இடுகைகள்

மனிதனின் ஆளுமைக்கும் செக்சுக்கும் என்ன தொடர்பு - உளவியல் ஆய்வு

படம்
pixabay உளவியல் ஆய்வு தியரி விழிப்புணர்வற்ற நிலையில் மனம் எப்படி செயல்படுகிறது, மனிதர்களின் ஆளுமைகளை பழக்கவழக்கங்களை எப்படி வடிவமைக்கிறது என்பதை உளவியல் ஆய்வு தியரி கூறுகிறது. மனம் ஒருவரின் நினைவில் பாதிப்பு ஏற்படுத்தாதபடி அவரது பழக்கவழங்கங்களை குணங்களை உருவாக்குகிறது. மனத்தில் ஏற்படும் பல்வேறு முரண்பாடுகளை ஒருவரின் உடல் காட்டிக்கொடுத்துவிடும். அதாவது அவரின் செயல்பாடுகள் மூலமாக. இதை ஆராய்ந்து சொன்னவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்த நரம்பியல் வல்லுநர் சிக்மண்ட் ஃபிராய்ட்.  இதில் மூன்று பாகங்கள் முக்கியம் என்று அவர் வரையறுத்தார். அவை, ஐடி, சூப்பர் ஈகோ, ஈகோ.  மனிதர்களின் பிறப்பிலிருந்து உளவியல் வளர்ச்சி தொடங்குகிறது. இது ஐந்து நிலையாக பிரிக்கப்படுகிறது. இதில் பாலியல் நிலை முக்கியமான அம்சமாக உள்ளது. பாலியல் வளர்ச்சியும் சமூகம் சார்ந்த எதிர்பார்ப்புகளும் ஒரு கட்டத்தில் எதிரெதிராக நிற்கின்றன. பாலியல் நிலை என்பது குழந்தையாக ஒருவர் இருக்கும்போது அவரின் பிறப்புறுப்பை தடவிக்கொண்டு மகிழ்வதில் தொடங்குகிறது என்கிறார் பிராய்ட். ஒருவரின் பாலியல் சார்ந்த எண்ணங்கள்தான் அவர்களின் ஆளும

மக்களுக்கான உரிமைகளைக் கோரும் சுதந்திர புரட்சி நூலகங்கள்!

படம்
ozy சர்வாதிகாரத்தை எதிர்க்கும் நூலகங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியத் தலைநகர் டில்லியில் புரட்சி நூலகங்கள் தொடங்கப்பட்டன. இவை தமிழகத்தில் உள்ள அண்ணா நூலகம் போன்ற பிரமாண்டத்தைக் கொண்டவை அல்ல. ஆனால் சர்வாதிகாரத்தை எதிர்க்கும் சுதந்திர மனநிலை கொண்ட மனிதர்களுக்கானவை. இந்த நூலகங்களை ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தொடங்கினர். கொரோனா பீதிக்கும் முன்புவரை இவை சுதந்திர மனநிலை கட்டற்ற பேச்சுரிமை ஆகியவற்றை வலியுறுத்தும் மனிதர்கள் வந்து செல்லும் இடங்களாக இருந்தன. அச்சமயத்தில்தான் காவல்துறை டாக்டர். ஜாகீர் உசேன் நூலகத்தில் உள்ளே நுழைந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. மாணவர்களின் மீது அநீதியான முறையில் தடியடி நடத்தியது. இந்திய அரசின் பாரபட்சமான குடியுரிமை சட்டதிற்கு எதிரான போராட்டங்கள் நாட்டில் எங்கெங்கு நடந்தனவோ, அங்கு போராட்டத்தின் ஒரு பகுதியாக புரட்சிகர நூலகங்கள் தொடங்கப்பட்டன. இப்படி கான்பூர், நாக்பூர், சம்பால், உதயகிரி உள்ளிட்ட பல்வேறு சிறு நகரங்களில் புரட்சிகர நூலகங்கள் உருவாக்கப்பட்டடன. நாங்கள் எங்களது நூலகங்களை அரசியல

வணிகத்தில் சமூகப் பொறுப்பு - சமூக பொறுப்புணர்வு திட்டம்!

படம்
பிக்சாபே 2 சமூக பொறுப்புணர்வின் தொடக்கம் அமெரிக்காவில் 1950 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் கார்ப்பரேட் நிறுவனங்கள் சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கு பங்களிக்கும் விதமாக விதிகளை மாற்ற உத்தரவிட்டது . அக்காலம் தொடங்கி அங்கு சமூகப்பிரச்னைகளுக்கு நிறுவனங்கள் நிதி மட்டும் அளிக்காமல் , அப்பிரச்னையைத் தீர்க்க பாடுபடும் செயல்பாடுகளைத் தொடங்கின . இதனைப் பற்றிய கட்டுரை ஒன்றை செய்தியாளர் கிரெய்க் ஸ்மித் 1994 ஆம் ஆண்டு ஹார்வர்ட் ரிவ்யூ இதழில் எழுதியுள்ளார் . அதில் மற்றொரு முக்கியக்காரணமாக அவர் சுட்டிக்காட்டுவது எக்ஸான் வால்டெஸ் என்ற நிறுவனம் எண்ணெய்யை கசிய விட்ட செய்தி . இதன் விளைவாக சூழல் மாசுபட்டது . இதையொட்டியே சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தை பல்வேறு நிறுவனங்களும் முன்னெடுத்தன . இதற்கான சட்டங்களை அரசு உருவாக்கியது . இதற்கு பத்தாண்டுகள் முன்பே 1960-70 காலகட்டத்திலேயே அமெரிக்க நிறுவனங்கள் சமூகத்திற்கு பங்களிப்பு செய்யவேண்டும் என்ற குரல்கள் மக்களிடையே எழத் தொடங்கிவிட்டன . இதன் காரணமாக , 1980 களின் தொடக்கத்திலேயே அமெரிக்காவில் குறைவான எண்ணிக்கையிலான நிறுவனங்கள் பல்வேறு சமூக

சமூக பொறுப்புணர்வு திட்டம் - தொடக்கம்

படம்
1 சமூக பொறுப்புணர்வுத்திட்டம் உங்கள் பகுதியில் நிறைய வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன . அவை மக்களுக்கு குறிப்பிட்ட சேவையை வழங்குகின்றன . அதற்கான கட்டணத்தை வசூலிக்கின்றன . இவற்றை பற்றி நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை . இந்த நிறுவனங்களின் வளர்ச்சி என்பது அதன் உரிமையாளர் , அதில் வேலை செய்யும் பணியாளர்கள் தொடர்பானதுதான் . இவர்கள் சமூகத்திற்கு என்ன பங்களிப்பு செய்கிறார்கள் ? ஆண்டிற்கு ஒருமுறை வரும் அறுபத்து மூவர் விழாவிற்கு தயிர் சோற்றை பொட்டலமிட்டு வழங்குவதை நான் கூறவில்லை . நிறுவனங்கள் தாமாக முன்வந்து அவர்கள் தொழில் செய்யும் பகுதிக்கு என்ன விஷயங்களைச் செய்கிறார்கள் என்பதை சமூக பொறுப்புணர்வு திட்டம் எனலாம் . இன்று இதனை அரசு கட்டாயமாக்கிவிட்டது . இந்திய அரசு இதனை சட்டமாக்கும் முன்பே டாடா , பிர்லா போன்ற நிறுவனங்கள் அவர்களின் தொழிற்சாலை உள்ள பகுதிகளில் கல்வி , வேலைவாய்ப்பு , தொழில்திறன் சார்ந்த பல்வேறு பயிற்சிகளை வழங்கிவந்தனர் . இப்படி இவர்கள் செய்யவேண்டும் என்பது அன்று கட்டாயமில்லை . ஏன் செய்கிறார்கள் ? இயற்கை ஆதாரங்களைப் பயன்படுத்தி தொழிற்சாலைக

உள்ளூர் உணவு, உலக உணவு எது சிறப்பானது?

படம்
இன்று நாம் கேஎப்சியில் சிக்கன்களை பக்கெட் ஆபரில் வாங்கி சாப்பிட்டுவிட்டு தாகம் எடுத்தால் கோலா பானங்களை தேடிக்குடிக்கிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் அதே சுவையில் இங்கேயும் கோலா பானங்களை தயாரித்து விற்கிறார்கள்., நிலப்பரப்பிற்கான சுவை என்பது இன்று மெல்ல அழிந்துவருகிறது. அதேசமயம் இதற்கு எதிரான உள்ளூர் உணவுகளை சாப்பிட அறிவுறுத்தும் பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த குழுக்களும் உருவாகி வருகின்றனர்.  உள்ளூர் உணவுவகைகளை ஏன் சாப்பிடவேண்டும்? காரணம் குறிப்பிட்ட உணவு வகைகளை தேடி சாப்பிடத் தொடங்கினால் அதனை குறிப்பிட்ட இடத்திலிருந்து கொண்டு வர பல்வேறு சிரமங்கள் உண்டு,. மேலும் சூழல் மாசுபாட்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். திருநெல்வேலி அல்வா என்பது அங்குள்ள நீரில் செய்யப்பட்டு சாப்பிடும்போது அதன் சுவை நன்றாக இருக்கும். அதே சுவையில் இங்கு சாப்பிடவேண்டும் என ஆசைப்படுவது தவறான ஒன்று. அதேபோல நேர்த்தியாக இங்கேயே செய்து சாப்பிடலாம். இதுபோல குறிப்பிட்ட உணவுவகைகளுக்கு டிமாண்ட் ஏற்படுவது அங்குள்ள பல்வேறு இயற்கை வள ஆதாரங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே உள்ளளூர் வகை உணவுகள

உணவு வீணாவதை தடுப்பது எப்படி?

படம்
உணவு உற்பத்தி முறைகளிலும் அதனை பயன்படுத்தும் முறைகளிலும் பெருமளவு உணவு வீணாகி வருகிறது. இதைத்தடுக்க உணவுப்பொருட்களை கவனமாக தேவைக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். வளர்ந்த வளரும் நாடுகளில் உள்ள குறிப்பிட்ட சதவீத மக்கள் உணவின்றி தவிக்கும்போது மற்றொரு இடத்தில் உணவுப்பொருட்கள் தேவையின்றி வீண்டிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் நமக்கு கிடைக்கும் உணவுப்பொருட்களின் இன்றியமையாத தன்மையை நாம் அறியாததே ஆகும். இம்முறையில் உலகெங்கும வீணாகும் உணவுப் பொருட்களிலிருந்து 3 பில்லியன் டன்கள் பசுமை இல்ல வாயு வெளியாகி உலகை வெப்பப்படுத்தி வருகிறது. அதாவது உலகில் 23 சதவீத விவசாய நிலங்களிலிருந்து பெறும் விளைபொருட்கள் பயன்படுத்தப்படாமல் வீண்டிக்கப்படுகின்றன.  மக்களின் உணவுத்தேவைக்காக விளைவிக்கப்படும் மூன்றில் ஒரு பங்கு காய்கறிகள் உணவுகள் வீண்டிக்கப்பட்டு வருகின்றன. இதனை எப்படி தவிர்ப்பது? அருகிலுள்ள காய்கறிகடைகளுக்கு செல்லும்போது தேவையான காய்கறிகளை மட்டும் வாங்குங்கள். உணவு தயாரிக்கும்போது எத்தனை பேர்களுக்கு என திட்டமிட்டு அதனை செய்யுங்கள். முடிந்தவரை ஒட்டுமொத்தமாக காய்கறிகளை வாங்குவதை தவிருங்க

கொரோனா பீதியால் விரட்டப்படும் மக்கள்! - இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலம்

படம்
toi வேலைதேடி வெளிமாநிலங்களுக்கு சென்ற வட இந்திய மக்கள் இப்போது தம் மாநிலங்களுக்கு வேகமாக திரும்பி வருகின்றனர். காரணம், கொரோனா வைரஸ் பீதியால் பல்வேறு இடங்களிலும் வேலை இல்லை. அதற்காக பசியோடு கிடக்க முடியுமா? அரசு மக்களுக்கு பயண ஏற்பாடுகள் செய்கிறதோ இல்லையோ அவர்கள் நடக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் இப்போது பல்வேறு சோதனைகள் செய்யாமல் அவர்களை கிராம மக்கள் உள்ளே அனுமதிப்பதில்லை என்று முடிவெடுத்து அவர்களை புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர். மேற்கு வங்கம், பீகார், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தராகண்ட் மக்கள் பலரும் ஊர் நோக்கி திரும்பத் தொடங்கியுள்ளனர். ஆனால் இவர்களை ஊருக்குள் விடாமல் கிராம மக்கள் தடுத்து வைத்துள்ளனர். ராஜஸ்தானின் தகவல்லி கிராமத்தைச் சேர்ந்த இடம்பெய்ரந்து சென்ற மக்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முறையாக சோதனைகள் நடைபெறாத நிலையில் மூன்று நாட்களுக்கு மேலாக கிராமத்திற்கு வெளியில் காத்திருக்கின்றனர். ”கேரளம் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த மக்களை சோதித்த பிறகே கிராமத்திற்கு அனுமதிக்க அரசு உத்தரவு. அரசின் உத்தரவுக்கு முன்னர் அங்கு சென்றவர்களையும் அங்கு

ஓராண்டிற்கு பிறகு பதவியை ஏற்றால் ஒப்புக்கொள்வீர்களா? ரஞ்சன் கோகய்

படம்
தேசபிமானி நேர்காணல் ரஞ்சன் கோகய், முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் /வஜிரம்  அண்ட் ரவி   980 × 549 ரஞ்சன் கோகய், தனது நேர்மையான செயல்பாடுகளுக்காக கடந்த காலத்தில் பாராட்டப்பட்டவர். பின்னர், பாஜக அரசில் தலைமை நீதிபதியான பிறகு, அவரின் நேர்மையான செயல்பாடுகள் கேள்விக்குள்ளாயின. அவரின் மீது அவரது உதவியாளர் பாலியல் தொல்லை என்று வழக்கு தொடுத்தார். பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு அவரின் தலைமையிலான நீதிபதிகள் குழு அயோத்தி வழக்கில் பாஜக அரசுக்கு ஆதரவாக தீர்ப்பினை அளித்தது. தலைமை நீதிபதிக்காலம் முடிந்தபிறகு, பாஜக அரசு கோகய்க்கு ராஜயசபை உறுப்பினர் பதவியை அளித்து கௌரவித்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் நீதியை குழிதோண்டி கோகய் புதைத்துவிட்டார் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி கோகய்யிடம் பேசினோம். தலைமை நீதிபதியாக இருந்தீர்கள். அந்த பதவியிலிருந்து விலகியதும் குடியரசுத்தலைவரின் பரிந்துரையில் ராஜ்ய சபை உறுப்பினர் பதவியைப் பெற்றிருக்கிறீர்களே ஏன்? அரசமைப்புச்சட்டம் 80படி, குடியரசுத்தலைவர் ராஜ்ய சபை பதவியை அளித்துள்ளார். நான் ஏன் மறுக்கவேண்டும்? நாட்டிற்