இடுகைகள்

ஆசிரியர் கே.என்.சிவராமன் தந்த சுதந்திரம்! - மனமறிய ஆவல்!

படம்
ஆசிரியர் கே.என்.சிவராமன் முத்தாரம் அறிவியல் இதழ் என்பதால் முடிந்தவரை அரசியல் குறுக்கீடுகள் இருக்கவில்லை. ஆசிரியர் கே.என்.எஸ் கொடுத்த சுதந்திரம் இல்லையென்றால் அதில் உருப்படியான எந்த விஷயங்களும் வந்திருக்காது. நான் அங்கு பணிசெய்யும்போது, காலை எட்டு மணியென்றால் இருவரும் வந்து உட்கார்ந்து வேலை செய்துகொண்டிருப்போம். காலையில் நேரத்திலேயே வந்து பணிசெய்வதை விரும்புபவர், காலை 8.30 க்குள் அன்றைக்கான ஃபார்மை எழுதி முடித்துவிடுவார். லே அவுட் ஆட்கள் வந்ததும் பிரிண்ட் அவுட் எடுத்து கொடுத்துவிட்டு டீ குடிக்கச் சென்றுவிடுவார். அப்புறம் என்ன பரபரவேலைகள்தான். மேட்டர் சொல்லிவிட்டு சால்ஜாப்பு சொல்லித் தப்பிக்க முடியாது. நான் அப்படித்தான் என்பார் கே.என்.எஸ். மாலனிடம் பத்திரிகைத் தொழில் கற்றவர். ஜனரஞ்சகம் முதல் தீவிர இலக்கிய இதழ்கள் வரை படிக்கும் வித்தியாசமான அறிவுஜீவி அவர். நிறைய நூல்களைப் பார்த்தால் போதும். உடனே படிங்க என்று வைத்துக்கொள்ளவே கொடுத்திருக்கிறார். அவரும் லக்கி - யுவகிருஷ்ணா சாரும் கொடுத்த நிறைய புத்தகங்களை வாங்கிப் படித்திருக்கிறேன். 11 27.11.2018 அன்புள்ள நண்பர் முருகு

கடைசிக்கட்டித் தங்கம் - வியக்க வைத்த தஞ்சை பிரகாஷ்

படம்
டிஜிட்டல் உலகில் பிரதிலிபி தமிழ் வலைத்தளம் உட்பட பல்வேறு தளங்களில் நீங்கள் உங்கள் எழுத்துகளைப் பதிப்பிக்க முடியும். இதுவரையில் நான் எழுதிய தொகுத்த நூல்களை பலரும் எளிதில் படிக்க முடியும். தனியாக நூல் எழுதச்சொல்லி சில நண்பர்கள் கேட்டாலும், என்னால் அதிக நேரம் ஒரு நூலுக்காகச் செலவிடுவது கடினமாக உள்ளது. காகித வடிவில் நான் எழுதியதைப் பார்த்து மகிழ்வது முன்னர் கனவாக இருந்தது. விரைவில் அந்த போதையிலிருந்து வெளிவந்துவிட்டேன். சரியோ தவறோ தெரியவில்லை. அதுபற்றி பெரிதாக சொல்ல ஏதுமில்லை. முறைப்படி குறிப்பிட்ட இதழுக்காக எழுதும் எழுத்துகளை நான் வெளியில் இணையத்தில் பிரசுரிக்க ஆசிரியரின் அனுமதி பெறவேண்டும். அதைப்பெற்று இணையத்தில் பதிவேற்றிவிட்டு தினகரனிலிருந்து வெளியேறினேன். கூடவே அந்த இதழில் எழுதிய பேராச்சி கண்ணன், சக்திவேல் ஆகியோரின் எழுத்துகளையும் இணையத்தில் பதிவு செய்துவிட்டேன். காரணம் இந்த எழுத்துகளை நானே தொகுத்ததுதான் காரணம். 8 17.11.2018 அன்புள்ள நண்பர் முருகுவிற்கு, வணக்கம். முத்தாரம் இதழில் வெளியான பசுமை பேச்சாளர்கள் தொடரை மின்நூலாக மாற்றி வெளியிட முயற்சித்து வருகிறேன். சூரி

இந்தியாவில் பிளாஸ்டிக் தடை! - என்ன ஆகும் மருத்துவத்துறை?

படம்
பிளாஸ்டிக் தடை நடைமுறைக்கு வருமா? ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மத்திய அரசின் தடை உத்தரவு, இந்திய மருத்துவத்துறையில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.  அக்டோபர் 2 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் சிரிஞ்சுகள், ரத்தப்பைகள், மருந்து பாட்டில்கள் என மருத்துவத்துறையில் பெரும்பாலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களே நிறைந்து உள்ளன.  இத்துறை சார்ந்த தயாரிப்பாளர்கள் இவற்றை உடனடியாக எப்படி மாற்றுவது என திகைப்பில் உள்ளனர். ”நாங்கள் இப்போது மருந்து வாங்கும் மக்களுக்கு பிளாஸ்டிக் பைகளை வழங்குவதில்லை. ஆனால் தற்போதுள்ள பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக கண்ணாடி பாட்டில்கள் தயாரிப்பு சரிவர நடைபெறவில்லை” என்கிறார் ஹைதராபாத்தைச்சேர்ந்த மருந்துகள் மற்றும் வேதிப்பொருட்கள் சங்க தலைவரான ரமேஷ் குப்தா.  பருவகால நோய்கள் தொடங்கும் என்பதால் மருந்து தயாரிப்பாளர்கள் ஆறுமாதங்களுக்கு முன்னதாகவே மருந்துகளைத் தயாரிக்கத் தொடங்கிவிடுவார்கள். இதனால் அரசின் பிளாஸ்டிக் தடைக்கு முன்பாகவே சிரிஞ்சுகள், மருந்து பா

மனமும் அதன் உளவியலும் - பெரியசாமித்தூரனின் எளிய தமிழ் பிரமிப்பு!

படம்
நாணயம் விகடன் மனமும் அதன் உளவியலும் பெரியசாமித் தூரன் தமிழில் இன்று மொழிபெயர்ப்பாக அல்லது நேரடியாகவும் பல்வேறு உளவியல் நூல்களை படித்திருப்பீர்கள். ஆனால், முன்னர் இதுபோல நூல்கள் வருவது அரிது. அப்படி வந்த தமிழ் நூல்களில் ஒன்றுதான் இது. இன்று உளவில் பற்றி பலரும் அறிய விரும்புகிறார்கள். காரணம், உளவியல் தெரிந்துவிட்டால் அவர்களை அணுகுவது எளிது. பேச்சையும் செயலையும் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் சந்திக்கும் பத்தில் ஐந்து பேர், குறைந்தபட்சம் சிக்மண்ட் பிராய்டின் கனவுகளின் விளக்கம் நூலையேனும் படித்திருக்க வாய்ப்பு உள்ளது.  காரணம், அனைவருக்குள்ளும் அடக்கப்பட்ட ஆசை, வருத்தம், கண்ணீர் உள்ளது. இவை பகலில் மனதில் அடைக்கப்பட்டாலும் இரவில் தூங்கும்போது சுதந்திரமாக வெளியே கனவாக வந்துவிடுகின்றன. இது கூட நாம் உளவியல் சிக்கல்களிலிருந்து வெளியேறுவதற்கான தீர்வுதான். அத்தனை பிரச்னைகளையும் மனதில் யோசித்துக்கொண்டிருந்தால் பிரஷர் குக்கராகி வெடித்து விடுவீர்கள். அதில் எங்கு நேருகிறது கனவு, அதில் குறியீடாக தோன்றும் பிரச்னை என்ன என்று தூரன் விளக்கியிருக்கும் பகுதிகள் நன்றாக உள்ளன. பெரியசாமி

ஆபீஸ் அரசியலை சமாளித்தால் உனக்கு வேலை! - இதழியல் பணி!

படம்
நீ எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யுடா தம்பி. ஆனா அங்கிருக்கிற அரசியலைச் சமாளிக்கத் தெரிஞ்சாத்தான் அங்க வேலை பார்க்க முடியும். பாத்துக்க என்றார் வடிவமைப்பாளரும் நண்பருமான மெய்யருள். விரைவிலேயே அலுவலகத்தில் அப்படியான சூழ்நிலை உருவானது. நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம் நான் வேலை செய்த இதழ் முழுக்க நானே தயாரிப்பதுதான். இதில் மற்றவர்களுடன் கலந்து செய்யும் பிரச்னை ஏதுமில்லை. தி.முருகன் குழும ஆசிரியராக இருக்கும்போது, அவரும் முத்தாரத்தில் கட்டுரைகளை எழுதி வந்தார். நான் பொதுவான செய்திகளை இணையம், நாளிதழில் பார்த்து தேடி எழுதுவேன். அவர் தேவையானால் அதனை எடுத்து பயன்படுத்திக்கொள்வது வழக்கம். குங்குமத்திற்கென நான் வேலைக்கு எடுக்கப்படவில்லை. எனவே, அதில் கடிதங்களை மட்டும் எழுதிக் கொடுத்து வந்தேன். ஆனால் அங்கிருந்த குங்குமம் இதழில் சீனியர், ஜூனியர் மோதல்கள் சகஜமானது. பெரும்பாலான ஆட்கள் விகடனிலிருந்து வந்தவர்கள். ஈகோ மோதல்கள் இருக்காதா என்ன? முத்தாரம், சூரியன் பதிப்பகம், பொங்கல் மலர், கல்வி வேலை வழிகாட்டி, கல்விமலர்  என வேலைகள் டைம்டேபிள் போட்டது போல இருக்கும். இந்த லட்சணத்தில்

பத்திரிகையில் வேலை கிடைச்சிருச்சேய்! - பதிப்பக பணி

படம்
மனமறிய ஆவல் - கடிதங்கள் பத்திரிகையில் வேலை என்பது கடைசி புகலிடமாக இருக்கும் என நினைத்தேன். காரணம், நாவல்கள் படித்தாலும் அது பற்றி எழுதினாலும் சரி அது மற்றவர்களுக்கு தெரிய பத்திரிகைதான் ஒரே வழி. இன்று ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று வந்தாலும் அன்று எனக்கு அதில் ரெஸ்யூம் அனுப்பி வேலை வாங்கும் யுக்தி தெரியவில்லை. சிறுபான்மை இதழ் ஒன்றில் தட்டச்சு செய்பவனாக வேலை செய்துகொண்டிருந்தேன். எழுதுபவனுக்கு தட்டச்சில் என்ன வேலை? மூத்த பெண் இதழியலாளர் ஒருவரின் நட்பு கிடைத்தது. அதுவும் சென்னையில் கோட்டூர்புரத்தில் நேர்காணலுக்கு சென்றபோதுதான். எப்போதும் போல நேர்காணலில் கேட்ட கேள்விகளுக்கு முன்னும் பின்னுமான நான்லீனியரில் பதில் சொல்லியதில் அவர்களே ஒரு காஃபி எனக்கும் மட்டும் என ஆர்டர் செய்து குடித்துவிட்டு நீங்கள் கிளம்புங்கள் என அனுப்பி விட்டார்கள். பிறகு இரு மாதங்கள் கழித்து எனக்கு போன் செய்து இப்படி இதழ் ஒன்றில் வேலை செய்கிறீர்களாக என்று கேட்டார். சரி என்றேன். அப்புறம் கிடைத்ததுதான் தட்டச்சுப்பணி. வேலை, ஆசிரியர் என இரண்டுமே சரியில்லைதான். ஆனால் அலுவலகத்தில் இருந்த நூல்கள

டீக்கப்பில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள்!

படம்
மெக்கில் பல்கலைக்கழகம் நாம் பயன்படுத்தும் டீ பேக்குகளில் மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக்குகள் உள்ளதாக ஆராய்ச்சிகள் வெளியாகியுள்ளன. டீ பேக்குகளில் பதினாறு மைக்ரோகிராம் இருப்பதுதான் இன்று சர்ச்சையாகி உள்ளது. இதில் மட்டும்தான் என்றில்லை. முன்பே மீன், தேன், பீர் போன்றவற்றில் பிளாஸ்டிக் இருப்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்திருந்தனர். தற்போது தேயிலையின் முறை. டீபேக்குகளில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக்குகள் உங்களைக் கொன்றுவிடும் என்று இதற்கு அர்த்தம் இல்லை. ஆனால் அவை உயிரினங்களின் சமநிலையில் பாதிப்பை ஏற்படும்தும் என்கிறார் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான நதாலி டுஃபென்ஜி. டீ பேக்குகளில் சிலிகான் பேக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த சிலிகான் செய்யப்பயன்படுத்தும் வேதிப்பொருட்கள்தான் உடலை குலைக்கின்றன. பாலி எத்திலின் டெரப்திலின் எனும் பொருள் இது. 2017 ஆம் ஆண்டு இந்தியா பயன்படுத்தும் டீ பேக்குகளின் எண்ணிக்கை 6 லட்சமாக உள்ளது. இதற்கடுத்து சீனா, துருக்கி ஆகிய நாடுகள் அதிக எண்ணிக்கையில் டீ குடிக்கின்றனர். இந்தியாவில் இதுதொடர்பான தகவல்கள் இன்னும் முறையாக சேகரிக்கப்படவில்லை. நன்றி: டவுன் டு எர்த்

என் படங்களில் வெளிவந்த காந்தி! - இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி

படம்
ராஜ்குமார் ஹிரானி, சினிமா இயக்குநர்.  லகோ ரகோ முன்னாபாய் எனும் படத்தை எடுத்தார். அதில் பேசிய காந்திய வழிமுறைகளுக்காக இன்றும் நினைவுகூரப்படும் நட்சத்திர இயக்குநர். படம் முழுக்க சமூகம், மக்கள், கல்வி என பேசுபவர் காந்தியை படத்திற்கு கூட்டி வந்து உலக மக்களின் கவனம் ஈர்த்தார்.  காந்தி உங்களுக்கு எப்படி அறிமுகமானார்? எனக்கு காந்தி பற்றிய அறிமுகம் பாட நூல்களில் அவரைப்பற்றி படித்ததுதான். வெளிப்படையாக சொன்னால் காந்தி பற்றிய அறிவு எனக்கு குறைவுதான். ரிச்சர்ட் அட்டன்பரோவின் படம் பார்த்துத்தான் காந்தி பற்றி தெளிவு வந்தது. புனேவில் திரைப்படக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். காந்தி பற்றி நிறைய நூல்களைப் படித்தாலும் லூயிஸ் பிளெட்சரின் காந்தி பற்றிய சுயசரிதை எனக்கு திருப்தி தந்தது. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு காந்திதான் காரணம் என்று விவாதித்துக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் நான் அவற்றைக் கேட்டு காந்தி பற்றி நிறைய படிக்கத் தொடங்கினேன். காந்தி இயல்புக்கு மாறானவர்தான். ஆனால் அவரன்றி நமக்கு யார் அகிம்சை வழியைக் காட்டியிருக்க முடியும்? உங்கள் படங்களில் காந்தியை

காந்தி பற்றி அறிய நூல்கள் இதோ!

படம்
காந்தி பற்றி வெளிவந்துள்ள நூல்களில் முக்கியமானது. அவருடைய வாழ்க்கை, கொள்கை, அரசியல் என பல்வேறு விஷயங்களைப் பேசுகிறது.  காந்தியின் வாழ்க்கை அவருடைய செயல்பாடுகளாலும், அவரை தீவிரமாக விமர்சித்த ஆட்களாலும்தான் நிறைவு பெற்றது. ரிச்சர்ட் அட்டன்பாரோவின் காந்தி படம் மற்றும் அதுதொடர்பான கருத்துகள், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்தையும் இந்த நூல் பேசுகிறது.  ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஜூடித் எம் ப்ரௌன், எழுதியுள்ள காந்தியின் சுயசரிதை. காந்தியை சாமியார் அல்லது அரசியல்வாதி என்ற நிலையிலிருந்து மாற்றி வாசிப்பவர்களுக்கு நெருக்கமாக காண்பிக்கிறது.                                 1869 -1948 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த காந்தி எதிர்கொள்ளாத நம்பிக்கையும் கிடையாது. வெறுப்பும் கிடையாது. அவரின் வாழ்க்கை, அரசியல், சமூகம் பற்றிய பார்வைகளை சுருக்கமாக முன்வைக்கும் நூல் இது.       பழிக்குப்பழி என துடித்துக்கொண்டிருந்த மக்கள் வன்முறை வேண்டாம் என்று சொல்லி ஒரு பக்கிரி சொன்னதைக் கேட்டார்கள் என்றால் அவர் பெயரை காந்தி என நீங்களே கூறிவிடுவீர்கள். அவர் அகிம

அக்டோபரில் வரும் மாற்றங்கள் என்னென்ன? - பொருளாதாரம்!

படம்
வங்கிகள் பெட்ரோல் டீசல் வாங்கினால் அளிக்கும் சலுகைகளை இனி தரமாட்டார்கள். அதாவது டெபிட் கார்ட்டில் வாங்குபவர்களுக்கு தரும் சலுகைகள் என புரிந்துகொள்ளுங்கள். வருவாய்த்துறை வரி வசூலில் தீவிரத்தை கடைபிடிக்கப்போவதில்லை. ஆவணத்திலுள்ள எண் தவறானது என்றாலும் மூன்று மாதங்களுக்குப் பிறகு நடவடிக்கை தொடங்கும். அதற்குள் அதுதொடர்பான தவறுகளை சரிசெய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. விடுதிகளுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி பனிரெண்டு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த வரி 18 சதவீதமாக இருந்தது. முன்னர் பாலீஷ் செய்த கற்கள், வைரங்களுக்கு விதிக்கப்பட்ட வரி 3 சதவீதமாக இருந்தது. இந்த வரி 0.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வைரங்களுக்கு இந்த வரி 1.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பிளாட்டின விளம்பரங்களைப் பார்த்து பரவசமாகி ஓடிப்போய் வாங்க முடியும். காபீன் கலக்கப்பட்ட பானங்கள் அனைத்தும் குபீர் விலையேற்றம் காணும். முன்னர் இருந்த 28 சதவீத வரி இனி 40 சதவீதமாக மாறும். வெளியில் நீங்கள் பார்ட்டி வைப்பதாக இருந்தால் இனி ஈஸிதான். காரணம் இதற்கான வரி 18 சதவீத த்திலிருந்து 5 சதவீதமாக குறைகிறது.

ஓஷோ சொன்னால் என் தலையைக் கூட வெட்டக்கொடுத்திருப்பேன்! -மா.ஆ.ஷீலா

படம்
ஓஷோ சொன்னால் தலையைக்கூட வெட்டக் கொடுத்திருப்பேன்! மா ஆனந்த் ஷீலா 1981 இல் ஓஷோ ஆசிரமம் பூனாவிலிருந்து எப்படி மாற்றப்பட்டது? அப்போது இந்தியாவில் அவசரகாலநிலை அமலில் இருந்தது. நாங்கள் பக்தர்களுக்காக நிலம் வாங்கும் முனைப்பில் இருந்தோம் அதற்கு அரசு தடைவிதித்து விட்டது. ஆசிரமத்தில் இருந்த வெளிநாட்டுக்காரர்கள், இந்தியர்கள் என அனைவரும் பகவானோடு தங்கியிருக்க விரும்பினார்கள். அவர்களைத் தங்க வைக்க ஆசிரமம் வேண்டுமே? தோட்டத்தின் பாதையில் கூட பல நாட்கள் நான் படுத்து தூங்கியுள்ளேன். காரணம் பகவானின் மீது கொண்ட அன்புதான். பின்னர் ஒரு நாள் பகவானிடம், இந்த நெருக்கடி நிலையைப் பொறுக்க முடியவில்லை. நாம் அமெரிக்காவுச்செல்வோம். அங்கு உங்களுக்கான இடத்தை தேடுவோம் என்றேன். அவரும் அந்த யோசனையை உடனே ஏற்றார். பாஸ்போர்ட் வாங்குவதற்கு ஏற்பாடு செய் என்றார். ஆசிரமத்தை விட்டு வெளியேறிய பிறகு ஓஷோ உங்களை வேசி என்று அழைத்தார் என்கிறார்கள். அப்போது உங்களுக்கு எப்படி இருந்தது? அப்போது எனக்கு ஏற்பட்ட சோகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் விலகியதால் ஏற்பட்ட விரக்தியால் அவர் அப்படி கூறியிருக்கலாம