இடுகைகள்

மலம் தின்னும் மனித மிருகம் - ஆல்பிரெட் ஃபிஷ் - அசுரகுலம்

படம்
ஆதரவற்றோர் காப்பகம் அசுர குலம்! ஆல்பிரெட் ஃபிஷ் 1934 ஆம் ஆண்டு ஆல்பிரெட் எழுதிய கடிதம்தான் அவர் செய்த விஷயங்களுக்கு அவரே கொடுத்த சுய வாக்குமூலம். அன்புள்ள திருமதி பட்,  1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான் உன்னை மதிய உணவுக்காக அழைத்தேன். அப்போது உனது மகள் என் மடியில் ஏறி உட்கார்ந்தாள். எனக்கு உதட்டில் முத்தம் கொடுத்தாள். அப்போதே அவளைக் கொன்று தின்பது என முடிவெடுத்துவிட்டேன் என செல்லும் கடிதம் யாரையும் மிரட்டும்தானே. ஆல்பிரெட் ஃபிஷ் அப்படித்தான் கடிதம் எழுதி, கொன்று தின்ற மகளின் தாய்க்கு அனுப்பி வைத்தார். ஹாமில்டன் ஹோவர்டு பார்த்தால் யாருக்குமே எந்த சந்தேகமும் வராத ஆள்தான். ஆனால் உள்ளுக்குள் ரத்த வெறி பிடித்த ஆள். இதே கடிதம் இறுதியாக, கிரேசி பட்டை முழுதாக தின்று முடிக்க எனக்கு ஏழு நாட்கள் ஆனது. அவளது புட்டத்தை மைக்ரோவேவ் ஓவனில் சமைத்து தின்றேன. எவ்வளவு ருசியாக இருந்தது தெரியுமா? என்ன இன்னும் கொஞ்சம் நிதானமாக இருந்திருந்தால் அவளை கற்பழித்துவிட்டு கொன்றிருக்கலாம். கன்னி கழியாமல் கொல்ல வேண்டியதாகி விட்டது என்று கடிதம் முடியும். கிரேசி பட் கொலை செய்யப்பட்ட வீடு!

ஸ்கூபி டூ தியரிகள் - நாம் அறியாத ரகசியங்கள்!

படம்
1960 ஆம் ஆண்டு வெளியான ஹன்னா பார்பரா சீரிஸைச் சேர்ந்த ஸ்கூபி டூ மிகப் பிரபலமான அனிமேஷன் தொடர். இத்தொடர் பற்றிய பல கேள்விகள் உங்கள் மனதில் இருக்கலாம். இங்கு முடிந்தவரை சில விஷயங்களுக்கு பதில் சொல்ல முயற்சித்திருக்கிறோம். ஸ்கூபி டூ என்பது ரஷ்யாவைச் சேர்ந்த லைகா என்ற நாயை மாடலாக கொண்டு உருவாக்கப்பட்டது. அப்போது ரஷ்யா, அமெரிக்காவுக்கு இடையே விண்வெளிப்போர் இருந்தது. இதற்கு ரசிகர்களின் தியரி, ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்பட்ட ஸ்கூபி டூ, மனிதர்களின் பேச்சை புரிந்துகொள்ளக்கூடியது. மிஸ்டரி.இன்க் எனும் கம்பெனியின் நான்கு ஆட்களோடு ஒன்றாக சுற்றுவது ஸ்கூபிடூவின் வேலை. சேஜி எனும் கதாபாத்திரம் ஸ்கூபியோடு எப்போதும் கூடவே இருப்பது. இருவரும்தான் அனைத்து விஷயங்களிலும் உள்ளே நுழைந்து கண்டுபிடிப்பது. எல்லாமே குறியீடு ஸ்கூபி டூ பேய் மர்மங்களை துப்பறியச் செல்லும் அனைத்து இடங்களுமே பேய் பங்களா மாதிரியே  இருக்கும். ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா? அப்போது பொருளாதார மந்தநிலை நிலவியது. அதைக் குறிக்கும் குறியீடுகளாக சுரங்கம், மனிதர்கள் இல்லாத பாழடைந்த நகரம் என குற்றம் நடைபெறும் இடங்களாக காட்டுவார்க

தகவல் சுருக்கம் - டேட்டா கம்ப்ரஸ்ஸன் - தெரிஞ்சுக்கோ!

படம்
தெரிஞ்சுக்கோ! தகவல் சுருக்கம் என்பது இன்று பழைய வார்த்தை போல தோன்றும். ஒன்றுமில்லை. நாம் பயன்படுத்தும் சொற்களில் தேவையில்லாதவற்றை நீக்கினால் அதுதான் தகவல் சுருக்கம். இதுபற்றி தி நியூ கைண்ட் ஆஃப் சயின்ஸ் என்ற நூலில்,  மோர்ஸ் கோட்  எனும் தகவல் சுருக்க முறை 1838 ஆம் ஆண்டு தோன்றியது. இதில் e மற்றும் t  என்ற எழுத்துகளைத் தவிர்த்து எழுதும் முறையை அறிமுகப்படுத்த முயற்சிகள் நடந்தன. தகவல் தொழில்நுட்ப தியரின் தந்தையாக கிளாட் ஷனான் என்பவரைக் குறிப்பிடுகிறார்கள். தகவல் வேகமாக சென்று சேரவேண்டும். அதேசமயத்தில் அதன் தரமும் குறையக்கூடாது என்று அன்றிலிருந்து இன்றுவரை டெக் கம்பெனிகள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. இதில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களே உலகை ஆளுவார்கள். அனைத்து மென்பொருட்களுக்கும் கருவிகளுக்கும் பொருந்தும் கோப்பு முறைகள் உருவாகுவது இன்று அவசியத் தேவையாக உள்ளது. அதுபற்றிய டேட்டாவைப் பார்ப்போம். 1867 இல், சிகாகோ ட்ரிப்யூன் பத்திரிகை பதிப்பாளர் ஜோசப் மெடில், முடிந்தளவு எழுத்துகளை சிக்கனமாக பயன்படுத்துவதை ஆதரிப்பவர். இப்படித்தான் ஃபேவரிட் என்ற எழுத்திலுள்ள இ எழுத்தை அகற்றல

உணவு வீணாவதை கதிரியக்க முறையில் தடுக்கலாம்!

படம்
giphy.com மிஸ்டர் ரோனி கதிரியக்க முறையில் உணவைப் பாதுகாக்க முடியுமா? இன்று உணவு பற்றாக்குறை எவ்வளவு அதிகம் இருக்கிறதோ அதேயளவு, உணவு வீண டித்தலும் நடக்கிறது. இங்கிலாந்தில் 20 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான பொருட்கள் வீணாக குப்பையில் எறியப்படுகின்றன. இதைத் தடுக்க ஒரே வழி, கதிரியக்க முறையில் பாக்டீரியாக்களை கொல்வதுதான். இதற்காகவே 1970களில் ஜெர்மனியில் கதிரியக்க பரிசோதனை மையம் உருவானது. ஆனாலும் இம்முறை வெற்றிபெறவில்லை. ஏன் இன்றுவரையும் கூட. காரணம், கதிர்வீச்சில் நுண்ணுயிரி நீக்கம் செய்த உணவு உடலை பாதிக்கும் என மக்கள் தவறாக எண்ணுவதுதான் காரணம். எதிர்காலத்தில் இம்முறை அமலுக்கு வரலாம். மக்கள் ஏற்றுக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் சரி. ஏனெனில் உணவுப் பொருட்கள் அவ்வளவு கிராக்கியாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. நன்றி - பிபிசி

ஓசோன் படலம் அழிந்தால் என்னாகும்? - சிஎஃப்சி விபரீதம்

படம்
giphy.com மிஸ்டர் ரோனி குளோரோஃப்ளோரோ கார்பன் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன ஆகும்? குளோரோப்ளோரோ கார்பன்களைப் பற்றி ஏராளமான விஷயங்களை  பள்ளியில் படம் வரைந்து பாகம் குறித்து படித்திருப்பீர்கள். பசுமை இல்ல வாயுக்களில் ஒன்று, நம் தலைக்கு மேல் உள்ள 30 கி.மீ. பரப்பில் உள்ள ஓசோன் படலத்தைப் பாதிக்கிறது. ஓசோன் வாயுவின் அளவைக் குறைக்கும் குளோரோஃப்ளோரோ கார்பன் அளவைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் ரூம் போட்டு யோசித்தனர். இதன்விளைவாக பிறந்ததுதான் மான்ட்ரியல் நெறிமுறை ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் 197 நாடுகள் இணைந்துள்ளன. இந்நாடுகளுக்கு ஒரு நோக்கம் உண்டு. ஒரே நோக்கம்தான் ப்ரோ. , 2050 க்குள் உலகில் பல்வேறு செயல்பாடுகளின் விளைவாக வெளியேறும் குளோரோஃப்ளோரோ கார்பன் அளவைக் கட்டுப்படுத்துவதுதான். இல்லையெனில் கட்டுப்படுத்த முடியாத மழை, வெள்ளம், அனல் காற்று என வெப்பமயமாதலின் விளைவுகள் அதிகரிக்கும். கூடுதலாக புற ஊதாக்கதிர்கள் உள்ளே வருவதால் தோல் புற்றுநோய் பாதிப்பும் அதிகரிக்கும். நன்றி - பிபிசி

கலைச்செல்வத்தை அரசிடம் சேர்க்கும் ஜோன்ஸ் - இந்தியானா ஜோன்ஸ் 4!

படம்
இந்தியானா ஜோன்ஸ்! 1981 ஆம் ஆண்டு வெளியான தி ரெய்டர்ஸ் ஆப் தி லாஸ்ட் ஆர்க், இந்தியானா ஜோன்ஸ் பிரிவில் வந்த முதல் படம். ஜார்ஜ் லூகாஸ் எழுதிய கதையை ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கினார்.   Raiders of the Lost Ark   இந்த படம் அமெரிக்கா, நேபாளம் தொடங்கி எகிப்துக்குச் சென்று முடிகிறது. நேபாளத்தில் மதுபானக்கடை வைத்திருப்பவர், ஜோன்ஸின் முன்னாள் காதலி. அவரிடம் ஒரு பதக்கம் இருக்கிறது. அவர் தந்தையிடமிருந்து மகளுக்கு வந்த அகழாய்வு சேமிப்பு.  அதை ஜோன்ஸ் கேட்கிறார். காதலி அதை தரமாட்டேன் என்று கூறி அதனோடு தானும் ஜோன்சுடன் புறப்படுகிறார். இவருக்கு 2008 ஆம் ஆண்டு கிரிஸ்டல் ஸ்கல் படத்தில் ஜோன்சுடன் திருமணம் நடைபெறுகிற தகவல் கொசுறாக சொல்லி விடுகிறோம். லாஸ்ட் ஆர்க் என்பது ஒரு சவப்பெட்டி. அதிலுள்ள பொக்கிஷங்களை அடைவதே நாசி ஆட்களின் லட்சியம். ஆனால் அது எப்படி விபரீத விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதை. ஏறத்தாழ இந்த படம் தொடங்கி அனைத்து படங்களிலும் நாசிக்கள்தான் வில்லன்கள். எப்படி? படத்தின் கதை 1931 ஆம் ஆண்டு நடக்கிறது என்பதுதான் காரணம். படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்ற காரணத்திற்

சூரிய வெப்பத்தால் உடலின் கொழுப்பு கரையுமா?

படம்
pixabay.com மிஸ்டர் ரோனி சூரிய வெப்பத்திலிருந்து க்ரீம்கள் நம்மைக் காக்குமா? எஸ்பிஎஃப் 30 என அச்சிடப்பட்ட க்ரீம்கள் ஓரளவு உங்கள் தோலை சூரியனின் வெப்பத்திலிருந்து காக்கும். காக்கும் என்பதன் பொருள் அதிலுள்ள புற ஊதாக்கதிர்கள் ஏற்படுத்தும் புற்றுநோய் பாதிப்பிலிருந்து... ஆனால் க்ரீம்களிலேயே மைக்ரோ பிளாஸ்டிகள் இன்னொரு வகை பிரச்னை வந்தால் கஷ்டம் சால கஷ்டம்தான். இந்தப் பிரச்னைகளை நீங்களே யோசித்துக்கொண்டு க்ரீம்களைப் பூசுங்கள். சூரிய வெப்பம் உடல் கொழுப்பைக் குறைக்குமா? சூரிய வெப்பத்திலிருந்து கிடைக்கும் விட்டமின் டி, உடல் கொழுப்பை கரைக்க உதவுகிறது. ஆனால் அதற்காக வெயிலில் நீங்கள் உட்கார்ந்திருந்தால் எந்த பிரயோஜனமும் நிகழப்போவதில்லை. உடலில் நீர்ச்சத்து கீழிறங்குவது தவிர வேறெதுவும் நடக்காது. நன்றி - பிபிசி

பகோடா விற்பது பொருளாதாரத்தை முன்னேற்றாது - அபிஜித் பானர்ஜி

படம்
newzz நேர்காணல் அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ சீனா அனைத்து துறைகளிலும் முன்னேறி உள்ளது. குறிப்பாக வறுமை ஒழிப்பு விஷயங்களில். இதனை எப்படி பார்க்கிறீர்கள். சீனா பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே உற்பத்தி துறை சார்ந்து பணிபுரியத் தொடங்கிவிட்டது. இந்தியா நிலம், சேவைத்துறை சார்ந்த விற்பனையை சாதனையாக பார்க்கிறது. இந்தியாவின் போக்கு, இயல்பாகவே வேலைவாய்ப்புகளை குறைக்கிறது. ஆனால் சீனர்கள் தீவிரமாக உற்பத்தி துறை சார்ந்து உழைத்து வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் உலக மக்களுக்கான பொருட்களை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு தரமுடிகிறது. இந்தியாவின் வறுமை ஒழிப்பு திட்டங்களை எப்படி பார்க்கிறீர்கள். அதில் உங்கள் கருத்தென்ன? இந்தியாவில் மிக குறைந்த பகுதி மக்களே வறுமையில் உள்ளனர். அனைவரும் அல்ல. மகாத்மா காந்தி கிராம வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவை அரசு ரீதியான கொள்கைத் திட்டங்களாக உள்ளன. இவையும் பயன் அளிக்கின்றன. ஆனால் எந்த நோக்குமின்றி ஜன்தன் யோஜனா போன்ற திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. என்ன பிரயோஜனம் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். இதனை மதிப்பிட்டு குற

இன்று நடப்பதை நேற்றே அறிய முடியுமா? - தேஜா வூ கதை!

படம்
தெரிஞ்சுக்கோ  - தேஜா வூ தேஜா வூ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிரெஞ்சில் இதற்கு முன்னமே பார்த்தது என்று பொருள். பொதுவாக தாராளவாத கருத்துகள், யாத்ரீகராகச் சுற்றுவது, நிறைய நூல்களைப் படிப்பது, டஜன் கணக்கிலான படங்களைப் பார்ப்பது போன்ற பழக்கங்களைக் கொண்டவர்களுக்கு தேஜா வூ பாதிப்பு இருக்கிறது. உளவியல் பூர்வமாக இது சாதாரணமானது என்று கூறப்பட்டாலும், குறிப்பிட்ட சம்பவங்களை முன்னமே பார்த்தது போல் இருப்பது யாரையும் சற்றே அதிர வைக்கும். அதுபற்றிய டேட்டாவைப் பார்ப்போம். உலகில் மூன்றில் இருபங்கு பேருக்கு தேஜா வூ அனுபவம் நடந்திருக்கிறது. எனவே உங்களை நீங்களே அமானுஷ்யமானவர், அபூர்வமானவர் என நினைத்துக் கொள்ளாதீர்கள். தேஜா வூ அனுபவங்கள் நடப்பதற்கான குறைந்தபட்ச வயது எட்டு முதல் ஒன்பது வயது வரை. இது பற்றி 30க்கும் மேலான விளக்கங்கள் அறிவியலில் உண்டு. இவற்றைக் கொஞ்சம் நம்பலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள். உலகில் 32 சதவீதம் பேருக்கு தேஜா வூ அனுபவம் ஏற்படுகிறது என்றால் அவர்களில் பலரும் ஆண்டுக்கு நான்கு முறை அங்குமிங்கும் பயணிப்பவர்கள். இதில் 11 சதவீதம் பேர் மட்டுமே எங்கும் பயணிக்காதவர்கள். ஆ

இ சிகரெட்டை கண்டு அரசுகள் பயப்படுவது இதனால்தான்!

படம்
giphy.com புகை நமக்கு பகை! இ சிகரெட்டுகளைத் தடுத்து புகையிலைக்கு ஆதரவாக இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால் உலகளவில் இ சிகரெட்டுகள புகழ்பெற்று வருகின்றன. இதுவரை அமெரிக்காவில் 26 பேர் இதற்கு பலியாகி உள்ளனர். 1200க்கும் மேற்பட்ட ஆரோக்கியம் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இளைஞர்கள் நேரடியாக இ சிகரெட்டை இப்போது புகைக்கத் தொடங்கியுள்ளதுதான் பிரச்னைக்கு காரணம். புகையிலை கம்பெனிகள் இ சிகரெட்டை தடை செய்யக்காரணம், மரபான சிகரெட்டுகள் பீடிகளுக்கான லாபம் பறிபோகிறதே என்றுதான். பன்னாட்டு நிறுவனங்கள் என்றைக்கு மக்களின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தி இருக்கின்றன. உண்மையில் இ சிகரெட்டுகளால் சிகரெட் சந்தை பேரழிவில் இருக்கிறதா என்று பார்த்தால் அப்படியெல்லாம் கிடையாது என்று பதில் கிடைக்கிறது. தெரிஞ்சுக்கோ... உலகிலுள்ள நிகோட்டின் சந்தை மதிப்பு 785 பில்லியன் டாலர்கள். ஏறத்தாழ 89 சதவீத சந்தையில் சிகரெட்தான் ராஜா. 2013-2018 காலகட்டத்தில் சிகரெட்டுகளின் வளர்ச்சி 8 சதவீதம் என வளர்ந்துள்ளது. இதே காலத்தில் இ சிகரெட்டுகளின் வளர்ச்சி இருபது மடங்கு அதிகரித்துள்ளது. எங்கே என்கிறீர்க

ஜனநாயகத்தை மலர வைக்கிறதா டெலிகிராம்?

படம்
இணையம் சார்ந்த கட்டுப்பாடுகளை அமெரிக்க நிறுவனங்கள் மெல்ல ஏற்படுத்தி வருகின்றன. கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தங்கள் தொழிலுக்காக அரசியல்வாதிகளுக்கு ஏற்ப பயனர்களின் பதிவுகளை அழிப்பது, நீக்குவது போன்ற செயற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இதனால் பலரும் ஃபேஸ்புக்கின் வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களிலிருந்து விலகிவருகின்றனர். திறமூல மென்பொருள் ஆப்பான டெலிகிராமில் பதிலுக்கு இணைகின்றனர். டெலிகிராம் ரஷ்யாவைச் சேர்ந்த சகோதரர்கள் நிகோலாய், பாவ்லோவ் என்ற இருவரால் 2013 இல் தொடங்கப்பட்டது. என்ன சிறப்பு இதில் இருக்கிறது? நீங்கள் தரவிறக்கினால் மட்டுமே படங்கள் உங்கள் போனில் இறங்கும் இல்லையெனில் க்ளவுட் கம்ப்யூட்டரில் மட்டுமே இருக்கும். இதனால் வாட்ஸ்அப் இயங்கும்போது ஏற்படும் மூச்சுத்திணறல் நம் போனுக்கு ஏற்படாது. குறைந்த ரேம் கொண்ட போனிலும் டெலிகிராம் சிறப்பாக இயங்கும். இதில் எந்த குழுவிலும் நீங்கள் இணையலாம். எந்த அட்மினும் உங்களை கேள்வி கேட்க முடியாது. இல்லையென்றால் அக்குழுவில் உள்ள விஷயங்களை தரவிறக்கிக்கொள்ள முடியும். சரி விடுங்கள். இதனால் நடைமுறை பயன் என்ன? ஜனநாய