இடுகைகள்

மக்கள்தொகை கட்டுப்பாடு அமலுக்கு வருகிறதா?

படம்
மக்கள்தொகை கட்டுப்பாடு! பிரதமர் மக்கள்தொகை கட்டுப்பாடு பற்றிய தன் கவலையை சுதந்திர தினத்தன்று வெளியிட்டார். இதைப்பற்றி நாளிதழில் படிக்கும்போது, அருகிலிருந்தவர்கள் நாடோடி மனிதர்கள் எப்படி இத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள் என விவாதித்துக்கொண்டிருந்தனர். உண்மையில் அவர்களது பேச்சில் இருந்தது பேராசையா, பொறாமையா என்று தெரியவில்லை. எதுவாக இருந்துவிட்டுப் போகட்டும். உண்மையில் பேட்டி பச்சாவோ திட்டத்தை இந்தியர்கள் கைவிட்டு ஆண் குழந்தைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளைத் தேடி வருகின்றனர். மக்கள் தொகை வளர்ச்சி என்பது 2001-2011 வரையில் 1.64 சதவீதமாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2011 சென்சஸ் படி குறிப்பிடப்பட்ட அறிக்கை. உலகவங்கியின் அறிக்கைப்படி 2001 முதல் 2018 வரை 1.04 என மக்கள் தொகை குறைந்தே வந்திருக்கிறது. பொருளாதார அறிக்கை 2018-19 படி, பனிரெண்டு மாநிலங்களில் மக்கள்தொகை சதவீதம் 1 எனவே உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. உ.பி, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் மக்கள் தொகை வளர்ச்சி சதவீதம் குறைந்து காணப்படுகிறது. தகவல்கள் வட இந்தியாவில்தான் மக்கள்தொகை சதவீதம் அதிகம் என காட்டுகிறது. இந்

மூன்று வேலைகளில் முன்னேறிய அரசு ஊழியர் - பீகார் பரிதாபம்

படம்
ஆஹா! மூன்று வேலையில் முப்பது வருடங்கள்! அரசு வேலை கிடைத்தால் சந்தோஷம். அதுவும் விண்ணப்பித்த மூன்று வேலைகளுமே கிடைத்தால் என்ன செய்வீர்கள்? நல்ல சம்பளம், எதிர்கால புரமோஷன் ஆகியவற்றை யோசித்து ஒரு வேலையைத் தேர்ந்தெடுப்பீர்கள். பீகார்காரர் தனக்கு மூன்று வேலைகளும் தேவை எனத்தேர்ந்தெடுத்து 30 ஆண்டுகள் பணியாற்றி சம்பளம் வாங்கியிருக்கிறார். தற்போது ஆதார் கார்டு கேட்க தடுமாறி மாட்டிக்கொண்டுவிட்டார். இதன் அர்த்தம் அவரைப்பிடித்து விட்டார்கள் என்பதல்ல; தப்பித்து தலைமறைவாகிவிட்டார் என்பதுதான். கிஷன்கன்ச் பகுதியில் கட்டுமானத்துறை உதவிப் பொறியாளராக வேலை பார்த்த சுரேஷ் ராம்தான் இத்தகைய வேலையைப் பார்த்த திறமைசாலி. 1988 ஆம் ஆண்டு பாட்னாவில் ஜூனியர் பொறியாளராக பணிக்குச் சேர்ந்தார் ராம். பின்னர்தான் நீராதாரத்துறை உள்ளிட்ட பிற துறைகளில் பணி வாய்ப்பு கிடைத்தது. அனைத்தையும் ஆண்டவனே கொடுத்தான் என வாங்கிப்போட்டுக்கொண்டவர், அத்தனைக்குமான சம்பளம், பதவி உயர்வு என அனைத்தையும் பெற்றிருக்கிறார். அப்போதுதான் நிதிதொடர்பான பணிக்கான அவரது பணி, சம்பளம், ஆதார் கேட்க தயங்கியவர் பின்னர் தலைமறைவாகியிருக்கிறார்

குற்றத்தை துணிந்துசெய்! - டூ கன்ஸ் சொல்லும் பாடம் இது!

படம்
சினிமா விமர்சனம் மார்க் வால்பெர்க் ஸ்பெஷல்! டூ கன்ஸ்!( 2013) இயக்கம் பால்டாஸ்கார் கோர்முகார் திரைக்கதை - பிளாக் மாஸ்டர்ஸ் இசை கிளிண்டன் சார்டர் ஒளிப்பதிவு - ஆலிவர் வுட் ராபர் பாபி பீன்ஸ், டிஇஏ துறை அதிகாரி. அவர் ஸ்டிக்மன் என்பவருடன் சேர்ந்து கொள்ளை, வழிப்பறி செய்து வருகிறார். இவர் போலீஸ் என்பது ஸ்டிக்மனுக்கு தெரியாது. பாபியின் நோக்கம், மெக்சிகோவைச் சேர்ந்த பாபி கிரிகோவை போதைப்பொருள் சகிதமாக போலீசில் சிக்க வைக்கவேண்டும் என்பதுதான் பிளான். அதற்கான முயற்சி சொதப்புகிறது. இதனால், வங்கியிலிருந்த பணத்தை திருடி அந்தப்பழியை கிரிகோ மீது போடுகிறார்கள். அப்போது ஸ்டிக்மனுக்கு பாபி போலீஸ் என்பது தெரிய வருகிறது. உடனே அவரைக் காயப்படுத்திவிட்டு பணத்தை திருடிச்செல்கிறார். அப்போதுதான் ஒரு ட்விஸ்ட். ஸ்டிக்மனும் சீல் படை அதிகாரி என்பது பாபிக்கு தெரியவருகிறது. அவருடைய மேலதிகாரி சொல்படி பணத்தை வங்கியில் கொள்ளையடித்து சில முயற்சிகளுக்கு பயன்படுத்த நினைக்கிறார்கள். இதனால் கிரிகோ, சிஐஏ ஆகியோரினால் துரத்தப்படுகிறார்கள். பாபி, ஸ்டிக்மனை மன்னித்தாரா, இருவரும் ஒன்றாகி எதி

குற்றம் செய்ய கனவு காணுங்கள்! - வலி இல்லைன்னா லைஃப் இல்லை!

படம்
சினிமா விமர்சனம் பெய்ன் அண்ட் கெய்ன் (2013) இயக்கம், தயாரிப்பு - மைக்கேல் பே திரைக்கதை - கிரிஸ்டோபர் மார்க்கஸ், ஸ்டீபன் மெக்ப்ளை ஒளிப்பதிவு -பென் செரிசின் இசை - ஸ்டீவ் ஜப்லான்ஸ்கி  பீட்டே கோலின்ஸ் எழுதிய பெய்ன் அண்ட் கெய்ன் என்ற கட்டுரை நூலைத் தழுவிய படம்.  சன் ஜிம்மில் அதன் உறுப்பினர் எண்ணிக்கையை  300 சதவீதம் உயர்த்துவதாக சூடம் அணைத்து சத்தியம் செய்து வேலையில் சேருகிறார் லூகோ. அங்குள்ள ஜிம் ட்ரெய்னருக்கு பண ஆசை காட்டி தனது க்ரைம் வேலைகளுக்கு அடியாளாக மாற்றுகிறார். லூகோவிற்கு டக்கென பணக்காரனாக வேண்டும். பெண்களுடன் உல்லாசமாக வாழ வேண்டும் என்பதுதான் கனவு. அதற்காக தனது ஜிம்மிற்கு வரும் பணக்காரர் ஒருவரை கடத்துகிறார். அமெச்சூர் தனமாக செய்யும் கடத்தல் பணியில் அவரது சொத்துக்களை ஜிம் ஓனரும் லூகோவும் ஆட்டையப்போடுகிறார்கள். ஆனால் ஒரே ஒரு தப்பைச் செய்கிறார்கள். அவரை உயிருடன் விடுகிறார்கள். அதன் விளைவாக லூகோ மற்றும் அவரது இரு நண்பர்களுக்கு நடக்கும் பிரச்னைகள்தான் படம். மார்க் வால்பெர்க் படம் நெடுக்க பின்னியிருக்கிறார். இவருக்கு லொள்ளு மனோகர், யோகிபாபு போல டிவைன் ஜான்ச

இந்தியர்கள் பெருமைப்படுவதற்கான ஓர் நூல்!- இந்துத்துவா நேசர்களுக்கான நூல்

படம்
நம்பக்கூடாத கடவுள் - ஹிந்துத்துவா சிந்தனைகள் அரவிந்த் நீலகண்டன் கிழக்கு பதிப்பகம் வரலாற்றில் மொகலாயர்கள் படையெடுப்பு இந்துக்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தியது? அசோகர் மரம் நட்டார், பிற மதங்களை போஷித்தார் என்பவர்கள் இந்து மன்னர்களைப் பற்றி(வீர சிவாஜி) ஏன் எதுவும் பேசமாட்டேன்கிறார்கள், இந்தியா எனும் பன்மைச் சமுதாயத்திலுள்ள பல்வேறு பொக்கிஷங்களை அழித்தவர்கள், திருடியவர்கள் யார், மொகலாயர்களின் வரி, பிற மத மன்னர்களின் சகிப்புத்தன்மை ஆகியவற்றைப் பற்றிய கேள்விகள் இன்றும் இந்தியர்களின் மனதில் உண்டு. அத்தனை கேள்விகளுக்கும் அரவிந்தன் நீலகண்டன் இந்த நூலில் பதில் எழுதியுள்ளார். இந்நூலில் 60 பக்கங்கள் வரை மேற்சொன்ன விஷயங்கள் பேசப்படுகிறது. பின்னர் அப்படியே தடம் மாறி மேற்கத்திய அரசுகள் இந்திய கலாசாரப் பொக்கிஷங்களை மூலிகைகளை எப்படி திருடுகிறார்கள், அதைத் தடுக்கும் அவசியம் என தடம் மாறுகிறது. இந்த இடம் நூலில் பொருந்தாமல் இருக்கிறது. முழுக்க இந்துத்துவ கருத்துகள் என்று படிப்பவர்களுக்கும், இந்த இடம் பார்த்திபன் படம் போல புரியாமல் போக அதிக வாய்ப்பு உண்டு.  அயோத்தி ராமர் கோவில் தீர்ப

மனித உரிமைகளை நசுக்கும் சவுதி அரேபியா- கொல்லப்படும் ஏமன் மக்கள்

படம்
சவுதி அரேபிய படைகள், ஏமன் நாட்டைச் சேர்ந்த மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருகின்றனர்.இதன் விளைவாக கடந்த ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை 47 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டிலிருந்து இன்றுவரை நடந்த ஐந்து தாக்குதல்களில் ஹெலிகாப்டர்கள் வரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் மீனவர்களின் படகுகளில் இருந்த சிறுவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் சவுதி சிறையில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கை வெளியாகி உள்ளது. வயிற்றுப்பிழைப்புக்காக மீன் பிடிக்கும் மீனவர்களை எதற்கு ராணுவ எதிரிகள் போல கனரக ஆயுதங்களை வைத்து சவுதி ஆதரவுப்படைகள் தாக்குகின்றன என்பது புரியவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இயக்குநரான பிரியங்கா மோடாபர்த்தி. சவுதி - ஏமன் போருக்கு முன்பு மீன்பிடித்தொழில் நன்றாக நடந்துவந்திருக்கிறது. போர் தொடங்கிய பிறகுதான் நிலைமை மாறியிருக்கிறது. சிறையில் அகப்பட்ட 115 மீனவர்கள் மருத்துவ வசதி, சட்ட உதவி என எதையும் பெற அனுமதிக்கப்படவில்லை. தற்போது பெருமுயற்சி செய்து விடுதலை ஆகியுள்ளவர்களும் ஒன்ற

ரத்தசோதனை மூலம் ஆயுளைக் கணிக்கலாமா?

படம்
pixabay ரத்தசோதனை மூலம் இறப்பை அறியலாம்! இறப்பை அறிவது ஜோசியம் மூலம் நடந்தாலோ அல்லது யாராவது சொன்னாலோ நமக்கு உபயோகமாகவே இருக்கும்.அதுவும் உடலின் செல்களின் மூலம் தெரிய வந்தால் நன்றாகத்தானே இருக்கும்? இது மனிதர்களுக்கு மகிழ்ச்சி தருமா என்று தெரியவில்லை. ஆனால் வணிக நிறுவனங்களுக்கு லாபம் தரும். இதுபற்றிய ஆய்வு நேச்சர் கம்யூனிகேஷன் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களின் உயிரியல் தடத்தை ஆராய்ந்து அவர்களின வாழ்நாளை கணிக்க முயன்றுவருகின்றனர். பதினெட்டு வயதிலிருந்து தொடங்கி 100 வயது வரையிலானவர்களிடம்  ரத்த மாதிரிகளைப் பெற்றுள்ளனர். மொத்தம் ஆய்வுக்கு இசைந்தவர்களின் எண்ணிக்கை 44,168 பேர். இதில் 5, 512 பேர் ஆய்வு முடிவடையும் முன்னரே இறந்து போய்விட்டனர். பதினேழு ஆண்டுகள் நடைபெற்ற ஆய்வு இது. 226 உயிரியல் அடையாளங்களை வைத்து சிலர் 5 அல்லது 10 ஆண்டுகளில் இறப்பது உறுதி செய்யப்பட்டது.  1997 ஆம் ஆண்டு தொடங்கிய ஆராய்ச்சியில் 7,603 பேர்களிடம் ரத்த மாதிரிகள் பெறப்பட்டன. இதில் 83 சதவீதம் அவர்களின் இறப்பை கணிக்க முடிந்தது.  ரத்த மாதிரி மூலம் ஒரு மனிதனின்