இடுகைகள்

அலுமினிய பாயில் இனிப்பு மூலம் வயிற்றுக்குள் போனால்?

படம்
மிஸ்டர் ரோனி நான் சாக்லெட்டை ஆர்வமாக சாப்பிடும்போது, அதிலுள்ள அலுமினிய பாயிலையையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டேன். இது நச்சாக மாறி ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? வெறித்தனத்தை குறைத்து நிதானம் வளர்ப்பது நல்லது. விளம்பரங்களைப் பார்த்து அதே வேகத்தில் சாப்பிட்டால் எப்படி? அலுமினிய பாயில் உள்ள நச்சு வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்தோடு வினைபுரியும். இதில் இரு சதவீத அலுமினிய குளோரைடு நச்சு, வயிற்றில் பாதிப்பு ஏற்படுத்தும். அதை தவிர்க்க முடியாது. ஆனால் இதனால் உடலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏதும் கிடையாது. பயப்படாதீர்கள். உடலில் செரிக்காத சாக்லெட்டின் பகுதிகள் மலம் வழியாக வெளியேறிவிடும். நன்றி: பிபிசி 

நீளமான பெண்களின் முடி கிக் ஏற்றுகிறதா?

படம்
pixabay மிஸ்டர் ரோனி நீளமான முடி இருந்தால் பெண்களை பெண்தன்மை உள்ளவராக நினைக்கிறார்களே அது ஏன்? பொதுவாக பெரியாரியம் பேசும் பெண்கள் கூட தங்களின் நீளமான கவர்ச்சியான கூந்தலை வெட்டிக்கொள்வதில்லை. மிகச்சில பெண்கள்தான் பாப் கட்டிங் போல வெட்டிக்கொண்டு வலம் வருகிறார்கள். இயல்பாக பெண்களுக்கு முடி என்பது ஆண்களை கவனிக்க வைக்கும் ஒரு முக்கியமான அம்சம் என்பது தெரியும். எனவேதான் முடியை அவர்கள் சொத்து போல பராமரிக்கிறார்கள். 18ஆம் நூற்றாண்டு பிரான்சில் பெண்களுக்கு நிகராக ஆண்களும் ஜான் விக் போல முடியை வளர்த்துக்கொண்டு கோட் சூட் சர்க்காராக வலம் வந்தனர். ஆண்களின் உளவியல்படி நீளமான புட்டம் தொடும் முடி இருப்பது பெண்களின் கருவுறும் ஆற்றல் சரியாக இருப்பதற்கு அடையாளம் என கருதுகிறார்கள். எனவே, நீளமான முடி என்றால் ஆண்களுக்கு கிக் ஏறுகிறது. ஆண்களுக்கு இதுபோல என்ன என்று கேட்டு சிக்கல் செய்யக்கூடாது. பெண்களுக்கு இந்த மாதிரி என்பது ஆண்கள் பங்கேற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. நன்றி - பிபிசி

இரண்டு அடி முன்னே ஒரு அடி பின்னாக - பியி பண்டேலா

படம்
நேர்காணல் பியி பண்டேலா திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் நைஜீரியாவில் எப்படி இத்தனை எழுத்தாளர்கள், இயக்குநர்கள் உருவாகி வருகிறார்கள்? நாற்பது ஆண்டுகளாக நாங்கள் இங்கு கலையை பாதுகாக்க போராடி வருகிறோம். நோலிவுட் 1980ஆம் ஆண்டில்தான் உருவானது. மாநில அரசின் டிவி கூட தடைசெய்யப்பட்டுவிட்ட சூழ்நிலை. இதனால் கலையை நாங்கள் உலகிற்கு சொல்லும் அவசிய சூழல் ஏற்பட்டுவிட்டது. இசைக்கலைஞர்கள் ஆப்பிரிக்க இசை மற்றும் ரகே, ஹிப்ஹாப் ஆகியவற்றுடன் வெளியே முகம் காட்டினார்கள். எழுத்தாளர்கள் தங்களின் சிறந்த படைப்புடன் வெளியே வந்தனர். அப்படி இலக்கியம் எழுதினால் கூட வறுமை ஆபாச படம் போல எழுதி பரிசு வாங்குகிறீர்கள் என்று குற்றச்சாட்டு உள்ளதே? மேற்சொன்ன விஷயத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். நாங்கள் எழுதுவதை நாங்களே வெளியிடுவதில்லை. எடிட்டர் அதனை திருத்தி செப்பனிட்டு தனக்கு தேவையானவற்றை கண்டுபிடித்து அதை மாற்றி வெளியிடுகிறார். இதற்கு நாங்கள் ஒப்புக்கொள்வதால்தான் இலக்கியப் பரிசுகளை எங்கள் நாட்டினர் பெறுகின்றனர். சிமண்டா அடிச்சி என்ற சிறுகதை எழுத்தாளர் இருந்தார். அவர் ஆப்பிரிக்க வாழ்வை எழுதவில்லை. விபச்சார

குடியுரிமை சட்டத்தை விரிவு செய்யும் முதல் மாநிலம் நாங்கள்தான்!

படம்
நேர்காணல் உத்தரப்பிரதேச சிறுகுறுதொழில்துறை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரப்பிரதேசம் அரசின் சிஏஏ சட்ட திருத்தத்தை அமல் செய்யவுள்ளது. சாத்தியம் என்று நினைக்கிறீர்களா?  இச்சட்டம் இங்கு அடிப்படை அளவில் அமலாக உள்ளது. பின்னர் முழுமையாக பின்பற்றப்படும். மத்திய அரசிடமிருந்து முறையான அனுமதிகள் தேவை. நாம் காற்றில் சட்டத்ததை அமல் செய்ய முடியாது. மாவட்ட நீதிபதிகள், மாவட்டங்களிலுள்ள சட்டப்பூர்வமற்ற முறையில் தங்கியுள்ள அகதிகளை அடையாளம்  காணச்சொல்லி இருக்கிறார்களே? அப்படி எந்த அரசு ஆணையும் எங்களுக்கு வரவில்லையே. இதுபோன்ற ஏராளமான பொய் தகவல்களை மக்களுக்கு சிலர் அனுப்புகிறார்கள். இதனை தீர்க்கும் கடமை எங்களுக்கு உள்ளது. குடியுரிமை திட்ட சட்டத்தை மேம்படுத்த முடிவு செய்துள்ளீர்களா? அதனை மத்திய அரசுதான் எங்களுக்கு கூற வேண்டும். நாட்டிலேயே  பெரிய மாநிலமாக எங்கள் மாநிலம் இச்சட்டத்தை பெரிய அளவில் மேம்படுத்த உள்ளது. உங்கள் மாநில மக்களுக்கு இச்சட்டம் பற்றி சரியானபடி விளக்கிவிட்டீர்களா? நாம் மக்களிடம் ஒவ்வொரு முறையும் ஆதரவு மனநிலையை எதிர்பார்க

நெற்பயிரை பயிரிட நாற்றங்காலாக நட வேண்டுமா?

படம்
pixabay நெல்லின் சேமிப்பு வரம்பு நவீன நெல்ரகங்களை ஆலைகளில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே சேமித்து வைக்கின்றனர். காலாநமக், சிவப்பரிசி போன்ற உப்புச்சத்து கொண்ட அரிசி ரகங்களை அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சேமித்து வைக்க முடியும். சேமிக்கும் காலம் அதிகரிக்கும்போது நெல்லின் முளைப்புத்திறன் குறையும்.  நெல்லுக்கு நாற்றாங்கால் எதற்கு? நெற் தாவரத்தின் கனிதான் நெல். நெல் என்பது ஒருவித்திலை தாவரம். கடினமான ஓடுகளைக் கொண்ட தென்னை மரம் போன்றவற்றை மண்ணில் நடலாம். ஆனால் நெல்லுக்கு இந்த வாய்ப்பு இல்லை. இப்பயிருக்கு அதிக நீர்வளம், சரியான சீதோஷ்ணம் தேவை. அதிக மழைப்பொழிவு கொண்ட நிலமாக இருந்தால் நெல் அழுகிவிடும். அதேநேரம், நெல், வறட்சியான மண்ணில் இருந்தால் காய்ந்துவிடும். எனவே நெற்பயிருக்கு நாற்று விட்டு அதன் முளைப்புத் திறன் அதிகப்படுத்தி நடுகிறார்கள். ஒரைசா சட்டவைவா எனும் நெல்லின் காட்டு ரகத்திற்கு இவை எதுவும் தேவையில்லை. அவை தானாகவே நிலத்தில் விழுந்து முளைக்கும். பிற விதை ரகங்களைப் போல நிலத்தில் நெல்லைத் தூவினால் அவை முளைக்க அதிக சவால்களை எதிர்கொள்ளும் எனவே, நெல்லுக்கு நாற்றாங்கால்

நெற்பயிருக்கு நன்மை செய்யும் பூச்சி வகைகள் எவை?

நெற்பயிருக்கு நன்மை செய்யும் பூச்சி வகைகள்! நெற்பயிரின் நோய்த்தாக்குதலை இயற்கையாக கட்டுப்படுத்துபவை பூச்சி இனங்கள். ஆனால் இவை வயலுக்கு வரத் தடையாக இருப்பது, பல்வேறு நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகள் ஆகும். நன்மை செய்யும் பூச்சிகளை நாம் வயலுக்கு வரவைத்தால், பூச்சிக்கொல்லி செலவுகள் பெருமளவு குறையும். சில நெற்பயிருக்கு நன்மை செய்யும் பூச்சி இனங்களைப் பார்ப்போம்.  முட்டை ஒட்டுண்ணிகள்,   கிரைசோபா,   குளவி இனங்கள், தட்டான் இனங்கள், பொறி வண்டு, நீளக்கொம்பு வெட்டுக்கிளி ஆகியவை வயலில் உள்ள பூச்சிகளை தின்று பயிர்களைக் காப்பாற்றுகின்றன.  முட்டை ஒட்டுண்ணிகள் கைகோகிரம்மா டெலிநாமஸ், டெட்ராஸ்டிக்ஸ் ஒட்டுண்ணிகள் காய்ப்புழுக்களின் மீது முட்டையிட்டு, அவற்றின் இனத்தை அழிக்கின்றன. இந்த ஒட்டுண்ணிகள் கருப்பு நிறம் கொண்டவை. தன் வாழ்நாளில் இருபது முதல் நாற்பது தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கின்றன.  கிரைசோபா இப்பூச்சி, குஞ்சுப் பருவத்திலிருந்தே அசுவினி, இலைப்பேன் ஆகியவற்றைத் தாக்குகிறது. ஆண்பூச்சிகள் 12 நாட்களும், பெண் பூச்சிகள் 35 நாட்களும் உயிர்வாழும். தன் வாழ்நாளில் கிர

மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நினைக்கும் இந்திய அரசு!

படம்
pixabay இந்திய அரசு, உயர்கல்வியில் மாணவர்களின் எண்ணிக்கையை 20 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிக்க முயற்சித்து வருகிறது. இந்திய அரசின் மனிதவளத்துறை அமைச்சகம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உயர் கல்வித்துறைக்கு ரூ.30,383 கோடிகளைச் செலவிட இருக்கிறது. இத்தொகை மூலம், நாட்டின் பின்தங்கிய பகுதிகளிலுள்ள மாணவர்கள் உயர்கல்வி பெற வாய்ப்பு உள்ளது. இந்திய மாநிலங்களில் சில மாவட்டங்கள், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியே உள்ளன. உயர்கல்வியை எட்டும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 26 சதவீதமாக உள்ளது. 2024 ஆம் ஆண்டு ,மாணவர்களின் எண்ணிக்கையை 40 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது அரசு. தற்போது உயர்கல்வி படிப்புகளில் சேரும் மாணவர்களின் மொத்த அளவு 25.8 சதவீதம். அதில் ஆதி திராவிடர்கள் எண்ணிக்கை தோராயமாக 21.8%, பட்டியல் இனத்தவர் 15.9% க்கும் குறைவு. உயர்கல்வியில் இந்தியாவை பிரிக்ஸ் நாடுகளுடன் ஒப்பிடுகையில், தென் ஆப்பிரிக்காவைவிட(20.5%) மேலே உள்ளது. ஆனால் ரஷ்யா(81.8%), பிரேசில்(50.5%), சீனா(25.8%) ஆகிய நாடுகளை விட கீழே உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பின்தங்கிய பகுதிகளில் மாதிரி