இடுகைகள்

ஐ.நா. உருவாகி 75 ஆண்டுகள் ஆவதை நினைவுறுத்தும் அழகிய ஓவியம்!

படம்
படக்குறிப்பு வேர்ல்ட் இன் புரோகிரஸ் எனும் தலைப்பில் பிரெஞ்சு கலைஞர் சைபே, சாக்பீஸ், நிலக்கரி கொண்டு உருவாக்கிய ஓவியம் இது. ஐ.நா அமைப்பு உருவாகி 75 ஆண்டுகள் ஆனதையொட்டிய கொண்டாட்ட நிகழ்வு நடந்தது, ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில்.

இந்திய எல்லையில் சீனா செய்வது நண்பனின் முதுகில் குத்தும் துரோகச்செயல்! - ஏ.கே. அந்தோணி

படம்
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏ.கே. அந்தோணி முன்னாள் ராணுவத்துறை அமைச்சர் இந்திய வீரர்கள் பலியாவதை தடுத்திருக்க முடியுமா? சீனர்கள் நாம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கும்போது தாக்கியிருப்பது நம்பிக்கை துரோகம். நமது ராணுவத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினால் நம் வீரர்கள் பலியாவதை தடுக்கலாம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது 43 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சீனர்கள் இந்தியாவின் இடத்தை ஆக்கிரமித்தனர். 600க்கும் மேற்பட்ட முறை அத்துமீறல் நடந்தது என பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளாரே? அது தவறான தகவல். 1962ஆம் ஆண்டுதான் சீனா முன்னேறி தாக்கி இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்தது. அதற்குப் பிறகு எங்களுடைய ஆட்சியில் அதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லை. சீனாவை எப்படி சமாளிப்பது? இந்தியா 1962இல் இருந்த நிலையில் இல்லை. இன்று நம்மிடம் திறன் வாய்ந்த ஆயுதப்படைகள் உள்ளன. அவர்களை வைத்து தாக்கி பதிலடி கொடுக்கவேண்டும். காங்கிரஸ் அரசு இரண்டாவது முறை ஆட்சியில் இருந்தபோது, சுமார், டெப்சங் ஆகிய பகுதியில் முன்னேற முயன்றனர். ஆனால் அதனை முழுமையான செயலாக செய்யவில்லை. அப்போது சீனா தென்சீனக்கட

தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை பெருந்தொற்று காலத்தில் தந்திரமாக அமல்படுத்துகிறது அரசு!

படம்
இந்தியன்எக்ஸ்பிரஸ் தமிழ் இந்தியாவின் முக்கியமான வணிக அமைப்பு, அகில இந்திய வணிகர் சங்கம்(AITUC). இதன் பொதுச்செயலாளரான அமர்ஜீத் கௌர் அவர்களுடன் வேலைவாய்ப்புகள், தொழிலாளர்கள், நிறுவனங்களின் நிலை ஆகியவற்றைப் பற்றி உரையாடினோம். பெருந்தொற்று காலத்தில் வேலைவாய்ப்புகள், உயிர்பிழைத்திருத்தல் என பல்வேறு விஷயங்களே கடினமாக இருக்கிறதே? இதில் எப்படி வேலைகளுக்கான பாதுகாப்பை நாம் கோருவது? கடினம்தான். நாம் இந்த நேரத்தில் பாதிப்புக்கு காரணமாக அரசியல், மதம், இனம் ஆகியவற்றை பிடித்துக்கொண்டிருக்க கூடாது. சமூகத்தின் இழைகளை பலப்படுத்துவதுதான் இப்போதைய தேவை. தொழிலாளர்கள் 150 ஆண்டுகளாக போராடித்தான் தொழிலாளர்கள் சட்டம், ஓய்வூதிய நிறுவனங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டன. தற்போதைய காலகட்டத்தில் தொழிற்சங்கங்கள், வணிக சங்கங்கள் தங்களை புதுப்பித்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறீர்களா? இன்று பல்வேறு துறைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வணிக சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை ஒருங்கிணைவது முக்கியம். இம்முறையில் ஒரு துறைக்கு ஒரே ஒரு சங்கம் இருக்கவேண்டும். அப்போதுதான் அரசு தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படும்போது, கேள்விகள

அறிவியல் செய்திகள் உங்களுக்காக.....

படம்
கோமாளி செய்திகள்! pixabay ஆஹா... மழை... மழை கேரளத்தில் இரு மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளதாக திருவனந்தபுரம் வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. 204.4 மி.மீ. கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறி ஆரஞ்சு வண்ண எச்சரிக்கையை அறிவித்துள்ளது. எர்ணாக்குளம், கண்ணூர், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், திரிச்சூர் ஆகிய நகரங்களிலும் மழை பெய்யும் என்று கூறு மஞ்சள் எச்சரிக்கையை அறிவித்துள்ளனர். கேரள அரசு, தனியார் வானிலை நிறுவனங்களுக்கும் நிதியளித்து, தகவல்களை பெற்று வருகிறது. நியூஸ்மினிட் அட அதிவேக கணிதன் இங்கிலாந்தைச்சேர்ந்த தொடக்கப்பள்ளி மாணவர் நாபு கில்(10), அதிவேகமாக கணக்குபோட்டு கின்னஸ் சாதனை செய்துள்ளார். இவர் ஒரு நிமிடத்தில் 196 பெருக்கல், வகுத்தல் கணக்குகளை தீர்த்து சாதித்துள்ளார். இவரோடு 700 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். யுபிஐ     pixabay நோ.. நோ ரொம்ப பழசு ஃபேஸ்புக் நிறுவனம், புதிய வசதி ஒன்றை பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் பயனர்கள் 90 நாட்களுக்கும் முந்தைய பழைய செய்திகளை பதிவிட்டால், புதிய வசதி அவர்களை எச்சரிக்கும். தவறான பழைய செய்திகளை புதிய செய்திகள் போல பரப்புவதை

ஹெச் 1 பி விசா தடை செய்யப்பட்டதால் யாருக்கு நஷ்டம்? யாருக்கு லாபம்? - ஓர் அலசல்

படம்
youtube அமெரிக்க அரசு, ஹெச் 1 பி விசா, அகதி அல்லாதவர்களின் விசாக்களை தடுத்து நிறுத்த உத்தரவிட்டுள்ளது. இந்த விசாக்கள் அறுபது நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன. ஹெச்1 பி, ஹெச் 2பி, ஹெச்4 ஜே, எல் ஆகிய விசாக்களும் வரும்   டிச.31ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நல்ல திறமைசாலியான ஆனால் குறைவான சம்பளம் வாங்கும் இந்திய ஊழியர்கள்தான் மேற்சொன்ன விசாக்களைப் பெற்று அமெரிக்காவில் வேலை செய்து வந்தார்கள். ஆண்டுதோறும் இத்தனை விசாக்கள் என அமெரிக்க அரசு, விநியோகிக்கும். பிற நாட்டு டெக் நிறுவனங்கள் இதற்காக ஊழியர்களை தேர்ந்தெடுத்து விசாவுக்கு விண்ணப்பிக்க வைத்து, அங்குள்ள அலுவலங்களுக்கு பணிபுரிய அனுப்பி வைத்து வந்தார்கள். அமெரிக்க அரசு வழங்கும் விசாக்களில் இந்திய தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்து வந்தது, ஹெச் 1 பி விசாவைத்தான். இந்த விசாவை பட்டும் அமெரிக்கா 85 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் ஆண்டுதோறும் வழங்கி வந்தது. இதில் 65 ஆயிரத்தை அதிக திறனுள்ள ஊழியர்களுக்கு வழங்குகிறார்கள். 20 ஆயிரம் விசாக்களை அதிக கல்வி கற்றவர்களுக்கு வழங்குகிறார்கள். அமெரிக்க கல்லூரி, பல்கலையில் முதுகலை படித்தவர்களுக்கு வழங்குகிறார்

மக்களின் வாழ்க்கையை மாற்றும் மனிதநேய தம்பதிகள்! - ஜோன்னா, சிப் கெய்ன்ஸ்

படம்
page six ஜோன்னா, சிப் கெய்ன்ஸ் கட்டுமான நிறுவனர்கள் ஜோன்னா, சிப் ஆகிய இருவரும் மகத்தான இதயம் கொண்டவர்கள். கடினமான உழைப்பு, சிறந்த எண்ணங்களால் அவர்கள் ஹெச்ஜி டிவியில் உருவாக்கிய ஃபிக்ஸர் அப்பர் என்ற டிவி நிகழ்ச்சி அவர்களை உயரத்திற்கு கொண்டு சென்றது. இந்நிகழ்ச்சியை பின்னர் அவர்கள் தங்களுக்கான டிவி சேனலை உருவாக்கி தொடர்ந்தனர். நான் அவர்களோடு இணைந்து சக்கர நாற்காலியில் வாழ்ந்த வந்த சிறுவர்களுக்கான வீடுகளை உருவாக்கினேன். எளியவர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை உருவாக்க உழைத்து வருகிற மனிதர்கள் இவர்கள் என்று அப்போதுதான் தெரிந்துகொண்டேன். மக்களை அபரிமிதமாக நேசிக்க கற்றவர்கள், வாழ்க்கையில் முக்கியம் எதுவென உணர்ந்தவர்கள். உண்மையை லட்சியமாக கொண்டு வாழும் நேர்மையான லட்சிய தம்பதிகள் இவர்கள். டிம் டெபோ டைம்

நம்பிக்கையை வலியுறுத்தும் மில்லினிய தலைமுறையின் இசை போதை! - பிடிஎஸ் குழு

படம்
100korea  பாப் இளவரசர்கள் பிடிஎஸ் இது என்ன வகையான இசை என்று எனக்கு புரியவில்லை என ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார். ஒவ்வொரு தலைமுறைக்குமான இசையமைப்பாளர்கள் உண்டு. மில்லினிய இளைஞர்களுக்கு பிடிஎஸ் பாடகர்கள்தான் இசை ரட்சகர்கள். உற்சாகம், கொண்டாட்டம், நேர்மறையான உணர்ச்சிகள், தன்னம்பிக்கை பீறிடும் பாடல்களை பாடி விற்பனையில் சாதனை படைத்த பாடல்களைக் கொண்ட இளைஞர் கூட்டம்தான் பிடிஎஸ். கே பாப் என இவர்களது பாடல்களை அழைக்கிறார்கள். இளைஞர்கள் இவர்களைத்தான் தங்களது முன்மாதிரிகளாக கொண்டு வாழ்கிறார்கள். கொரியமொழியில் பாடல்களை பாடுகிறார்கள். ஆனால் மொத்த இளைஞர்கள் கூட்டமும் மகுடி முன்னே ஆடும் பாம்பாகிறார்கள். நான் இவர்களோடு சிலமுறை சந்தித்து உரையாடி இருக்கிறேன். அவர்கள் பாடல்களை உருவாக்குவது உற்சாகம் பீறிடும் சூழல்களில்தான். அவர்களில் சிலர் பிறர் பாடுவதற்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். ஏதோ இளைஞர்கள் பாடுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அவர்கள் பாடல்கள் வழியாக உருவாக்கும் அன்பு, சகோதரத்துவம் ஆகியவற்றை கண்டுகொள்ளாமல் போகிறீர்கள் என்று பொருள். ஹால்சி டைம்