசியல் அறிவியல் படித்துக்கொண்டிருப்பவருக்கு வயது 20தான்.  அகதிகுழந்தைகளுக்கான கல்வி, எல்லைகள் இல்லாத மருத்துவர்கள