இடுகைகள்

உலகை மாற்றியுள்ள ஆன்லைன் கல்வி - மாறும் கல்வி சூழல்கள் பற்றிய அலசல்

படம்
மாறும் கல்விப்பயணம்! கோவிட் -19 நோய்த்தொற்று அனைத்து துறைகளையம் பாரபட்சமின்றி தாக்கியுள்ளது. இதன் காரணமாக எந்த வேலைகளையும் நாம் நிறுத்தப்போவதில்லை. வேலைகளை வேறுவிதமாக செய்யப்போகிறோம். தொழிற்சாலைகள் என்றால் குறைவான தொழிலாளர்களை வைத்து பன்னிரெண்டு மணிநேரம் பிழியப்போகிறார்கள். சம்பளமும் குறைவாக இருக்கலாம். முடிந்தவரை ஆட்களைக் குறைத்துவிட்டு தொழிற்சாலை நிர்வாகம் இயந்திரங்களுக்கு மாறுவார்கள். கல்வி விவகாரத்தில் பள்ளியில் முழுநாட்களையும் கழித்த மாணவர்கள் இனி ஆன்லைன் பாதி, பள்ளி மீதி என வகுப்புகளை பயிலப் போகிறார்கள். தலைநகரான டில்லியில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் கல்வி தொடங்கிவிட்டது. தனியார் பள்ளிகளில் மட்டுமல்ல, அரசுப்பள்ளிகளிலும் கூட ஆன்லைன் கல்விதான். டில்லியிலுள்ள கேரியர் லான்ச்சர் என்ற கல்வி நிறுவனம் அரசுப்பள்ளிகளில் ப்ராஜெக்ட் ஆஸ்பிரேஷன் என்ற பெயரில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் வீடுகளில் கணினிகளுக்கு முன்பு தயாராகவேண்டியதிருக்கிறது. நாற்பது நிமிடங்கள் நடைபெறும் வகுப்புகள் ஆன்லைனில் ஒன்றரை மணிநேரம் நடத்தப்படுகிறது. ஆன்லைன் கல்வி மூலம் தற்போது 1.65 லட்சம்

பெருந்தொற்று சாதி உணர்வை மழுங்கடித்து உள்ளது!

படம்
நமது சமூக அமைப்பில் சாதி முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சமூக வரலாற்று ஆய்வாளர் பத்ரி நாராயணன் நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கிலத்தில்: அவ்ஜித் கோஷ் சமூக உருவாக்கத்தில் சாதியின் இடம் என்ன? சாதி, நம் சமூக உருவாக்கத்தில் முக்கியமான பங்கை வகித்துள்ளது. தற்போது பெருந்தொற்று காலம் சாதி தொடர்பான தன்மையில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பொதுவாக உயிர்வாழ்தலுக்கு ஆபத்து ஏற்படும் காலங்களில் நம் மனதில் சாதி சார்ந்த கவனம் குறைந்து ஆவேசம், புனிதமான தன்மை காணாமல் போகும். இப்படி வரலாற்றில் நிறைய முறை நடந்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் நாம் சாதி சார்ந்த கண்ணோட்டத்தில் பார்க்கப் பழகிவிட்டோம். இதெல்லாம் தாண்டியும் நாம் சாதிகளிடையே ஒற்றுமையாக வாழ்ந்துவருகிறோம் என்பது முக்கியமானது. இதனை பரிணாம வளர்ச்சி வழியாக அடைந்திருக்கிறோம். இதனை மேலும் விரிவாக்கி நாம் பார்க்கவேண்டும். பெருந்தொற்று காலத்தில் சாதி சார்ந்த பழக்கங்களை நம்மால் கடைபிடிக்க முடியுமா? ஒரே வண்டியில் பல சாதிகளைச் சேர்ந்தவர்கள் நெருக்கமாக உட்கார்ந்துகொண்டு பயணிக்கிறார்களே? நாம் டிவிகளிலும் நாளிதழ்களிலும் இத

நோய்த்தொற்று அதிகரிக்க மத்திய அரசின் முடிவுகள்தான் காரணம்! - ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

படம்
மத்திய அரசின் தடாலடி முடிவுகளால்தான் நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது ஹேமந்த் சோரன், ஜார்கண்ட் முதல் அமைச்சர் நன்றி: தி இந்து ஆங்கிலம் ஆங்கிலத்தில்: அமித் பருவா நோய்த்தொற்று உங்கள் மாநிலத்தில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? எங்கள் மாநிலத்தில் இப்போதுதான் சோதனைகளை செய்ய தொடங்கியுள்ளோம். இதுவரை வெளிமாநிலங்களிலிலிருந்து வந்தவர்கள் 450 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில் நான்கு பேர் இறந்துவிட்டனர். நாங்கள் தொடர்ச்சியாக சோதனைகளை செய்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முயன்று வருகிறோம். உங்கள் மாநிலத்தில் 53 ஆயிரம் சோதனைகள் மட்டுமே நடந்துள்ளன. இதுதான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க முக்கிய காரணமா? அப்படி சொல்ல முடியாது. முதலில் நாங்கள் இந்த சோதனைகளை கோல்கட்டாவுக்கு அனுப்பித்தான் செய்து வந்தோம். இப்போது நான்கு ஆய்வகங்களை மாநிலத்தில் தொடங்கி சோதனைகளை செய்து வருகிறோம். பாதிப்பு குறைவாக இருப்பது என்பதல்ல. நாங்கள் வெளிமாநிலங்களிலிருந்த வந்த தொழிலாளர்களைச் சோதனை செய்வதில் முழுகவனத்தை செலுத்தி வருகிறோம். அவர்களை பாதுகாப்பாக மாநிலங்களில்

இடம்பெயர்ந்த தொழிலாளர்களை மத்திய அரசு அவமானகரமாக நடத்தியது! - சரத்பவார், தேசியவாத காங்கிரஸ் தலைவர்

படம்
பத்திரிக்கை சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவர்   மகாராஷ்டிரத்தில் அரசியல் சமநிலையின்மை நிலவுகிறதா? குடியரசுத்தலைவர் ஆட்சி வர வாய்ப்பிருக்கிறது என்கிறார்களே? இவையெல்லாம் ஆதாரமற்ற வதந்திகள். முன்னாள் முதல்வரான பட்னாவிஸ் ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் சந்திப்பில் இத்தகைய வதந்தி பரப்பப்பட்டுள்ளது. நாங்கள் கூட்டணிக்கட்சிகளின் பல்வேறு வேறுபாடுகளைக் கடந்தும் இணக்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். பிற மாநிலங்களைப் போலவே நாங்களும் கோவிட் -19 பாதிப்பை எதிர்கொண்டு போராடி வருகிறோம். முந்தைய பாஜக அரசின் பல்வேறு தோல்வியுற்ற நிர்வாக விஷயங்களை சமாளித்து ஆட்சி நடத்தி வருகிறோம். எங்கள் மாநில மக்களும் எங்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.   மத்திய அரசு அளித்துள்ள நிதியுதவி உங்களுக்கு போதுமானதாக தோன்றுகிறதா? நிதி அமைச்சகம் அளித்து நிதியுதவி முழுக்க வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களுக்கு மட்டுமே. கஷ்டப்படும் மக்களுக்கு அளித்து உதவவில்லை. அறிவிக்கப்பட்டுள்ள தொகையும் போதுமானது அல்ல. இந்த விஷயத்தில் மத்திய அரசு தோற்றுவிட்டது. இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடத்தப்படும் விதம் பற்றி என்ன நினைக்கிறீர்க

தீவிரவாதிகளை கருவறுத்து பணயக்கைதியை மீட்கும் மாடஸ்தியின் குழு! - கானகத்தில் கண்ணாமூச்சி

படம்
கானகத்தில் கண்ணாமூச்சி முத்து காமிக்ஸ் விலை. 2.50 லேடி மாடஸ்தி, வில்லி கார்வின் இணைந்து கலக்கியுள்ள காமிக்ஸ். வில்லி கார்வின் மாடஸ்தியின் சொல்படி தன் நண்பருடன் உல்லாச சுற்றுலா சென்றிருக்கிறார். மாடஸ்தி கௌரேம்போ எனும் சிறிய நாட்டில் இருக்கிறார். அவரது நண்பரின் பெண் தோழி டயானா, பிரிட்டிஷ் தூதரின் மகள். எப்போதும் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல் உளறி வைத்து எரிச்சல் படுத்தும் குணம் கொண்டவள். அவளை அந்நாட்டு தீவிரவாதிகள் பணயக் கைதியாக பிடித்துக்கொண்டு போய்விடுகிறார்கள். எப்படி நாட்டின் அதிபரின் துணையுடன் மாடஸ்தியும், வில்லி கார்வினும் அப்பெண்ணை மீட்கிறார்கள் என்பதே கதை. கறுப்பு வெள்ளை காமிக்ஸிலும் மாடஸ்தியின் கவர்ச்சிகரமான உடைகளும், உடலும் மயக்குகிறது. இங்கிதமாக நடந்துகொள்ளும் அவரது தன்மை பல்வேறு ஆண்களை அவரைச் சுற்றிவரச்செய்கிறது. அந்நாட்டில் முன்னமே ரவுடிகளை வைத்து தனி குழுவை இயக்கி வந்த மாடஸ்தியை திடீரென அதிபர் சந்திக்கும்போதே நிச்சயம் அதிபரைச் சுற்றித்தான் கதை திரும்ப போகிறது என ஊகிக்க முடிகிறது. தீவிரவாதிகள் ஆணவக்காரியான டயானாவை கடத்தியவுடன் ஏறத்தாழ அவர்கள் அதிபரை மிரட்டுவார்கள்

காதலியைக் கரம்பிடிக்க பாக்ஸிங் பழகும் பக்கோடா ராஜூ - டுன்டரி -2016

படம்
  துன்டரி இயக்கம் குமார் நாகேந்திரா இசை சாய் கார்த்திக் ஒளிப்பதிவு நர ரோகித்தின் மற்றொரு பரிசோதனை முயற்சி. இவர் ஐட்ரீம் வலைத்தளத்திற்கு கொடுத்த பேட்டியில் டான்ஸ், சண்டை போன்றவற்றைவிட கதைதான் முக்கியம் என்று கூறியிருந்தார். இதனால் நாம் அவரை இதற்கு லாயக்கில்லை என்று சொல்வதை நிறுத்திக்கொள்வோம். மான்கராத்தே படத்தின் தெலுங்கு ரீமேக் என்பதால் கதை பற்றி சொல்ல ஒன்றுமில்லை. ஏ.ஆர்.முருகதாஸின் கதை எடுத்து திரைக்கதை எழுதி படம் செய்திருக்கிறார்கள். முனிவரின் வரத்தால் நான்கு ஐடி ஆட்களுக்கு ஒரு வரம் கிடைக்கிறது. அதனை அவர்கள் எப்படி பயன்படுத்திக்கொண்டு காசு பார்க்கலாம் என நினைக்கிறார்கள். செய்தியில் ராஜ் என்பவர் அவர்களுக்கு 5 கோடி ரூபாய் தருவதாக செய்தி. அதனை நிஜமாக்க என்ன செய்யலாம் என யோசிக்கிறார்கள். அதனால் ஏற்படும் கோக்குமாக்கு விஷயங்களும், விளைவுகளும்தான் கதை. ஆஹா நர ரோகித், சங்கர காமெடி காம்போ வொர்க் அவுட் ஆகியுள்ளது. படத்தின் சீரியஸ் மேட்டர்கள் இறுதிப்பகுதி என்பதால் அதைச் சொல்ல ஏதுமில்லை. காமெடிக்காக படம் பார்க்கலாம். ஐடி கூட்டத்தில் வெண்ணிலா கிஷோர்தான் காமெடியில் கவனிக்க வைக்கி

காதலியின் உடம்பில் புகுந்துகொண்ட கொடூரமான பேய் - பிரேம கதா சித்திரம்

படம்
பிரேம கதா சித்திரம் இயக்கம் பிரபாகர் ரெட்டி ஒளிப்பதிவு பி. உத்தவ் இசை ஜேபி   தனியிசை ஆல்பங்களை உருவாக்கிவரும் இளைஞன், ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அவளை திருமணம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிடுகிறான். அப்போதுதான் அவள் நகரிலுள்ள 90 சதவீத இளைஞர்களோடு ஏ டூ இசட் மாய்மாலங்களை செய்துவருவது தெரிய வருகிறது. இதனால் டிப்ரஷன் அப்ரஷன் என அனைத்து மனநல பிரச்னைகளுக்கும் உள்ளாகுபவன், மானம் போய்விட்டது என்று தற்கொலைக்கு முயல்கிறான். அப்போது அவன் நண்பன் இவனை எப்படியாவது தற்கொலையிலிருந்து விடுவிக்க முயல்கிறான். அதற்காக அவனைப்போலவே தற்கொலை எண்ணத்துடன் இருப்பதாக ஒரு பள்ளி மாணவியை கூட்டி வருகிறான். மூவரும் வீடு ஒன்றில் தங்குகிறார்கள். விரைவில் தற்கொலை செய்துகொண்டு இறப்பதாக முடிவு எடுக்கும்போது, ஹோட்டலில் இருந்து இன்னொருவரும் அவர்களுடன் சேர்ந்துகொள்கிறார். எதற்கு சேர்ந்து சாகத்தான். தனியாக செத்தால் பயமாக இருக்கும் அல்லவா? ஆஹா சுதீர் பாபு, காதல் தோல்வியில் தவிப்பவராக நன்றாகவே நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளும் வேகம் காட்டியிருக்கிறார். ஆனால் என்ன படம் முழுக்கவே நந்திதாவே ஆதிக்கம்

கிராமத்து சொத்தை விற்று பிஸினஸ் செய்ய முயற்சிக்கும் சுயநல இளைஞனின் பேராசை! - சுகுமாருடு

படம்
சுகுமாருடு இயக்கம் அசோக் ஜி திரைகதை: அவரேதான். இசை அனுப் ரூபன்ஸ் ஒளிப்பதிவு சாய் ஸ்ரீராம் வெளிநாட்டில் வாழ்ந்து வரும் சுகுமாருக்கு காதல், கல்யாணம், கசமுசா என எதிலும் ஆர்வமில்லை. ஒரே ஆர்வம் நிறைய பணம் சம்பாதிக்கவேண்டும் கூடுவே பலரும் போற்றிப்புகழும் பெருமையும் தேவை. இப்படி நினைப்பவருக்கு சோதனைக்காலம் வருகிறது. இதன் காரணமாக அவரின் சொந்த ஊருக்கு செல்ல நினைக்கிறார். அங்குள்ள தாத்தாவின் சொத்தை விற்று தொழிலை நடத்தும் ஆசை எழ ஊருக்கு கிளம்புகிறார். சொத்தை விற்கிறேன் என்று பாட்டியிடம் சொன்னால் செருப்பைக் கழட்டி அடிப்பார் என்பதால் பாசமாக பாட்டியைப் பார்க்க வந்ததாக நாடகமாடுகிறார். இறுதியில் அவர் பாட்டியின் சொத்தை விற்று தொழிலை மேம்படுத்தினாரா, ஊருக்குள் அவர்களது குடும்பம் கீழே போன நிலையை அறிந்து மாற்றினாரா, வேலை, கடின உழைப்பு என்பதிலிருந்து மாறி இயல்பான நிலைக்கு மாறினாரா என்பதையெல்லாம் படம் சொல்லுகிறது. ஆஹா படம் முழுக்க உற்சாகமாக வலம் வருகிறார் ஆதி சாய்குமார். படத்தில் காமெடி நன்றாக வேலை செய்திருக்கிறது. கிராம காட்சிகள் அனைத்தையும் காப்பாற்றுவது காமெடி மட்டுமே. அனுப் ரூபனின் இசையி

ஹிட்லருக்கு உதவிய ஐந்துபேர் கொண்ட குழு - ஜெர்மனியின் தலைவிதியை மாற்றியவர்கள்

படம்
பிக்ஸாபே ஹிட்லரின் மூளைக்கார படை! எந்த மனிதரும் பெரிய ஆளாக உயர சூழல்கள், தனிப்பட்ட ஆளுமை முக்கிய காரணம்தான். மறுக்கவில்லை. ஆனால் அதையும் தாண்டி அவருக்கு உதவ ஆபத்துதவி படை என்று ஒன்று உண்டு. அவர்கள் அவரை நெருக்கடியான தருணங்களில் காப்பாற்றுவார்கள். என்ன செய்யவேண்டும் என்பதை முடிவு செய்வார்கள். அப்படி ஐந்து பேர்தான் ஹிட்லரை மாபெரும் தலைவராக்கி பிற நாடுகளை அலற வைத்தார்கள். அவர்களில் சிலரைப் பார்ப்போம். கத்தோலிக்க சக்தி! ஃபிரான்ஸ் வான் பாபன் 1879- 1969 கத்தோலிக்க குடும்ப வாரிசு. 1921ஆம் ஆண்டு கத்தோலிக்க அரசியல் கட்சியின் உறுப்பினரானார். இவர்தான் 1932ஆம் ஆண்டு வெய்மர் இறக்கும்போது ஜெர்மனியின் அதிபராக பதவியேற்றார். ஹிட்லர் தலைமை பொறுப்புக்கு வர முக்கியமான ஆதரவு சக்தியாக இருந்தார். தன் காலம் முடியும்வரை அரசின் முக்கியமான பதவிகளை வகித்தார். துருக்கியின் தூதராக தொடர்ந்தார். பின்னாளில் நாஜிக்களை கொன்றதற்கான குற்றவிசாரணையைச் சந்திக்க நேரிட்டது. கம்யூனிஸ்ட்களின் எதிரி ஆல்ஃபிரட் ஹியூகென்பர்க் 1856 – 1951 வெய்மர் காலத்தில் ஊடகங்களுக்கான மனிதராக இருந்தார் ஆல்ஃபிரட். 1928 ஆம் ஆண்டு வர

சிம்பன்சிகளின் அபாரமான நினைவுத்திறன்- ஆராய்ச்சியில் தெரியவந்தது என்ன?

படம்
ஏழுவயது சிறுவனின் ஞாபகசக்தி சிம்பன்சிகள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஞாபகசக்தி சோதனையில் ஏழுவயது சிறுவனின் நினைவுத்திறனைக் கொண்டுள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக விலங்குகளுக்கு நீண்டகால நினைவுகள் சிறப்பாகவே இருக்கும். இல்லையெனில் பூமியில் அவை வாழ முடியாது. குறிப்பிட்ட இடத்தில் குளம், ஏரி, உணவு கிடைக்கும் இடங்கள் தெரியாதபோது வாழ்க்கையை பூமியில் எப்படி நடத்துவதாம்? இதனால் ஆராய்ச்சியாளர்கள் அதன் தற்காலிக நினைவுத்திறனை சோதிக்க முயற்சித்தனர். தற்காலிக நினைவுத்திறன் என்றால் வேறொன்றுமில்லை. இந்த கட்டுரையின் முதல் பத்தியை உங்களால் நினைவுகூர முடிகிறதுதானே? அதுதான். செயின்ட் ஆண்ட்ரூஸ் மற்றும் மேக்ஸ் பிளான்க் இன்ஸ்டிடியூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த ஆராய்ச்சியை நடத்தின. சிம்பன்சிகளின் கண்முன்னே பல்வேறு பெட்டிகளில் உணவுப்பொருட்களை அடைத்து மறைத்து வைத்தனர். அவை எப்படி உணவுப்பொருட்களை கண்டுபிடிக்கின்றன என்று பார்த்தன. வயது முதிர்ந்து குரங்குகள் பத்துக்கு நான்கு பெட்டிகளையும், இளம் குரங்குகள் பத்துக்கு ஏழு பெட்டிகளையும் மிகச்சரியாக கண்டுபிடித்து நினைவுத்திறனை நிரூபித்துள்ளன. எந்த பயிற்ச

மனப்பதற்றத்தை உண்டாக்கும் மூளையிலுள்ள புரதம்! - மனப்பதற்றத்தை குறைக்கும் வாய்ப்பு

படம்
நம் அனைவருக்கும் இப்போது பெரிய பிரச்னையாகவும், எப்படி சமாளிப்பது என தலையை பிய்த்துக்கொள்வதுமாக இருப்பது மனப்பதற்றம்தான். எதன் காரணமாக மனப்பதற்றம் ஏற்படுகிறது, அதனை எப்படி தீர்ப்பது என யாருக்கும் தெரியவில்லை. இப்போது தியானம், யோகம் என்று பலர் கூறினாலும் பலருக்கும் மனப்பதற்ற குறைபாடு கட்டுப்படுவதாக இல்லை. அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குழுவினர் இதற்கான தீர்வை கண்டுபிடித்துள்ளனர். நியூரோட்ராபின்3 என்ற புரதம்தான் நியூரான்களை ஊக்கப்படுத்தி அமிக்தலா பகுதியில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என கண்டுபிடித்துள்ளனர். இதற்கான சோதனையை மக்காவ் வகை குரங்குகளிடம் செய்து பார்த்து திருப்தியாகி உள்ளனர். ஆண்ட்ரூ ஃபாக்ஸ் என்ற ஆராய்ச்சியாளர், நாங்கள் மனிதரில்லா விலங்கிடம் இதனை சோதித்து வெற்றி கண்டுள்ளோம் என்கிறார். இங்கிலாந்தில் முப்பது லட்சத்திற்கு மேற்பட்டோர் மனப்பதற்ற குறைபாட்டுக்கு உள்ளாகியுள்ளனர். அமெரிக்காவில் பத்தில் ஒருவருக்கு இக்குறைபாடு உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. விரைவில் மனப்பதற்றக் குறைபாட்டை போக்குவதற்கான செயல்பாடுகள் தொடங்கப்படலாம் என நம்பப்படுகிறது. நன்றி: பிபி