இடுகைகள்

நோய்த்தொற்றை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைவது முக்கியம்! - ரணில் விக்ரமசிங்கே

படம்
tnie அரசியல் ரணில் விக்ரமசிங்கே, இலங்கை முன்னாள் பிரதமர். தெற்காசியாவில் நோய்த்தொற்று பாதுகாப்பிற்காக நாடுகள் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார். அவரிடம் பேசினோம். பல்வேறு நாடுகள் நிலப்பரப்பு ரீதியாக ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்கிறீர்கள். அது எப்படி சாத்தியம்? பெருந்தொற்று பரவிவருகிறது. அனைத்து நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் சிறந்த தலைமை கிடைத்திருந்தால் அனைத்து நாடுகளும் இதனை எளிதாக கட்டுப்படுத்தியிருக்க முடியும். சார்க் மாநாட்டில் பல்வேறு நாடுகளும் ஒன்றாக இணைந்து நிற்பது நல்ல நடவடிக்கை. இந்தியாவும் பிற நாடுகளும் தங்களுக்குள் மருத்துவ நடவடிக்கைகள் சார்ந்து உதவிகளைப் பரிமாறிக்கொண்டால் எளிதாக நோய்த்தொற்று விஷயங்களை சமாளிக்க முடியும். மேலும் எதிர்காலத்திலும் இந்த நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவும். இலங்கையில் சிறப்பான அடிப்படை சுகாதார கட்டமைப்பு உள்ளது. அதேபோல இந்திய மாநிலமான கேரளத்திலும் உள்ளது. இவை இரண்டு பகுதிகளும் தங்களுக்குள் உதவிகளை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டு தங்களுடைய ஒத்துழைப்பை பலப்படுத்தலாம். சார்க் நாடுகளுக்கான அவசர

பரதநாட்டியம் என்பது ஒரு வகை மொழி! - பரதநாட்டிய கலைஞர் மாளவிகா சருக்காய்

மாளவிகா சருக்காய், நடனக்கலைஞர் எந்த உணர்வுகளை வெளிப்படுத்துவது கடினமானது? ஆச்சரிய உணர்வுகளை நடனம் வழியாக வெளிப்படுத்துவது கடினமாக இருக்கும். நான் இப்போது பயிற்சி செய்து வரும் தயாரிப்பில் இந்த உண்ர்வை பிறருக்கு தெரியும்படி வெளிப்படுத்துவது கடினமாக உள்ளது. நடனம் சார்ந்த விழாவை தயாரிப்பது என்பது எப்படியிருக்கிறது? எனக்கு நடனம் சார்ந்த விழாவை தயாரிப்பதற்கு பல மாதங்கள் தேவைப்படும். குறிப்பிட்ட வகை சார்ந்து யோசித்து, குறிப்புகள் எடுத்து அதனோடே வாழ்ந்துதான் நடன நிகழ்ச்சிகளை நான் உருவாக்குகிறேன். உங்களுடைய தயாரிப்பில் உருவாகும் நிகழ்ச்சி பற்றி சொல்லுங்கள். அர்ஜூனனின் கதாபாத்திரம் எனக்கு பிடித்தமான ஒன்று. அவனின் தத்துவ பார்வை பிறரிலிருந்து அவனைத தனித்துவமாக காட்டுகிறது. உறவுகளைக் கொல்வதா என்ற தயங்கிய அவன் மனம் போருக்கு தயாரானது அனைவரையும் வியப்பூட்டுகிறது. ஆனால் அந்த மாற்றம் உடனடியாக உருவான ஒன்றல்ல. அதைப்பற்றியத்தான நடன நிகழ்ச்சியை உருவாக்கி வருகிறேன். பரதநாட்டியத்தை எப்படி விளக்குவீர்கள்? தேவதாசிகள் சதிர் என்ற பாடல்களை பாடி ஆடும் முறை வேறுவகையானது. பின்னர் அதனை ருக்மணிதேவி வே

மத்திய அரசும், ஆர்பிஐயும் லட்சுமண ரேகையைத் தாண்டி வரவேண்டும்! - அமித் மித்ரா மேற்கு வங்க நிதியமைச்சர்

படம்
மொழிபெயர்ப்பு நேர்காணல் மத்திய அரசும் ஆர்பிஐயும் லட்சுமண ரேகையைத் தாண்டி வரவேண்டும்! அமித் மித்ரா, மேற்கு வங்காள நிதி அமைச்சர். அமித் மித்ரா, அமெரிக்காவிலுள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் நிதி நிர்வாகம் தொடர்பாக முனைவர் பட்டம் பெற்றவர். அத்துறையில் பணியாற்றி வந்தவரும் கூட. அவரிடம் மத்திய அரசுடன் பொருளாதார மேம்பாட்டிற்காக இணைந்து பணியாற்றுவது, தொழில்வளர்ச்சி மேம்பாட்டிற்கான அவரது திட்டங்கள் பற்றி பேசினோம். உலக நிதியகம் இந்தியாவின் வணிக வளர்ச்சி 1.9 சதவீதம்தான் இருக்கும் என்று கூறியுள்ளது. உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதம் என்று கணித்துள்ளது. இதுபற்றி உங்களின் கருத்து? மத்திய அரசு மாநிலங்களுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீத அளவில் ஆறு சதவீத நிதியை மாநிலங்களுக்கு வழங்கவேண்டும். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த அளவீட்டுப்படி பத்து லட்சம் கோடி ரூபாய் தரவேண்டும் என பிரதமர் மோடியிடம் கேட்டுள்ளார். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியோடு ஒப்பிடும்போது நமது கடன் சதவீதம் 70 சதவீதமாக உள்ளது. அமெரிக்காவின் கடன் சதவீதம் 106 சதவீதமாகவும், ஜப்பானின் கடன் சதவீதம் 240 ஆகவும் உ

தொழிலாளர்களுக்கு எங்களால் வேலைவாய்ப்புகளை வழங்க முடியும்!

யோகி ஆதித்யநாத், உத்தரப்பிரதேச முதல்வர் பாஜக கட்சியைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் மக்களிடம் முஸ்லீம் வியாபாரிகளிடம் காய்கறிகளை வாங்காதீர்கள் என்று கூறிவருகிறார்களே? ஜனநாயகப்பூர்வமாக அப்படி கருத்துகளைக் கூறுவதற்கு உரிமை உள்ளது. அப்படிக் கூறுவது மோசமான விளைவுகளை ஒன்றும் ஏற்படுத்திவிடாது. அது மக்களை விழிப்புணர்வுக்கு உள்ளாக்குவதற்காக செய்யப்படுவது. மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல வேறு யாரும் கூட தகவல்களை ஆராய்ந்து பார்த்து தங்களின் கருத்துகளை பேசுவது முக்கியம். இப்படி செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? கட்சி சார்பில் இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். முழுமையான தகவல்களை அறியாமல் இப்படி பேசுபவர்கள் பிறரின் சிரிப்புக்கு ஆளாவார்கள் என்பதை மறக்க கூடாது. ராமர் கோவிலை கட்டும் திட்டம் செயல்பாட்டில் உள்ளதா? அதற்கான அறக்கட்டளையிடம் பணிகளை ஒப்படைத்துள்ளோம். அதற்கான திட்டம் தயாராகி வருகிறது. பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான சவாலாக எதனைக் கருதுகிறீர்கள்? உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மார்ச் 28, 29 த

அறிவியல் ஆய்வுகளில் இந்தியா முன்னேறி வருகிறது!

படம்
pixabay கோவிட் நோய்த்தொற்று இந்தியாவின் அறிவியல் நிலையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது அசுதோஷ் சர்மா, செயலர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை. நோய்த்தொற்றைத் தடுப்பதில் அரசும் தனியார் நிறுவனங்கள் எப்படி செயல்பட்டு வருகின்றன? அறிவியல் ஆய்வகங்கள், ஆராய்ச்சி, ஸ்டார்ட்அப், கல்வி நிலையங்கள் என தனியார் துறை நமக்கு பெரும் பங்காற்றி வருகிறது. அரசு இவர்களுக்கு பல்வேறு மானிய சலுகைகளோடு கொள்கைகளையும் சாதகமாக வகுத்து வருகிறது. இதன்காரணமாக புதிய ஆராய்ச்சி சிந்தனை கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தியா பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் எந்த விஷயங்களில் பின்தங்கியுள்ளதாக நினைக்கிறீர்கள்? நம் நாடு பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆராய்ச்சியில் பின்தங்கியுள்ளதை நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்கள். நான் அதனை அப்படி பார்க்கவில்லை. பிற நாடுகளில் அறிவியல் தொழில்நுட்பங்களை வேகமாக வணிகமயப்படுத்தி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவருகிறார்கள். நம் நாட்டில் இச்செயல்பாட்டில் வேகம் குறைவு. அறிவியல் ஆய்வுகளை தொடர்ச்சியாக செய்வதற்கு நாம் உந்துதல் தந்தால் மட்டுமே நம்மால் அவற்றை வணிகமயப்படுத்த ம