இடுகைகள்

சென்சஸிற்கும், என்பிஆருக்கும் என்ன வேறுபாடு? -2021 டாஸ்க் இதுதான்!

படம்
என்ஆர்சி, சிஏபி ஆகியவற்றுக்கு அடுத்த வரிசையில் என்பிஆர் செயல்பாட்டைத் தொடக்க நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்துவிட்டது. தேசிய மக்கள்தொகை பதிவேடு என்பது, மக்கள்தொகையைக் கணக்கிட உதவும். இதில் பெயர் இருப்பதற்கும், குடியுரிமைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதில் தகவல்கள் பிற அமைப்புகளுக்கு பயன்படுத்தாமலிருக்க எந்த உத்தரவாதமும் கிடையாது. பொதுவாக அரசு இந்த உறுதியை எப்போதும் தந்த து கிடையாது. இனிமேலும் கிடையாது. மக்கள் தொகையைக் கணக்கிடும் தகவல், என்ஆர்சியுடன் இணைக்கப்படாது என்று உள்துறை அமைச்சகம் கூறுகிறது. ஆனால் உண்மையில் என்ஆர்சியின் முதல் கட்டப்பணி, இந்தியாவில் உள்ள மக்களைக் கணக்கிடுவதுதான். எனவே, இப்பணியை மாநில அரசு தொடங்க கூடாது என இடதுசாரிகள் கூறிவருகின்றனர். இதன்வழியாகவும் சிறுபான்மையினரைக் கணக்கிட்டு அவர்களை தனி முகாம்களின் அடைக்கும் வாய்ப்பு உள்ளது. என்ன வேறுபாடு? மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் அரசின் என்பிஆருக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. மக்கள்தொகை கணக்கெடுப்பு, சமூக பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டது. அதோடு நிலப்பரப்பு சார்ந்த தகவல்களும் இதில் முக்கியமானவை. என்பிஆ

உலகை மிரட்டிய சீன விளையாட்டுகள் 2019!

படம்
மேற்குலகினரின் விளையாட்டுகள் பெரும்பாலும் தனிக்கருவிகள் சார்ந்தவை. அதாவது அவற்றை விளையாட குறைந்த பட்சம் கணினிகள், தனிக்கருவிகள் தேவை. ஆனால் மொபைல் விளையாட்டுகளை சீனா ஊக்குவிக்கிறது. இந்த துறையில் சீன நிறுவனங்களே வெற்றியாளர்களாக உள்ளன. அங்கு 459 மில்லியன் பயனர்களை விளையாட்டுகளை வெறித்தனமாக விளையாண்டு வருகின்றனர். CALL OF DUTY MOBILE பல்வேறு சூழல்கள், அதிநவீன துப்பாக்கிகள், ட்ரோன் விமானங்கள் என படு நவீனமாக விளையாட்டு உள்ளது. மொபைலில் விளையாடுவதற்கு பெரிய மாறுதல்களின்றி உள்ளது. அசத்தலான விளையாட்டை டென்சென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.  PUBG MOBILE பாராசூட்டில் தனித்தீவு போன்ற இடத்திற்கு சென்று இறங்கியவுடன் கொலைத்தாண்டவத்தை தொடங்க வேண்டும். உங்களின் குழுவினருடன் பேசியபடி, எதிரிகளை நெற்றிப்பொட்டில் பட்டென போட்டு நிமிரலாம். மகத்தான வெற்றி பெற்ற விளையாட்டு டென்சென்ட் நிறுவனத்தின் தயாரிப்பு.  ONMYOJI நெட் ஈசி நிறுவனத்தின் தயாரிப்பு. ஜப்பானி புராணக்கதைகளின்படி விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அழகான பின்புலங்கள், குரல்கள் ஆகியவை பயனர்களை வெகுவாக ஈர்த்துள்ளன. அதனால் அ

கிஸ்மோ புதுசு! - அசத்தும் சீனப் பொருட்கள்

படம்
வீலைட்  இந்த ஆண்டின் சிறந்த கிஸ்மோக்களை பார்க்கப்போகிறோம். இவை அனைத்தும் சீனப்பொருட்கள்தான். இவை அங்கு பெரிதும் பிரபலமாக விற்றுத்தீர்ந்தவை. அதன் சிறப்பம்சங்களைப் பார்ப்போம். DJI Osmo Action முன்புறமும், பின்புறமும் 4கே தரத்தில் வீடியோ எடுக்க இந்த கேமரா உதவுகிறது. அருவி வீழ்வது, சாலையில் போக்குவரத்து செல்வது போன்ற நடைபெறும் நிகழ்ச்சிகளை படம்பிடிக்க இந்த கேமரா சிறப்பானது. 11 மீட்டர் அளவுக்கு நீரில் தாக்குப்பிடிக்கிற வாட்டர் ப்ரூப் இதன் பெரும்பலம். திகுதிகுக்கிற லைவ் காட்சிகளுக்கு இந்த கேமரா பிரமாதமான காட்சிகளை அளிக்கிறது.  ONEMIX 3 லெனோவா போல திரையை மடித்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கென்று இதில் டைப் செய்து ஜெயமோகனை மிஞ்சலாம் என நினைக்காதீர்கள். அப்படி வித்தைகளை இதில் செய்ய முடியாது. ஆனாலும் சூப்பரான கணினி. எப்படி? இருக்கும் கணினிகளிலேயே சிறியது. எட்டாம் தலைமுறை இன்டெல் சிப், சர்பேஸ் கணினிகளை விட சிறப்பாக இயங்குகிறது.  உங்கள் உள்ளங்கையில் எளிதாக தாங்கியபடி இதில் பணியாற்ற முடியும். விண்டோஸ் ஓஎஸ்ஸில் பிரமாதமாக வேலை செய்கிறது. எனவே, இதில் நீங்கள் மகிழ்ச்சியா

விடாது துரத்தும் காமவெறி - பெட்ரோ லோபெசின் அவல வாழ்க்கை!

படம்
கொலை அணிவகுப்பு அசுரகுலம் பெட்ரோ லோபெஸ் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர். ஏறத்தாழ 350க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்ற சாதனையாளர். 1948ஆம் ஆண்டு பிறந்தார். இவரது அம்மா, விலைமாதாக இருந்தார். மொத்தம் பதிமூன்று பிள்ளைகள். அதில் எட்டாவது ஆள், லோபெஸ். சிறுவயதில், தன் சகோதரியின் மார்பை பிடித்து விளையாடியதை அம்மா பார்த்து வெறியானார். மகனை அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றினார். அதன்பிறகு அவனை தன் மகனாக அங்கு சேர்த்துக்கொள்ளவில்லை. அதன் விளைவை பின்னர் சமூகம் அனுபவித்தது. தெருவுக்கு வந்தவர் என்ன செய்வார்கள்? அதேதான் கைகளை ஏந்தி பிச்சை எடுக்கத் தொடங்கினார். அப்போது சிரித்தமுகமாக குழந்தைகளுக்கு உதவுவதாக வாலிபர் ஒருவர் வந்தார். லோபெசுக்கு தங்க இடமும் உணவும் கொடுத்தார். ஆனால் பதிலுக்கு லோபெஸை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்தார் கருணை வாலிபர். எரிச்சலான லோபெஸ், அந்த காப்பகத்திலிருந்து சிறுமிகள் மீது பாய்ந்து வேட்டையாடினார். ஓநாயைப் பார்த்து ஆடு மிரள்வது போல பீதியான சிறுமிகள் புகார் கொடுத்தால், இனிமேல் அப்படி நடந்துகொள்ளமாட்டேன். சாமி சத்தியமாக என்று சர்க்கரை பொங்கலாக பேசுவார் ல

இருண்டு போன இந்தியா - இணையத்தை முடக்கும் சர்வாதிகாரம்!

படம்
உலகம் முழுக்கவே இணையம் சார்ந்த தாக தொழில்கள் மாறி வருகின்றன. இந்த நேரத்தில் மின்சாரமும், இணையமும் தடைபட்டால் மொத்த நாடுமே ஸ்தம்பித்து விடும். இந்த கவனம் யாருக்கு இருக்க வேண்டும்? அரசுக்குத்தானே, ஆனால் அரசு தன் பொருளாதார, நிர்வாக முடிவுகளில் உள்ள சிக்கல்களை மக்களிடம் காட்டி வருகிறது. இதன் காரணமாக, இந்திய அரசு இந்த ஆண்டில் மட்டும் 95 முறை இணைய சேவையை தடை செய்துள்ளது. காஷ்மீரில் செயல்படுத்தி வெற்றி கண்ட முறையை உள்துறை அமைச்சகம், தற்போது எந்த பிரச்னை ஏற்பட்டாலும் அமல் செய்து வருகிறது. இதன்விளைவாக இணையம் சார்ந்த அனைத்து தொழில்களும் பலத்த அடி வாங்கி வருகின்றன. குறிப்பாக ஊபர், ஓலா ஆகிய ஆப் சார்ந்த தொழில்கள் நிலைமை என்னாகும்? காஷ்மீரில் உலக நாடுகளிலேயே 137 நாட்கள் இணையத்தை இந்திய அரசு முடக்கியுள்ளது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக டில்லி, மேற்கு வங்கம், அசாம் போன்ற இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றைத்தடுக்க இந்த மாநிலங்களில் இணையத்தை முடக்கும் முடிவை உள்துறை அமைச்சகம் செயல்படுத்தியுள்ளது. இதனால் எல்லாம் போராட்டம் நிற்பதா

பில்கேட்ஸிற்கு பிடித்த புத்தகங்கள்!

படம்
ஆளுமைகள் என்ன படித்தார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள நினைப்போம். சிலர், அவர்கள் என்ன படித்தார்களோ அதை அப்படியே படித்து டெவலப் ஆவோம் என நினைப்பார்கள். சரியோ, தவறோ நூலில் படித்து தெரிந்துகொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பது உண்மை. ஆண்டுதோறும் பில்கேட்ஸ் தான் படித்த நூல்களை மக்களிடம், ஊடகங்களிடம் பகிர்ந்துகொள்வார். அப்படி சில நூல்களை இந்த ஆண்டும் படித்ததாக கூறினார். An American Marriage , Tayari Jones அமெரிக்காவின் மேற்கு பகுதியில் வாழும் கருப்பின தம்பதிகளின் காதல் வாழ்க்கையை பேசும் நாவல். பெரிதாக எதிர்பார்க்க ஏதுமில்லை. ஆனால் கருப்பினத்தவர் ஒருவருக்கு அவர் செய்யாத குற்றத்திற்கு விதிக்கப்படும் தண்டனை அவர் வாழ்க்கையை எப்படி சிதைக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். பெரிய நூல்களைப் படிக்கும்போது கூடவே இது போன்ற மென்மையான நாவல்களை படிக்கவேண்டும் என்கிறார் கேட்ஸ். These Truths: A History of the United States , Jill Lepore அமெரிக்காவின் வரலாற்றில் அந்நாட்டை அசைத்துப் பார்த்த வரலாற்று நிகழ்வுகளை நியூயார்க்கர் பத்திரிக்கையின் பத்திரிகையாளர் ஜில் தொகுத்துள்

சில்வர் பாயில் ஸ்வீட்டுகள் உடலைப் பாதிக்குமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி சாக்லெட்டுகளை சாப்பிட்டிருப்போம். அதிலும் பல்வேறு சில்வர் பாயில்களை அகற்றாமல் சாப்பிடுவது இயல்பானது. இது உடலை பாதிக்குமா? இந்த சில்வர் பாயிலை இறந்த மாடுகளின் குடலில் செய்வதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் குமுதத்தில் செய்தி எழுதியிருந்தார்கள். இயற்கையான பொருள் ஓகே. ஆனால் இந்த சில்வர் அல்லது அலுமினிய பாயில் பொருட்கள் வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரியும் தன்மை கொண்டது. இது உடலுக்கு பாதிப்பு தரும் அளவில் இல்லை. அதனால் பயப்படவேண்டியதில்லை. திருப்தியாக பால் ஸ்வீட்டுகளை கடித்துச் சாப்பிடுங்கள். நன்றி - பிபிசி