இடுகைகள்

கர்ச்சீஃபை விட டிஷ்யூ தாள்களே சிறந்தவை! - மிஸ்டர் ரோனி பதில்கள்

படம்
மிஸ்டர் ரோனி விலங்குகளின் கண்மணி மாறுபட்டிருப்பதற்கு என்ன காரணம்? விலங்குகள் பெரும்பாலும் இரவில் வேட்டையாடும் பழக்கம் கொண்டவை. எனவே அதற்கேற்ப அதன் கண்கள் இரையைப் பார்க்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். பாம்புகளுக்கு மட்டுமல்ல, எலிகளுக்கும் இதே போன்ற கண் அமைப்புகள் உண்டு. யார் விழிப்புணர்வாக இருக்கிறாரோ அவரே இந்த திறன் மூலம் வெல்வார். வென்றால் உலகில் வாழும் வாய்ப்பு கிடைக்கும். மனிதர்களின் கண்களில் இருக்கும் தசைகளை விட கூடுதலாக தசைகள் இதற்கு தேவைப்படுகின்றன. விலங்குகள் அதனால்தான் சிறப்பாக வேட்டையாட முடிகின்றது. தூங்கும்போது கனவில்தான் கிரியேட்டிவிட்டியான விஷயங்கள் கிடைக்குமா? பொதுவாக முக்கியமான கண்டுபிடிப்பாளர்கள், தங்களின் சாதனைகள் பற்றி பேசும்போது இப்படி சொல்லியிருக்க கூடும். கனவுகளில் வரும் விஷயங்களுக்கு பொதுவாக லாஜிக் கிடையாது. ஆனால் அதனை நீங்கள் லாஜிக்கோடு பொருத்தி யோசித்தால் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது. எழுவதற்கும் தூங்குவதற்கும் இடைப்பட்ட ஹிப்னோஜோகிக் நிலையில்தான் பெரும்பாலும் கிரியேட்டிவிட்டி மடை உடைத்து பாய்கிறது.   ஃபிராங்கன்ஸ்டைன் நாவல் எழுதிய மேரி ஷெல்லி கூட   இந்த

தீப்பந்தம் - மொழிபெயர்ப்பு நேர்காணல் மின்னூலின் தரவிறக்க முகவரி இதோ!

படம்
நேர்காணல்களின் சிறப்பு, குறிப்பிட்ட ஒருவரிடம் பேசும்போது அவர் அந்தந்த சூழல்களின் என்ன நினைக்கிறாரோ அதை பேசவைத்து பதில்களை வாங்க வேண்டும் என்ற சவால் உள்ளது. இதன் காரணமாக கேள்விகளை சுருக்கி பதில்களை நிறைய பெறவேண்டும் என்பதே நேர்காணல்களின் அடிப்படை. இந்த நூல்களில் உள்ள 32 நேர்காணல்கள் இந்தியாவின் முன்னணி நாளிதழ்கள், மாத, வார இதழ்களில் வெளியானவை.  இந்த நேர்காணல்கள் அனைத்தும் கோமாளிமேடை வலைத்தளத்தில் வெளியானவை. வெளியானவற்றில் குறிப்பிட்ட நேர்காணல்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றை செம்மை  செய்து மொழிபெயர்ப்பு நேர்காணல் நூலாக தொகுத்திருக்கிறோம். இந்த நூல் கொரோனா காலத்தில் இந்தியாவில் , உலகில் பல்வேறு துறைகளில் நடைபெற்ற மாற்றங்களை பதிவு செய்கின்றன. புனைவுகள் மட்டுமே காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று என்னிடம் பேசிய சிறுகதை எழுத்தாளர் ஒருவர் ஏளனமாக சொன்னார். எது நிலைத்து நிற்கப் போகிறது என்பதை காலம் முடிவு செய்யும். நாம் செய்யவேண்டிய எழுத்துக்கு உண்மையாக அதனை எழுதுவதும், அதனை முறையான வழியில் பிறருக்கு பகிர்வதுமே ஆகும். இந்த நூலில் முக்கியமான நேர்காணல்களாக கருதுவது அண்மையில் புற்றுநோய்

போதைப்பொருள் கூட்டத்தை பிடிக்க காவல்துறை ஆடும் ஆட்டம்! - தேடினால் கிடைக்காது - ராஜேஷ்குமார்

படம்
  பிக்ஸாபே அது இது எது? சென்னையில் காட் மைன் என்ற போதைப்பொருள் மறைமுகமாக விற்கப்படுகிறது. இதனை யார் விற்கிறார்கள் என்பதை போலீசார் கண்டுபிடித்துவிடுகின்றனர். ஆனால் கைது செய்ய ஆதாரம் வேண்டுமே? அதற்கு அவர்கள் ஏராளமான திருப்பங்கள் நிறைந்த நாடகமே அது இது எது?   குமுதா நேர்காணலுக்கு செல்கிறாள். அவள் துப்பாக்கியை பூக்காரியிடம் வாங்கும்போதிலிருந்து கடைசி வரை நமக்கு பதற்றம் குறையவே மாட்டேன்கிறது. இதற்கு இடையில் சூடாமணி என்ற இளம்பெண்ணை அவளது பெற்றோர் அட்மிட் செய்துவிட்டு தடாலெட காணாமல் போகிறார்கள். குமுதா நூறு பேர் கலந்துகொள்ளும் நேர்காணலில் சிம்பிளாக ஒரே ஒரு மிரட்டல் வீடியோவைக் காட்டி வேலையை வாங்குகிறார். அந்த வீடியோவைப் பார்த்து கம்பெனி உரிமையாளர் சங்கர் பிரபு ஏன் வியர்த்து வழிகிறார், அதன் பின்னணி என்ன என்பதை நாவலைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள். விறுவிறு வென்ற வேகமும், கச்சிதமான உரையாடல்களும் நாவலுக்கு பலம் சேர்க்கின்றன. இறுதிப்பகுதியில் ஐயையோ ஹேமா கைமாவா என நினைக்கும்போதே வரும் அதிரடி திருப்பம் ஆசம் சொல்ல வைக்கிறது.   2 விடாதே விவேக் விடாதே சென்னையிலிருந்து தலைநகருக்கு சென்ற

பணமோசடி செய்துவிட்டு தப்பியோடும் நண்பர்களின் பரபர பயணம்! - ஹாவா 2018

படம்
    123 தெலுகு ஹாவா குற்றமும் அதன்   தொடர்ச்சியாக துரத்தும் பின்விளைவுகளும்தான் கதை. சார்லி, ஆஸ்திரேலியாவில் சின்ன சின்ன திருட்டுகள், மோசடிகள் செய்து வாழ்கிறான். அவனுக்கு ஒரே ஆதரவு அவனது அக்காவும், பிஜிலி பாபு என்ற ரவுடியிடம் வேலை செய்யும் நண்பன்தான். பிஜிலி பாபுவின் பணத்தை பந்தயக்குதிரை மீது கட்டச்சொல்கிறான் சார்லி. அவன் நண்பன் முதலில் மறுத்தாலும் நிறைய லாபம் கிடைக்கும். முன்னர் சார்லி சொன்னபடி பணம் கிடைத்ததால் அதனை ஏற்கிறான். ஆனால் இம்முறை விதி சதி செய்ய, ஒரு லட்சம் டாலர்களை பந்தயத்தில் கட்டி கோட்டை விடுகின்றனர். பிஜிலி பாபுவுக்கு தெரிந்தால் நிச்சயம் கைமா என்ற நிலையில் ஆஸி. யை விட்டு தப்பியோடு சார்லியும், அவன் நண்பனும் நினைக்கிறார்கள். கூடவே சார்லி எதைச் சொன்னாலும் நம்பும் அவனது காதலி திவியும் கூடவே இணைகிறாள். அவள் கூலிக்கொலைகாரன் ஒருவன் கொலைசெய்வதைப் பார்த்துவிட்டு, தப்பியோடி வருகிறாள். கொலைகாரனின் காரையும் திருடிவிடுகிறாள். இவர்கள் மூவரின் வாழ்க்கை என்னவானது, நினைத்தபடியே மூன்றுபேரும் அந்த நாட்டை விட்டு தப்பியோடினார்களா? இல்லையா என்பதுதான் கதை. அவல நகைச்சுவை என்பது படம்

ஆசியாவின் ஒரே தலைவராக தன்னை சீனா நினைத்துக்கொள்கிறது! - ஷ்யாம் சரண்

படம்
ஜிபி ஷ்யாம் சரண், முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் மத்திய அரசின் பாதுகாப்பு போர்டு குழு தலைவராக இருந்தவர் ஷ்யாம் சரண். இவர் மத்திய அரசின் கொள்கை வகுப்பு குழுவின் மூத்த உறுப்பினர் ஆவார். இந்திய – சீன எல்லையில் திடீரென ஏற்பட்டுள்ள பதற்றம் எதற்காக என்று பேசினார். இந்தியா – சீனா நாடுகளின் எல்லையில் திடீரென சீனா ஆக்ரோஷமாக நடந்துகொள்ள என்ன காரணம்? லடாக்கிலுள்ள பாங்காங் லேக், சிக்கிம் – திபெத் எல்லைக்கோடு அருகிலுள்ள நகு லா ஆகிய இடங்களில் ஏற்பட்டுள்ள பதற்றம் என்பது புதிதான ஒன்றல்ல. இரு நாடுகளின் எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்னையை நாம் முறைப்படி விதிகளின்படி தீர்த்துக்கொள்ள முடியும். லடாக்கின் கால்வான் ஆற்றுப்பகுதியில் இதுவரை நாம் சீனாவின் ஆட்சேபங்கள் இன்றி சென்று வந்திருக்கிறோம். தற்போது அப்பகுதியை தனக்கு உரிமையாக்கிக் கொள்ள சீனா முயல்கிறது. இந்தியா அமெரிக்காவிற்கு ஆதரவாக நடந்துகொள்ளும் உலக அரசியலுக்கு சீனாவின் பதிலடியாகவே நாம் புரிந்துகொள்ளவேண்டும். வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம் என்று அமெரிக்கா கூறியதை இந்தியா ஏற்கிறது. மேலும் தைவான் நாட்டிற்கு உலக சுகாதார நிறுவனத்தில் அங்கீகாரம் வழங்குவது,

திருமண வாழ்க்கையின் இன்பம் ஏழே ஆண்டுகள்தானா? மிஸ்டர் ரோனி பதில்

படம்
ஜிபி மிஸ்டர் ரோனி   எனக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை என்பது ஏழு ஆண்டுகள்தான் என நண்பன் கேலி செய்து சிரிக்கிறான். இது உண்மையா? ஆறு ஆண்டுகள் திருமண வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்துவிட்டேன் என்று நீங்கள் சொல்கிறீர்களே? இதுவல்லவா பெரிய விஷயம். மகிழ்ச்சியான திருமண உறவு ஏழு ஆண்டுகள் என்று சொல்வது உளவியல் சார்ந்த ஆய்வுகள் படிதான். அதில் உண்மையும் இருக்கிறது. 1999ஆம்ஆண்டு ரைட் ஸ்டேட் பல்கலைக்கழகம் திருமணமாகி பத்தாண்டுகள் ஆனவர்களை சோதித்தது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தம்பதிகளின் மகிழ்ச்சி குறைந்து அவர்களின் வாழ்க்கை உறைந்து போனதை ஆராய்ச்சி வெளிப்படுத்தியது. இதன் அடிப்படையில்தான் ஏழு ஆண்டு இன்பம் கான்செப்ட் தோன்றியது. கணவன், மனைவி இருவருக்குமான கெமிஸ்ட்ரி என்பது உங்கள் மனப்பொருத்தத்தைப் பொறுத்தது. உங்களின் நோக்கம், தொழில், மனைவியின் கனவு, பிறந்த குழந்தைகள், அவர்களுக்கான கல்வி என பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இயல்பாகவே நமது நோக்கம் மாறியபடியே இருக்கும். அதற்கேற்ப நீங்கள் அனுசரித்துச் செல்வதுதான் முக்கியம். உங்களின் செயல்பாடுகளை விளக்காமலேயே இன்னொரு உயிர் புரிந்

பிரைவசி பாதிக்கப்படாமல் நோய்த்தொற்றை அழிப்பது கடினம்! - நோய்தடுப்பியலாளர் ஆடம் குசார்ஸ்கி

படம்
ஆடம் குசார்ஸ்கி கணிதவியலாளர் மற்றும் நோய்தடுப்பியலாளர். சமூக வலைத்தளத்தில் கிடைத்துள்ள பிரபல்யத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? டிவிட்டரில் எங்களைப் போன்ற அறிவியலாளர்கள் சுதந்திரமாக பல்வேறு ஐடியாக்களை சொல்ல முடிகிறது. பெருந்தொற்று காலம் எங்களைப் போன்றவர்கள் மீது வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது. சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களுக்கு இக்காலகட்டத்தில் கடைபிடிக்கவேண்டிய விஷயங்களை எளிமையாக சொல்லமுடிகிறது. அந்த வகையில் இந்த ஊடகம் முக்கியமானது. நோய்த்தொற்று பற்றிய போலிச்செய்திகளை இம்முறையில் உடனுக்குடன் தடுக்க முடியும் என்பது நல்ல விஷயம். பல்வேறு நாடுகளில் கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மரபணுக்களை சேகரித்து வருகிறார்கள். இது தனிப்பட்டவரின் சுதந்திரத்திற்கு ஆபத்தானது அல்லவா? தனிப்பட்ட சுதந்திரத்தை தியாகம் செய்யாமல் நம்மால் நோய் பற்றிய தகவல்களை அறிய முடியாது. இதுதான் யதார்த்தம். எபோலா பற்றிய தகவல்களை தேடியபோது, அது செக்ஸ் மூலம் பரவியது தெரிய வந்தது. இந்த தகவல்களை மக்களே மனமுவந்து மருத்துவர்களிடம் அரசிடம் தெரிவிப்பார்கள் என்று நம்ப முடியுமா? முடிந்தளவு தனிபட்ட தகவல்களை மக்கள

தாலிபான்கள் சீக்கியர்களை மோசமாக நடத்தவில்லை! எழுத்தாளர் அமர்தீப் சிங்

படம்
இந்துஸ்தான் டைம்ஸ் அமர்தீப் சிங், எழுத்தாளர், சிங்கப்பூர். 2014ஆம் ஆண்டு தனது அலுவலகப் பணியை அமர்தீப் கைவிட்டார். சீக்கிய மதம் பரவியுள்ள அனைத்து நாடுகளிலும் பயணம் செய்து கிடைக்கும் தகவல்களை ஆவணப்படுத்தி வருகிறார். இவ்வகையில் இரண்டு நூல்களை எழுதியுள்ளார். சவுதி அரேபியா, ஈராக், ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயணித்து தன் அனுபவங்களை திரைப்படமாகவும் உருவாக்க முயன்று வருகிறார். இச்சமயத்தில் காபூலில் உள்ள குருத்துவாரா தீவிரவாதிகளில் தாக்குதலுக்கு ஆட்பட்டது. ஆப்கானிஸ்தானில் கடந்த நாற்பது ஆண்டுகளாக எப்படி சீக்கியர்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள் என்பதை நம்மிடம் பேசினார். இந்தியாவில் அமலாகியுள்ள குடியுரிமைச்சட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நான் இந்த சட்டம் பற்றிக் கேட்டதும் ஆப்கானிஸ்தானிலுள்ள சிறுபான்மை மக்களுக்கு இப்போதாவது நீதி கிடைத்ததே என்று நினைத்தேன். ஆனால் பிறகுதான் அந்த சட்டத்திலுள்ள பல்வேறு சிக்கலான அடுக்குகளை உணர்ந்தேன். இந்தியாவுக்கு வெளியே உள்ள சிறுபான்மை மக்களை அதிக ஆரவாரம் இல்லாமல் இந்தியாவுக்கு அழைத்துவர இந்த சட்டம் உதவும் என ந

மாஸ்க் அணிந்தால் கோவிட் -19 தொற்று ஏற்படாதா?

படம்
ஜிபி மாஸ்க் அணிந்தால் கோவிட் – 19 நோய்த்தொற்று ஏற்படாதா? அமெரிக்கா, ஆஸ்திரேலியா, செக் குடியரசு என பல்வேறு நாட்டு அரசும் முக கவசங்களை மக்கள் அணிவதை கட்டாயம் என்று அறிவித்துவிட்டன. இதை நாம் எழுதுவதற்கு முன்னரே உலக சுகாதார நிறுவனமும் முக கவசங்களை அணிவதை முக்கியமானது என்று   கூறிவிட்டது. உண்மையில் இதில் முக கவசம் நோய்த்தொற்றை தடுக்கிறதா? முக கவசம் அணிவதன் மூலம் நீங்கள் நோய்த்தொற்றை தடுக்க முடியும் என்பதற்கு எந்த மருத்துவ ஆதாரமும் கிடையாது. நோயால் பாதிக்கப்பட்டவர் கண்டிப்பாக முக கவசத்தை அணிய வேண்டும். ஆனால் பிறர் அணிவது அவசியமில்லை. ஆனால் சமூக இடைவெளியை உறுதியாக அனைவரும் கடைபிடிக்கவேண்டும் என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் வான் டாமே. எம்ஐடி நிறுவனம் பாதிக்கப்பட்டவர் தும்மும்போது, இருமும்போது எட்டு மீட்டர் தூரத்திற்கு நீர்த்திவலைகள் தெறிப்பதை ஆய்வில் கண்டறிந்தனர். இதற்காக அதிக திறன் கொண்ட கேமராக்களைப் பயன்படுத்தினார். முக கவசம் அணிந்தவர்களை விட அணியாதவர்களுக்கு பத்தில் மூன்று பேருக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது தெரிய வந்துள்ளது. கிருமி எப்படி பரவுகிறது என முழுமையாக அ

சமூக தனிமைப்படுத்துதல் உளவியலில் ஏற்படுத்தும் பாதிப்பு!

படம்
ஜிபி சமூக தனிமைப்படுத்துதல் பேசுவதற்கான தன்மையை ஏற்படுத்துகிறது   பேராசிரியர் ரெபெக்கா சாக்ஸே மூளை நரம்பியல் பேராசிரியை, எம்ஐடி இன்று உலக நாடுகள் பலவற்றிலும் முழுமையாக அல்லது பகுதி நேரமாக பொதுமுடக்கம் அமலாகி வருகிறது. இதனால் அவசியமான பொருட்களை வாங்குவது தவிர்த்து ஒருவர் வெளியே சுற்றுவதை தடுக்கப்பட்டுள்ளது. அரசு இதன் வழியே நோய்த்தொற்று பரவலைத் தடுக்க நினைக்கிறது. ஆனால் நோய்த்தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள், நோய்த்தொற்று ஏற்படாதவர்கள் அனைவருக்கும் பொதுவாக உள்ள விஷயம், சமூக தனிமைப்படுத்தல்தான். பலர் நகரங்களில் தனிமையாக வீடுகளில் வேலை செய்து வருகின்றனர். சாப்பாடு தயாரித்து சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குள்ளேயே இருக்கின்றனர். வீடுகளில் இருந்துகொண்டே டிஜிட்டலாக வெளியில் உள்ள உலகத்திடம் உரையாடி வருகிறோம். உண்மையில் இப்போது உலகிலுள்ள மக்களுக்கு சாப்பிடுவதற்கான நேரம், டிவி,  சினிமா, ஸ்மார்ட்போன் ஆகியவற்றுடன் செலவு செய்வதற்கான நேரம் அதிகரித்துள்ளது. தூங்குவதற்கும் விழித்திருப்பதற்குமான எல்லைக்கோடு மெல்ல அழிந்து வருகிறது. உண்மையில் தனிமைப்படுத்தலில் இருப்பவர்களுக்கு பசி ஏற்படுகிறதா, அந்த உண

சிறுநீர், மலத்தின் மூலம் உடல்நிலையை கணிக்க முடியும்! அமெரிக்க ஆய்வில் தகவல்

படம்
ஜிபி உடல்நிலையைக் கணிக்கும் ஸ்மார்ட் டாய்லெட்! அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கழிவறையில் ஸ்மார்ட் பொருட்களை பொருத்தி அதன் மூலம் மனிதர்களுக்கு சிறுநீரகம் மற்றும் ஆசனவாயில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முயன்றுள்ளனர். இந்த கழிவறையின் பெயர் ஐபிலாப் ஆகும். நாம் காந்தியைப் போல சிறுநீர் அல்லது மலம் கழிப்பதை அவ்வளவு கவனமாக பார்ப்பதில்லை. இந்த ஸ்மார்ட் கழிவறையில் பொருத்தப்பட்டுள்ள கேட்ஜெட்ஸ் மூலம் சிறுநீரின் அளவு, அதிலுள்ள கழிவுப்பொருட்களின் தன்மை ஆகியவற்றை அளவிட்டு புற்றுநோய் வாய்ப்பு, சிறுநீரக செயலிழப்பு, தொற்றுநோய்கள் வரையில் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மருத்துவர் சஞ்சீவ் காம்பீர் குழுவினரின் முயற்சியில் இந்த கழிப்பறை தயாரிக்கப்பட்டு 21 தன்னார்வலர்களைக் கொண்டு சோதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை தொடர்பான அறிக்கை நேச்சர் பயோமெடிக்கல் எஞ்சினியரிங் இதழில் வெளியாகியுள்ளது. இந்த சோதனைகள் உங்களுக்கு வினோதமாக தோன்றலாம். ஆனால் இம்முறையில் மனிதர்களின் நோய்களை குறிப்பாக சர்க்கரை நோய், புற்றுநோய் ஆகியவற்றை எளிமையாக கண்டுபிடிக்க முடி