இடுகைகள்

ஃபேஷன் துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய புரட்சிக்காரி! - ஜெனிபர் ஹைமன்

படம்
ஜெனிபர் ஹைமன் - சிஎன்பிசி ஜெனிபர் ஹைமன் 2008ஆம்ஆண்டு நவம்பர் மாதம் என்னை ஒரு இளம்பெண் சந்திக்க வந்தார். அவர் ஃபேஷன் உடைகளை இணையம் மூலம் வாடகைக்கு வழங்கலாம் என்று சொன்னார். எனக்கு அந்த ஐடியா புதுமையாக இருந்தது. சரி என்றதும் அவர் ரென்ட் ஆன் தி ரன்வே என்ற நிறுவனத்தை தொடங்கினார். நிறுவனத்தில் 20 பெண்களை இணைத்துக்கொண்டு நூறு கோடி மதிப்புள்ள நிறுவனமாக அதனை மாற்றியுள்ளார். வெறும் உடைகளை வணிகமாக பார்க்காமல் அதிக உடைகளை பயனர்களை வாங்கச்செய்யாமல் விழிப்புணர்வு செய்வது, சூழலுக்கு உகந்த உடைகளை உருவாக்குவது என அவரின் பல செயல்பாடுகள் நமக்கு பெரும் ஆச்சரியம் தருவன. அவர் இன்னும் என்ன ஆச்சரியங்களை செய்வார் என்று காண காத்திருக்கிறேன். ஜெனிபர் ஹைமன், 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார். ரென்ட் தி ரன்வே என்ற ஃபேஷன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். டைனே வோன் பர்ஸ்டன்பர்க்

சிறப்பான கதாபாத்திரங்களை உருவாக்கும் எழுத்தாளர்! - ரியான் மர்பி

படம்
ரியான் மர்பி இ ஆன்லைன்  ரியான் மர்பி என்னுடைய தொலைபேசி அலறுகிறது. எடுத்து பேசினால் மறுமுனையில் குரல் நான் ரியான் மர்பி பேசுகிறேன் என்கிறது. எனக்கு ரியான் மர்பியை அறிமுகம் கிடையாது என்று உறுதியாக சொல்லுவேன். அவர் டிவியில் பல்வேறு புதுமைகளைச் செய்தவர். டிவி நிகழ்ச்சி ஒன்றைச் சொல்லுபவர், அதுபோன்ற நிகழ்ச்சி டிவிகளில் எப்போதும் வந்தது இல்லை என்று சொன்னார். அந்த கதாபாத்திரம் எனக்கு பெரும் புகழைப் பெற்றுத்தரும் என்று அவர் கூறிக்கொண்டே சென்றார். இதுபோன்ற வாக்குறுதிகளை நான் நிறைய கேட்டுவிட்டேன் என்பதால் அதனை பெரிதுபடுத்தவில்லை. ஆனால் அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்றதும், அவர் போனில் சொன்ன அத்தனை விஷயங்களும் தப்பாமல் நடந்தன. உண்மையில் அதனை நான் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லைதான். ரியான் மர்பி அப்படிப்பட்டவர்தான். குழந்தை போல தனது சந்தோஷத்தை வெளிப்படுத்துவார். யாரும் யோசிக்காத முறையில் யோசித்து ஐடியாக்களை சொல்லுவார். நம்மை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தும் நகைச்சுவை உணர்வைக் கொண்டவர் அவர். இவற்றை அனைத்தையும் தாண்டிய நட்புணர்வான இதயம் கொண்டவர். தான் நினைத்த கதாபாத்திரங

நேர்மையான உண்மைகளை வெளிப்படையாக பேசும் பத்திரிகையாளர் ! கெய்ல் கிங்

படம்
டைம் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் 2019 கெய்ல் கிங் - சிபிஎஸ் நியூஸ் கெய்ல் கிங் 1954ஆம் ஆண்டு அமெரிக்காவில் மேரிலாண்டில் பிறந்த பத்திரிகையாளர் கெய்ல்கிங். தற்போது 62 ஆகும் இவர் சிபிஎஸ் டிவியின் காலை நிகழ்ச்சிகளை நடத்தியவர். ஓப்ரா வின்ப்ரேவின் இதழின் ஆசிரியரும் இவரே. துருக்கியில் அன்காரா பகுதியில் தனது சிறுவயதை கழித்தவர், பின்னாளில் குடும்பத்தோடு அமெரிக்கா வந்து சேர்ந்தார். கெய்ல், உளவியல் பட்டதாரி. பால்டிமோரில் உள்ள தனியார் டிவியில் தொகுப்பாளராக பணிக்குச்சேர்ந்தார். பின்னாளில் தொகுப்பாளர் பணியைவிட்டுவிட்டு அதே டிவியில் செய்தியாளரானார். தி கெய்ல் கிங் ஷோ என்ற நிகழ்ச்சியை டிவியில் தொடங்கினாலும் முதலில் அது வெற்றிபெறவில்லை. இதேபெயரில் ரேடியோவிலும் கூட நிகழ்ச்சியை செய்தார். இவருக்கு புகழ் தேடி தந்தது சிபிஎஸ் டிவியில் செய்த காலை நிகழ்ச்சிதான். பல்வேறு பிரபலங்களை நேர்காணல் செய்த முக்கியமான பத்திரிகையாளர், ஊடகவியலாளர் என்று இவரைக் கூறலாம். கெய்ல் கிங்கை வெறும் பத்திரிகையாளர் என்று கூறிவிடமுடியாது. அவரது நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் அவரை மிகவும் நெருங்கிய நண்பராகவே உணருவார்கள். அந்தள

ஏழைகளைக் காக்க முயலும் மக்களின் பிரதிநிதி! - அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ கார்டெஸ்

படம்
அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ கார்டெஸ் - யாஹூ நியூஸ்  அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ கார்டெஸ் 1989ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள பிராங்க்ஸ் நகரில் பிறந்தவர். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி. இவர், 14ஆவது மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதியாக செயல்பட்டுவருகிறார். 2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் பல்லாயிரம் மக்கள் வால்ஸ்ட்ரீட் பொருளாதார சிக்கலால் வாழ்க்கையை இழந்தனர். அதில் கார்டெஸின் குடும்பமும் தடுமாறி வீழ்ந்தது. அவரின் தந்தை நுரையீரலில் ஏற்பட்ட புற்றுநோயால் காலமானார். வால்ஸ்ட்ரீட்டை அமெரிக்க அரசு பின்னாளில் மீட்டு எடுத்தது. ஆனால் அதனால் வாழ்க்கையை இழந்த குடும்பங்களை அரசு கவனிக்கவே இல்லை. வாஷிங்க்டன் நகரம் எப்படி சக்தியுள்ளவர்களை பாதுகாத்து உழைக்கும் தன்மையுள்ள மக்களை கைவிடுகிறது என்பதை தெரிந்துகொண்டார் கார்டெஸ். அவர் தனக்கு எதிரான விஷயங்களுக்கு முன்னே போராளியாக தெரிந்தார். படிப்பிற்கு வாங்கிய கடன் கண்முன்னே மலையாக தெரிந்தது. தங்களிடம் அதிகாரம் இருந்தால்தான் பிழைத்திருக்க முடியும் என்று கார்டெஸ் நம்பினார். அதற்காக உழைக்கத் தொடங்கினார். மது விடுதியில் பணத்திற்காக வேலை செய்து வந

வேடிக்கையோடு கால்பந்து விளையாடும் எகிப்து வீரர்! - முகமது சாலா

படம்
முகமது சாலா - மாலைமலர் முகமது சாலா பிரபலமான கால்பந்து வீரர் என்பதோடு சிறந்த மனிதநேய மனிதர் என்றும் முகமதுவை சொல்லலாம். புகழும் வெற்றியும் துரத்தும் மனிதர் பெரியளவு அழுத்தங்கள் இன்றி வாழ முடியுமா என்று தெரியவில்லை. எகிப்து நாட்டு மக்கள் முகமதுவை பாராட்டி புகழுகின்றனர். ஆனால் களத்தில் இறங்கி கால்பந்தை உதைத்து விளையாடும்போது முகமதுவின் முகம் குழந்தை போலாகிவிடுகிறது. அவர் புகழ், பிரபலம் என்பதையெல்லாம் கவனத்தில் கொள்வதில்லை விளையாட்டில் தான் நினைத்த விஷயங்களை செய்தால் உடனே முகமதின் முகம் பூப்போல குழந்தைபோல மலர்ச்சி அடைகிறது. விளையாட்டை வேடிக்கையான பொழுதுபோக்கு போல மாற்றிக்கொள்ளும் குணத்தை அவர் எங்கு கற்றார் என்று எனக்குப் புரியவில்லை. நான் அவரின் விளையாட்டுக்காக அவரை விரும்புகிறேன். 1992ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி எகிப்திலுள்ள நாகரிக் நகரில் பிறந்தார் முகமது. லிவர்பூல் கிளப் மற்றும் தேசிய அணிக்காகவும் விளையாடு வருகிறார். ஜான் ஆலிவர்.

சமூக பொருளாதார இடைவெளியை குறைக்க முயலும் கட்டடக் கலைஞர்! - ஜீன் கேங்

படம்
கட்டட கலைஞர் ஜீன் கேங் - தி ஆர்க்கிடெக்ட் நியூஸ்பேப்பர் ஜீன் கேங் அமெரிக்காவைச் சேர்ந்த கட்ட ட கலைஞர். அமெரிக்காவில் நான்கு அலுவலகங்களை நடத்தி வருகிறார். இவரது ஸ்டூடியோவின் பெயர், ஸ்டூடியோ கேங். 1964ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று இலினாய்ஸில் உள்ள பெல்விடேரே என்ற நகரத்தில் பிறந்தவர் கேங். சிகாகோ நகரில் ஜீன் கட்டியுள்ள அக்வா, என்ற கட்டடம் மிகவும புகழ்பெற்றது. ஒன்றை உருவாக்குவது என்பதை சுற்றியிருக்கும் சூழலோட தொடர்பு உட்கிரகித்து அதனை செய்கிறார். இதனால்தான் அவர் உருவாக்கி படகு வீடு மக்களால் பாராட்டப்பட்டது. அது நீரில் உள்ள மாசுக்களை குறைக்கும் தன்மையில் இருந்தது. அதுபோலவே இவர் உருவாக்கவிருந்த காவல்நிலையம் மக்கள் எளிதாக காவல்துறையினரை அணுகும் தன்மையைக் கொண்டிருந்தது. அதிக குற்றங்கள் நடந்த பகுதியில் இவர் காவல்நிலையத்தில் அமைத்து பேஸ்கட்பால் மைதானம் இவரின் சிந்தனைக்கு சான்று. சமூக, பொருளாதார இடைவெளியை தான் கற்றுள்ள திறன்கள் மூலம் குறைக்க முயலும் இவரது முயற்சி பாராட்டத்தக்கது. அன்னா டியாவர் ஸ்மித்  

தனித்துவமான ஒப்பனைக்கலைஞர்! - பாட் மெக்ராத்

படம்
பாட் மெக்ராத் - dazed பாட் மெக்ராத் நான் மாடலிங் செய்யவரும்போது அத்துறையில் ஆப்ரோ அமெரிக்க ஒப்பனை கலைஞர்களே கிடையாது. பிற கலைஞர்களுக்கு கருப்பு நிறத்தவர்களுக்கு எப்படி ஒப்பனை செய்வது என்பது பற்றிய கவலை இருந்தது. அன்றிருந்த நிலைப்படி பலரும் ஆப்ரோ அமெரிக்கர்களை புகைப்படம் எடுக்க மாட்டார்கள். அவர்களை மாடலாகவு, திரைப்பட நடிகர்களாகவும் கூட கருதமாட்டார்கள். அந்த விஷயம் பாட் மெக்ராத் ஒப்பனை கலைஞரானபோது மாறியது. நாங்கள் இன்று அழகாக தெரிகிறோம் என்றால் அதற்கு பாட் மெக்ராத்தின் ஒப்பனைத்திறன்தான முக்கியக் காரணம். அவர் தான் செய்யும் தொழிலில் ஏறத்தாழ முன்னோடி என்ற அந்தஸ்தை அடைந்துவிட்டார். தனது பணி சார்ந்து தொடங்கிய தொழிலிலும் சிறப்பாக பேசப்படும் அளவு உழைத்திருக்கிறார் என்பது உண்மை. இங்கிலாந்தின் நார்த்தாம்டன் நகரில் 1970ஆம் ஆண்டு பிறந்த பாட் மெக்ராத், அங்கு முன்னணி ஒப்பனைக் கலைஞர். பெவர்லி ஜான்சன்