இடுகைகள்

மூன்று நாட்கள் வீக் எண்ட் - ஜப்பான் மைக்ரோசாப்ட் சோதனை!

படம்
giphy.com பத்திரிகைகளுக்கு எப்போதுமே லீவு கிடையாது. லீவு விட்டால் செய்தி எப்படி கிடைக்கும் என்பார்கள். ஆனால் புரடக்டிவிட்டி என்று பார்த்து, ஐடியாக்களை தேடினால் மணிக்கணக்கில் நீளும் மீட்டிங்கில் எல்லாரும் தேவாங்கு போல உட்கார்ந்திருப்பார்கள். அடுத்தடுத்த ஐடியா என கேட்கும்போது, முதலில் பேசியவர் போனில் சமூகவலைதளத்தில் உறைந்துவிடுவார். இப்படியே ஆபீஸ் மீட்டிங் அத்தனை கஷ்டங்களையும் சொல்லிவிடும். இதற்கு ஒரே பதில்தான். லீவு வேண்டும். மைக்ரோசாப்ட் - ஜப்பான் இதற்காகவே 2,300 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் வேலை சொல்லி, பிற பஞ்சாயத்துகளை ஆப் மூலம் செய்தி பரிமாறி செய்தனர். என்ன ஆச்சரியம் ஊழியர்களின் பணித்திறன் முன்பை விட 40 சதவீதம் மேம்பட்டிருந்தது. காரணம் மூன்று நாட்கள் வீக் எண்டாக கம்பெனி கொடுத்ததுதான். வொர்க் லைஃப் சாய்ஸ் சேலஞ்ச் என்பதுதான் மைக்ரோசாஃப்ட் இதற்கு சூட்டிய பெயர். தனிநபர்களாக செய்த விற்பனை அளவில் இதனை கண்டறிந்துள்ளனர். 92 சதவீத பணியாளர்கள் நான்குநாட்கள்தான் வேலை என்பதற்கு மகிழ்ந்தனர். பிரிண்ட் எடுக்கும் செலவு 59 சதவீதம் குறைந்தது. மின் செலவு 23 சதவீதம்

பழங்குடித் தலைவரை கொன்ற சமூக விரோதிகள் - பிரேசில் அட்டூழியம்

படம்
பிரேசிலின் அமேசான் காடுகளைப் பாதுகாக்க போராடிய தலைவர்களில் ஒருவரான லோபோ நவ.1 அன்று கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுவரை அங்கு 135 சூழலியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குவாஜாஜரா எனும் பழங்குடி இனக்குழு தலைவராக இருந்த பாலோ பாலினோ குவாஜாஜரா என்ற 26 வயது இளைஞர், தற்போது கொல்லப்பட்ட சூழலியலாளர் பட்டியலில் இணைந்துள்ளார். அவரையும்  கொலைகார கும்பல் விட்டுவைக்காமல் கொன்றுவிட்டனர். அங்கு சட்டவிரோதமாக மரங்களை, விலங்குகளை வேட்டையாடும் கும்பல் லோபோவின் முகத்தில் சுட்டுக் கொன்றுள்ளது. அவரின் நண்பர் லேர்சியோவுக்கும் கடுமையான காயம் பட்டுள்ளது. லோபோ, கார்டியன் ஆப் தி ஃபாரஸ்ட் என்ற உதவிக்குழுவைத் தொடங்கி செயல்பட்டு வந்தார். அராரி போலா எனும் பாதுகாக்கப்பட்ட கானக இடத்தை இவர்கள் பாதுகாத்தனர். இதனை அழிப்பது சட்டவிரோத கும்பலுக்கு முக்கியமான லட்சியமாக இருந்தது. பிரேசில் அதிபர் பொல்சனாரோ தேர்ந்தெடுக்கப்படும் சமயத்தில் இக்கொலைகள் அதிகரித்து வந்தது தற்செயலான ஒன்று என நியூயார்க் டைம்ஸ் வஞ்சப் புகழ்ச்சியணியாக எழுதியுள்ளது. வலதுசாரி அதிபரான பொல்சனாரோ, காடுகளை அழிப்பதில் பேரார்வம் க

உடற்பயிற்சிகளை செய்யும்போது என்ன நடக்கிறது?

படம்
மிஸ்டர் ரோனி உடற்பயிற்சி செய்யும்போது உடலில் என்ன நடக்கிறது? உடற்பயிற்சிகளை அர்னால்டு போஸ்டர் பார்த்து நாம் செய்யும்போது, உடலெங்கும் ரத்த ஓட்டம் வேகமாகும். இதன் விளைவாக உடலுக்கு கிடைக்கும் சிக்னல், உடலின் கொழுப்பை கரைத்து சக்தியாக்கு என்பதுதான். தசைகளில் அடர்த்தியான உடற்பயிற்சியின் அளவைப் பொறுத்து லேக்டிக் அமிலம் உற்பத்தியாகிறது. உடல் பாகங்களில் மூளைதான் அதிகளவு ஆற்றலை எடுத்துக்கொள்கிறது. உடற்பயிற்சியின்போதும் இதுதான் நடக்கிறது. இதயத்தில் அட்ரினலின் சுரப்பு அதிகரித்து இதயத்தின் துடிப்பு அதிகரிக்கிறது. ரத்த நாளங்களின் அளவும் பெரிதாகிறது. நுரையீரல் மட்டும் சும்மாவா, சாதாரண அளவை விட பதினைந்து மடங்கு அதிகமாக ஆக்சிஜனை உள்வாங்கி வெளியிடுகிறது. இருபது லட்சம் வியர்வை சுரப்பிகள் கொண்ட தோலில் இருந்து 1.4 லிட்டர் வியர்வை ஒருமணிநேரத்திற்கு வெளிவரும்.  உடற்பயிற்சியின் முக்கியமான நல்லவிஷயம், உடலில் கால்சியம் வீணாவதைத் தடுத்து, எலும்புகளின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. நன்றி - பிபிசி

சளி பிடித்திருக்கும் நிலையில் உடற்பயிற்சி செய்யலாமா?

மிஸ்டர் ரோனி சளி பிடித்திருக்கும்போது உடற்பயிற்சி செய்யலாமா? சளி பிடித்திருக்கும்போது அதனை விரட்டும் பணியில் உடல் இருக்கும். அப்போது பார்த்து நீங்கள் டம்பெல், பென்ச் பிரஸ் என செய்தால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும், உடல்நிலை இன்னும் மோசமாகும். எளிதான உடற்பயிற்சிகளைச்செய்யலாம் தவறில்லை. பாத் பல்கலைக்கழக அறிக்கைப்படி, சளி பிடித்து உடல்வெப்பநிலை காய்ச்சல் வரும் நிலையில் இருக்கும்போது, ஓய்வு எடுப்பதே நல்லது. இல்லையெனில் உடலை ஐசியுவில் வைத்து பராமரிக்கும்படி ஆகிவிடும் வாய்ப்பு உள்ளது. நன்றி - பிபிசி

துரோகத்திற்கு ரத்தம் சதையுமான தண்டனை - கான் கேர்ள்!

படம்
கான் கேர்ள் டேவிட் ஃபின்ச்சர் கதை - திரைக்கதை ஜிலியன் ஃபிளைன் உளவியல் பூர்வமான படம் என்பதால், கவனமாக பார்க்கவேண்டும். ஏனெனில் இது டேவிட் பின்ச்சரின் படமும் கூட. படத்தில் ரத்தமும், வன்முறையும் படம் முடிந்தபின்னும் நமக்கு இயல்பாக தோன்றவில்லை. தன் நம்பிக்கையை கொன்ற கணவனுக்கு மனைவி பாடம் புகட்டும் கதை. அதை எப்படி செய்கிறார் என்பதுதான் படமாக விரிகிறது. நிக், கல்லூரியில் ஆசிரியராக இருப்பவர். ஏமி, குழந்தைகள் நூல் எழுதுபவர். இருவருக்கும் பொருளாதார மந்த நிலையில் வேலை பறிபோகிறது. பிரச்னை அதன்பிறகு முளைவிடுகிறது. நிக் அடுத்த வேலைக்கு வேகமாக நகருவதில்லை. இதனால் மனைவி கோபப்பட, நிக் அசைந்து கொடுக்காமல் அக்காவின் பாருக்குப் போய் தண்ணியைப் போட்டு சாய்கிறார். அதோடு கல்லூரியில் அறிமுகமான பெண்ணுடன் கசமுசா சமாச்சாரமும் உண்டு. கணவரை வெறித்தனமாக விரும்பும் பெண் இதனை எப்படி ஏற்பார்? இதற்காக அவர் போடும் திட்டம்தான் காணாமல் போகும் நாடகம். சும்மாயில்லை. அவ்வளவு நேர்த்தியான திட்டம். போலீஸ் நிக்கின் வீட்டைச் சுற்றி வந்து ஆதாரங்களை சேகரித்து அவரை குற்றவாளி என அறிவிக்கும் நிலை ஆகிறது. அப்ப

செக்ஸ் பேச்சு தரும் பிரச்னைகள் - ட்ரீம் கேர்ள் படம் எப்படி?

படம்
ட்ரீம் கேர்ள் ராஜ் சாண்டில்யா ஒளிப்பதிவு - அசீம் மிஸ்ரா பாடல் - மீட் ப்ரோஸ் ஆர்ஆர் - அபிஷேக் அரோரா நாடகங்களில் சீதையாக வேஷமிட்டு தந்தையிடம் திட்டு வாங்கும் இளைஞர், வேலை தேடிக்கொண்டிருக்கிறார். அப்போது பேருந்தில் பார்த்து வேலை கேட்டு கம்பெனிக்கு செல்கிறார். அந்த கம்பெனியில் தரும் வேலை, பேசுவதுதான். அந்த வேலைதான் அவருக்கு காசு கொடுக்கிறது. பின் காதலி என அனைத்துமே அதன்பின்னர்தான் வருகிறது. ஆனால் பிரச்னை தொடங்குவதும் அதிலிருந்துதான். அந்த இளைஞர்தான் ஆயுஷ்மான் குரானா. ஆஹா... ஆயுஷ்மான் குரானாதான். பெண்குரலில் பேசி இளைஞர்களை மயக்குவதுதான் அவரது வேலை. இதை ஜாலியாக நினைத்து செய்யும்போதுதான் விதி கரம் கட்டி விளையாடுகிறது. ஓரல் செக்ஸ் பேச்சுதான் குரானாவின் வேலை. இதில்தான் சம்பாதித்து கார் வாங்குகிறார். ஆனால் ஒருகட்டத்தில் இதன் பிரச்னைகள் தெரிய வர பின்வாங்க நினைக்கிறார். முதலாளி தன் அதிர்ஷ்ட லட்சுமியை விடுவாரா? தவிப்பு, காதல், விரக்தி, சோகம் என அத்தனை உணர்ச்சிகளிலும் நடித்து பிரமாதப்படுத்துகிறார். இவரின் நடிப்பு வேகத்தில் நுஷ்ரத் பாரூச்சாவின் முகம் கூட நமக்கு நினைவ

பெட்ரோலிய கழிவை அகற்றுமா நுண்ணுயிரிகள்?

ஈராக்கில் பெட்ரோலியக் கழிவுகளை அகற்றி, நிலங்களை தூய்மை செய்ய நுண்ணுயிரிகளைப் பயன்படுத்த உள்ளனர். ஐ.நா அமைப்பு இதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இதனுடன் அரசின் எண்ணெய் நிறுவனம் நார்த் ஆயில் கோவும், சுற்றுச்சூழல் அமைச்சகமும் இத்திட்டத்தில் இணைந்து செயல்படுகின்றன. ஐஎஸ் தீவிரவாதிகள் இங்கு போர் புரிந்தபோது பனிரெண்டிற்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகளை தீவைத்து அழித்தனர். இதன் விளைவாக சூரியனின் ஒளியை மக்கள் பார்க்க முடியாதபடி புகை வானை சூழ்ந்தது. ஏறத்தாழ 20 ஆயிரம் டன்கள் கச்சா எண்ணெய் இம்முறையில் வீணாக்கப்பட்டிருக்கலாம் என்கிறது அரசு. எண்ணெய் நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதில் தவறில்லை. ஆனால் தொழிலால் ஏற்படும் மாசுபாடுகளை சிறிது கவனத்தில் கொள்வது நல்லது. இல்லையெனில் இயற்கை மாசுபாட்டை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்கிறார் வலீத் ஹூசைன். இவர்தான் ஈராக்கின் சுற்றுச்சூழல்துறை அமைச்சர். நன்றி - டவுன் டு எர்த்

தடைசெய்யப்பட்ட மருந்து வகைகள்! - என்னென்ன?

படம்
giphy.com முதலில் நாம் பயன்படுத்த வேண்டாம் அரசு கூறிய தடுத்த மருந்துகள் இன்று எளிதாக சந்தையில் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.  எம்டிஎம்ஏ இந்த மருந்து ரத்தப்போக்கை நிறுத்துவதற்காக பயன்படுகிறது. இதனை ஜெர்மனி நிறுவனமான மேர்க் கண்டுபிடித்தது. இப்போது பெரும்பாலும் மருந்தாக அல்லது பார்ட்டிக்கான போதை வஸ்துவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1913 ஆம் ஆண்டு காப்புரிமை பெற்ற இம்மருந்து, உண்மையாக ஆராய்ச்சி செய்யப்பட்டது 1927ஆம் ஆண்டுதான். இதனை ஆராய்ந்த மேக்ஸ் ஓபர்லின், கடும் நச்சுத்தன்மை கொண்ட பொருள் இது என்று கூறினார். உளவியல் ரீதியான சிகிச்சைக்கு இம்மருந்து பயன்படும் எனவே பயன்படுத்த அனுமதியுங்கள் என மருத்துவர்கள் அரசிடம் கோரினர். 1985 வரை அரசு இதனைப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. 2017ஆம் ஆண்டு எஃப்டிஏ இதனை மருத்துவர்கள் பயன்படுத்த அனுமதித்துள்ளது.  ஹெராயின்  மார்பினுக்கு மாற்றாக அதிலிருந்து மக்களை வெளியே கொண்டு வரும் என ஹெராயினை நம்பினர். இதை உங்களால் நம்ப முடிகிறதா? 1874இல் சார்லஸ் ரோம்லி ரைட் என்ற வேதியியலாளர் ஹெராயினை முதன்முதலில் கண்டுபிடித

வெப்பத்தை மூளை எப்படி உடனே உணர்ந்துகொள்கிறது?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி வேறு எந்த உணர்ச்சிகளை விடவும் உடலில் சூடு பட்டவுடன் எப்படி வேகமாக உணர்கிறோம்? சூடு பற்றிய தகவல் மூளைக்கு 27 மில்லி செகண்டுகளில் சென்று சேர்ந்துவிடும். நம் கைகளில் நொடிக்கு 50--60 மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும். ஸ்டவ்வில் நீங்கள் கையில் வைத்திருக்கிறீர்கள் என்றால், நாம் முடிவெடுத்து கையை எடுப்பதற்குள் கை வெந்துவிடும். இதற்காகவே, உடலின் இயல்பான பாதுகாப்பு அமைப்பு சூடு, குளிர்ச்சி என்பதை உடனே உணர்ந்து தன்னை அதிலிருந்து விடுவித்துக்கொள்ள முயற்சிக்கும். இதனை மோட்டார் இயக்கம் எனலாம். சட்டை பட்டன் போடுவது, ஆணிகளை திருகிப் பொறுத்துவது போன்றவை இதில் அடங்கும்.  இவை முதுகெலும்போடு இணைந்துள்ளன. அனைத்து விவகாரங்களிலும் மூளை முடிவெடுத்தால் நாம் உயிர் வாழ முடியாது. எனவே சில விஷயங்களில் உடல் தன்னிச்சையாக முடிவெடுக்கும். எதற்காக, தன்னைக் காத்துக்கொள்ளத்தான். 

பொருட்களின் அளவு கண்களைப் பொறுத்து மாறுமா?

படம்
மிஸ்டர் ரோனி இருகண்களில் ஒன்று பழுதாகிவிட்டால், மற்றொன்று மூலம் பொருட்களை எளிதாக பார்க்கலாமா? பொருட்களின் அளவு பற்றி நம் நினைவில் ஏற்கனவே சில வரையறைகள் இருக்கும். எனவே, நீங்கள் ஒற்றைக் கண்ணில் பொருளைப் பார்க்கும்போது அதற்கேற்ப மூளை தன்னை மாற்றிக்கொள்ளும். இந்த தன்மையை பைனாகுலர் டிஸ்பாரிட்டி என்று குறிப்பிடுகிறார்கள். சாதாரணமாக ஒற்றைக்கண்ணை மூடி மற்றொரு கண்ணில் ஓர் பொருளைப் பார்க்கும்போது, அதில் வேறுபாடுகள் தெரியும். ரயில்வே பாதைகளைப் பார்த்தால் நமக்குத் தெரிவது மோஷன் பாரலாக்ஸ் எனும் தன்மை. நீண்ட தூரத்திற்கு ஒன்றுபோலவே இருப்புப் பாதைகள் தெரியும். நன்றி- பிபிசி

மனிதர்களுக்கும் விலங்களுக்கும் எலும்பு அமைப்புகள் மாறுபடுமா?

படம்
மிஸ்டர் ரோனி மனிதர்களின் எலும்பும், விலங்குகளின் எலும்பும் ஒன்றுதானா? பொதுவாக உயிரினங்கள் அனைத்தும் பொது மூதாதையரிலிருந்து கிளைபிரிந்து வந்தவைதான். இதில் பாலூட்டியான மனிதர்கள் விதிவிலக்கானவர்கள் கிடையாது. விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஆன எலும்பு அமைப்பு, ஒன்றுபோலத்தான். செயல்பாடு, உருவாக்கம் என அனைத்தும் ஒரேமாதிரிதான். ஆனால் அதன் அடர்த்தி, அதிலுள்ள சத்துகள் என பார்க்கும்போது நிறைய வித்தியாசங்கள் உண்டு. மருத்துவர் அல்லாதவர்கள் கரடியின் கைகளைப் பார்த்தால் அப்படியே மனிதனுடையதைப் போலவே இருக்கிறது என குழம்புவார்கள். இது பலமுறை நடந்திருக்கிறது. விலங்கு, மனிதர்கள் என இரு உயிரினங்களுக்கான வேறுபாடுகள் மிக குறைவானவை. நன்றி - பிபிசி